.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, November 30, 2006

பதிவுலகில் பெண்கள் - பொன்ஸுக்கு பதில்

Your Ad Here

பொன்ஸ் எழுதியிருக்கும் பதிவுலகில் பெண்கள் என்ற பதிவு பார்த்தேன்

(மன்னிக்கணும், பொன்ஸ்...) அந்தப் பதிவுடைய நோக்கம் எனக்குப் புரியவில்லை. சாடலாகவும் புலம்பலாகவுமே படுகிறது. இந்தப் பதிவு புதிதாக வர இருப்பவர்களையும் கலவரப்படுத்தாதோ?

//வெளிப்படையாக புரியாதபடி நக்கல் தொனிகளில் விரும்பத்தகாத விமர்சனங்கள் இன்னொரு பக்கம்.//

வெளிப்படையாகப் புரியவில்லை அல்லவா, விட்டுவிடலாமே?

//இன்னும் சிலர் தைரியமாக எல்லாருக்கும் புரிகிற விதத்திலேயே, "உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை எல்லாம் படிக்கையில் உங்களைப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது" என்று எழுந்து நிற்கும் வக்கிரம்.//

'உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறது' என்பதை அப்படியே லிட்டரலாக எடுத்துக் கொள்ளலாமே! பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் கையில் இருக்கிறது என்னும்போது இப்படி ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு அர்த்தம் கர்ப்பித்துக் கொண்டு நம்மை நாமே காயப்படுத்திக் கொள்வானேன்?

//எங்களை நாங்களாக இருக்க விடுங்கள்//

இப்படி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. நீங்கள் நீங்களாக இருக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஏன் உங்கள் கண்ட்ரோலைத் தேவையில்லாமல் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும்?

அப்படிச் செய்கிறார்கள், இப்படிச் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டு நம் பலகீனத்தைக் காட்டிக் கொள்வதால் யாருக்கு லாபம் என்று யோசித்துப் பாருங்கள். நமது வலிமையை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாமே?

தாக்குதல்களையோ கிண்டல்களையோ கேலிகளையோ முற்றிலும் அலட்சியப்படுத்திப் பாருங்களேன்! இதற்கெல்லாம் முக்கியத்துவம் தந்து நொந்து போவதைத்தானே தாக்குதல் தொடுப்பவர்கள் விரும்புகிறார்கள்? அவர்களுக்கு அந்த திருப்தியைத் தருவானேன்? இது பெண்களுக்கென்றில்லை... அனைவருக்குமே பொருந்தும்

எல்லோரும் கடந்து வரும் பாதைதான் இது... ஆனால் ஒரு கட்டத்தில் நாம் புரிந்து கொள்வது அல்லது புரிந்து கொள்ள ஆரம்பிப்பது:

நன்றும் தீதும் பிறர் தர வாரா :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, November 27, 2006

கிரிக்கெட் வீரர்கள் சிறந்த நடனக்காரர்களாக இருப்பது ஏன்?

Your Ad Here

பிபிசியில் Strictly Come Dancing என்ற நிகழ்ச்சி 4 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் ப்ரொஃபஷனல் நடனக்காரர்களோடு ஜோடி சேர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் நேரடி ஒளிபரப்பில் வெவ்வேறுவிதமான நடனங்களை அரங்கேற்றுவார்கள். சம்பா, சாச்சாச்சா, அமெரிக்கன் ஸ்மூதி, குயிக் ஸ்டெப், ஜைவ், டாங்கோ - இப்படி பலவித மேற்கத்திய நடனங்களையும் குறுகிய காலத்தில் கற்றுக் கொள்வதென்பது எளிதல்ல. ஒவ்வொருவாரமும் ஒரு பிரபலம் நடுவர்களின் மதிப்பெண் மற்றும் பார்வையாளர்களின் வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்படுவார். கடைசிவரை நீடித்திருப்பவர் டான்ஸிங் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார்.

சென்ற தொடரை வென்றவர் இங்கிலாந்து பௌலர் Darren Gough. இந்த சீரிஸின் ஹாட் ஃபேவரிட் மார்க் ராம்பிரகாஷ். இவரின் வெட்கம் கலந்த புன்னகைக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் - நடுவர் ஆர்லீன் ஃபிலிப்ஸ் உட்பட!

இன்னும் ஐந்து பிரபலங்களே எஞ்சியுள்ள நிலையில் சென்ற வாரம் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்று மார்க் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறார்.

ஏன் கிரிக்கெட் வீரர்கள் நல்ல நடனக்காரர்களாக இருக்கிறார்கள் என்று பிபிசி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. கிரிக்கெட்டில் ஃபிட்னெஸ், டெக்னிக் மற்றும் ஃபுட் வொர்க்கில் இவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதால் நடனத்திலும் அது இயல்பாக அமைந்துவிடுகிறது என்கிறது இந்தக் கட்டுரை.

ஆனாலும் சென்ற வாரம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டிய ரம்பா (Rumba) நடனத்தில் மனிதர் மிகவும் திணறிவிட்டார்!
இந்த வார Viennese Waltz நடனத்தில் 36/40 மதிப்பெண்களுடன் மீண்டும் முதலிடம் பெற்று ரசிகர்களின் மனதில் பால்வார்த்து விட்டார்.

"என் இயல்புக்கு இந்த நிகழ்ச்சி சரிப்பட்டு வராது என்றே எண்ணியிருந்தேன். திறந்த மனமிருந்தால் எதனையும் கற்றுக் கொள்ளலாம் என இந்நிகழ்ச்சி எனக்கு உணர்த்தி இருக்கிறது" என்கிறார் மார்க்

வாய்ப்பு இருப்பவர்கள் பிபிசி தொலைக்காட்சியில் சனிக்கிழமை மாலை 6 மணிவாக்கில் நிகழ்ச்சியைப் பாருங்கள். வாய்ப்பில்லாதவர்கள், அனைத்து நடனங்களையும் இந்த சுட்டியில் காணலாம்:

http://www.bbc.co.uk/strictlycomedancing/contestants/mark_index.shtml

சோனியில் இது போல ஏதோ ஒரு நிகழ்ச்சி இருப்பதாகவும் அதில் அஜய் ஜடேஜா கலந்து கொள்வதாகவும் NDTVயில் பேசிக் கொண்டார்கள். எப்படி இருக்கிறது அந்த நிகழ்ச்சி?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.