.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, January 22, 2007

நீங்கள் மகானாக முடியுமா?

Your Ad Here

ஒரு கட்டுரைக்காக உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன, நண்பர்களே! கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தால் மகிழ்வேன் - இதில் சரி தவறு என்றுமில்லை என்பதை அறிவீர்கள்தானே! ஒவ்வொரு தனிமனிதரின் அனுமானத்தையும் அறிவதுதான் நோக்கம். பொதுவில் பதிலெழுத விருப்பமில்லை என்றால் எனக்கு nila at nilacharal dot com -க்கு எழுதுங்கள்

மகான் என்பவர் யார்?

ஒருவரை மகான் அல்லது ஆன்மிக குரு என எப்போது ஏற்றுக் கொள்கிறோம்?

மகானுக்கும் குருவுக்கும் வேறுபாடுகளுண்டா?மகான்/ குருவின் குணநலன்கள் என்ன?

மகான்/ குருவிடம் உங்களின் எதிர்பார்ப்பென்ன?மகான்/குரு மதசார்பானவரா?

மகான்/குரு மூலம் அற்புதம் ஏதேனும் கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அற்புதம் செய்பவரெல்லாம் மகான்/குரு என நினைக்கிறீர்களா?

மகான்/குரு ஆக ஒருவர் முயற்சி செய்தால் அது சாத்தியப்படுமா அல்லது அதனை வரம் என எண்ணுகிறீர்களா?

உங்களுக்கு மகானாக/குருவாக விருப்பமுண்டா?

மகான்/ குரு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் எப்படி?

தலைவிதியை நம்புகிறீர்களா?

உதவிக்கு நன்றி நண்பர்களே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

16 Comments:

At January 22, 2007 4:09 AM, Blogger ரவி said...

///மகான் என்பவர் யார்?///

நன்றாக சபையாட தெரிந்தவர். சப்ஜெக்ட் நாலேஜ் பயங்கரமா இருக்கனும். சமயத்துக்கு தகுந்தமாதிரி அட்வைஸ் கொடுக்கனும். அப்பப்போ லிங்கமோ மோதிரமோ சாமிக்கிட்ட இருந்து டவுண்லோட் செய்தா போதும்..

ஒருவரை மகான் அல்லது ஆன்மிக குரு என எப்போது ஏற்றுக் கொள்கிறோம்?

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பாய்ட்ண்டை / நாம் தீர்வை எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தொட்டு / அதில் தீர்வையும் முன்வைத்து / அது சூப்பராக ஒர்க் அவுட் ஆனால் அவர்தான் மகான். சூப்பராக ஒரு மாண் தோலோ / புலித்தோலோ இருந்தால் இன்னும் பெட்டர்


//மகானுக்கும் குருவுக்கும் வேறுபாடுகளுண்டா?மகான்/ குருவின் குணநலன்கள் என்ன?///

நல்ல அமவுண்ட் தேத்துறது இருவருக்குமான குணநலன்..அருமையான தோட்டம் + ஆசிரமம் அமைப்பது அல்டிமேட் கோல்..

//மகான்/ குருவிடம் உங்களின் எதிர்பார்ப்பென்ன?மகான்/குரு மதசார்பானவரா?///

இரண்டாவது கேள்விக்கு பதில் : மதச்சார்பு இல்லாத மகான் உருவாக முடியாது...இன்னும் எளிமையாக சொன்னால், There is a System In place. அங்கே உங்களை நீங்கள் பிட் செய்ய முடியாது. you can co-work with the system. நீங்கள் அதனுடன் இனைந்து பணியாற்றலாம்...

ரேர் கேஸாக, தானே ஒரு மதத்தை க்ரியேட் செய்வது..ரஸ்புடீன் / ஜப்பான் குரு ( அண்டர்கிரவுண்ல வெச்சு விஷவாயு செலுத்தினானே) / கு-க்ளக்ஸ்-க்ளான் போன்ற குழுத்தலைவர்கள் - they can able to design / draft / narrate / crate a system

//மகான்/குரு மூலம் அற்புதம் ஏதேனும் கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பகிர்ந்து கொள்ள முடியுமா?//

இதுவரை இல்லை..!!!

//அற்புதம் செய்பவரெல்லாம் மகான்/குரு என நினைக்கிறீர்களா?///

மேஜிக் மேன் கூடத்தான் அற்புதம் செய்கிறார்...பி.ஸி.ஸர்க்கார் / டேவிட் ப்ளேன் எல்லாம் குரு கிடையாதுங்க...இங்கே பெங்களூர்ல கன்னட நன்பர்களை 'குரு' என்று அழைத்தால் மகிழ்வர்...

மகான்/குரு ஆக ஒருவர் முயற்சி செய்தால் அது சாத்தியப்படுமா அல்லது அதனை வரம் என எண்ணுகிறீர்களா?

உங்களுக்கு மகானாக/குருவாக விருப்பமுண்டா?

மகான்/ குரு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் எப்படி?

தலைவிதியை நம்புகிறீர்களா?

உதவிக்கு நன்றி நண்பர்களே!

 
At January 22, 2007 4:40 AM, Blogger ரவி said...

///மகான்/குரு ஆக ஒருவர் முயற்சி செய்தால் அது சாத்தியப்படுமா அல்லது அதனை வரம் என எண்ணுகிறீர்களா?///

ஓ எஸ்...நீங்கள் ச்சூஸ் செய்யும் பீல்டை பொறுத்து தகுதியான் பில்டப் கொடுத்துக்கலாம்....யோகான்னா தனியா...வாழும் கலைன்னு தனியா ஜல்லியடிக்கலாம்....குழந்தை கூட ட்ரை செய்து வெற்றியடைந்த துறை இது ( சேலம்)

///உங்களுக்கு மகானாக/குருவாக விருப்பமுண்டா?//

இப்போ இல்லை...இன்னும் பத்து வருஷம் கழிச்சு பார்க்கலாம்..ஐ.டி பீல்ட் டவுன் ஆனால் ஒரு யோகா குருவாக மாறுவோமில்ல...

//மகான்/ குரு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் எப்படி?///

முடியும்...மனநிலையை பொறுத்தது...சப்போஸ் யோகா குருன்னு வைங்க...அவங்க யோகா க்ளாஸ் எடுத்து நல்ல எக்ஸர்ஸைஸ் கொடுக்கிறாங்க இல்லை...சுகர் கூட குறையுதுங்க..

//தலைவிதியை நம்புகிறீர்களா?//

இல்லை !!!!!!!!!!!!!!!

 
At January 22, 2007 4:42 AM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//ஒரு கட்டுரைக்காக உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன, நண்பர்களே! கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தால் மகிழ்வேன் - இதில் சரி தவறு என்றுமில்லை என்பதை அறிவீர்கள்தானே! ஒவ்வொரு தனிமனிதரின் அனுமானத்தையும் அறிவதுதான் நோக்கம். பொதுவில் பதிலெழுத விருப்பமில்லை என்றால் எனக்கு nila at nilacharal dot com -க்கு எழுதுங்கள்

மகான் என்பவர் யார்?//

நிலா எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன்...

- அன்பு என்ற சொல்லில் தான் எல்லா மதங்களும் ஆரம்பிக்கின்றன. அன்பே கடவுள்... எனவே மகான் எனப்படுபவர் அனைத்து உயிர்களையும் நேசிப்பவர் என்பது அவரது கருணை பொழியும் கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

//ஒருவரை மகான் அல்லது ஆன்மிக குரு என எப்போது ஏற்றுக் கொள்கிறோம்?/

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர் காலத்தில் அவர்களுடைய செயல்கள் அவர்களுக்கு அடியார்களைத் தேடித்தந்தது. . மக்களுக்குத் தேவை ஆன்மிகம் என்ற நிலை மாறி தற்போது பிரச்சனைகளிலிருந்து விடுபட ஒரு வடிகால் என்ற நிலைக்கு ஆன்மிகம் தள்ளப்பட்டுவிட்டது, எனவே உண்மையான மகான்களும் மக்களை நம்ப வைக்க சித்துவிளையாட்டுகளை செய்து நம்ப வைக்க வேண்டி இருக்கிறது. சித்து விளையாட்டுக்களை நம்பி போற்றுபவர் உடனடியாகவோ, அல்லது அவர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடனோ (காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை ?) ஏற்றுக் கொள்கின்றனர். தனக்கு பலன் கிடைத்தது, அல்லது தெரிந்தவர்கள் மகான்களைப் பற்றி சிலாகிப்பதன் மூலம் ஏற்றுக் கொள்கின்றனர்

//மகானுக்கும் குருவுக்கும் வேறுபாடுகளுண்டா?மகான்/ குருவின் குணநலன்கள் என்ன?//

மாகான் என்பவரை ஞானி என்று பொருள் கொண்டு சொல்லாம் மனதின் சக்தியினால் தானுணர்ந்ததின் பயனை எளிய வழியில் எடுத்துச் சொல்வார். குரு என்பவரை சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தவர் என்று கொள்ளலாம். அவர்களுக்கு சீடர்கள் உண்டு.
மகான் அடுத்த வேளை சோறு கிடைக்குமா ? என்ற ரீதியில் வரும் காலத்தை நினைத்துக் முற்றிலும் கவலைப்படாதவராக இருப்பர். குரு என்பவர் ஆசிரியர் அவருக்கு உலகவாழ்க்கையின் பந்தமும் ஒழுக்க நெறியும் சொந்தம்.

//மகான்/ குருவிடம் உங்களின் எதிர்பார்ப்பென்ன?மகான்/குரு மதசார்பானவரா?//

மகான் மதம் கடந்தவராக இருக்க வேண்டும். எந்த மதத்தையும் சார்ந்தவராக எந்த விதத்திலும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடாது (நடைமுறையில் சாத்தியமில்லை)
குரு என்பவர் தான் கற்றவற்றை எந்த பேதமுமின்றி எல்லா மாணாக்கருக்கும் நிறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும்.

//மகான்/குரு மூலம் அற்புதம் ஏதேனும் கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பகிர்ந்து கொள்ள முடியுமா?//

மகான்கள் அற்புதம் செய்ய வேண்டியதில்லை. அற்புதம் செய்வதென்றால் பி.சி சோர்கார் கூட செய்கிறார் என்பதால் அற்புதம் செய்வதை வைத்து மகான்களை எடைபோடுவது தவறென்றே நினைக்கிறேன்.

//அற்புதம் செய்பவரெல்லாம் மகான்/குரு என நினைக்கிறீர்களா?//

அதே பதில்

//மகான்/குரு ஆக ஒருவர் முயற்சி செய்தால் அது சாத்தியப்படுமா அல்லது அதனை வரம் என எண்ணுகிறீர்களா?//

சூழல் தான் முக்கியம். குடும்ப பந்தங்களில் இருந்து விடுபடுதல் எளிதல்ல. உள் உணர்வு அதுபோல் இருந்து அதில் உறுதியாக இருப்பவர்களால் நிச்சயம் முடியும். வரம் தான் என நினைக்கிறேன்.

//உங்களுக்கு மகானாக/குருவாக விருப்பமுண்டா?//

சாத்தியம் இல்லை

//மகான்/ குரு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா? ஆம் என்றால் எப்படி?//

மகான் அல்லது குருவிடமிருந்து சில அடிப்படைகள் தேவைப்படும் என்பது உண்மை. அதன் பிறகு எதையும் அதன் போக்கில் பார்க்கப் பழகிக் கொண்டால் மாற்றம் வரும். உலகை பார்க்கும் பார்வை நிச்சயம் மாறும்.

//தலைவிதியை நம்புகிறீர்களா?//

இது சிக்கலான கேள்வி. மதங்களும் பதில் சொல்லத் திணரும் கேள்வி. நடப்பவை எல்லாம் இறைவன் செயல் என்று நினைப்பதும் தலைவிதி என்பதும் ஒன்றாக தெரிகிறது. அதையும் மாற்றமுடியும் என்று நம்பி பரிகாரம், பாவமண்ணிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். மதங்களே இந்த விசயத்தில் தெளிவு பெறவில்லை.
எல்லோரும் சுயமாகத் தான் சிந்திக்கிறோம். நம் செயல்களுக்கு நாமே பொறுப்பாகவும் இருக்கிறோம். நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் ஒருவேளை தண்டனை கிடைக்காவிட்டாலும் உறுத்தல் இருக்கும். நம் பிறப்பு நம்கையில் இல்லை என்று நம்பினால் நம் சிந்தனையும் நம்மைச் சார்ந்தது இல்லை. தீர்மாணிக்கப் பட்ட ஒன்று.

//உதவிக்கு நன்றி நண்பர்களே! //

நன்றி நிலா
--
அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com
http://govikannan.blogspot.com

 
At January 22, 2007 4:45 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நிலா!
மகான் விடயத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு;;;நான் 50 வருடமாக மனிதனாக வாழ்வதற்கு முயல்வதை நினைத்துப் பார்க்கிறேன்.
என்னால் இதற்கு என்ன? சொல்லமுடியும்.
யோகன் பாரிஸ்

 
At January 22, 2007 5:26 AM, Blogger ramachandranusha(உஷா) said...

This comment has been removed by a blog administrator.

 
At January 22, 2007 5:33 AM, Blogger ramachandranusha(உஷா) said...

பிழைத்திருத்தம்
நிலா, நா வரலை இந்த வெள்ளாட்டுக்கு :-)

 
At January 22, 2007 6:25 AM, Blogger Mazalais.com said...

விருப்பு வெறுப்பில்லாதவர், அனைவரையும் சமமாக பாவிப்பவர், எம்மதத்தையும் இனத்தையும் பிரிவையும் சாராதவர்
அனைத்து உயிர்களிடத்தும் சமமான அன்பைச் செலுத்துபவர், எதற்கும் கோபம் கொள்ளாதவர், அகந்தையற்றவர் மஹான் எனக் கொள்ளத்தக்கவராவார்.

நாம் ஒரு மஹானகும் தகுதியடையும்போது ஒருவரை நாம் மஹான் என ஏற்றுக்கொள்கிறோம்.

தனக்குத்தெரிந்ததைப் பிறருக்கு உபதேசிக்கும் பணியைச் செய்யும் மஹான் குருவாகிறார். குருவானவர் தான் பிறருக்கு உபதேசிப்பவற்றைத் தான் முதலில் கடைப்பிடிப்பவாராக இருத்தல் வேண்டும்.

உலகமே ஒரு அற்புதம், இதற்கு மேலான அற்புதத்தை எந்த மஹானும் செய்ய இயலாது.

மஹானாகவோ மற்றெதற்குமோ எனக்கு விருப்பமுண்டு என்று எண்ணினாலே நான் மஹானாகும் தகுதியை இழக்கிறேன்.

விதி என்று உண்டு அதுதான் இயற்கை நியதி. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
இதற்கு மேல் தலைவிதி, கைவிதி, கால்விதி என்று எதுவும் கிடையாது

 
At January 22, 2007 10:35 AM, Blogger நிலா said...

செந்தழல் ரவி,

பொறுமையாகக் கருத்துச் சொன்னதற்கு நன்றி

 
At January 22, 2007 3:37 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கேள்விகள் நிலா. பதில் சொல்லுமளவிற்கு ஞானம் இல்லை. இந்தக் கேள்விகளை நானே என்னைக் கேட்டுக் கொள்ள முயற்சிக்கிறேன்.

 
At January 23, 2007 3:43 AM, Blogger நிலா said...

//பிரச்சனைகளிலிருந்து விடுபட ஒரு வடிகால் என்ற நிலைக்கு ஆன்மிகம் தள்ளப்பட்டுவிட்டது//

கோவி.கண்ணன்

சிந்திக்கத் தக்கது

//சூழல் தான் முக்கியம். குடும்ப பந்தங்களில் இருந்து விடுபடுதல் எளிதல்ல//

ஆன்மிகவாதிகள் பந்தங்களிலிருது விடுபடுதல் அவசியம் என எண்ணுகிறீர்களா? ஏன் எனக் கூறமுடியுமா?

 
At January 23, 2007 9:43 AM, Blogger Mazalais.com said...

பந்தங்களிலிருந்து விடுபட எண்ணுபவன் கடமை தவறுகிறான். கடமை தவறுபவன் ஒருக்காலும் ஒரு ஆன்மீகவாதியாக இயலாது. உடலில் உயிர் இருக்கும் வரை உற்றார், உறவினர், சுற்றத்தார், சமூகம் முதலான உலகிற்கு ஒருவன் கட்டுப்பட்டே தீர வேண்டும்

 
At January 23, 2007 10:45 PM, Blogger கோவி.கண்ணன் [GK] said...

//சூழல் தான் முக்கியம். குடும்ப பந்தங்களில் இருந்து விடுபடுதல் எளிதல்ல//

ஆன்மிகவாதிகள் பந்தங்களிலிருது விடுபடுதல் அவசியம் என எண்ணுகிறீர்களா? ஏன் எனக் கூறமுடியுமா?

எனக்குத் தெரிந்து (தெரிந்தவர் அல்ல) ஆன்மிக ஞானிகள் குடும்பத்தை துறந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இராமகிருஷ்ணர் தவிர அவரும் குடும்பம் நடத்தவில்லை அதே சமயம் மனைவியையும் பிரியவில்லை. மனைவியை பராசக்தியின் வடிவமாக நடத்தினார். வள்ளாலாருக்கு திருமணம் நடந்தது... அவர் அதிலிருந்து விலக்கிக் கொண்டார், புத்தரும் துறவு பூண்டார். இந்திய மகான்கள், புத்தபிட்சுகள் எல்லாருமே இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். உலக மக்களின் வாழ்க்கைக்கு உதவ நினைப்பவர்கள் தனக்கென ஒரு குடும்பம் இருந்தால் தன்னை முழுவது அற்பணித்துக் கொள்ள முடியாது என்பது போல கொள்ளலாம். இல்லறமே நல்லறம் அதிலிருந்து கொண்டு காரியம் ஆற்றலாம் அதற்கு ஒரு எல்லை உண்டு.

நமக்கென்று குடும்பம் இருக்கும் போது இல்லற கடமை ஆற்றவேண்டியது நம் பொறுப்பு. குடும்ப வாழ்க்கைக்கு பொருளீட்டல் மிகவும் அவசியம். அதிலிருந்து விலகுவது கடமை தவறுவது என்பதாகும் அதனால் பந்தங்களில் இருந்து விடுபடுதல் எளிதல்ல என்று சொன்னேன். நாம் விரும்பினாலும் மனைவி விரும்பாவிட்டால் சிக்கலாக முடியும், அது போல் மனைவி விரும்பி கணவன் விரும்பாவிட்டால் பெரும் சிக்கல்.

 
At January 24, 2007 8:47 AM, Blogger Siva Shankar said...

I had some difficulty in reading these questions as I am not very conversant in reading Tamil. So I hope you won't mind me answering in english.

Who is Mahaan ?
In my opinion a Mahaan is one who is beyond the dualities, has the ability to inspire spiritually, totally selfless and submits himself completely for the Will of God.

When can we accept someone as Mahaan or a Spiritual Guru ?
When we have the maturity to accept them. A Mahaan treats even an ordinary person as God, whereas an immature person treats even a Mahaan as an ordinary person.

Is a Mahaan different from a Guru ? What are the qualities of a Mahaan / Guru ?
Probably not, except for the fact that a Guru - disciple relationship is a unique one. A Mahaan and a Guru are in the same category. The qualities that they demonstrate are
a) ability to experience divinity in every aspect and at every moment
b) total selflessness and sacrifice for the cause and upliftment of others
c) utilizing all the time, energy and resources for the Mission of God with complete dedication and commitment
d) ability to follow the philosophy of Truth they believe in under any circumstances


What are your expectations of them ? Are they religious ?
To have them as a source of inspiration and role model, so that one day we can imbibe some of their qualities. They may follow religious practices, but they are beyond them.

Have you witnessed any of their miracles ? If yes, can you share it ?
The greatest miracle that they perform is our transformation into better and responsible (and spiritual) individuals. They inculcate in us the values they hold in highest esteem which they never compromise.

Can you consider all those who can perform miracles as God/Guru ?
Miracles by themselves might not mean anything other than making us realize that there are things beyond our comprehension (relieve us of our immediate problems) and make us humble. The important thing is that we should not forget the lessons that we have learnt and it is true with every experience.

Do you consider it possible to reach that stage by effort or do you consider attaining that as a boon ?
With self-effort it is impossible to attain that stage. It is always bestowed by those who have attained it.

Do you accept a Mahaan / Guru ?
Yes

Do you think it is possible for a Mahaan/Guru to change our fate ? If so, how ?
Yes. They can do so by their mere samkalpa if they feel that we have made sincere efforts to understand the "Truth" and honestly tried to put it in practice as we understood it.

Do you believe only in fate ?
No. Reason given above.

 
At January 24, 2007 10:53 PM, Blogger நிலா said...

யோகன் பாரிஸ்,
மனிதனாக வாழ முயற்சிப்பதும் ஒருவகையில் ஆன்மீகம் என்றுதான் நினைக்கிறேன். இந்த முயற்சியில் உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே!

 
At January 25, 2007 3:05 AM, Blogger நிலா said...

உஷா

வெளாட்டுக்கு வரலன்னாலும் படிச்சிட்டுப் போனதுக்கு நன்றி

 
At January 25, 2007 7:58 AM, Blogger நிலா said...

மழலை
கருத்துக்கு நன்றி

நேசகுமார்

விளக்கமான கருத்துக்கு நன்றி... சிந்திக்க வைக்கும் விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள்

 

Post a Comment

<< Home