.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, June 15, 2006

மனமுதிர் காலம் - தேன்கூடு போட்டி

Your Ad Here




ரஞ்சனி நாவலை மூடிவைத்தாள். மனம் மிதப்பாய் இருந்தது. சந்திரா ராஜனின் நாவல்களென்றாலே இபப்டித்தான். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே எப்போதும் காதல் போர். அவர்கள், கோபங்கள், தாபங்கள், கொஞ்சல்கள்... படித்து முடிக்கும்போது யாருக்காயிருந்தாலும் தானும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ரஞ்சனி மட்டும் விதிவிலக்கா என்ன?

கண்கள் சொக்கி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

"எப்பப் பாத்தாலும் கதப் புஸ்தகமா? உருப்படியா எதாவது வேல பாக்கக் கூடாதா? சொன்னது எதையாவது நீ கேக்கிறியா?" அம்மாதான். வேறு யாரிப்படி கத்துவார்கள்!

ரஞ்சனி உணர்ச்சி காட்டாமல் அமர்ந்திருந்தாள். இதென்ன புதிதா? தினமும் நடக்கும் மண்டகப்படி. அப்பாடி ஒரு வழியாய் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கப் போகிறாள். இத்துனூக்கூண்டு ஊரில் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறார்களோ! போர் போர் மகா போர்!

காலேஜ் சேர இன்னும் ஒரு மாதம்தான். அதன்பிறகு ஜாலிதான். அதற்காகத்தான் ரஞ்சனியும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
மதுரை தூய இருதயப் பெண்கள் கல்லூரியில் அல்லது திருச்சி கே.என்.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி சேர்க்கலாம் என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார். ரஞ்சனிக்கு கே.என்.ஆரில்தான் சேரத்தான் விருப்பம். அதுதான் கோஎஜுகேஷன். அங்கேதான் நிறைய பையன்கள் இருப்பார்கள். ஜாலியாய் பொழுது போகும்.

ஆனால் அம்மா அப்பாவிடம், "இதுக்கு ஒரு வெவரமும் தெரியாது. பையங்க கூடல்லாம் சேக்க வேண்டாம். மதுரையில நல்ல கண்டிப்பாமே. அங்கேயே சேருங்க" என்று சொல்லிவிட்டார். எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தாயிற்று. அப்பா லேசு லேசாக இளகினாலும் அம்மா விடுவதில்லை.

'எனக்கு வில்லியே இந்தம்மாதான். எப்பப்பாரு இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு... ஹூம்... மிலிட்டரி மகாராணி'

"இப்பிடி உடம்பைப் பிடிக்கிற மாதிரி சட்டைய போட்டுக்கிட்டு வெளில போகாதே பிள்ளை"

"இந்த மாதிரி சைக்கிள்ல ஊர் சுத்தற வேலையெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன்"

"அந்த ஜனனியோட பேச்சே சரியில்லை. அவ கூடல்லாம் சேராதே"

இப்படி எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு...

'இந்த வீடு ஒரு ஜெயில். போகிற காலேஜிலயாவாது சுதந்திரமா இருக்கலாம்னா... அதுலயும் மண்ணள்ளிப் போடுறாங்க. நான் இந்தத் தடவை விடப் போறதில்ல.

எப்பாடு பட்டாவது கே.என்.ஆர்லதான் சேரணும்' மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள் ரஞ்சனி.


***

"ஒழுங்கா கதவைப் பூட்டிக்கிட்டு உள்ளே இரு. வீட்டில யாருமில்லைன்னு எதாவது திமிருத்தனம் பண்ணாதே" அம்மா சொல்லிவிட்டுக் கிளம்பியபோதுதான் அந்த சுதந்திரம் உறைத்தது....

"ஆஹா...." என்று கையை விரித்துக் கொண்டு தட்டாமாலை சுற்றினாள். சுதந்திரக் காற்றை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டாள். 'கேட்க ஆளில்லாவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கிறது!'

பிடித்த பாடலை சத்தமாய்ப் பாடிக் கொண்டு, அருவியில் குளிப்பதாய்க் கனவு கண்டு கொண்டே அரை மணி நேரம் குளித்தாள்.

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது முன்கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. 'அடச்சே! இந்த சுதந்திரத்துக்கு இத்தனை அல்ப ஆயுசா?'

கதவைத் திறந்தபோது சுரேஷ் நின்றிருந்தான். கோவில்பட்டி ராஜதுரை மாமாவின் மகன் - தூரத்துச் சொந்தம். சென்னையில் மெடிகல் காலேஜில் படிக்கிறான். 'எப்படி மாறிவிட்டான்! பளிச்சென்று ஸ்டைலாய் சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறான்' அவள் நினைத்துக் கொண்டு நிற்க, அவன் அவளைக் குறுகுறுவெனப் பார்த்துச் சிரித்த சிரிப்பில் ஏதோ அர்த்தமிருந்ததாய்ப்பட்டது ரஞ்சனிக்கு.

"அப்பா மாமாவைப் பாத்துட்டு வரச்சொன்னாங்க" வியர்வையைத் துடைத்துக் கொண்டே அவன் சொன்னபோது கைக்குட்டையிலிருந்து கிளம்பிய வாசனை அவளை ஈர்த்தது

"வீட்ல யாருமில்லை" ரஞ்சனிக்கு அவனை வீட்டுக்குள் அழைப்பதில் தயக்கம்.

"எப்ப வருவாங்க?"

"ஆங்...?" திருதிருவென அவள் விழிப்பதைப் பார்த்து, "நான் உள்ளே வெயிட் பண்ணட்டுமா?" என்றான்

ரஞ்சனி வேறு வழியில்லாமல் அவனை முன் அறையில் அமர வைத்து ஃபேன் போட்டுவிட்டாள்

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே வந்தவளுக்கு அவனுக்குக் குடிக்க ஏதாவது கொடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் வர சமயலறையில் யோசனையாய் நின்றாள்.

"குடிக்கத் தண்ணி வேணும்" அவன் சுவாதீனமாய் சமயலறைக்குள் வந்திருந்தான். திடுக்கிட்டு, நடுங்கும் கைகளில் அவள் தண்ணீர் தர அவன் சிரித்துக் கொண்டே,

"இந்த பயந்தாங்கொள்ளியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறது?" என்றான் பரிகாசமாய்

'என்னது?' அவள் அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். பளிச்சென ஒரு நட்சத்திரம் பூத்தது மனசுக்குள். ஜிலுஜிலுவெனெ என்னவோ ரத்தநாளங்களில் ஓடிற்று.

அவளின் பாவனையைக் கவனித்த சுரேஷ், "ஓ, உனக்குத் தெரியாதா இன்னும்? நம்ம வீட்ல பேசி வச்சிருக்கற விஷயத்தை என்கிட்ட எங்கப்பா சொல்லிட்டாரு"

அவன் சொல்லிக் கொண்டே அவளை நெருங்கினான்

ரஞ்சனிக்கு உடம்பெல்லாம் அக்கினிச் சிறகுகளோடு பல்லாயிரக்கணக்கில் பட்டாம்பூச்சிகள் பறந்தன ... அவனைப் பார்க்க முடியாமல் வெட்கம் பிடுங்கித் தின்றது.

'காதலிக்கப்படுவது சுகம்' - ஏதோ நாவலில் படித்ததை நிஜமாய் அனுபவிக்கும் பூரிப்பு.

அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி, "சின்னப் பிள்ளையிலிருந்தே எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்று அவன் கேட்டபோது பதில்கூட சொல்ல முடியாத பரவசத்திலிருந்தாள் ரஞ்சனி.

'இப்படித்தான் சந்திரா ராஜனின் 'கவிதைக் காலங்கள்' கதையிலும் கூட....'

அவள் அந்தக் காட்சியை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் அவளை சுவரில் சரித்து....


***

சுரேஷ் வந்து போய் இன்றோடு 20 நாட்களாயிற்று. ரஞ்சனி அன்று நடந்ததை இதுவரை ஆயிரம் முறையாவது ரீப்ளே செய்து மகிழ்ந்திருப்பாள். நினைக்க நினைக்க கிறக்கமாய்த்தான் இருக்கிறது. இன்னொருமுறை அந்த சிலிர்ப்பை சுகித்துவிட்டு நாவலில் ஆழ்ந்தாள்.

'எனக்கு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்குங்க' ஷாலினி வெட்கம் குமிழிட கௌதமின் காதில் கிசுகிசுத்தாள். 'யாஹூஊஊ' ஆரவாரத்தோடு அவளை அணைத்துக் கொண்டு 'எனக்கு குட்டி ஷாலினிதான் வேணும்' என்று அவன் கொஞ்சலாய்...'

அதற்கு மேல் படிக்க முடியாமல் ரஞ்சனிக்கு வயிற்றைப் பிசைந்தது. 'எனக்கும் மூணு நாள் முன்னாலேயே வந்திருக்கணுமே... அப்படின்னா நான் கர்ப்பமா இருக்கேனா... அய்யோ...' மூச்சு விட முடியாமல் திணறெலெடுத்தது. வேர்த்து ஊற்றியது. கிலி மூளைக்கு சர்ரென்று ஏறியதில் மயக்கம் வந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு தலையோடு போர்வையால் மூடிக்கொண்டு சத்தம் வராமல் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்

வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். லேசாக மேடிட்டிருந்ததாகத் தோன்றியது. இன்னும் அதிகமாய் அழுகை பொங்கிக் கொண்டு வர தலையணையால் முகத்தை மூடிக் கொண்டு சத்தம் வராமல் குமுறினாள்

'ஐயோ... வீட்டில தெரிஞ்சா அருவாமணையில வச்சு அறுத்துடுவாங்களே! வீட்டுக்குத் தெரியறதுக்கு முன்னால மரியாதையா நானே செத்துப் போயிடணும். வேறு வழியே இல்லை.'

செத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் துக்கம் குரல்வளையை நெறித்தது. பயம் உச்சத்தைத் தொட்டது. 'எல்லாம் அந்த கேடுகெட்ட சுரேஷால் வந்த வினை... அம்மா சொன்னபடி நல்ல பிள்ளையா இருந்திருந்தால் இப்படி சாகவேண்டி இருந்திருக்காதே'

'எப்படி சாகறது? எப்படித் தூக்கு போடுறதுன்னு கூடத் தெரியாதே... பூச்சி மருந்தை எடுத்துக் குடிக்க வேண்டியதுதான். ஐயோ... கசக்கும்... நினைக்கும் போதே அந்த வாசனை குமட்டுதே...'

***

"காலையிலருந்து இப்படி பொங்கிப் பொங்கி அழுவுறா. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறா. நீ கொஞ்சம் பேசிப்பாறேம்மா" பக்கத்துவீட்டு ராஜிக்காவை அறைக்குள் அழைத்து வந்த அம்மாவின் முகத்தில் கலக்கமிருந்தது.

"என்ன இருந்தாலும் பயப்படாம சொல்லச் சொல்லும்மா. ரொம்பப் பதட்டமா இருக்கு" அம்மாவின் குரல் உடைய முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு வெளியேறினார்.

ராஜிக்கா கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்து தலையை மிருதுவாய்த் தடவியதும் ரஞ்சனியின் துக்கம் உடைந்து கேவலாய் வெளிப்பட்டது.

சற்று நேரம் அவளை அழவிட்டுவிட்டு, "சொல்லுடி... என்னன்னு அக்காகிட்ட சொல்லு. என்ன பிரச்சனைன்னாலும் பாத்துக்கலாம். நாங்கெல்லாம் எதுக்கிருக்கோம்?"

சொல்ல வாய் வராமல் வெகு நேரம் திணறிவிட்டுத் திக்கித் திக்கி, "நான்.... ப்ரெக்...னென்டா.. இருக்...கேன்" என்றுவிட்டு மீண்டும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள்.

ராஜிக்காவுக்குத் தான் கேட்பதை நம்ப முடியவில்லை. "என்னது... என்னடி சொல்றே?"

ரஞ்சனி பதில் சொல்லாமல் அழுகையத் தொடர... ராஜிக்கு இது எப்படி சாத்தியம் என்று புதிராய் இருந்தது. கட்டுப்பாடான வளர்ப்பு, கெட்டுப் போக அதிகம் வாய்ப்பில்லாத சூழல், சுபாவத்திலேயே அப்பாவி வேறு... யார்? எப்படி?
தன்னை நிதானப்படுத்திக் கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது ராஜிக்கு. "யாருடி? எப்படிடி?"

"அன்னைக்கு சு...ரேஷ்" பேச முடியாமல் அழுகை பீறிக் கொண்டு வந்தது...

ராஜி, "பயப்படாம சொல்லுப்பா" என்றாள் ஆதரவாய்.

"நான் ஒண்ணுமே செய்யலைக்கா... அவந்தான் கிச்சனுக்குள்ளே வந்து...." விக்கி விக்கி அழுதபடியே தொடர்ந்தாள் "முத்தம் குடுத்துட்டான்"

அவள் மேலும் ஏதோ சொல்லவருகிறாள் என்று சில நொடிகள் காத்திருந்தும் அவள் சொல்ல ஒன்றுமில்லை என்பது போல் அழுது கொண்டே இருக்க ராஜிக்காவுக்கு லேசாய் சந்தேகம் வந்தது.

"அப்புறம்...?"

"அப்புறம் ஃபோன் வந்துச்சி. அவன் முன் ரூமில போய் உக்காந்துக்கிட்டான்..."
ராஜிக்காவுக்குக் குழப்பமான குழப்பம் 'என்ன உளறுகிறது இந்த லூசு?'

"நீ கர்ப்பமா இருக்கேன்னு யார் சொன்னது?"

"எனக்குத் தெரியும்... மூணு நாளைக்கு முன்னாலேயே வந்திருக்கணும்"

"சரி... அன்னைக்கு என்ன நடந்திச்சின்னு எனக்கு விபரமா சொல்லு"

அவள் சொல்லி முடித்ததும் ராஜிக்காவுக்குக் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. நிம்மதியான நிம்மதி. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணா?

"மக்கு... மக்கு... முத்தம் கொடுத்தா ப்ரெக்னென்ட் ஆக மாட்டாங்கடி" என்றாள் பொங்கி வந்த சிரிப்பை விழுங்கிக் கொண்டு

அழுகையைச் சற்று நிறுத்தி, "நிஜமாவாக்கா?" என்றாள் ரஞ்சனி அவளை நம்பிக்கை இல்லாமல் பார்த்து.

ராஜிக்கா கிசுகிசுப்பான குரலில் படைப்பின் ரகசியத்தை விளக்கிவிட்டு, "இப்பிடி ஏதாவது நடந்தாத்தான் குழந்தை பிறக்கும். நடந்துச்சா?" என்று கேட்டபோது ரஞ்சனி எழுந்து அமர்ந்து இல்லை என்று பெரிதாய் தலையாட்டினாள். நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. மலைக்கடியில் மாட்டிக்கொண்டு மீண்டாற் போன்ற நிம்மதி!

ஒன்றுமில்லாததற்கு இத்தனை களேபரம் செய்துவிட்டோமே என்ற வெட்கம் முகத்தை ஆக்கிரமித்திருந்தது. "அப்புறம் ஏன்கா இன்னும் வரலை?" பயம் முற்றிலும் விலகாத கேள்வி

"சில சமயம் அப்படித்தான்டி. சாப்பாடு, டென்ஷன் இப்படி ஏகப்பட்ட காரணமிருக்கு. நிறைய பப்பாளிப்பழம் சாப்பிடு. வந்திரும்"
***

'கடவுளே.... ராஜிக்கா சொன்னது போலவா நடக்கும்? அந்த ஃபோன் வந்திருக்கலைன்னா ஒருவேளை...? அய்யோ... எனக்கு வேண்டாம்பா...'

'எனக்கு இதெல்லாம் இப்போ சரிப்பட்டு வராது. அம்மா சொல்றபடி எனக்கு வெவரம் பத்தாது'

அம்மாவின் நினைவு வந்ததும் அவரின் கலங்கிய முகம் கண்களில் தோன்ற, 'பாவம் அம்மா, எனக்கு ஒரு கஷ்டம்னா எப்படி தவிச்சுப்போறாங்க! அவங்க எனக்கு நல்லதைத்தானே நினைப்பாங்க! அவங்க சொல்றபடி கேட்டா என்ன தப்பு?'

'எப்ப இதெல்லாம் நடக்கணும்னு அம்மாக்குத் தெரியுமா இருக்கும். அப்ப நடந்தா போதும். இப்படி திருட்டுத்தனம் செஞ்சுட்டு பட்ட அவஸ்தை இனி வேண்டாம்பா'
***

"மார்க் ஷீட் வாங்கிட்டு வந்திர்றேம்மா" சைக்கிளை வெளியே எடுத்த தன் பெண்ணை அப்போதுதான் கவனித்தார் அம்மா.

கையிலோ கழுத்திலோ அசிரத்தையாய் எப்போதும் தொங்கும் துப்பட்டா இன்றைக்கு அடக்கமாய் அதனிடத்தில் அமர்த்தப்பட்டு தோளின் இருபுறமும் பின் செய்யப்பட்டிருந்தது.

சற்றே நிம்மதி மனதில் எழுந்தாலும் 'பாவம் பிள்ளை ரொம்ப பயந்துவிட்டது' என்ற பரிதாப உணர்ச்சியே மேலோங்கி நின்றது.

சைக்கிளில் ஏறி அமர்ந்த ரஞ்சனி வாசலில் நின்ற அம்மாவைத் திரும்பிப் பார்த்து, "நீங்க சொன்ன மாதிரி நான் மதுரையிலேயே சேந்துக்கறேம்மா" என்று சமர்த்தாய்ச் சொன்னபோது அம்மாவுக்குக் குபுக்கெனக் கண்ணில் நீர் கோத்தது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

112 Comments:

At June 15, 2006 4:20 AM, Blogger Sud Gopal said...

//சந்திரா ராஜனின் நாவல்களென்றாலே இபப்டித்தான். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே எப்போதும் காதல் போர். அவர்கள், கோபங்கள், தாபங்கள், கொஞ்சல்கள்... படித்து முடிக்கும்போது யாருக்காயிருந்தாலும் தானும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.//

ஓ."ர"வில ஆரம்பிக்கும் அவரோட பெர்யரின் கடைசி எழுத்து "ன்" தானே...


//நிம்மதியான நிம்மதி. இந்தக் காலத்தில் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணா?//

அதானே...???!!!

கொஞ்சம் வித்தியாசமான களம்.போட்டியில வெற்றி பெற என்னோட வாழ்த்துகள்...

 
At June 15, 2006 4:33 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

இதுவரை படிச்சதுல வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க நிலா. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.

 
At June 15, 2006 4:37 AM, Anonymous Anonymous said...

இளம் நெஞ்சங்களே! தயவு செய்து சந்திரா ராஜனின் நாவல்களை கல்யாணத்துக்கு பொறவாட்டி நிதானமாப் படியுங்க :-))

படிக்கிற காலத்துல அதுல மட்டும் கவனம் செலுத்துங்க....என்ன செய்ய? எல்லாம் ஹார்மோன்கள் செய்யற வேல.

 
At June 15, 2006 4:43 AM, Blogger நிலா said...

சுதர்சன் கோபால்
வருகைக்கு நன்றி...
கிராமப் புறங்களில் இப்படிப்பட்ட அப்பாவித்தனம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. Exposure makes a lot of difference.

எதற்கும் இருக்கட்டும் என மாநகரமொன்றிம் பெண்கள் இல்லம் நடத்துகிற ஒரு நபரிடம் இந்தக் கதையைக் காட்டி கருத்துக் கேட்டேன். இப்படிப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்திருப்பதாகச் சொன்னார்...

அதுசரி, தர்ம அடி தருவீங்கன்னு பார்த்தா வாழ்த்து சொல்லிட்டுப் போயிட்டீங்க?

 
At June 15, 2006 4:53 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கு. ஆனா உங்க நடை மாதிரி இல்லையே...

 
At June 15, 2006 5:04 AM, Blogger Unknown said...

நிலா அக்கா,

கதையில் கனம் கம்மியாத் தெரியுது. குமுதம் ஒரு பக்கக் கதைகளின் தாக்கம் தெரிகிறது.

எது எப்படியோ போட்டிக்கு இன்னொமொரு வித்தியாசமனக் கதை. வாழ்த்துக்கள்.

 
At June 15, 2006 5:16 AM, Blogger Pavals said...

நல்லாயிருக்கு கதை.. :)

//கிராமப் புறங்களில் இப்படிப்பட்ட அப்பாவித்தனம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. //
அப்படீங்கரீங்க.. சரி.. கதையிலதான.. அது கதாசிரியர் விருப்பம்..

 
At June 15, 2006 6:14 AM, Blogger வவ்வால் said...

வணக்கம் நிலா!
கதை நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் லேட்டாக எழுதிடிங்க ,1960 களில் மட்டும் எழுதி இருந்திங்கன்னா ஓகோனு போய் இருக்கும்,பின்ன என்னங்க இந்த சாட்டிலைட் சேனல் காலத்துல இப்படிலாம் பொண்ணுங்க இருக்குனு எழுதுனா :-)) இப்போலாம் கிராமத்துல இருக்க பொட்டிகடைல கூட விஸ்பெர் ,கேர்ஃப்ரீனு கேட்டுவாங்குறாங்க. அந்த அளவு தொலைக்காட்சிலாம் பார்த்து முன்னேறிட்டாங்க!

எழத்து நடை நன்றாக இருக்கிறது வெற்றிப்பெற வாழ்த்துகள்!

 
At June 15, 2006 7:15 AM, Blogger Sud Gopal said...

//அதுசரி, தர்ம அடி தருவீங்கன்னு பார்த்தா வாழ்த்து சொல்லிட்டுப் போயிட்டீங்க?//

அது சரி :-)

 
At June 15, 2006 7:52 AM, Blogger நிலா said...

ராசா, வவ்வால்,

நன்றி... தட்டினாலும் குட்டினாலும் என்னை செதுக்குவதாகவே கருதுவேன்

ஒரு சின்ன தெளிவு படுத்தல்


//அப்படீங்கரீங்க.. சரி.. கதையிலதான.. அது கதாசிரியர் விருப்பம்.. //


//ஆனால் கொஞ்சம் லேட்டாக எழுதிடிங்க ,1960 களில் மட்டும் எழுதி இருந்திங்கன்னா ஓகோனு போய் இருக்கும்,பின்ன என்னங்க இந்த சாட்டிலைட் சேனல் காலத்துல இப்படிலாம் பொண்ணுங்க இருக்குனு எழுதுனா :-)) //

நீங்கள் கிராமத்துப் பெண்களை அறிந்திருக்கிறீர்களா தெரியவில்லை. அப்படி அறிந்திருந்தாலும் இந்த வயசுப் பெண்களின் உணர்வுகளை எவ்வளவு தூரம் புரிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.

உங்கள் வாதப்படி, சாதாரணமாக இக்காலப் பெண்களுக்கு 'அறிவு' அதிகம் என்று கொண்டாலும் கூட, இப்படி அப்பாவியாய் ஒரு பெண்கூட இருக்க மாட்டாள் என்றா நினைக்கிறீர்கள்? ஏன் அதனை அந்தப் பெண்ணைப் பற்றிய கதையாக எடுத்துக் கொள்ளக் கூடாது?


ஆனால் ஒன்று - இப்படிப்பட்ட வாதங்களுக்கு நான் இடம் தந்திருக்கக் கூடாதுதான்

 
At June 15, 2006 8:06 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

இந்த மாதிரிப் பெண்களும் இருக்காங்க என்பது தான் என் கருத்து, observation.

 
At June 15, 2006 8:11 AM, Blogger VSK said...

சொல்ல நினைத்ததைத் திறம்பட சொல்லியிருக்கிறீர்கள்!

சந்திரா ராஜன் புத்தகம் படிக்கும் பெண்ணுக்கு இந்த தகவல்கள் எல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே!! :))

அப்புறம், அப்பாவிப்பெண் என்றால், கொஞ்சம் இடிக்கிறது.

வாழ்த்துகள்!

 
At June 15, 2006 8:21 AM, Blogger Pavals said...

//நீங்கள் கிராமத்துப் பெண்களை அறிந்திருக்கிறீர்களா தெரியவில்லை. அப்படி அறிந்திருந்தாலும் இந்த வயசுப் பெண்களின் உணர்வுகளை எவ்வளவு தூரம் புரிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை.//


நான் நகரத்துக்கு தாங்க புதுசு.. கிராமத்துக்கு ரொம்ப பழைய ஆள்.. :)

நாள் தள்ளிப்போவதை தெரிஞ்சுக்கிற பொண்ணு.. கோ-எட்'ல படிச்சா ஜாலின்னு நினைக்கிற பொண்ணு.. இப்படி இருக்குமான்னா.. கண்டிப்பா இருக்காது..

//ஏன் அதனை அந்தப் பெண்ணைப் பற்றிய கதையாக எடுத்துக் கொள்ளக் கூடாது?//
இதை தாங்க நான் 'சரி.. கதையிலதான.. அது கதாசிரியர் விருப்பம்..'ன்னு சொல்லியிருந்தேன்..

கிராமத்து பொண்ணு அப்பாவி'ங்கிறது சினிமாவுல காமிச்சா நல்லாயிருக்கும்ங்க.. ஆனா நிஜம் கண்டிப்பா அப்படியில்லை..
டிஸ்கோ'வுக்கு நாகரீகமா ட்ரெஸ் செஞ்சுட்டு வரத்தெரியாத அளவுக்கு 'அப்பாவி'யா இருக்கலாம்.. ஆனா, முத்தம் குடுத்தா கர்பம்ங்கிற 'சின்னத்தம்பி' வகையறா எல்லாம் சாத்தியமில்லைன்னு சொல்லவந்தேன் அவ்ளோ தான்.. ஆனா 'கதை'யில வரலாம் தப்பில்லை.. அதுனால தான இத 'கதை'ங்கறோம்.. :)

தப்பா எடுத்துக்காதீங்க இதெல்லாம்..

 
At June 15, 2006 8:24 AM, Blogger நிலா said...

//ஆனா உங்க நடை மாதிரி இல்லையே...//

கொத்ஸ்

குலதெய்வம் மட்டும் வச்சிட்டு கிராமத்து நடையிலதான் எழுதுவேன்னு முடிவு பண்ணிட்டீங்களா?

 
At June 15, 2006 8:26 AM, Blogger நிலா said...

//கதையில் கனம் கம்மியாத் தெரியுது.//

தேவ், ஒரே கனமா எழுதறதா மக்கள் சொல்றதுனால கொஞ்சம் லைட்டா எழுதலாம்னு பார்த்தேன்

// குமுதம் ஒரு பக்கக் கதைகளின் தாக்கம் தெரிகிறது.//
அப்படியா? நான் குமுதம் ஒரு பக்கக் கதை படிச்சதே இல்லையே...

 
At June 15, 2006 8:28 AM, Blogger நிலா said...

வவ்வால்,

//கதை நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் லேட்டாக எழுதிடிங்க ,1960 களில் மட்டும் எழுதி இருந்திங்கன்னா ஓகோனு போய் இருக்கும்//

1960ல நடந்ததா நெனச்சுக்கிட்டு படிங்க :-)))

//எழத்து நடை நன்றாக இருக்கிறது வெற்றிப்பெற வாழ்த்துகள்! //

நன்றி...

 
At June 15, 2006 8:32 AM, Blogger நிலா said...

//இந்த மாதிரிப் பெண்களும் இருக்காங்க என்பது தான் என் கருத்து, observation. //

பொன்ஸ், உதவிக்கு வந்ததுக்கு நன்றி. எனது தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இருப்பது திருச்சி. 17 வயதுப் பெண் இருக்கிறார். அவருக்கு இந்தக் கதை பிடித்துப் போனது. தன் பெண்ணிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லவேண்டும் என்று எழுதியிருந்தார். அதன்பிறகே நான் கதையைப் பதிவிலிட்டேன்.

ஒரு வேளை எல்லாராலும் இதைப் புரிந்து கொள்ள முடியாதோ என்னவோ.

 
At June 15, 2006 8:34 AM, Blogger நிலா said...

//சொல்ல நினைத்ததைத் திறம்பட சொல்லியிருக்கிறீர்கள்!//

நன்றி, எஸ்கே

//சந்திரா ராஜன் புத்தகம் படிக்கும் பெண்ணுக்கு இந்த தகவல்கள் எல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே!! :))

அப்புறம், அப்பாவிப்பெண் என்றால், கொஞ்சம் இடிக்கிறது.//

பிரச்சனையே அங்கேதானே... அவையெல்லாம் கற்பனையை வளார்ப்பவையே தவிர அறிவைப் புகட்டுபவை அல்லவே!

 
At June 15, 2006 8:41 AM, Blogger நிலா said...

//நாள் தள்ளிப்போவதை தெரிஞ்சுக்கிற பொண்ணு.. //

கதையில் படித்துதானே தெரிகிறது அவளுக்கு?


//கோ-எட்'ல படிச்சா ஜாலின்னு நினைக்கிற பொண்ணு.. இப்படி இருக்குமான்னா.. கண்டிப்பா இருக்காது.. //

இங்கேதான் நீங்க புரிஞ்சிக்கணும் - கோ-எட்ல படிச்சா ஜாலின்னு நெனக்கறது பசங்க நெனக்கற 'ஜாலி' இல்லீங்க...

வெகுளித்தனமா எதிர்பாலார் மேல ஏற்பட்டிருக்கிற ஈர்ப்பு...


//தப்பா எடுத்துக்காதீங்க இதெல்லாம்.. //

இதில தப்பா எடுத்துக்க என்னங்க இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டுப் போனா நம்மளோட வீக்னஸ் என்னன்னு தெரியாமலே போயிடும்

இப்பப் பாருங்க, எனக்கு இன்னும் கூட conviction இருந்தாக் கூட இது போன்ற கருக்களை எடுப்பதிலும் கையாளுவதிலும் இன்னும் கவனம் தேவைங்கறது உறைச்சிருக்கு.

 
At June 15, 2006 8:47 AM, Anonymous Anonymous said...

நல்ல சிந்தனை உள்ள கதை, இந்த கதை ஒரு கருத்தை விளக்கிவுள்ளத்து, நம் பாடபகுதியில் பாலியல் கல்வி கண்டிப்பாக வேண்டும், இல்லையெனில் ஆயிரம் ரஞ்சனி உருவாக வாய்புவுள்ளது. இது போல் நல்ல கதைகள் நிலாவிடம்மிருந்து எதிர்பார்க்கிறோம்
நன்றி

மஞ்சு

 
At June 15, 2006 9:27 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

ராசா சொன்ன போது ஏதோ சின்ன பசங்க, பொண்ணுங்க மென்டாலிடி புரியாது என்று விட்டுவிட்டேன். எஸ்கே மாதிரி பெரியவர்கள் அதே கருத்தைச் சொல்லும் போது தான் இந்த விசயத்தில் எதிர்பாலரின் புரிதல் ரொம்ப தவறு என்று தோன்றுகிறது.

இந்த ரமணி சந்திரன், லக்ஷ்மி மாதிரி கதைகள் படிப்பவர்களுக்கு செக்ஸ் அறிவெல்லாம் அதிகம் இருக்கும், முத்தம் கொடுத்தலுக்கும், நாள் தள்ளிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்பதெல்லாம் சரியான வாதம் இல்லை. நமது இந்தியக் கல்வி முறையில் Sex education என்பது சும்மா பேச்சுக்குத் தான் இருக்கிறது. விலங்கியலில்(Zoology) கொஞ்சம் கொஞ்சம் கோடிக் காட்டப் படுவது கூட reproduction, menstrual cycle தான். Sexual abuse-க்குட்படும் போது கூட அது abuse என்று புரியாத அளவில் தான் குழந்தைகள் வளர்க்கப் படுகிறார்கள். பத்தாவது படிக்கும் போது கூட Good touch, bad touch தெரியாமல் இருந்த பெண்கள் எனக்குச் சென்னையிலேயே தெரியும். கிராமத்தை விடுங்கள்.

நிலா, உதவிக்கு என்று இல்லை, நானும் இதே மாதிரி concept-இல் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். சொல்லும் விதம் குறித்து கொஞ்சம் தயக்கம் இருந்தது. இந்தக் கதை மூலம் இங்கே இருக்கும் misconceptions எல்லாம் பார்க்கும் போது எழுத வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

 
At June 15, 2006 9:39 AM, Anonymous Anonymous said...

நிலா, நல்ல கதை.

இது சாத்தியமில்லை என்று சொல்லியிருப்பவர்கள் எல்லாம் கவனித்தால் அநேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். :) அதுதான் விஷயம். அதாவது அவர்கள் கண்களுக்கு +2 முடித்த பெண்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்ற எண்ணமே இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. கிராமமோ நகரமோ, பெண்கள் தங்களுக்குள் அதிகபட்சம் மாதவிலக்கு பற்றி கூட ஒரு அளவோடுதான் இந்த வயதில் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். (திருமணம், பிள்ளை பிறந்தபிறகு தான் ஓரளவு வெட்கம் விட்டு வெளியே பேசுகிறார்கள். அதுவும் அநேகமாக தன் உடல்சார்ந்த மாதவிலக்கு, பிள்ளைப்பேறு பிரச்னைகளாக மட்டுமேதான் அவையும் இருக்கும்.) மற்றபடி சொல்லித் தரும் புத்தகங்களோ புளூ ஃபிலிம்களோ ஒருவேளை கல்லூரியில்(கல்லூரி விடுதியைப் பொருத்து) வேண்டுமானால் சிலபெண்களுக்கு கிடைக்கலாம்.

தன்னை ஆராதிக்க வரப்போகிற ராஜகுமாரனைப் பற்றிக் கற்பனைசெய்வது, சீக்கிரம் காதல்வயப்படுவது, உணர்ச்சிவசப்படுவது போன்ற இனக்கவர்ச்சியால் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண்கள் பெண்களை எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பதாக எடைபோடலாம். உண்மை அதுவல்ல. இன்னும் நிறைய பெண்கள் திருமணம் வரைகூட சரியான புரிந்துணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். நீங்களே குறிப்பிட்டபடி நம்மூர் கதைகளும், சினிமாக்களும் அவர்களுக்கு அரைகுறை அறிவைத்தான் தருகின்றன.

உங்கள் கதை இந்தியாவில் நிச்சயம் சாத்தியம்.

 
At June 15, 2006 10:06 AM, Blogger நிலா said...

// நம் பாடபகுதியில் பாலியல் கல்வி கண்டிப்பாக வேண்டும்//

மஞ்சு

இதை.. இதைத்தான் நான் சொல்ல வந்தேன்...

பாருங்கள்... பெண்களுக்குப் புரிகிறது. ஏற்றுக்கொள்ள முடிகிறது

 
At June 15, 2006 10:51 AM, Blogger VSK said...

""பிம்பங்களை உடைக்க யாரும் விரும்புவதில்லை; முன்வருவதுமில்லை.""

இது ஒரு தனிப்பட்ட உலகறியா அப்பாவிப் பெண்ணின் கதையெனில், அனுதாபத்துடன் சிரிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை.

ஆனால், இதுவே பொதுப்படுத்தப்படுகிறது என்றால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.....இப்போது..... எனச் சொல்ல விரும்புகிறேன்.

பாலியல் கல்வி பள்ளிப்படிப்பில் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 
At June 15, 2006 11:18 AM, Blogger B o o said...

First time here. ரொம்ப நல்ல கதை. It was like a page from my adolescence. அதே தவிப்பு, அதே co-ed ஆசை, அதே confusion, அதே அறியாமை, (பல காதல் கதைகள் படித்தும்!). anon and பொன்ஸ் சொல்வது ரொம்ப சரி. எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிப்போமே தவிர, சுத்தமா ஒண்ணும் தெரியாது! so you dont have to defend your story at all. It makes perfect sense as it is.

 
At June 15, 2006 11:34 AM, Blogger ramachandranusha(உஷா) said...

நிலா, மிக யதார்த்தமான கதை. பையன்களுக்கு ஆபாச புத்தகங்கள் என்றால் அந்த வயதில்
ரமணிசந்திரன் கதைகளில் பித்துபிடித்து அலைந்தார்கள் பெண்கள். ஆனால் எனக்கு பிடிக்காது
ஆனால் அந்த ஆதர்ச நாயகனின் கனவு மட்டும் இருந்தது:-)
அடுத்து நீங்கள் சொன்ன அதே மேட்டரை, "தோழியர்" வலைப்பதிவில் எப்பொழுதோ எழுதியுள்ளேன். தேடிப்பார்க்கிறேன்.
இன்னும் கூட வெளிப்படையாய், கல்யாணத்திற்கு முன்பு பெண்களிடம் பேசுவதில்லை என்பதே உண்மை.
நிலா, இதே முத்தமிடுவதை, கற்பிழந்ததாய் நினைக்கும் நாயகியின் கதை- அகிலன் எழுதியது
பொன் விலங்கு- சரியா என்று யாராவது சொல்லுங்களேன் (டோண்டு சார் ஹெல்ப் பிளீஸ்)
தொலைக்காட்சி தொடராய் வந்ததே, ஸ்டாலின் மற்றும் செளகாரின் பேத்தி நடித்தது.

 
At June 15, 2006 12:00 PM, Anonymous Anonymous said...

"தேவ்" சொன்னதை வழிமொழிகிறேன்: குமுதம் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் தெரிகிறது.

இப்படிப்பட்ட ஒரு அப்பாவித்தனத்துக்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றாலும் முற்றிலும் இல்லையென்று சொல்லமுடியாது.

 
At June 15, 2006 12:20 PM, Blogger நிலா said...

//ராசா சொன்ன போது ஏதோ சின்ன பசங்க, பொண்ணுங்க மென்டாலிடி புரியாது என்று விட்டுவிட்டேன். எஸ்கே மாதிரி பெரியவர்கள் அதே கருத்தைச் சொல்லும் போது தான் இந்த விசயத்தில் எதிர்பாலரின் புரிதல் ரொம்ப தவறு என்று தோன்றுகிறது.//

பொன்ஸ், எனக்கும் இதேதான் தோன்றியது.


//இந்த ரமணி சந்திரன், லக்ஷ்மி மாதிரி கதைகள் படிப்பவர்களுக்கு செக்ஸ் அறிவெல்லாம் அதிகம் இருக்கும், முத்தம் கொடுத்தலுக்கும், நாள் தள்ளிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் புரியும் என்பதெல்லாம் சரியான வாதம் இல்லை.//'

உண்மை.. உண்மை... இது ஆண்களுக்குப் புரியாமல் போவது நம் சமூகத்தில் ஆண் பெண்களுக்குள்ள பிளவையே காட்டுகிறது.

//நிலா, உதவிக்கு என்று இல்லை, நானும் இதே மாதிரி concept-இல் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். சொல்லும் விதம் குறித்து கொஞ்சம் தயக்கம் இருந்தது. இந்தக் கதை மூலம் இங்கே இருக்கும் misconceptions எல்லாம் பார்க்கும் போது எழுத வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.//

இங்கே வரும் பெண்கள் அனைவருமே இந்தக் கதை யதார்த்தமாக இருக்கிறது என்கிறார்கள். ஆண்களில் அநேகர் இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒரேடியாய் அடித்துச் சொல்கிறார்கள். இதிலேயே நம் சமூகத்தில் பெண்களின் உணர்வுகளுக்கு என்ன மதிப்பிருக்கிறது என்று தெரிந்து போகிறது.

ராசாவின், வவ்வாலின், எஸ்கேயின் கருத்திலிருக்கும் உறுதியைக் கவனியுங்கள்:

//கிராமத்து பொண்ணு அப்பாவி'ங்கிறது சினிமாவுல காமிச்சா நல்லாயிருக்கும்ங்க.. ஆனா நிஜம் கண்டிப்பா அப்படியில்லை..டிஸ்கோ'வுக்கு நாகரீகமா ட்ரெஸ் செஞ்சுட்டு வரத்தெரியாத அளவுக்கு 'அப்பாவி'யா இருக்கலாம்.. ஆனா, முத்தம் குடுத்தா கர்பம்ங்கிற 'சின்னத்தம்பி' வகையறா எல்லாம் சாத்தியமில்லைன்னு சொல்லவந்தேன்//

//1960 களில் மட்டும் எழுதி இருந்திங்கன்னா ஓகோனு போய் இருக்கும்,பின்ன என்னங்க இந்த சாட்டிலைட் சேனல் காலத்துல இப்படிலாம் பொண்ணுங்க இருக்குனு எழுதுனா//

//இதுவே பொதுப்படுத்தப்படுகிறது என்றால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.....இப்போது..... எனச் சொல்ல விரும்புகிறேன்.//

'ஒரு வேளை இது சாத்தியமாக இருக்கலாம்' என்ற நிலையைக் கூட அவர்களால் எடுக்கமுடியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு என்னவோ இன்னும் பெண்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

இப்படித்தானிருக்கும் என இவர்களாகவே கணக்குப்போட்டுக் கொள்வது போலிருக்கிறது.

 
At June 15, 2006 12:41 PM, Blogger VSK said...

தயவு செய்து, இதனை ஆணாதிக்க/பெண்ணடிமை விவாதமாக மாற்றிட வேண்டாம்.

இதில் சொல்லி இருக்கும் கருத்து, இக்காலகட்டத்தில் பொதுவானதல்ல என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

இதில் வரும் பெண் இன்னும் இருக்கிறார்; இனிமேலும் இருப்பார்.

ஆனால், அவர் பெரும்பான்மை அல்ல என எண்ணுகிறேன்.

'இது சாத்தியமாக இருக்கலாம், ஒருவேளை' என்பதில் ஐயமில்லை.

இதுதான் நிலை எனக் காட்ட வேண்டாம் என வேண்டுகிறேன்.

எனது சந்திப்பின், பழக்கத்தின், பணி நிமித்தம் கிடைத்த அனுபவங்களின் மதிப்பிடே அது.

நீங்கள் சொல்வது போல 'இவர்களாகவே கணக்கு போட்டுக் கொண்டது' அல்ல.

பிம்பங்களைக் கட்டிக்காக்க முயல வேண்டாம்.

 
At June 15, 2006 12:55 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//எனது சந்திப்பின், பழக்கத்தின், பணி நிமித்தம் கிடைத்த அனுபவங்களின் மதிப்பிடே அது.//
எஸ்கே, உண்மையாவே, எனக்கு அது தான் ஆச்சரியம்!!!

 
At June 15, 2006 1:00 PM, Blogger நிலா said...

//எஸ்கே, உண்மையாவே, எனக்கு அது தான் ஆச்சரியம்!!!//

பொன்ஸ், எனக்குத் தோன்றியதும் அதே... உண்மையிலேயே அநியாயத்துக்கு ஒரே போல் சிந்திக்கிறோம் - வேறு பதிவுகளிலும் நாமிருவரும் இட்ட பின்னூட்டங்களையும் வைத்துத்தான் சொல்கிறேன்

 
At June 15, 2006 1:15 PM, Blogger VSK said...

நான் ஒரு மருத்துவன் என்பதையும் பல ஆண்டுகள் பணி புரிந்த[ப]வன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

மீண்டும் பிம்பம்!

 
At June 15, 2006 1:32 PM, Blogger நிலா said...

SK

//தயவு செய்து, இதனை ஆணாதிக்க/பெண்ணடிமை விவாதமாக மாற்றிட வேண்டாம்//

எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஆனால் உண்மையாகவே இங்கு வந்த கருத்துக்கள் மிகுந்த ஆச்சரியத்தையும் எதிர்பாலார் மேல் புரிதலின்மையும் காட்டுவதாகவே நான் உணர்கிறேன்

//ஆனால், அவர் பெரும்பான்மை அல்ல என எண்ணுகிறேன்.//

பெரும்பான்மை என்று நானுமே எண்ணவில்லை. அதனால்தான் ராஜிக்கா பாத்திரம் 'இந்தக்காலத்தில் இப்படி ஒரு அப்பாவியா?' என்று வியப்பதாக எழுதியிருந்தேன்.

ஆனால் 'இதெல்லாம் சின்னத்தம்பித்தனமாக இருக்கிறது' '1960களில் எழுத வேண்டியது' என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

//இதுதான் நிலை எனக் காட்ட வேண்டாம் என வேண்டுகிறேன். //

இதுதான் நிலை என்று எண்ணம் வரும்படி இந்தக் கதை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் எதனால் அந்த எண்ணம் ஏற்பட்டது என்று தெரிவிப்பீர்களா? திருத்திக் கொள்ள உதவும்

//எனது சந்திப்பின், பழக்கத்தின், பணி நிமித்தம் கிடைத்த அனுபவங்களின் மதிப்பிடே அது.//

ஆச்சரியம்தான்...

இது போன்ற அந்தரங்க பயங்களைத் தாயிடம் தெரிவிப்பதற்கே தயங்குவார்கள் பெண்கள். முதலில் தோழிகளும் பின்பு அக்காக்களும் அதன் பிறகு அம்மாக்களும் அதன் பிறகே மற்றவர்களும் இந்த சூழலுக்குள் வருவார்கள்...
அதனால் உங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் நேரிடையானவையாக இல்லாதிருந்திருக்கலாம்

எனினும்... தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

நான் ஏற்கனெவே குறிப்பிட்டது போல குறைகளைக் குறிப்பிட்டுச் சொல்வது படைப்பாளியை மேம்படுத்த உதவும் என்பது என் எண்ணம்

 
At June 15, 2006 1:38 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//உண்மையிலேயே அநியாயத்துக்கு ஒரே போல் சிந்திக்கிறோம் - வேறு பதிவுகளிலும் நாமிருவரும் இட்ட பின்னூட்டங்களையும் வைத்துத்தான் சொல்கிறேன்
//
பார்த்தேன் நிலா, போட்டிக்கு வந்த எல்லாப் பதிவையும் லெப்ட் ரைட் போட்டு அடிச்சிருக்கறதைத்தானே சொல்றீங்க..:)
அதுனால தான் நான் இந்தப் போட்டிக்கு ஒண்ணும் செய்யாம, அடக்கி வாசிக்கிறேன்.. உங்களைப் பார்த்ததும் கொஞ்சம் தைரியம் வருது.. பார்க்கலாம் :)

 
At June 15, 2006 1:40 PM, Blogger நாமக்கல் சிபி said...

//வேறு பதிவுகளிலும் நாமிருவரும் இட்ட பின்னூட்டங்களையும் வைத்துத்தான் சொல்கிறேன்//

இதுல யாரோ ஒருத்தர் மற்றவரின் பின்னூங்களை காப்பி அடிக்கிறீர்கள் போலிருக்கிறது!

 
At June 15, 2006 1:46 PM, Anonymous Anonymous said...

the subject handled is sensitive. but, you have handled it without any obscenity. This story is absorbing to me. it is very relevant to me in the situation I am placed, being associated with a Children's Home ,where we have a good number of adolescent girls. Do I see a mild touch of humour in the story? The title of the story "manamudhir kalam" is very apt and appealing.

 
At June 15, 2006 1:52 PM, Blogger நாமக்கல் சிபி said...

This comment has been removed by a blog administrator.

 
At June 15, 2006 2:15 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நிலா,
கதைன்னு ஆரம்பிச்சி விவாத மேடையா போய்டுச்சு. உங்க அனுமதியோட, இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லணும் :

எஸ்கே,
//தயவு செய்து, இதனை ஆணாதிக்க/பெண்ணடிமை விவாதமாக மாற்றிட வேண்டாம்//
இதில் ஆணாதிக்கமோ, பெண்ணடிமைத்தனமோ எதுவுமில்லை. எத்தனை தான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினாலும், இருவர் உலகமும் தனித் தனி என்னும் கருத்து மட்டுமே இதிலிருந்து தெளிவாகிறது.
பல வருடங்களாக ஆண்களின் பார்வையில் கதைகள் படிப்பதால், இங்கு வந்த பல ஆண் வளர்சிதை மாற்றங்கள் அதிசயிக்கத்தக்கதாக இல்லை. அதனாலேயே பெண்கள் புரிந்து கொண்ட அளவுக்கு ஆண்கள் எதிர்பாலினரைப் புரிந்து கொள்ள முயலவில்லை(ஆணாதிக்கம்) என்பது பொருளில்லை.

 
At June 15, 2006 2:33 PM, Blogger வெளிகண்ட நாதர் said...

மொத்ததிலே 'sex Education'னு பார்க்கிறப்ப, இந்தியாவிலே நீங்க சொல்ற மாதிரி பொண்ணுங்க அநேகம் பேரு இருக்காங்க! பொண்ணுங்க பத்தாம் பசலியா இருந்து, பிறகு ஏமாத்தபடறது வரைக்கும் எல்லாமே இங்கேருந்து தான் ஆரம்பிக்குது!

 
At June 15, 2006 2:59 PM, Blogger நிலா said...

அனானி,

//நிலா, நல்ல கதை. //

நன்றி

//இது சாத்தியமில்லை என்று சொல்லியிருப்பவர்கள் எல்லாம் கவனித்தால் அநேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். :) அதுதான் விஷயம். அதாவது அவர்கள் கண்களுக்கு +2 முடித்த பெண்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்ற எண்ணமே இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. கிராமமோ நகரமோ, பெண்கள் தங்களுக்குள் அதிகபட்சம் மாதவிலக்கு பற்றி கூட ஒரு அளவோடுதான் இந்த வயதில் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். (திருமணம், பிள்ளை பிறந்தபிறகு தான் ஓரளவு வெட்கம் விட்டு வெளியே பேசுகிறார்கள். அதுவும் அநேகமாக தன் உடல்சார்ந்த மாதவிலக்கு, பிள்ளைப்பேறு பிரச்னைகளாக மட்டுமேதான் அவையும் இருக்கும்.) //

உண்மைதான். நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பெயர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே...


//மற்றபடி சொல்லித் தரும் புத்தகங்களோ புளூ ஃபிலிம்களோ ஒருவேளை கல்லூரியில்(கல்லூரி விடுதியைப் பொருத்து) வேண்டுமானால் சிலபெண்களுக்கு கிடைக்கலாம்.//

உண்மையாகச் சொன்னால் கிராமப் புறங்களில் ப்ளூஃபிலிம் அல்லது பாலியல் குறித்த புத்தகங்கள் பற்றி கேள்விப்படுவதே குறைவாகத்தானிருக்கும்

//தன்னை ஆராதிக்க வரப்போகிற ராஜகுமாரனைப் பற்றிக் கற்பனைசெய்வது, சீக்கிரம் காதல்வயப்படுவது, உணர்ச்சிவசப்படுவது போன்ற இனக்கவர்ச்சியால் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண்கள் பெண்களை எல்லாம் தெரிந்தவர்களாக இருப்பதாக எடைபோடலாம். உண்மை அதுவல்ல. //

நூற்றுக்கு நூறு சரி. ஆண்கள் அவர்களுக்கு அந்த வயதிலிருக்கும் அறிதல் பெண்களுக்கும் இருக்கும் எனத் தவறாக எண்ணுகிறார்கள் என்பதுதான் என் கருத்து

//இன்னும் நிறைய பெண்கள் திருமணம் வரைகூட சரியான புரிந்துணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். நீங்களே குறிப்பிட்டபடி நம்மூர் கதைகளும், சினிமாக்களும் அவர்களுக்கு அரைகுறை அறிவைத்தான் தருகின்றன.//

மிகவும் சரி...


ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன்வைத்ததற்கு நன்றி.

 
At June 15, 2006 3:03 PM, Blogger நிலா said...

//First time here. ரொம்ப நல்ல கதை.//

நன்றி Boo

//It was like a page from my adolescence. அதே தவிப்பு, அதே co-ed ஆசை, அதே confusion, அதே அறியாமை, (பல காதல் கதைகள் படித்தும்!). anon and பொன்ஸ் சொல்வது ரொம்ப சரி. எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிப்போமே தவிர, சுத்தமா ஒண்ணும் தெரியாது!//



உங்களுக்குப் புரியுது... பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி

//so you dont have to defend your story at all. It makes perfect sense as it is. //


That's a relief...

போற போக்கைப் பார்த்தால் பெண்கள் மட்டும்தான் (அதிலும் பிடித்திருந்தால்தான்) நமக்கு ஓட்டுப் போடுவாங்க போலிருக்கு...

ஏதோ பாத்து செய்யுங்க :-)))

 
At June 15, 2006 3:07 PM, Blogger நிலா said...

//மொத்ததிலே 'sex Education'னு பார்க்கிறப்ப, இந்தியாவிலே நீங்க சொல்ற மாதிரி பொண்ணுங்க அநேகம் பேரு இருக்காங்க! பொண்ணுங்க பத்தாம் பசலியா இருந்து, பிறகு ஏமாத்தபடறது வரைக்கும் எல்லாமே இங்கேருந்து தான் ஆரம்பிக்குது! //

நட்சத்திர நாதரே நமக்கு சபோர்ட்டுக்கு வந்துட்டார்!!! வாழ்க! வாழ்க!!! :-)

நட்சத்திர வார பிஸிலயும் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

அது சரி, கதை எப்படி இருக்குன்னு சொல்லலியே...

ம்ம்ம்... எப்படி இருந்தா என்ன... பெண்கள் ஓட்டுத்தான்னு ஆகிப் போச்சி... வலைப்பதிவில இருக்கறதோ எண்ணி நாலைஞ்சு பேர்...

சரி... அடுத்தமுறை பாப்பம்

 
At June 15, 2006 3:11 PM, Blogger நிலா said...

//நிலா, மிக யதார்த்தமான கதை.//

நன்றி, உஷா.


//இன்னும் கூட வெளிப்படையாய், கல்யாணத்திற்கு முன்பு பெண்களிடம் பேசுவதில்லை என்பதே உண்மை.//

மிக உண்மை. அது ஏன் ஆண்களுக்குப் புரியவில்லை?

//நிலா, இதே முத்தமிடுவதை, கற்பிழந்ததாய் நினைக்கும் நாயகியின் கதை- அகிலன் எழுதியது
பொன் விலங்கு- சரியா என்று யாராவது சொல்லுங்களேன் (டோண்டு சார் ஹெல்ப் பிளீஸ்)
தொலைக்காட்சி தொடராய் வந்ததே, ஸ்டாலின் மற்றும் செளகாரின் பேத்தி நடித்தது.//

இந்தக் கதையைப் படித்ததில்லை. ஆனால் ஸ்டாலினும் வைஷ்ணவியும் நடித்து தொடராக எடுக்கப்பட்டது சித்திரப்பாவை என நினைக்கிறேன். தொடர் பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்

 
At June 15, 2006 6:12 PM, Blogger VSK said...

//
இதில் ஆணாதிக்கமோ, பெண்ணடிமைத்தனமோ எதுவுமில்லை. எத்தனை தான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினாலும், இருவர் உலகமும் தனித் தனி என்னும் கருத்து மட்டுமே இதிலிருந்து தெளிவாகிறது.
பல வருடங்களாக ஆண்களின் பார்வையில் கதைகள் படிப்பதால், இங்கு வந்த பல ஆண் வளர்சிதை மாற்றங்கள் அதிசயிக்கத்தக்கதாக இல்லை. அதனாலேயே பெண்கள் புரிந்து கொண்ட அளவுக்கு ஆண்கள் எதிர்பாலினரைப் புரிந்து கொள்ள முயலவில்லை(ஆணாதிக்கம்) என்பது பொருளில்லை.//

இப்படி ஒரு ஸ்வீப்பிங்க் ஸ்டேட்மென்டை எப்படிங்க கூசாம சொல்ல முடியுது!

நீங்களும் நாங்களும் சமம் என்பது எல்லாம் வெறும் போலித்தன கோஷங்கள்!
நீங்கள் நீங்கள்தான்!
நாங்கள் நாங்கள்தான்!
இந்த தனித்துவம்தான் நம்மிருவருக்கும் பெருமை!

உங்களால் ஆற்றக்கூடிய செயல்பாடுகளை எங்களால் முடியாது
வைஸெ வெர்ஸா!

சமம் என்றால் இருவர் எதற்கு?

உடனே, நான் 'சமம்' என்று இதைத்தான் சொன்னேன் என எதையாவது சொல்லாதீர்கள்!

அப்புறம், இந்த நீங்க புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு ஆண்கள் புரிஞ்சுக்கலைன்னு சப்பை வாதம்லாம் வைக்காதீர்கள்!

புரிதல், புரியாமல் போதல் இருபக்கமும் உண்டு!

இதெலாம்தான் பிம்பங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன்!
விடமாட்டேன்.; விட்டு வரமாட்டேன் என்கிறீர்கள்!

வாருங்கள்!
அவரவர் திறமையை அவரவர் சேர்த்து அரவணைத்து செயல் படுவோம்!
வளம் காண்போம்!

குடுவைக்குள் சென்று ஒளிந்து கொள்ளாதீர்கள்!


அப்புறம், நிலா, நல்லாவே கேன்வாஸ் பண்ணுறீங்க!!:))

 
At June 15, 2006 8:50 PM, Anonymous Anonymous said...

மத்திய தர வர்கத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்களின் நிலை இது தான். If you are talking about romance sure they'll know from the novel of ramani chandran, lakshmi and all. but not about sex. They know something..but very vaguely.

Selvi

 
At June 15, 2006 9:14 PM, Blogger மனதின் ஓசை said...

மிக அழகான நடை. இது பெண்கள் பற்றியது..அவர்கள் ஒப்புக்கொள்வதால், இதை பெண்களை பற்றிய புரிதலாக எடுத்துக்கொள்கிறேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 
At June 15, 2006 9:59 PM, Blogger FunScribbler said...

நிலா, கதை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு! போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்!! கதைக்கு ஏற்ற தலைப்பும் அருமை. ஒரு விவரம் தெரியாத பெண்ணுக்குள் இருக்கும் ஆசைகளையும் அறியாமையும் அழகுற சொல்லி இருக்கிறீர்கள். ரொம்பவும் ரசித்து படித்தேன்!

 
At June 16, 2006 12:26 AM, Blogger ப்ரியன் said...

/*சைக்கிளில் ஏறி அமர்ந்த ரஞ்சனி வாசலில் நின்ற அம்மாவைத் திரும்பிப் பார்த்து, "நீங்க சொன்ன மாதிரி நான் மதுரையிலேயே சேந்துக்கறேம்மா" என்று சமர்த்தாய்ச் சொன்னபோது அம்மாவுக்குக் குபுக்கெனக் கண்ணில் நீர் கோத்தது.*/

எனக்கும் கண்ணில் நீர் கோர்த்தது...அருமையான கதை நிலா!அதுவும் முடிவு அருமை...கதைக்கேற்ற தலைப்பு

/*தட்டாமாலை சுற்றினாள்*/

சின்ன வயசை நியாபகப் படுத்திவிட்டீர்கள் :)

பரிசு பெற வாழ்த்துக்கள்

 
At June 16, 2006 12:58 AM, Anonymous Anonymous said...

//மத்திய தர வர்கத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்களின் நிலை இது தான். If you are talking about romance sure they'll know from the novel of ramani chandran, lakshmi and all. but not about sex. They know something..but very vaguely. //
முற்றிலும் சரி. அரசல் புரசலாக விஷயங்கள் தெரிந்தாலும் முழுமையாகத் தெரிந்துகொண்டது (அறிவுப்பூர்வமாக!!) எனது 17 வயதில்தான். சகஜமாகப் பழகும் எனக்கே இவ்வளவு லேட் என்றால் விஷயங்களைக் கேட்க கூச்சப்பட்டுக்கொண்டு மனதிலே புழுங்கும் சில பதின்ம வயதுப் பெண்களை என்னவென்று சொல்வது.

அரசாங்கம் அறிவித்த மேரேஜ் குவாலிபிகேஷன் 18 வயதில் கல்யாணம் முடித்த பெண்கள் அனைத்து விஷயங்களையும் கணவனிடமிருந்தே தெரிந்துகொள்கிறார்கள், ஒரு சிலரைத் தவிர.

அதனால் கதை நாயகி +2 மட்டுமே முடித்திருப்பதால் விவரம் தெரியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பள்ளிக்கல்வியில் பாலியல் கல்வி கொண்டுவரப்பட்டாலன்றி அரசாங்கம் அறிவித்த 18 வயதில் திருமணம் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

 
At June 16, 2006 1:19 AM, Blogger Pavals said...

//நீங்கள் சொல்வது போல 'இவர்களாகவே கணக்கு போட்டுக் கொண்டது' அல்ல.//

நானும் அதே!!

//நூற்றுக்கு நூறு சரி. ஆண்கள் அவர்களுக்கு அந்த வயதிலிருக்கும் அறிதல் பெண்களுக்கும் இருக்கும் எனத் தவறாக எண்ணுகிறார்கள் என்பதுதான் என் கருத்து//

ஆண்களை விட பெண்களுக்கு அந்த வயதில் புரிதல் அதிகமா இருக்கும்ங்கிறது தான் நிஜமோன்னு தோணுதுங்க..

பசங்க தப்பும் தவறுமா புரிஞ்சு வச்சிருப்பாங்க அவ்ளோ தான்.. ஆனா பெண்கள் விசயம் அப்படி இல்லைன்னு தான் தோணுது..

//'இது சாத்தியமாக இருக்கலாம், ஒருவேளை' என்பதில் ஐயமில்லை.// அவ்ளோதான்..

ஆனா, கதை நல்லாயிருந்துச்சுங்க :)

 
At June 16, 2006 2:02 AM, Anonymous Anonymous said...

Good one! Not just the village girls, even the city bred girls do not know about this. We were quite a bunch of friends who did not know about this, though all of us might have had a dream abt "Ideal/Romantic husband". If I can rewind to my teenage days, I can say romance meant Him appreciating me, surprising me, looking after me etc. The percentage of teenagers who get access to all those kind of books or movies is very less. The students hostel in TN are very strict and majority of the students do not have access to all these. There might be a few students who know about this definitely. As far as I know, they are exceptions in my days (late 80's and early 90's).

In my opinion, it is a good and realastic one.

 
At June 16, 2006 3:16 AM, Blogger அன்பு said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் நிலா. தேர்ந்த கதையமைப்பு, நடை இருக்கிறது.

நிதர்சனமான உண்மைக்கதை!
இதை இங்கு சொல்ல இந்த கிராமத்தானுக்கு தகுதியிருக்கிறது:)

 
At June 16, 2006 3:40 AM, Anonymous Anonymous said...

நான் வழக்கம்போல் இங்கே நாலு லைனை போட்டுவிட்டு மீதியை நிலாச்சாரலில் வந்து படிக்கச்சொல்லியிருப்பீர்கள் என்று நினைத்து வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள். :-)

 
At June 16, 2006 4:53 AM, Blogger நிலா said...

எஸ்.கே

பொன்ஸ் கூறியதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. சமம் என்பதும் ஒன்று என்பதும் வேறு வேறு. ஆண்களும் பெண்களும் சமம் என்பதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என நினைக்கிறேன். இருவரும் வேறு வேறு என்பதில் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. உடற்கூறுகளிலும் மனநிலையிலும் வேறு பாடு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஆண்களுக்கு பலகாலமாகத் தம் உணர்வுகளை வெளிப்படுத்தக் கிடைத்த சுதந்திரத்தின் காரணமாக அவர்களது மனநிலை பெண்களுக்குப் புரிந்ததாகவே இருக்கிறது. பொன்ஸ் கூறியது போல எந்தவிதமான ஆச்சரியங்களும் ஏற்படுவதில்லை.

ஆனால் பெண்களுக்கு அப்படிப்பட்ட சுதந்திரம் இன்னும் கூட முழுமையாகக் கிடைத்தபாடில்லை. அதனால் அவர்களின் உணர்வுகளை/முதிர்ச்சியை/எண்ண ஓட்டங்களை ஆண்களால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கிறது. இதைத்தான் பொன்ஸ் குறிப்பிடுகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்

 
At June 16, 2006 5:32 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

எஸ். கே, எதுவும் எழுதக் கூடாதுன்னு தான் இருந்தேன்..

//இதில் ஆணாதிக்கமோ, பெண்ணடிமைத்தனமோ எதுவுமில்லை. எத்தனை தான் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசினாலும், இருவர் உலகமும் தனித் தனி என்னும் கருத்து மட்டுமே இதிலிருந்து தெளிவாகிறது.
பல வருடங்களாக ஆண்களின் பார்வையில் கதைகள் படிப்பதால், இங்கு வந்த பல ஆண் வளர்சிதை மாற்றங்கள் அதிசயிக்கத்தக்கதாக இல்லை. அதனாலேயே பெண்கள் புரிந்து கொண்ட அளவுக்கு ஆண்கள் எதிர்பாலினரைப் புரிந்து கொள்ள முயலவில்லை(ஆணாதிக்கம்) என்பது பொருளில்லை.//

இப்படி ஒரு ஸ்வீப்பிங்க் ஸ்டேட்மென்டை எப்படிங்க கூசாம சொல்ல முடியுது!//

ஆணாதிக்கம், பெண்ணடிமை பத்தி நீங்க பேசினதால தான் நானும் பேச வேண்டியதாச்சு.. இதுல ஸ்வீப்பிங் ஸ்டேட்மென்ட் என்று எப்படிச் சொல்வீங்கன்னு புரியலை.. அதுல எதுவுமே தியரி இல்லை.. விளக்கத்தோட தான் கொடுத்திருக்கேன்..
//நீங்களும் நாங்களும் சமம் என்பது எல்லாம் வெறும் போலித்தன கோஷங்கள்!
நீங்கள் நீங்கள்தான்!
நாங்கள் நாங்கள்தான்!
இந்த தனித்துவம்தான் நம்மிருவருக்கும் பெருமை!//
ஒத்துக்கிறேன்.. நீங்க நீங்க தான். சொல்லப் போனா, எஸ்கேவும் சிபியும் ஒன்றில்லை.. பொன்ஸும் நிலாவும் ஒன்றில்லை. எல்லா மனிதர்களும் தனித் தனி தான். கணினி மாதிரி இல்லை.. எல்லாரோட கான்பிகரேஷனும் வேற வேற தான். இதை நான் மறுக்கவே இல்லை

//உடனே, நான் 'சமம்' என்று இதைத்தான் சொன்னேன் என எதையாவது சொல்லாதீர்கள்!//
ஓகே.. உங்க வழிக்கே வர்றேன். இதை மறுக்கலை..

// அப்புறம், இந்த நீங்க புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு ஆண்கள் புரிஞ்சுக்கலைன்னு சப்பை வாதம்லாம் வைக்காதீர்கள்!
புரிதல், புரியாமல் போதல் இருபக்கமும் உண்டு! //
இதுல சப்பை வாதம் என்ன இருக்கு? நான் சொல்வது உண்மை.. இங்க வந்த பின்னூட்டங்களைப் பார்த்தாலே அது புரியும். அத்தி பூத்தாற் போல் இரண்டு மூன்று ஆண்கள் ஒப்புகிட்டிருக்காங்க.. அவ்வளவு தான்.

// இதெலாம்தான் பிம்பங்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறேன்!
விடமாட்டேன்.; விட்டு வரமாட்டேன் என்கிறீர்கள்!
வாருங்கள்!
அவரவர் திறமையை அவரவர் சேர்த்து அரவணைத்து செயல் படுவோம்!
வளம் காண்போம்!
குடுவைக்குள் சென்று ஒளிந்து கொள்ளாதீர்கள்!
//

வர மாட்டோம் என்று எப்போ சொன்னோம்? வரமாட்டோம் என்றால் இது போன்ற கதைகளே வந்திருக்காது.. நிலாவும் நானும் ஏதாச்சும் அன்பான கணவன், அழகான மனைவின்னு ரொமான்டிக் கதை எழுதிகிட்டு இருப்போம். ஒண்ணு பண்ணுங்க.. இந்தக் கதையை உங்க மனைவி, சகோதரி, இல்லைன்னா வேற தோழிகள் யார்ட்டயாவது கொடுத்து படிக்கச் சொல்லுங்க.. என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு முடிவெடுங்க.. இந்த மாதிரி ஒரு காலகட்டம் எல்லாப் பெண்களுக்கும் உண்டு.. எந்த வயசு என்பது வேணுமானால் மாறலாம்.

//கிராமமோ நகரமோ, பெண்கள் தங்களுக்குள் அதிகபட்சம் மாதவிலக்கு பற்றி கூட ஒரு அளவோடுதான் இந்த வயதில் தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். (திருமணம், பிள்ளை பிறந்தபிறகு தான் ஓரளவு வெட்கம் விட்டு வெளியே பேசுகிறார்கள்//

அனானி சொன்ன இந்த பாயின்ட்டையும் பாருங்க.. இந்த உலகம் உங்களுக்குத் தெரியாதது.. புரிஞ்சுக்க முயலுங்க.. பிம்பத்தைக் கட்டிக் காப்பது நீங்க தான்னு தோணுது..

ராசாவுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பலை.. அவருக்கு இன்னும் காலம் இருக்கு. அப்புறம் பேசலாம்.. :)

 
At June 16, 2006 9:21 AM, Anonymous Anonymous said...

நிலா,
கதை மிகவும் அருமை. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
இதுவரை (என்னுடைய படைப்பு உட்பட) வளர்சிதை போட்டிக்கு வந்த பதிவுகளில் உங்கள் கதை தான் எனக்கு மிகவும் பிடித்தது
வாழ்த்துக்கள்!!

 
At June 16, 2006 10:31 AM, Blogger நிலா said...

ப்ரியன், உங்களைப் போல ஒரு சில ஆண்களையாவது இந்தக் கதை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி

 
At June 16, 2006 10:59 AM, Blogger நிலா said...

சேது,
குமுதம் ஒருபக்கக் கதையின் தாக்கம் தெரியறதா சொல்லிருக்கீங்க...

உண்மையாகவே அது எந்தவிதமான தாக்கம்னு எனக்குப் புரியலை - சிறுகதைகள் படிப்பது பள்ளியோடு நின்றுவிட்டது. இப்போது நிலாச்சாரலுக்கு வரும் சிறுகதைகளை எடிட் செய்யும்போது படிப்பதும் இப்படி வலைப்பதிவுகளில் அபூர்வமாய் படிப்பதும்தான்

நடையை சொல்லிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஒரே மாதிரி நடை இருக்கக் கூடாதுன்னு நினைப்பேன். ஒவ்வொரு கதையிலயும் ஒரு மாறுதல் காட்டினா நல்லாருக்கும்னு முயற்சி செய்வேன்.

இல்லை, வேறுவிதமான தாக்கம்னா என்னன்னு சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன்.

 
At June 16, 2006 11:05 AM, Blogger நிலா said...

selvi
Spot on. People seem to mix up romanace and sex.
thanks for dropping by

 
At June 16, 2006 11:08 AM, Blogger நிலா said...

தமிழ் மாங்கனி

நன்றி... இது பெருவிதமான முயற்சி எதுவுமின்றி பணிக்கு இடை இடையில் எழுதிய கதை. ஆனால் எனக்கு நிறைவு தந்த கதை.

கருவின் மீதான விவாதம்
பெரும்பான்மையான ஆண்களால் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

அதனால் போட்டியில் வெற்றி பெரும் வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

எனினும் உங்கள் பாராட்டுக்கள் என்னைத் தளராமல் எழுதச் செய்யும்.

நிலா

 
At June 16, 2006 11:13 AM, Blogger நிலா said...

//கதை மிகவும் அருமை. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
இதுவரை (என்னுடைய படைப்பு உட்பட) வளர்சிதை போட்டிக்கு வந்த பதிவுகளில் உங்கள் கதை தான் எனக்கு மிகவும் பிடித்தது
வாழ்த்துக்கள்!! //


Dubukku

you made my day :-)

வெற்றி பெற்ற திருப்தியைத் தந்துட்டீங்க...

உங்க படைப்பை விட என்கதை பிடிச்சதா மனமார சொல்றதுக்கு பெரிய மனசு வேணுங்க.
ரொம்ப நன்றி
உங்களோட டைரிக் குறிப்பைப் படிக்கணும்னு ரெண்டு முறை உங்கள் பதிவுக்கு வந்தேன். ஏதோ காரணத்தால இன்னும் படிக்க முடியலை. படிச்சுட்டு சொல்றேன்

 
At June 16, 2006 11:29 AM, Blogger வெளிகண்ட நாதர் said...

//அது சரி, கதை எப்படி இருக்குன்னு சொல்லலியே...// கதை ரொம்ப பிடிச்சிருந்தது! எல்லாரும் எழுதுறாங்க போட்டிக்குன்னு, நட்சத்திர வாரத்திலே, சரி நம்மலும் ஒன்னு போட்டு வைப்போம்னு போட்டு வச்சேன்! படிச்சீங்களா? தமிழ்மண வகைப்படுத்தலுக்கு தகுந்தமாதிரி ஒவ்வொரு வகைக்கு ஒன்னு போடுவுமேன்னு போட்டது தான் அந்த சிறுகதை! நம்மெல்லாம் ஜாம்பவான்களோட எங்க மோதறது-:)

 
At June 16, 2006 2:24 PM, Blogger நிலா said...

//நான் வழக்கம்போல் இங்கே நாலு லைனை போட்டுவிட்டு மீதியை நிலாச்சாரலில் வந்து படிக்கச்சொல்லியிருப்பீர்கள் என்று நினைத்து வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள். :-)//

ஆஹா... அனானியாரே.. அடிக்கடி நிலவுக்கு வருவீங்க போல...

அதுசரி நிலாச்சாரலுக்குப் போய் படிக்கச் சொல்றது அவ்வளவு பெரிய குற்றமா? அங்கேயும் வேலை மெனக்கெட்டு ஒரு பக்கம் செய்து பொட்டுட்டு இங்கேயும் அதே மாதிரி செய்தா நேரம் வேஸ்ட் இல்லியோ :-)

சரி எப்படியோ... இந்தக் கதை எப்படி இருக்குன்னு சொல்லாம போயிட்டீங்களே!

 
At June 16, 2006 2:50 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நிலா அருமையான கதை. சொல்ல வந்ததை நச்சுன்னு ஆணி அடிச்சமாதிரி சொல்லியிருக்கீங்க.

வெற்றி நிச்சயம்.

கூடிய சீக்கிரம் தமிழோவிய சிறப்பாசிரியராகி கலக்குங்க. இப்பவே அதுக்கும் எழுத ஆரம்பியுங்க. இல்லைன்னா என்ன மாதிரி ஒரு நாளைக்கு ரெண்டு மூணு எழுத வேண்டிவரும்.

 
At June 16, 2006 7:45 PM, Blogger PVS said...

உங்கள் பதிவிற்கு வந்த பின்னுடங்களை கண்டேன். கிராமங்களில் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படிப்பட்ட பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள்.என் தோழி, சென்னையில் பிறந்து வளர்ந்தவள். ஆயினும் MCA படிக்கும் போதுதான், முத்தம் கொடுதால் குழந்தை பிறக்காது என்பதும் எப்படி பிறக்கும் என்பதையும் தெரிந்து கொன்டாள். அதன் பிறகு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டு திறிந்தாள்.

 
At June 16, 2006 10:55 PM, Anonymous Anonymous said...

///சந்திரா ராஜன் புத்தகம் படிக்கும் பெண்ணுக்கு இந்த தகவல்கள் எல்லாம் கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே!! :))/// -SK

"சந்திரா ராஜன்" வாசிக்கிறவங்களுக்கு "அதெல்லாம்" கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கும்னு சொல்லமுடியாதுங்கோவ். கட்டிப்புடிக்கிறதும் முத்தம் குடுக்குறதும் தவிர வேற என்னத்த எழுதிப்புட்டார் அவர்? சிட்னி செல்டன், ஹரால்டு ராபின்ஸ், அட குறைந்தபட்சம் மில்ஸ் & பூன் படிக்கிறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு சொல்லுங்க, நம்புறேன்... "சந்திரா ராஜன்"? நோ வே. என்னோட 2 cents.

 
At June 17, 2006 1:21 AM, Blogger நிலா said...

//கதை ரொம்ப பிடிச்சிருந்தது! //

நன்றி, நட்சத்திர நாதரே...

//எல்லாரும் எழுதுறாங்க போட்டிக்குன்னு, நட்சத்திர வாரத்திலே, சரி நம்மலும் ஒன்னு போட்டு வைப்போம்னு போட்டு வச்சேன்! படிச்சீங்களா?//
இன்னும் இல்லை. மன்னிச்சிருங்க... இன்றும் நாளையும் ஒரே பிஸி... அடுத்த வாரம் படிச்சி கருத்து சொல்றேன். சரியா?

// தமிழ்மண வகைப்படுத்தலுக்கு தகுந்தமாதிரி ஒவ்வொரு வகைக்கு ஒன்னு போடுவுமேன்னு //
நல்ல கான்செப்ட். வாரம் நல்லா போகுதுன்னு நினைக்கிறேன்

//நம்மெல்லாம் ஜாம்பவான்களோட எங்க மோதறது-:)//

யாரை சொல்றீங்கன்னு தெரியலையே :-)

இங்கே எல்லாரும் கத்துக்குட்டிதாங்க...

 
At June 17, 2006 5:59 AM, Blogger ramachandranusha(உஷா) said...

//இங்கே எல்லாரும் கத்துக்குட்டிதாங்க//
நிலா, ஒன்ஸ் மோர் ப்ளீஸ்! அதுவும் வெளிகண்டருக்கு கேட்கும்படி
உரத்து :-)

 
At June 17, 2006 2:36 PM, Blogger கதிர் said...

நான் கூட சின்ன வயசில கட்டிப்பிடிச்சாவே குழந்தை பிறந்துடும்னு நினைச்சிருக்கேன்.
பிற்பாடு வெவரம் தெரியவந்தது அப்படி எல்லாம் ஆகாது என்று. உங்கள் கதை படித்ததும்
அதுதான் ஞாபகம் வந்தது.
நல்ல கற்பனை. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!!

உங்களை மாதிரி பெரிய பெரிய ஆள் எல்லாம் இந்த சின்ன போட்டிக்கு வந்தா நாங்க
எப்படி????

அன்பு தம்பி

 
At June 18, 2006 12:31 AM, Blogger நிலா said...

//நிலா அருமையான கதை. சொல்ல வந்ததை நச்சுன்னு ஆணி அடிச்சமாதிரி சொல்லியிருக்கீங்க.//

நன்றி சிரில் :-)

//வெற்றி நிச்சயம். //

அப்படீங்கறீங்க? பார்ப்போம்..

ஆனா நீங்க சொன்னதே வெற்றி பெற்ற திருப்தியைக் கொடுத்திருச்சுங்க...
வெற்றி பெறலைன்னாலும் பெரிய ஏமாற்றம் ஒண்ணும் இருக்காது. ஊக்கத்துக்கு நன்றி


//கூடிய சீக்கிரம் தமிழோவிய சிறப்பாசிரியராகி கலக்குங்க.//

அப்டிப் போடுங்க... நான் தமிழோவியத்துக்கு சிறப்பாசிரியரா போறப்போ நீங்க நிலாச்சாரலுக்கு சிறப்பாசிரியரா வர்றீங்களா? :-)

 
At June 18, 2006 7:16 AM, Anonymous Anonymous said...

நிலா இந்தக் கதை பற்றி எழுதவேண்டும் என்று தோன்றுவதால் எழுதுகிறேன். முன்பே எழுதியிருக்கலாம் தான் இருந்தும் நேரம் காலம் கிடைத்ததால் எழுதுகிறேன்.

ஆரம்பம் சரியில்லை, வாசகனை கதைக்குள் தூக்கிச்செல்லும் ஆரம்பம் நிச்சயமாக இல்லை, சாதாரணமாகவே சிறுகதைகள் அதிகம் படிக்கும் எனக்கு சில கதைகளை நிச்சயமாக படிக்கவே முடிவதில்லை. அதைப்போன்றதான கதையில்லை இது என்றாலும். நான் எழுபது பின்னூட்டங்கள் வந்த பிறகு அப்படி என்னதான் இருக்கிறது என்று படிக்க நேர்ந்தது இந்தக் கதை.

அந்தக் கால தேவிபாலா, பாலகுமாரன் வகையறா எழுத்து. மைல்ட் போர்னோ என்ற வகை கொஞ்சம் படிப்பவர்களை சபலப்படுத்தி கதை சொல்லும் விதம். கொஞ்சம் விறுவிறுப்பாய் இருந்திருந்தால் கூட சுஜாதா வகையென்றாவது சொல்லலாம். அதற்கும் வகை கிடையாது.

காட்சிகளில் வலிமை சேர்க்காமல் வசனங்களின் பின்னால் இருந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஐம்பது சிறுகதைகள் மற்றும் ஒரு நாவலுக்கு பின்னர் இது தேவையில்லாத வகையான எழுத்து நடை(அவைகளை படித்ததில்லை). இந்த விமர்சனத்தை உங்களுக்கு வைப்பதில் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இதிலிருந்து மாறுபடும் இன்னும் கச்சிதமான கதையை நிலாவால் தரமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே. இது உங்களுக்கான விமர்சனமே இதை வெளியிடுவது வெளியிடாததும் உங்களைப்பொறுத்தது. மற்றபடிக்கு கதையின் களமும் சொல்லிய பாங்கும் அதன் பின்னால் இருக்கும்(நீங்கள் இங்கிலாந்தில் இருக்கும் நிலையில்) மனநிலையையும் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

 
At June 18, 2006 8:25 AM, Blogger நிலா said...

//பசங்க தப்பும் தவறுமா புரிஞ்சு வச்சிருப்பாங்க அவ்ளோ தான்.. ஆனா பெண்கள் விசயம் அப்படி இல்லைன்னு தான் தோணுது.. //

ராசா,

போகப் போகப் புரிஞ்சிப்பீங்க.

 
At June 18, 2006 11:32 AM, Blogger நிலா said...

//நல்ல கற்பனை. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!!//

அன்புத் தம்பி

நன்றி

//உங்களை மாதிரி பெரிய பெரிய ஆள் எல்லாம் //

அய்யய்ய .... நீங்க வேற... இன்னும் கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்குங்க...

 
At June 18, 2006 11:09 PM, Blogger நிலா said...

//உங்கள் பதிவிற்கு வந்த பின்னுடங்களை கண்டேன். கிராமங்களில் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படிப்பட்ட பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள்.என் தோழி, சென்னையில் பிறந்து வளர்ந்தவள். ஆயினும் MCA படிக்கும் போதுதான், முத்தம் கொடுதால் குழந்தை பிறக்காது என்பதும் எப்படி பிறக்கும் என்பதையும் தெரிந்து கொன்டாள். அதன் பிறகு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டு திறிந்தாள்.//

PVS


ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்லி இந்த கதையின் கருவுக்கு வலுவூட்டியதற்கு மிக்க நன்றி

நன்றி வருகைக்கும் சேர்த்துத்தான்:-)

 
At June 19, 2006 1:06 AM, Blogger நிலா said...

//சந்திரா ராஜன்" வாசிக்கிறவங்களுக்கு "அதெல்லாம்" கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கும்னு சொல்லமுடியாதுங்கோவ். கட்டிப்புடிக்கிறதும் முத்தம் குடுக்குறதும் தவிர வேற என்னத்த எழுதிப்புட்டார் அவர்? //

சேது,

சரியாச் சொன்னீங்க... அவங்க கதைகளைப் படிச்சவங்களுக்குத்தானே இது புரியும்? :-)

 
At June 19, 2006 2:32 AM, Blogger நிலா said...

//நிலா, ஒன்ஸ் மோர் ப்ளீஸ்! அதுவும் வெளிகண்டருக்கு கேட்கும்படி
உரத்து :-)
//

உஷா,
எத்தனையோ தடவை சொல்லியாச்சு...
என்னங்க செய்யறது... நம்மளைப் பற்றித் தப்புத்தப்பா ஒரு பிம்பம் உருவாக்கி வச்சிருக்காங்க :-)

 
At June 19, 2006 4:35 AM, Blogger நிலா said...

அனானியாரே!

முதலில் ஒரு பெரிய நன்றி:

- குறைகளென்று பட்டதை நேரம் செலவழித்து எனக்கு எழுதியதற்கு

- என் எழுத்துக்களை பாலகுமாரன், சுஜாதாவுடனெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்ததற்கு (மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா/அம்மா)

- எழுத்து நடை பற்றித் தெளிவாய் எழுதியதற்கு. நீங்கள் சொன்னபின்தான் முன்பு தேவ் ஒரு பக்கக் கதையின் தாக்கம் என்று சொன்னது புரிந்தது.

ஆனால் சில குழப்பங்கள்:

//மற்றபடிக்கு கதையின் களமும் சொல்லிய பாங்கும் அதன் பின்னால் இருக்கும்(நீங்கள் இங்கிலாந்தில் இருக்கும் நிலையில்) மனநிலையையும் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.//

- இவ்வளவு 'மேதாவியாக' இருக்கிறீர்கள்... கதையை வைத்து கதாரிசியரின் மனநிலையை எடை போடும் குழந்தைத்தனம் ஏன்? க்ரைம் எழுதுகிறவர்களெல்லாம் கொலைகாரர்கள்/கொள்ளைக்காரர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து!

- இரண்டாவதாக படைப்பை வைத்துப் படைப்பாளியின் தனிப்பட்ட குணநலன்களையும் வாழ்க்கையையும் எடைபோடும் அநாகரீகம் எதற்கு?

//ஐம்பது சிறுகதைகள் மற்றும் ஒரு நாவலுக்கு பின்னர் இது தேவையில்லாத வகையான எழுத்து நடை(அவைகளை படித்ததில்லை). இந்த விமர்சனத்தை உங்களுக்கு வைப்பதில் ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. இதிலிருந்து மாறுபடும் இன்னும் கச்சிதமான கதையை நிலாவால் தரமுடியும் என்ற நம்பிக்கை மட்டுமே.//

- நீங்கள் என் எழுத்துக்களைப் படித்ததில்லை; என் மனநிலையைப் பற்றி பெரிதாக அபிப்ராயம் கூட இல்லை. அப்புறம் எங்கிருந்து வருகிறது இந்த நம்பிக்கை? எதற்கு இந்த தேவையில்லாத சப்பைக் கட்டு - ஆக்கபூர்வமான விமரிசனம் என்று காட்டிக் கொள்ளவா? சிரிப்பு வருகிறது.

நானெல்லாம் குப்பையாக எழுதுகிறேனோ உப்பு சப்பில்லாமல் எழுதுகிறேனோ, என் எழுத்துக்குப்பின் என் பெயரைப் போட்டுக் கொள்ளும் தன்னம்பிக்கை இருக்கிறது. இது போன்ற விமரிசனங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சலும் அடுத்தவர் எழுத்தை விமரிசிக்கும்போது முகமூடியிட்டுக் கொள்ளாத நேர்மையும் உண்டு. ஆனால் உங்களுக்கு?

அனானியாரே, இன்னும் கொஞ்சம் பக்குவத்தையும் நேர்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல விமரிசகராக உருவாவீர்கள். வாழ்த்துக்கள்!

 
At June 19, 2006 6:32 AM, Blogger கைப்புள்ள said...

மிஸ்!
இந்த கதையை இன்னிக்குத் தான் படிச்சேன். கதை ரொம்ப வித்தியாசமா இருக்கு. வாழ்த்துகள்.

 
At June 19, 2006 6:38 AM, Anonymous Anonymous said...

உங்களைப்பாராட்டி வரும் ஆணித்தரமான கருத்துக்கள் அனானிமஸ் ஆக வந்தால் பிரச்சனை கிடையாது. அதேசமயத்தில் விமர்சித்து வந்தால் எழுத்துக்கு பின்னால் பெயர் போடுவதைப் பற்றி சிந்திப்பீர்கள். சூப்பராகயிருக்கிறது உங்களின் விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் திறமை. இதை ஆரம்பத்தில் சொல்ல வேண்டாமெறுதான் நினைத்தேன் இருந்தாலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்கிறேன். This is the thing with girls.

அந்த விமர்சனத்தை நான் உங்களுக்காகத்தான் எழுதினேன் அதைக் குறிப்பிட்டும் இருந்தேன். அதை வெளியிடும் உரிமையையும் உங்களிடமே கொடுத்திருந்தேன். அதை வெளியிட்டு உங்களை உத்தமராக காட்டிக்கொள்ளும் உங்கள் மனம் உங்கள் எழுத்தில் தெரியவில்லை. இதுவும் உங்களுக்கு மட்டுமே வேண்டுமானால் வெளியிட்டுக்கொள்ளுங்கள்.

பெயர் வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்களேன் மஞ்சு என்று. அதுதான் வேண்டுமென்றால்.... :-(

 
At June 19, 2006 7:57 AM, Blogger கப்பி | Kappi said...

நல்ல கதை நிலா..

அப்படியே இந்த விளையாட்டுக்கு வாங்க..

http://kappiguys.blogspot.com/2006/06/blog-post_19.html

 
At June 19, 2006 11:11 AM, Anonymous Anonymous said...

குமுதம் ஒரு பக்கக் கதையின் தாக்கம் பத்திக் கேட்டிருந்தீங்க நிலா. அது ஒரு மாதிரி அசட்டுத்தனமா இருக்கிற மாதிரி இருக்கும், திடீர்னு ஒரு திருப்பத்தோட முடியும், அப்புறம் யோசிக்கவைக்கும். அதுதான் எனக்குத் தெரிஞ்சது (நான் அதெல்லாம் வாசிச்சு 10 வருசத்துக்கும் மேல ஆகுது)

அமெரிக்கத் தொலைக்காட்சியில் சிட்காம் sitcom-னு சொல்வாங்களே, Situation Comedy. உதாரணத்துக்கு Friends, Mad About You, Everybody Loves Raymond, Frasier... காமெடி கலந்த பிரச்சினை வரும், 1/2 மணிநேர சீரியல்ல விளம்பரம் போக 20 நிமிசத்துல பிரச்சினை முடிஞ்சு சுபம் போட்டுடுவாங்க. அதுக்கும் முழுநீளக் காமெடிக்கும் வித்தியாசமிருக்கில்ல.. குமுதம் ஒரு பக்கக் கதை "சிட்காம்" மாதிரி. ஒரு பக்கத்துக்குள்ள பிரச்சினை முடிஞ்சு எல்லாம் சுபம்.

 
At June 20, 2006 12:23 AM, Blogger நிலா said...

//இந்த கதையை இன்னிக்குத் தான் படிச்சேன். கதை ரொம்ப வித்தியாசமா இருக்கு. வாழ்த்துகள்.//

கைப்ஸ்
சமத்தா க்ளாசுக்கு அட்டெண்டென்ஸ் கொடுத்தாச்சு... நல்லது :-)

வாழ்த்துக்கு நன்றி... ஓட்டு யாருக்கு? உங்க சங்கத்திலருந்தே பல பேர் களத்தில இருக்காங்க போலிருக்கே?

 
At June 20, 2006 11:10 PM, Blogger நிலா said...

//நல்ல கதை நிலா..
//

நன்றி, கப்பி

//அப்படியே இந்த விளையாட்டுக்கு வாங்க..//
அழைச்சதுக்கு நன்றிங்க....

 
At June 21, 2006 2:02 AM, Anonymous Anonymous said...

//அனானியாரே!

முதலில் ஒரு பெரிய நன்றி:

- குறைகளென்று பட்டதை நேரம் செலவழித்து எனக்கு எழுதியதற்கு//

அனானிக்கு நீங்கள் எழுதிய பதிலிலிருந்து உங்கள் படைப்பாளி நேர்மை பல்லிளிக்கிறது. கடைசி பத்திகளைப் படித்தபோதுதான் தெரிந்தது, முதல் வரிகளில் இருந்த நன்றியும், புளகாங்கிதமும் அரசியல்வாதியுடையது என்று.

தனது வாசிப்பில், பார்வையில், மிகவும் நேர்மையான விமர்சனைத்தை (அல்லது இன்னொரு பார்வையில் அமைந்த விமர்சனத்தை) தந்திருந்த அனானி மஞ்சு மீது ஏன் இவ்வளவு உக்கிரமான கோபம். போட்டிக்கு வரும் வரும் மற்ற படைப்புகளோடு ஒப்பிடும்போது உங்கள் கதை பரவாயில்லைதான், நீங்கள் நன்றாக எழுதக்கூடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார், அதையும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள். ஏன் உங்கள் படைப்புகள் (!!??) அனைத்தையும் படித்தால்தான் தெரியுமோ? உங்களின் ஒரு கதையைப்படித்தாலே தெரியாதா?

அனானி மஞ்சு ஏற்கனவே நல்ல விமரிசகராகவே இருக்கிறார், நீங்கள்தான் இன்னும் நல்ல படைப்பாளியாகவே ஆகவேண்டும். உங்களின் மற்ற சாதனைகளோடு (நிலாச்சாரல்) ஒப்பிட்ட்டுப்பார்த்தால் நாங்கள் வெளங்காதவர்கள்தான். ஆயினும் விமரிசனத்துக்கான எதிர்வினைகள் ஆற்றும் உங்கள் மனோபாவம் தான் இப்படி எழுத வைத்துவிட்டது.

சுவற்றில் சரித்து.... என்று வாசகக் கற்பனைக்குதிரையை நன்றாகவே தட்டிவிட்டு இருக்கிறீர்கள் :)

எப்போதும் ஓ... போட்டு உங்களை போதையில் ஆழ்த்தும் விமர்சனங்களை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

வாழ்த்துக்கள்

அய்யாக்கண்ணு (ayyaakkannu@gmail.com)

குறிப்பு: இன்னும் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை, அதனால் அனானி என்று முத்திரை குத்திவிடாதீர்கள் :)

 
At June 21, 2006 2:14 AM, Anonymous Anonymous said...

//கட்டிப்புடிக்கிறதும் முத்தம் குடுக்குறதும் தவிர வேற என்னத்த எழுதிப்புட்டார் அவர்? //

வேற என்னத்த எழுதணும்???

//சிட்னி செல்டன், ஹரால்டு ராபின்ஸ், அட குறைந்தபட்சம் மில்ஸ் & பூன் //

உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குதே "வேற" விசயங்கள யார் எழுதுவாங்கன்னு, பின்னே சந்திரா ராஜன் வேற எழுதணுமாக்கும்??

இப்டி வெவரமானவங்க இருக்கிற இந்தக்காலத்துல இப்படி ஒரு அப்பாவிப்பெண்ணப்பத்தின கதையா??? நல்லாருக்கே கதை

 
At June 21, 2006 4:23 AM, Blogger நிலா said...

//அமெரிக்கத் தொலைக்காட்சியில் சிட்காம் sitcom-னு சொல்வாங்களே, Situation Comedy. உதாரணத்துக்கு Friends, Mad About You, Everybody Loves Raymond, Frasier... காமெடி கலந்த பிரச்சினை வரும், 1/2 மணிநேர சீரியல்ல விளம்பரம் போக 20 நிமிசத்துல பிரச்சினை முடிஞ்சு சுபம் போட்டுடுவாங்க. அதுக்கும் முழுநீளக் காமெடிக்கும் வித்தியாசமிருக்கில்ல.. குமுதம் ஒரு பக்கக் கதை "சிட்காம்" மாதிரி. ஒரு பக்கத்துக்குள்ள பிரச்சினை முடிஞ்சு எல்லாம் சுபம்//

ஓ... சேது... புரிஞ்சது இப்போ...

எனக்கு மிகவும் பிசித்த சிட்காம் ஃப்ரெண்ட்ஸ். நல்ல ஸ்கிரிப்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு... ஒன்றுமே இல்லாமல் சிரிக்க வைப்பார்கள் - ஒரு முகக் குறிப்பு, ஒரு மாடுலேஷன், ஒரு பார்வை... அவ்வளவுதான். அந்த சூழலில் நன்றாக எடுபடும்

இது குறித்து இன்னொரு சமயம் மேலும் பேசுவோம்

 
At June 21, 2006 10:25 AM, Blogger சேதுக்கரசி said...

அ.ராவணன் அவர்களுக்கு:

//வேற என்னத்த எழுதணும்???//

வேற ஒண்ணத்தையும் எழுதவேண்டாம். SK சொன்னார், சந்திரா ராஜன் புத்தகம் படிச்ச பொண்ணுக்கெல்லாம் எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு. அது இல்லன்னு சொல்லத்தான் என்னுடைய அந்த பதில்.

//உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குதே "வேற" விசயங்கள யார் எழுதுவாங்கன்னு, பின்னே சந்திரா ராஜன் வேற எழுதணுமாக்கும்??//

கரெக்ட். சந்திரா ராஜன் எழுதணும்னு நான் சொல்லலியே. அவர் புத்தகத்த வாசிச்சிட்டா எல்லாம் தெரிஞ்சிடும்னு சொல்லமுடியாதுன்னு தானே சொல்லவந்தேன்! அதை நீங்க புரிஞ்சிக்கலைன்னா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

//இப்டி வெவரமானவங்க இருக்கிற இந்தக்காலத்துல இப்படி ஒரு அப்பாவிப்பெண்ணப்பத்தின கதையா??? நல்லாருக்கே கதை//

நீங்க வெவரமானவர்னு நெனச்சிக்குவோம். அப்படின்னா நீங்க இருக்கிற இந்தக்காலத்துல வெவரமில்லதவங்களே இருக்கமாட்டாங்கங்கறீங்களா?!

*

நிலா, எனக்கும் Friends தான் மிகப் பிடித்த சீரியல்.

 
At June 21, 2006 11:45 PM, Blogger யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

 
At June 23, 2006 9:34 PM, Blogger குமரன் (Kumaran) said...

மிக நல்ல கதை நிலா. இது நடக்கவே வாய்ப்பே இல்லை என்பதனை நானும் மறுக்கிறேன். இது பின்னூட்டங்களைப் பார்த்த பின் வரும் கருத்து இல்லை. பதிவைப் படித்து முடித்த உடனேயே அப்படித் தான் தோன்றியது.

 
At June 24, 2006 11:04 PM, Blogger நிலா said...

யாத்ரீகன்,
நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக படித்து கருத்து சொல்கிறேன்
நன்றி

 
At June 24, 2006 11:05 PM, Blogger நிலா said...

tamila

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 
At June 24, 2006 11:06 PM, Blogger நிலா said...

ஆன்மீகச் செம்மல் குமரன்,

கதை பிடித்திருந்ததில் சந்தோஷம்.

நன்றி

 
At June 25, 2006 8:57 PM, Blogger மனதின் ஓசை said...

போட்டியில் வெற்றி பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...

 
At June 25, 2006 8:58 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் நிலா:)

 
At June 25, 2006 8:59 PM, Blogger நன்மனம் said...

வாழ்த்துக்கள்.

 
At June 25, 2006 11:10 PM, Blogger கோவி.கண்ணன் said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

 
At June 25, 2006 11:43 PM, Blogger துளசி கோபால் said...

நிலா,

வாழ்த்து(க்)கள்.

 
At June 26, 2006 12:38 AM, Blogger Unknown said...

வாழ்த்துக்கள் நிலா

 
At June 26, 2006 12:47 AM, Blogger ilavanji said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் நிலா! :)

 
At June 26, 2006 1:32 AM, Blogger அருள் குமார் said...

வாழ்த்துக்கள் நிலா :)

 
At June 26, 2006 7:40 AM, Blogger நிலா said...

//3வது இடம் என்றால், கொஞ்சம் இடிக்கிறது!!(தமாசுங்கொ) 1தல் இடம் அல்லவா கிட்டியிருக்கனும்!//

tamila tamila

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. அடுத்த முறை பார்ப்போம்
முடிவு பற்றி உங்களது பின்னூட்டம் பார்த்தே தெரிந்து கொண்டேன்.
அதற்கும் நன்றி :-)

 
At June 26, 2006 7:42 AM, Blogger நிலா said...

மனதின் ஓசை, பொன்ஸ், நன்மனம், கோவி.கண்ணன்

வாழ்த்துச் சொல்ல வலைவீடேறி வந்ததற்கு மிக்க நன்றி

 
At June 26, 2006 10:27 AM, Blogger நிலா said...

தலைவி

வாழ்த்தெல்லாம் இருக்கட்டும். போட்டிக்கு முன்னால எட்டியே பார்க்கலியே?

உ.பி.ச.வுக்கு இவ்வளவுதான் மதிப்பா? :-)))

 
At June 26, 2006 3:11 PM, Blogger நிலா said...

தேவ், தவறாமல் ஒவ்வொரு முறையும் வாழ்த்துச் சொல்கிறீர்கள்
மிக்க நன்றி

 
At June 26, 2006 3:12 PM, Blogger நிலா said...

இளவஞ்சி, அருள்குமார்

வாழ்த்துக்கு நன்றி

 
At June 26, 2006 6:55 PM, Blogger கிவியன் said...

60 70 என்று ஏகமான பின்னூட்டத்தால் வந்து உங்கள் கதையை படித்தேன். முதலில் கதை பற்றிய விமர்சனங்களைப் பற்றி, இரண்டு குழுக்கள், இந்த காலத்தில் இது சாத்தியமா இல்லையா என்று, பிறகு ஆண் பெண் புரிதல் என்ற மற்றொரு பிரிவு, என்று எங்கெங்கோ போகிறது. கதைக்கான கரு எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். இக்கதையின் கரு சாத்தியமா என்று கேட்டுக்கொண்டிருதால்? திருமணமான பின் அவரவர் மனைவியிடத்து இருந்த அறியாமைகளை களையாதவர்கள் வேண்டுமானால் இந்த 'கரு' எப்படி சாத்தியம் என்றே கேட்டுக்கொண்டிருக்கட்டும்.
சாத்தியமா இல்லையா எனபதெல்லாம் தேவை இல்லாதது. அதன் பின் நடை, வார்த்தை சிக்கனம். தனித்து தெளிவாக நிற்கும் நடையில்லா விட்டாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் அதிகமானோர் எழுதும் சாதாரண நடை. குறை ஒன்றுமில்லை.

பிரச்சனை இங்கே ஆரம்பிக்கிரது.
//அவள் அந்தக் காட்சியை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் போதே சுரேஷ் அவளை சுவரில் சரித்து.... //
இதற்கு மேல் வாசகரின் கற்பனைக்கு விட்டு விடுகிறார். அதுவும் தவறில்லை. ஆனால் வாசகர் இந்த கதைக்கு வர்னம் பூசுவது தவிர்கமுடியாது போகிரது அதனால் வந்த பின்னூடங்களை பார்த்தால் புரியும். சற்றே நீண்டு போகும் கதையை வார்த்தைகளை குறைத்திருந்தால் சுருக்கமாகஇன்னும் நன்றாக படைத்திருக்கலாம்(முடியும்) கிடைத்த நேரத்தில் எழுதியிருக்கிறார என்றே தோன்றுகிரது.

 
At June 26, 2006 7:38 PM, Blogger Sud Gopal said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் நிலா! :)

 
At June 27, 2006 1:02 AM, Blogger நிலா said...

கிவியன்

விரிவான விமரிசனத்துக்கு நன்றி. 'நன்றாக இருக்கிறது' அல்லது 'எங்கோ இடிக்கிறது' போன்ற ஒற்றை வரி விமரிசங்களைவிட இப்படிப்பட்ட விரிவான பார்வைகள் படைப்பாளிக்கு பிரயோசனமாக இருக்கும்.

//கிடைத்த நேரத்தில் எழுதியிருக்கிறார என்றே தோன்றுகிரது. //
நீங்கள் சொன்னது சரிதான் - இந்தக் கதை அலுவலுக்கிடையே கிடைத்த ஐந்து பத்து நிமிடங்களில் அவசரமாக எழுதப்பட்டதுதான்.


உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. நியூசிலாந்தில் இருக்கிறீர்களோ?

 
At June 27, 2006 6:33 AM, Blogger மஞ்சூர் ராசா said...

கதையின் கருத்து நன்றாக இருக்கிறது. கொஞ்சம் பழையவாசம் அடிக்கிறது என்று சொல்பவர்களுக்கு இன்றும் கட்டுப்பெட்டித்தனமாக பல விசயங்கள் தெரியாமல் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு நமது கல்விமுறையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமய்த்தில் மேல்நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது கல்விமுறை எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்காவில் 17 வயதிற்கு முற்பட்ட பலர் உடலுறவு கொள்வதாகவும், கருகலைப்பு செய்வதாகவும் சமீபத்தில் எங்கோ படித்த ஞாபகம். அதற்கு நமது கட்டுபாடு எவ்வளவோ தேவலாம். தாய், அல்லது சகோதரிகள் அடுத்த வீட்டு ராஜியை போன்றவர்கள் பக்குவமாக பெண்களுக்கு சில விசயங்களை எடுத்து சொன்னாலே அவர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
பிம்பம் கதையும் நன்றாக இருந்தது.

 
At June 27, 2006 10:06 AM, Blogger நிலா said...

மஞ்சூர் ராசா

மனமுதிர்காலம் பற்றிய விரிவான கருத்துக்கு நன்றி

பிம்பம் பிடித்திருந்ததில் சந்தோஷம். இரு கதைகளில் எனக்கு பிம்பம் வழக்கத்தை விட மாருபட்டதாய்த் தோன்றியது. ஆனால் பலருக்கும் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை உணர்கிறேன்

வாழ்த்துக்கு நன்றி

 
At September 05, 2006 2:35 AM, Blogger The Visitor said...

Nila avargaLukku -
kathaiyin neelam oru pakka kathaiyin neeLatthai vida satru adhikam, aayinum, 'effect' adhai polirundhadhu. Oru pakka kathaiyaaka iruppadhil thavarondrum illai. That is another format (crisp narration with a twist in the end, the author also leaves certain things ambiguous intentionally to deliver the final denouement).

//காட்சிகளில் வலிமை சேர்க்காமல் வசனங்களின் பின்னால் இருந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்//
enbathu anony-'manju' vin vaadham.

-etrukkolla mudiyaadha vaadham.

KathaapaatthirangaLai pesa vaitthu avargalin guNangalai velikkondu vandhulleergal - adhuvey ungal vetri.

ungal pinnootangaLil sila anony kartthukkalai padikkum podhu, patrikkondu vandhadhu. Anony vimarsanangalil thavarillai endra karutthai vaiththirundhen - Aanaal adhu thavaro endru ippodhu thOndrugirathu. There has been a post discussing this issue (of anonymity) on another blog. Please have a look, if possible.

oru pakka kathaigal paditthadhaal, ennaal mudivai Oralvu Ugikka mudindhadhu.

kathaiyil solla vandha karuthu sariyaanadhey enbadhu en abippraayam.

Moondram parisu thaan kidaiththadhu enbadhil enkku satru Emaatram thaan (matra kathaikalai innum naan padikkavillai thaan :)). Adhu kidakkattum - nandraaga kathai ezhudhukireergal. payanam thodarattum. Vaazhtthukkal.

pi.ku:thamizhil pinnoottam thara vendum enbhadhu thaan en aasai, aanaal adhartketra vasadhi illai. padippadharkku satru katinamaaga irundhaal mannikkavum :)

 
At September 05, 2006 2:36 AM, Blogger The Visitor said...

I came here from boo's blog.

 

Post a Comment

<< Home