பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில்.
பணி புரிவது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக. ஆன்ம திருப்திக்காக நடத்துவது நிலாச்சாரல் இணைய இதழ் (nilacharal.com). நிலாச்சாரலுக்கு நிதி திரட்ட நடத்துவது நிலாஷாப். (nilashop.com)
சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன். இவை நிலாச்சாரல்,திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் எனது 'மஹா சக்தி' கதை பொற்காசு பரிசு பெற்றது. தேன்கூடு - தமிழோவியம் போட்டியில் மனமுதிர்காலம் என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசும் ஜனனம் சிறுகதைக்காக முதல் பரிசு முதல் பரிசும்.
நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறேன். பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்கள் உண்டு. பெரிதாய் எதையாவது இனிதான் சாதிக்க வேண்டும்:-)
5 Comments:
புகைப் படமா 'மிகை'ப்படமான்னு தெரியலியே?
ஆமா, சிறில்
எனக்கும் இதைப் பார்த்ததும் இந்தக் கேள்விதான் தோணுச்சி. ஆனா அழகா இருக்குன்னுதான் போட்டேன்
நிலா அக்கா என்னது இது பதிவைத் திறந்தா மேட்டர் எதையும் காணும் வெறும் படம் மட்டும் காட்டுறீங்க:)
கூடுதல் தகவல்..
வடதுருவத்தில் சூரியன் உதிப்பது சில நேரங்களில் ஆறு ஏழு சூரியன் ஒரே நேரத்தில் உதிப்பதுபோல் தெரியும்.!!!
அந்த புகைபடத்தை என்னிடம் காட்டி, இது என்ன என்று வாத்தி கேட்க நானும் வழக்கம் போல் விழிக்க...:(
தேவ்,
என்ன செய்றது... நேரப் பற்றாக்குறை :-)
Post a Comment
<< Home