Quick Thinking
ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.
அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. .... மேலும்
10 Comments:
மிஸ்! நல்ல கதை. ஈசாப்ஸ் ஃபேபிள்ஸ் மாதிரி இருக்கு. டேங்ஸ்.
இது பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்று போல இருக்கிறதே! ஒரு குரங்கும் முதலையும் கதை கூட இத்தகைய Quick thinking வகையில் அமையும்.
ஒரே கல்லில் உங்கள் பதிவுக்கும் வருகை, நிலாச்சாரலுக்கும் வருகை quick thinking :)
கைப்ஸ்
உங்களுக்குப் பிடிச்சா ஊருக்கே பிடிச்சமாதிரி :-)
சந்தோஷங்க...
நிலா மிஸ் கதை நல்லாயிருக்கு.. இப்போ எல்லாம் உங்க நிலா பிளாக் ஸ்கூல் அடிக்கடி லீவு வுட்டுருங்களே ஏன் மிஸ்?
நிலா, நானும் இந்த கதையை பஞ்சதந்திர கதைகளில் படித்திருக்கிறேன். ஆபத்தான காலங்களுக்கு அவசர காலங்களுக்கும் இந்த quick thinking உதவும். இப்போதெல்லாம் பதிவுலகில் சாரல் வருவதால் விடாமல் படிக்க முடிகிறது. பூஞ்சிட்டு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. இதற்கு இன்னும் விளம்பரம் கொடுங்களேன்.
//ஒரே கல்லில் உங்கள் பதிவுக்கும் வருகை, நிலாச்சாரலுக்கும் வருகை quick thinking :)//
:-))
மணியன் அவர்களே, வருகைக்கு நன்றி
//இப்போ எல்லாம் உங்க நிலா பிளாக் ஸ்கூல் அடிக்கடி லீவு வுட்டுருங்களே ஏன் மிஸ்?//
அதை ஏன் கேக்கறீங்க, தேவ்... ஒரு வேலையை ஒழுங்கா செஞ்சா பரவாயில்லை. ஆயிரம் வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு ஒண்ணையும் உருப்படியா செய்ய முடியலை.. ஹூம்
//இப்போதெல்லாம் பதிவுலகில் சாரல் வருவதால் விடாமல் படிக்க முடிகிறது.//
நன்றி, பத்மா
// பூஞ்சிட்டு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. இதற்கு இன்னும் விளம்பரம் கொடுங்களேன்//
பிரச்சினையே இதுதானே! நிலாச்சாரல் இலவசம் என்பதால் விளம்பரத்துக்கு பட்ஜெட் என்றுமே இருந்ததில்லை. எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் வாய்வழி விளம்பரம்தான்.
நிலா,
நல்ல கதை. இந்த தந்திர நாயைப் போல, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் தனது புத்தகத்தில் குள்ள நரி பற்றி எழுதிருந்ததை நேற்றுப் படித்தேன்.
நேரம் கிடைக்கும் போது, வாரியார் சுவாமிகளின் கதையை வலையேற்றுகிறேன்.
மிக்க நன்றி.
வெற்றி
நன்றி
வாரியாரின் கதையையும் அறிய ஆவல்
Post a Comment
<< Home