.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, July 17, 2006

ரஜினி ரசிகர்களின் கவனத்திற்கு

Your Ad Here

சமீபகாலமாக ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அது குறித்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். வலைபதிவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு கருத்துத் தெரிவித்தால் உதவியாக இருக்கும்:

- ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சரிதானா? ஏன்?

- ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?

- ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?

- ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா?

- ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

உதவிக்கு நன்றி

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

13 Comments:

At July 17, 2006 11:27 AM, Blogger பாலசந்தர் கணேசன். said...

ரஜினி ரசிகர்கள் என்றால் அவருடைய ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்ல.மன்றத்தில் இல்லாத ரசிகர் கூட்டமும் நிறையவே அவருக்கு இருக்கிறது.

1.ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சரிதானா? ஏன்?
இந்த எதிர்பார்ப்பை தூண்டி விட்டவரே அவர் தான். ஆனால் ஒரு கட்டத்தில் அது அவருக்கே எதிராக வந்து விட்டது. இந்த எதிர்பார்ப்பு எல்லாரிடத்திலும் இல்லை. ஆனால் அவருக்கு பா.ம.க போன்று ஒரு தலைவலியாக உள்ளது. ஆனாலும் இவர்களால் சீரியசான டேமேஜ் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

2. ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா
எப்போதும் அவர் ரசிகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக தெரியவில்லை. முன்பு புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தி வெகு நாளாகி விட்டது.

3.ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?
பயன்படுத்தி இருக்கிறார். அவருக்காக ஆக்கபூர்மவாக பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு தேவை பௌடும் போது.
4.ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா
கொஞ்சம் ட்ரிக்கியான கேள்வி? ஏன் இருக்க முடியாது?
5.ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
எல்லா ரசிகர் மன்றத்தை போல, நடிகரின் படங்கள் தோல்வி அடையும் போது, அவையும் மறைந்து விடும்.

 
At July 17, 2006 12:06 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

- ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சரிதானா? ஏன்?

சரிதான். ஒரு மாற்று வேண்டித்தானே இருக்கிறோம். மேலும் தலைவர்கள் என்றாலே ஒரு ஐகன்(icon) ஆகத்தானே இருக்க வேண்ரியிருக்கிறது.


- ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?

இல்லை. எப்பொழுதுமே இந்த தூரத்தில் இருப்பவர்தானே.

- ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?

ஆம். ஆனால் மேலும் பல வகைகளில் பயன் படுத்திக் கொண்டிருக்கலாம். அது செய்யவில்லை.

- ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா?

இருக்கலாமே. ஆண்டவனையே பயித்தியக்காரா என அழைத்த பரம்பரை அல்லவா நம் பரம்பரை!

- ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அவரின் நடவடிக்கைகளைப் பொருத்தது. அவர் இவர்களை சினிமா என்ற தளம் தாண்டி பயன்படுத்திக் கொண்டாரானால் மேலும் வளரும். இல்லை அவர் படங்களில் இருந்து விடை பெறும் பொழுது இவைகளும் காலப் போக்கில் மறைந்து விடும்.

(உங்களுக்கும் 100 அடிக்கும் ஆசை போல. ரஜினியை இழுத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!)

 
At July 17, 2006 2:51 PM, Blogger கதிர் said...

1.ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?

ரசிகர்கள் எதிர்பார்த்தது ஒரு காலத்தில. இப்ப அவர் அரசியலுக்கு வந்தாலும் தேற முடியாது என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் நன்றாகவே தெரியும்.

2.ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?

அவர் எப்போது ஒட்டி நின்றார். இப்போது ஒதுங்குவதற்கு.

3. ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?

ம்ம் நிறைய

4. ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா?

யோசிக்க வேண்டிய கேள்வி.

5. ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ரஜினி பிறந்த நாளின்போதும் படம் வெளிவரும்போதும் மட்டுமே பிரகாசமாக் இருக்கும். ந்டஓஅதை நிறுத்தி விட்டால் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

இது என்னோட கருத்துதான். ஒட்டு மொத்த கருத்தையும் அறிய உங்களைப்போலவே எனக்கும் ஆவலாக உள்ளது.

ஹி ஹி ஹி ரஜினி மேட்டர்னாவே ஒரு பரபரப்பு இருக்கத்தானே செய்யும்.

அன்புடன்
தம்பி

 
At July 18, 2006 11:37 AM, Blogger நிலா said...

பாலசந்தர் கணேசன்
கருத்துக்களுக்கு நன்றி

//இந்த எதிர்பார்ப்பை தூண்டி விட்டவரே அவர் தான். //

எதனால் அப்படி சொல்கிறீர்கள்?

 
At July 18, 2006 1:36 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

- ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு சரிதானா? ஏன்?
இனிமே கஷ்டங்க.. கேப்டன் வந்து ஜெயிக்க வேற ஜெயிச்சிட்டாரு.. இனிமே வந்தா, அது சொ.செ.சூ.வை. தான்..

- ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒதுங்கிவருகிறாரா? அது சரிதானா?
எப்போங்க கிட்டக்க இருந்திருக்காரு? அத்தோட, ரசிகர்கள் கிட்ட ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றதும் நல்லது தான்..

- ரஜினி தன் ரசிகர்களின் பலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரா?
நிச்சயமா..

- ரஜினிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் ரஜினி ரசிகர்களாக இருக்க முடியுமா?
ஏன் இருக்கக் கூடாது? தலைவர் தப்பு பண்ணா ரசிகர்கள் குரல் எதிர்க் குரலா ஒலிக்காதா என்ன?

- ரஜினி ரசிகர் மன்றங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஹி ஹி.. நிகழ்காலம் என்னன்னே எனக்குச் சரியாத் தெரியாது.. எதிர்காலம்.. எங்கள் கழகப் போர்வாள் தேவ் வந்து சொல்வாரு ;) :)

 
At July 18, 2006 2:06 PM, Blogger நிலா said...

கொத்ஸ்

என்னய்யா இது வம்பாப்போச்சு. என்னமோ ரஜினி பத்தி நாலு கேள்வி கேட்டாலே உடனே பப்ளிசிடிக்குன்னு முடிவு பண்ணிடறீங்க.

பொதுவா நான் கட்டுரை எழுதும் போது ஆய்வு செய்துதான் எழுதுவேன். தனி மெயிலோ அல்லது தொலைபேசிலயோ கேள்விகேட்பேன். இந்தக் கட்டுரைக்கு அவ்வளவு நேரமில்லை. அதான் இங்கே போட்டேன்

ஆனாலும் நான் எதிர்பார்த்தது போல 'டு த பாயின்ட்' ரெஸ்பான்ஸ் எதுவும் வரலை. அதனால வேற வழிலயும் முயற்சி செய்ய வேண்டிய கட்டாயுஅம் வேற... பார்ப்போம்

 
At July 18, 2006 2:17 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//என்னய்யா இது வம்பாப்போச்சு. என்னமோ ரஜினி பத்தி நாலு கேள்வி கேட்டாலே உடனே பப்ளிசிடிக்குன்னு முடிவு பண்ணிடறீங்க.//

அட சும்மா தமாஷ் பண்ணினேன். முதலில் பதில் எல்லாம் சொல்லிட்டுத்தானே இதைச் சொன்னேன்.

//ஆனாலும் நான் எதிர்பார்த்தது போல 'டு த பாயின்ட்' ரெஸ்பான்ஸ் எதுவும் வரலை.//

என்னங்க நாங்க எல்லாம் சொன்ன பதில் தப்பா? நாங்க எல்லாம் ஃபெயிலா?

 
At July 18, 2006 2:22 PM, Blogger நிலா said...

சேச்சே... செஞ்சுரி அடிக்கும் கொத்ஸ் ஃபெயிலாக முடியுமா? நான் எதிர்பார்த்தது போல் பதில் வரலை. ஒரு வேளை கேள்விகளை மாத்திக் கேட்டிருக்கணுமோ என்னவோ!

இதுக்கு பதில் சொல்லுங்களேன்:

ரசிகர்கள் ரஜினி மக்கள் கழகம் ஆரம்பிச்சது பற்றி என்ன நினைக்கறீங்க?

ரசிகர் மன்றங்களைக் கலைக்கப் படுவதாகச் சொல்வது குறித்து?

ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் தேவைதானா?

 
At July 18, 2006 2:50 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

//இதுக்கு பதில் சொல்லுங்களேன்://

போட்டு வாங்கறீங்க! இருக்கட்டும்! இருக்கட்டும்!

//ரசிகர்கள் ரஜினி மக்கள் கழகம் ஆரம்பிச்சது பற்றி என்ன நினைக்கறீங்க?//

ஆரம்பிச்சிருக்காங்களா? நீங்க சொல்லித்தான் தெரியும். அது அதிகார பூர்வமான இயக்கம் இல்லை. அது வெற்றி பெறாது.

//ரசிகர் மன்றங்களைக் கலைக்கப் படுவதாகச் சொல்வது குறித்து?//

ஒரு காலகட்டத்தின் பின் அனுமதி பெறாத மன்றங்கள் மட்டுமே கலைக்கப் படுகின்றன. அது சரியான நடவடிக்கைதான்.

//ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் தேவைதானா? //

தேவைதான். எந்த நடிகருக்கும் ஒரு ரசிகர் மன்றம் தேவைதான். ரஜினி உட்பட.

 
At July 18, 2006 2:53 PM, Blogger நிலா said...

//எந்த நடிகருக்கும் ஒரு ரசிகர் மன்றம் தேவைதான். ரஜினி உட்பட. //


ஏன் தேவை?

(இப்போதான் இன்னொரு ரசிகர்கிட்ட பேசி முடிச்சேன். சுவாரஸ்யமான கருத்துக்கள் சொன்னார்)

 
At July 18, 2006 3:05 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

////எந்த நடிகருக்கும் ஒரு ரசிகர் மன்றம் தேவைதான். ரஜினி உட்பட. //


ஏன் தேவை?//

சரியான கேள்வி.. கொத்தனாரின் பதிலைக் காண நான் ஆவலாக உள்ளேன். கொத்தனாரின் சில பல ரசிகர் மன்றத் தலைகளின் பதில்களையும் எதிர்பார்த்தபடி..... பொன்ஸ்

 
At July 18, 2006 3:10 PM, Blogger நிலா said...

பொன்ஸ்,

கொத்தனாருக்கே ரசிகர் மன்றம் உண்டாமே :-))))

 
At July 18, 2006 4:15 PM, Blogger thiru said...

நடிகர்களிடம் நாட்டை நிர்வாகம் செய்கிற தலைமையை தேடும் வரை தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான். எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றுவரை நமது தேடல் திரையுலகில் மயக்கமாகி கிடப்பது தமிழர்களின் அரசியல் அறியாமையின் வெளிப்படை. நல்ல நடிப்பை பாராட்டுவது வேறு, நல்ல தலைமை என்பது வேறு. நல்ல நடிகனுக்கு நிற்வாக திறன் இல்லாமல் இருக்கலாம், நல்ல தலைவருக்கு நிற்வாக திறன் இல்லாமல் இருந்தால்? ரசிகர் மன்றம்... புண்ணாக்கு...போங்கப்பா போயி வேலையை பாருங்க :)

 

Post a Comment

<< Home