எனது முதல் நூல் (கருவறைக் கடன்) வெளியீடு
எனது முதல் சிறுகதைத் தொகுப்பான கருவறைக்கடன் சமீபத்தில் சந்தியா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் மதுமிதாவின் முழுமுயற்சியே இந்தப் புத்தகம் வெளிவரக் காரணம். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாலனின் முகவுரையிலிருந்து சில வரிகள்:
அந்தக் கதைகள் பெரும்பாலும் தமிழ்மண்ணின் மாந்தர்களைப் பற்றிய கதைகள்.அந்தக் கதைகள் விவாதிக்கிற விஷயங்களும் தமிழ்ச் சமூகத்திற்குரியவைதான்.....
....
நிலாவின் கதைகளில் பேசப்படுகிற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதைப் போலவே அவரது கதைகளும் விவாதிக்கப்பட வேண்டும்.அது எதிர்வரும் காலத்தில் சாத்தியமாக வாழ்த்துகிறேன்.
வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கிற கதைகள் இவை. என்னை பொறுத்தவரை சக மனிதர்கள் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்கிற கதைகள் எல்லாமே நல்ல கதைகள்தான். இதுதான் இலக்கியத்தின், நல்ல எழுத்தின் அடிப்படை. மற்ற எதுவும் முக்கியமல்ல.
வாஸந்தி அவர்களின் முன்னுரையிலிருந்து:
தென் தமிழகத்தில் பிறந்த நிர்மலாவுக்கு அதன் காற்றும் மணமும் மொழியின் காந்தமும் கிறக்கத்தை உண்டுபண்ணுவதாகத் தோன்றுகிறது. வட்டார வழக்கு மொழி சில கதைகளில் உபயோகிக்கையில் மிக லாகவமாக வெளிப்படுகிறது. குலதெய்வம்,நிலச்சுமையென, மெய்ப்பொருள் ஆகிய கதைகள் நல்ல உதாரணங்கள். ஒரு கவிதை நடையோடு அந்த மண்ணிற்கு விசேஷமான நயமும் பெருந்தன்மையும் பாத்திரங்களில் வெளிப்படுகிறது. அந்த மொழிக்கு எந்தப் பத உரையும் தேவை இல்லை. நிலாவுக்குக் கூர்மையான பார்வையும் மனித நேய கனிவும் இருக்கின்றன. அதோடு மொழி வன்மையும் சொற்களைக் கையாளும் ற்றலும் இருக்கின்றன. ஒரு நல்ல கதை சொல்லிக்கு இவையே உபகரணங்கள்.
நூலின் முகப்பை இங்கே காணலாம்:
http://www.nilacharal.com/tamil/images/wrapper.jpg
இணையம் மூலம் வாங்க விரும்பினால் இங்கே செல்லுங்கள் (தமிழ்நாட்டில் இலவசமாக டெலிவரி செய்கிறார்கள்):
http://www.anyindian.com/product_info.php?cPath=1_49&products_id=13396
சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றால் சந்தியா பதிப்பகத்தாரின் ஸ்டாலில் நூலைப் பெறலாம்
தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி
29 Comments:
வாழ்த்துக்கள் நிலா அவர்களே !!!!
பெங்களூருக்கு டெலிவரி உண்டா ? என்று கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா ?
ரவி
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)
உலகெங்கிலும் டெலிவரி உண்டு. ஆனால் அஞ்சல் செலவு சேர்ப்பார்கள். தமிழ்நாட்டிற்குள் மட்டுமே இலவச டெலிவரி
வாழ்த்துக்கள் நிலா...
நீங்கள் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன். முதல் புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்.
எடுத்துக் கோர்க்க சோம்பல் பட்டு இதழ்களில் பிரசுரமானவையும் பிரசுரமாகாதவையுமாய் இரண்டு தொகுப்புக்கு இங்கேயும் கிடக்கு...அப்பப்போ நினைப்பது... பிறகு அப்படியே விட்டு விடுவது...
உங்கள் புத்தகத்தை வாசித்தபின் விமர்சிக்கிறேன்...வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நிலா,
//நீங்கள் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன். //
அதே :)
புத்தகத் திருவிழாவில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்..
பொன்ஸ், சிந்தாநதி
வாழ்த்துக்களுக்கு நன்றி
//நீங்கள் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன். //
நீங்க வேற... இதுவே மதுமிதா வலியுறுத்தலைன்னா வந்திருக்காது... இதிலெல்லாம் நமக்கு ஸ்மார்ட்னஸ் பத்தாது
அடுத்தடுத்து நூல்கள் வரும் என நினைக்கிறேன். பார்ப்போம்
நிலா,
நானும் வழிமொழிந்துவிடுகிறேன், முதல் புத்தகம் என்ற வரிகள் எனக்கு ஆச்சரியத்தையே அளித்தன. சின்ன சந்தேகம், அனைத்தும் பத்திரிக்கைகளில் வந்த கதைகளா?
//நமக்கு ஸ்மார்ட்னஸ் பத்தாது//
இது ஸ்மார்ட்னஸ் விஷயம் இல்லை. பத்திரிகை நடத்துகிறவர்கள் எனும்போது மற்றவர்களின் படைப்புக்களை ஊக்கப் படுத்தும் மனநிலைதான் இருக்கும். நம்முடைய படைப்புக்களை யாராவது இன்னொருவர் ஊக்கப் படுத்தும்போதுதான் நினைவே வரும்.
நானே என் பத்திரிகைகளில் எழுதி வந்த மூன்று நண்பர்களைப் புத்தகம் போட வைத்திருக்கிறேன்...!!!
ஆர்வம் வந்தாச்சின்னா உடனுக்குடன் முடிச்சிடுங்க...வரிசையாக புத்தகங்களை எதிர்பார்க்கிறோம்.
நன்றி, உஷா
அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவை அல்ல. எங்குமே பிரசுரமாகாத கதைகளும் சில உண்டு
//பத்திரிகை நடத்துகிறவர்கள் எனும்போது மற்றவர்களின் படைப்புக்களை ஊக்கப் படுத்தும் மனநிலைதான் இருக்கும். நம்முடைய படைப்புக்களை யாராவது இன்னொருவர் ஊக்கப் படுத்தும்போதுதான் நினைவே வரும். //
சிந்தாநதி,
ஒப்புக்கொள்ளவே தோன்றுகிறது
//நானே என் பத்திரிகைகளில் எழுதி வந்த மூன்று நண்பர்களைப் புத்தகம் போட வைத்திருக்கிறேன்...!!! //
நன்று... நீங்கள் பத்திரிகை நடத்துகிற விஷயம் எனக்குத் தெரியாதே! விளக்கமாகச் சொல்லுங்களேன்!
இப்போது இல்லை. சிற்றிதழ்கள்...! இலக்கிய இதழ் ஒன்று, கவிதைக்காக ஒன்று, சுயமுன்னேற்ற-சுய உதவிக் குழுக்களுக்காக மற்றொன்று...2001 வரை நடந்தது.
வாழ்த்துகள் நிலா. இன்னும் பல நூல்களை வெளியிட விரும்புகிறேன். துபாய்க்கு அஞ்சல் செலவு என்னவென்றூ தெரியுமா?
நன்றி, முத்துக்குமரன்
நான் மேலே குறிப்பிட்டது எனது இணையதளமல்ல... அவர்களிடம் நீங்களே அஞ்சல் செலவு குறித்து விசாரியுங்களேன்
நிலாஷாப்பில் இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வரும். அப்போது என்னால் அஞ்சல் செலவு குறித்து சொல்ல முடியும்.
வாழ்த்துக்கள்!!
நன்றி, மணியன்
வாழ்த்துக்கள் நிலா!
புத்தகம் வாங்கிப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன் :)
எனது சகோதரன் மூலம் புத்தக்க் கண்காட்சி சந்தியா பதிப்பக அரங்கிலேயே புத்தகம் வாங்கியாகி விட்டது. ஆனால் என்னை வந்து சேர தாமதமாகும்....
அருள்,
புத்தகம் வாங்கப் போவதற்கு நன்றி
சிந்தாநதி அவர்களே,
நூல் வாங்கியதற்காக நன்றி
வாழ்த்துக்கள் நிலா
வாழ்த்துக்கள் நிலா
திரு, சேது
வாழ்த்துக்களுக்கு நன்றி
முதல் புத்தக வெளியீடிற்கு வாழ்த்துக்கள். சகோதரி மதுமிதா பலரையும் ஊக்குவித்துவருகிறார்கள்.
அவர்களுக்கும் நன்றி.
ராசா
வாழ்த்துக்களுக்கு நன்றி
சக எழுத்தாளரை மனதாரப் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் அரிதான பண்புகள். அவை மதுமிதாவிடம் அபரிமிதமாகவே இருக்கின்றன
வாழ்த்துக்கள் நிலா மிஸ்!
நிச்சயமாக வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன இந்த முகவுரைகள்!
வாழ்த்துக்கள் நிலா. எல்லாரையும் போல எனக்கும் இது உங்கள் முதல் தொகுப்பு என்பதில் ஆச்சரியம்தான்.
//நிச்சயமாக வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன இந்த முகவுரைகள்//
நன்றி, சிபி. படிச்சிட்டுச் சொல்லுங்க
//எல்லாரையும் போல எனக்கும் இது உங்கள் முதல் தொகுப்பு என்பதில் ஆச்சரியம்தான். //
கொத்ஸ்,
அப்படியா? நீங்கல்லாம் இப்படி ஆச்சரியப்படறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு...
அடுத்த புத்தகம் போடலாங்கறீங்க?
நிலா,
வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும். பார்வைகள், கருத்துக்களில் சில இடங்களில் முரண்படுதல் எனக்கு உங்களோடு நேருவது உண்டு என்றாலும் உங்களின் முயற்சிகள், செயல்கள் எனக்குப் பிடித்தவை. சிறுவர்களுக்கான இதழ்கள், நிகழ்ச்சிகள் செய்தது, குறும்படம் எடுத்தது என உங்களின் ஆர்வங்கள் என்னைக் கவர்பவை. தொடர்ந்தும் செயல்படுங்கள்! நன்றி.
நிலா,
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள் நிலா..இன்னும் அதிக நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்...
Post a Comment
<< Home