.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, May 04, 2007

ஜெயாவில் நிலா

Your Ad Here

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது ஜெயா டிவி காலை மலருக்காக என்னை நேர்முகம் செய்தார்கள் - எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற வகையில். திங்களன்று வரும்
என்றிருக்கிறார்கள். காலை 7.30 மணிக்கு யோகாவுக்குப் பின் வருமாம். முடிந்தால் பாருங்கள். வேலையை ஒத்திப்போட்டு காத்திருந்து வராவிட்டால் என்னைத் திட்டாதீர்கள்.

வேறொரு நேர்முகத்தில், எனக்கு சிறுகதைகளை விட சுயமுன்னேற்றக் கட்டுரைகள் இலகுவாக வருவதாக ஒரு மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டார். ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி! முதன் முதலாக எழுதும் 'மனசே சுகமா?' தொடர் இப்படி ஒரு பெயரை வாங்கித்தருமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. அதனை இங்கே காணலாம்:

http://www.nilacharal.com/tamil/success/index.html

எனது சிறுகதைத் தொகுப்பான கருவறைக்கடனுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் பாராட்டு வந்தது. சந்தியா பிரசுரத்தார் பல இடங்களுக்கும் நூலை அனுப்பி இருந்ததை உணர முடிந்தது. நன்றி சொன்னேன்.

இந்தியாவில் பல வலைப் பதிவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் நிறைவேறாமல் போனது - குடும்பத்தில் இரு முக்கிய மரணங்கள், எதிர்பாராத சில வாய்ப்புகள், முன்பே ஒப்புக் கொண்டிருந்த சில கடமைகள் என உறங்க, உண்ண நேரமில்லாமல் ஓடிப்போயின 3 வாரங்கள்.

சந்திக்கிறேன் என்று சிறில் அலெக்ஸ், அருள், மணியன் போன்ற சிலருக்கு வாக்குத் தந்திருந்தேன். வாக்குத் தவறியமைக்கு மன்னிக்கவும்.

இந்தியப் பயணத்தில் சேவாலயா மாணவர்களுடன் செலவிட்ட இரு மணி நேரங்கள் மறக்க முடியாதவை. ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பை உணர்ந்தேன். விரிவாக எழுத நேரம் அமையுமென்று நம்புகிறேன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

16 Comments:

At May 04, 2007 4:06 AM, Blogger கானா பிரபா said...

வாழ்துக்கள்

 
At May 04, 2007 4:17 AM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள்...

 
At May 04, 2007 4:41 AM, Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் நிலா.

எங்க வீட்டுல ஜெயா தொலைக்காட்சி தெரியாது. அதனால பாக்க முடியாது.

 
At May 04, 2007 4:45 AM, Blogger கானா பிரபா said...

மன்னிக்கவும் வாழ்த்துக்கள் :-)

 
At May 04, 2007 5:21 AM, Blogger மணியன் said...

வாழ்த்துக்கள் !!
வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றும் மனத்தளவில் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது, இனியொரு வாய்ப்பு கிட்டாமலா போகிறது ?

 
At May 04, 2007 7:38 AM, Blogger Unknown said...

கானா பிரபா,
இரண்டு முறை வாழ்த்துக்கள் சொன்னதற்காக நன்றி, நன்றி :-)
(கணக்கு சரியாப் போச்சா?)

 
At May 05, 2007 5:56 PM, Blogger Boston Bala said...

வாழ்த்துகள்

 
At May 06, 2007 1:55 AM, Blogger உண்மைத்தமிழன் said...

மேடம் கண்டிப்பாக நாளைக் காலை உங்களுடைய நேர்காணல் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. பார்க்கவும்.

 
At May 06, 2007 5:15 AM, Blogger Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, குமரன், சிறில், பாலபாரதி, பாபா

மணியன்,
தங்களின் பெரிய மனதுக்கு நன்றி ;-)

 
At May 06, 2007 2:26 PM, Blogger நிலா said...

உண்மைத் தமிழன், இவ்வளவு உறுதியா சொல்றதைப் பார்த்தா பெரிய இடமோ? :-)

நன்றிங்க...

 
At May 06, 2007 2:48 PM, Blogger Unknown said...

வாழ்த்துக்கள். முடிந்தால் ஒளிபரப்பை பதிவு செய்து வலையில் ஏற்றுங்கள்.நாங்கள் எல்லோரும் பார்க்க முடியும்.

 
At May 06, 2007 9:30 PM, Blogger நிலா said...

செல்வன்,
நன்றி
வலையேற்றம் செய்ய முயற்சிக்கிறேன்

 
At May 06, 2007 9:50 PM, Blogger Unknown said...

வாழ்த்துக்கள் :-)

 
At May 06, 2007 10:30 PM, Blogger ✪சிந்தாநதி said...

பேட்டி பார்த்தேன்.நன்றாக இருந்தது.

 
At May 07, 2007 3:00 AM, Blogger Anamika said...

Thanks Nila. Even the children enjoyed the interactive session they had with you. We couldnt see the Jaya TV Programme as we were travelling. Ther eis some problem with my Keyboard. Hence couldnt type in Tamil

Regards
Bhuvana

 
At May 07, 2007 11:53 PM, Blogger நிலா said...

தேவ், வாழ்த்துக்களுக்கு நன்றி

சிந்தாநதி, பார்த்துப் பின்னூட்டம் தந்ததற்கு நன்றி

புவனா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 

Post a Comment

<< Home