.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, April 17, 2006

'அப்பா'வை மறந்து 'அம்மா'விடம் சரணடைந்த ராதிகா சரத்குமார்!

Your Ad Here

சரத்குமாரும் ராதிகாவும் அ.தி.மு.கவில் இணைந்தார்கள் என்ற செய்தியைப் படித்ததும் இந்தத் தேர்தலில் நடந்து வரும் கேலிக் கூத்துகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டதோ என்று தோன்றியது.

தன்மானத் தமிழன் என்று மார்தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் இத்தகைய செயல்கள் அவர்களுடைய பச்சோந்தித் தனத்தைப் பிரதிபலிப்பதைவிட தமிழ் சமூகத்தின் அறியாமையையே வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் இந்த ஆட்சியைக் கடுமையாக விமரித்த வைகோ இன்று தன் சகோதரியின் (!!!!) ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்பதென்ன! ஸ்டாலின் மேயர் பதவியைத் துறக்கக் காரணமாக இருந்த கராத்தே தியாகராஜன் இன்று கருணாநிதியோடு பவ்யமாய் வேட்பு மனுத் தாக்கல் செய்யச் செல்வதென்ன! 'அப்பா' என கருணாதியை விளித்து உருக்கம் காட்டிய ராதிகா இன்று அம்மாவிடம் சரணடைந்ததென்ன!

தமிழக மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைத்திருந்தால் இதெல்லாம் நடக்கும்? ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில் தவறென்ன?

சமீபத்தில் கொள்கை பார்த்து தமிழகம் எப்போதாவது வாக்களித்திருக்கிறதா? சினிமா கவர்ச்சிக்கும் பணத்துக்கும் தமிழன் தன் வாக்கை விற்று வெகு நாட்களாகிப் போனதென்றுதான் நான் நினைக்கிறேன்

You get what you deserve!

வாழ்க ஜனநாயகம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

23 Comments:

At April 17, 2006 4:28 AM, Blogger கவிதா | Kavitha said...

தமிழன் முட்டாளாகி விட்டது உண்மை!!

 
At April 17, 2006 4:49 AM, Blogger சிவா said...

சிம்ரன் எல்லாம் காசு வாங்கிட்டு ஏழைகளின் நிலைமை பற்றி பேச வேண்டியதை தமிழன் கேட்கும் நிலைமைக்கு ஆகிவிட்டது. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது. இப்படி காசுக்காக மனசாட்சியே இல்லாம மேடை மேடையா 'ஏ தமிழகமே' என்று கத்துவது இந்த நடிகைகளுக்கு அடுக்குமா. மக்கள் இதை எல்லாம் நம்பி ஓட்டு போடுவார்களா என்று சந்தேகம் தான்.

அரசியல் இப்போது வெளிப்படையாகவே வியாபரம் ஆகிவிட்டது. எங்கே பணம் கிடைக்கிறதோ, அங்கே கிடை. இதில் ராதிகாவும் விதி விலக்கு அல்ல. மக்களுக்கு புரிய வேண்டும்.

 
At April 17, 2006 5:13 AM, Anonymous Anonymous said...

Indhira gandhiyai mikavum mosamana vathikalal archanai seithu Madurai veethikalil kolai muyarchi seithakalankalai maranthu vittu, congress udan engalukku eppothum vendathathu endru medaikalil pesiya kalangalai puthaithuvittu Cabinet Minister pathavikkaka athay congressudan konji kulavum indraiya katchikalai vidava ithu mosamanathu? Karmaveerar Kamarajar veettai padam pidithu karmaveerar maligai paareer endra kalam poyae poi vittathu. Kamarajar irakkumpothu avar veettil Rs.500/- kooda illatha nilai indru appadi sonnavarkal ellam 'AEZHAIYIN SIRIPPIL ERAIVANAI KANKIRARKAL'. ithaiyellam vida Sarath kumar ondrum mosamaga seyyavillai-thangam

 
At April 17, 2006 6:06 AM, Blogger தயா said...

சித்தியை நம்பி யாரும் அன்றைக்கு கருணாநிதிக்கு வாக்களிக்கவில்லை. அன்றைக்கு சரத் சித்தப்பாகிவிட்டார்.

இன்று "செல்வி"யை நம்பி இன்னொரு செல்வி முடிவெடுப்பாரா?

ஓட்டிற்காக அன்றைக்கு "ராதிகா செல்வி"யையும் "சரத்"தையும் பயன்படுத்திக்கொண்ட திமுக உரிய மரியாதை கொடுக்கவில்லை என அவர் சமூகத்தை சார்ந்தவர்கள் கோபப்படுவார்கள் என்றால் சரத்தின் வரவு ஜெக்கு நல்லது தான். ஹீம். பார்ப்பபோம்.

 
At April 17, 2006 6:11 AM, Blogger ரவி said...

சரத் அ.தி.மு.க வில் ஐக்கியமானது ஆச்சர்யம் அளிக்கவில்லை...அவருக்கு வேண்டியது ஒரு குதிரை...சவாரி செய்ய...பழய கடன்களை அடைக்க...<< சில ஆண்டு பொது வாழ்வில் அடைத்து விட்டார் என்று நம்புவோம் >> ராடன் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளி பரப்ப ஒரு டி.வி வேண்டும் அவ்வளவுதானே..இருக்கவே இருக்கு செயா டி.வி. ..மேலும் தி.மு.க வின் தேர்தல் உள்குத்து வேலைகளால் மனம் புழுங்கினார் என்பது உண்மை...<< M.P தேர்தல் தோல்வி..கலைஞரின் முரட்டு பக்தன் தூத்துகுடி பெரியசாமி தன் மகள் கீதா ஜீவன் க்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்க்காக குத்தியது இந்த உள்குத்து >>

என்னமோ திட்டம் இருக்கு...

சரத் இப்பொழுது அ.தி.மு.க வில் ஒரு இரண்டாம் மட்ட தலைவார்...செயலலிதா வுக்கு பிறகு கட்சியயை கைப்பட்ற முயலலாம்...முடியாத பட்சத்தில் கட்சியை விட்டு வெளியேறி தனி இயக்கம் காணலாம்....

இப்பொழுது புரிஞ்சதா ராசா....

 
At April 17, 2006 6:55 AM, Anonymous Anonymous said...

At least politicians in Tamil Nadu have the maturity not to assassinate each other. At least Tamil Nadu people have a choice as to elect. In other parts of the world that type of the choice is not available.

 
At April 17, 2006 7:16 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

எல்லோருடைய மனக்குமுறல்களையும் இந்த ஒற்றைப்பதிவில் நான் காண்கின்றேன்

நன்றி நிலா

 
At April 17, 2006 10:08 AM, Blogger Sami said...

ஜெயா டிவியில் இன்று சரத்குமார் ராதிகா,ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக வில் இணையும் நிகழ்ச்சியை காட்டும் பொழுது ராதிகாவின் முகத்தில் அவ்வளவாக மகிழ்ச்சி இருப்பது போல் தோன்றவில்லை,மேலும் it was look like she came for formality sake.சரத்குமாரின் செய்தியாளர் சந்திப்பிலும் ராதிகா இல்லை.உண்மையிலேயே ராதிகா விருப்பத்துடன் அதிமுக வில் இணைந்தாரா அல்லது சரத்தின் வற்புறுத்தலால் இணைந்தாரா என்று பின்னாலில் தான் தெரியும்.

கட்சி மாறுவது என்பது அரசியல்வாதிகளுக்கே சகஜமாகிவிட்ட இன்றைய சூழலில்,சரத்தை போன்ற நடிகர்கள் ரசிகர் மன்றங்களை காட்டி,தேர்தல் நேரத்தில் பணம் பார்க்கிறார்கள்.இதில் ஏமாறுவது முட்டள் ரசிகர்கள் சிலர். உடனடியாக உள்ளூர் கட்சி பிரமுகரை சந்திந்து,தேர்தல் பணியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் புத்திசாலி ரசிகர்களும் இருக்கிறார்கள்.

 
At April 17, 2006 10:39 AM, Blogger நிலா said...

//தமிழன் முட்டாளாகி விட்டது உண்மை!!//

உண்மைதான். வருகைக்கு நன்றி, கவிதா

 
At April 17, 2006 12:30 PM, Anonymous Anonymous said...

தமிழக அரசியலின்; சிறப்பம்சமே!!!; விவஸ்தையின்மை!!!சமீப கட்சிமாற்ற நிகழ்வில் அது கொடிகட்டிப் பறக்குது. இதில் அப்பா-அம்மாவிடமோ; அம்மா -அப்பாவிடமோ சரணடஞ்சால் கூட ; நான் ஆச்சரியப்படமாட்டேன். கொள்கைக்கு கொள்ளிவைத்து வெகுகாலமாகிவிட்டது. நடப்பது தொழில்; லாபம் தான் நோக்கம்.இதைப் பற்றிப் பேசும் நம்மை- அவர்கள் முட்டாளாகத்தான் கருதுவார்கள்.
யோகன்
பாரிஸ்

 
At April 17, 2006 1:23 PM, Blogger துளசி கோபால் said...

முந்தி அப்பாச் செல்லம். இப்ப அம்மாச் செல்லம். அவ்வளவு தானே செல்லம்?

 
At April 17, 2006 1:40 PM, Blogger Bala said...

இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? இப்பொழுது என்ன நடந்து விட்டது? அன்றே ராஜாஜி சொன்னாரே. "இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று. (இன்று உயிருடன் இருந்திருந்தால் "மூன்றும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று சொல்லியிருப்பார்). இந்த தவளைகள் குட்டையை விட்டா போய் விட்டது? இந்த மட்டைக்கும் அந்த மட்டைக்கும் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான்!!!.

 
At April 17, 2006 2:16 PM, Anonymous Anonymous said...

I love tamil nadu...chellam

-Ram

 
At April 17, 2006 3:28 PM, Blogger சிங். செயகுமார். said...

நண்பரே மதன் மோகன்.
உங்கள் மடல் கண்டு அகம் குளிர்ந்தேன்
நன்றி என்று ஒரு வார்த்தை சொல்லி முடித்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
எழுதுவதை கவிதை என்று ஒப்பு கொண்ட நண்பரே

இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக உங்கள் சன் டீவியில் மன்னிக்கவும் உங்கள் ரேடான் டீவியில் (விரைவில் எதிர் பாருங்கள்)

 
At April 17, 2006 7:09 PM, Blogger VSK said...

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

உத்தமர் போலவே பகல் வேஷம் போட்டு
[இனிமேல் என் சொந்த சரக்கு!]
அப்பாவித் தமிழரை இருவரும் சேர்ந்து

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

இவ்வாண்டு அவர்களை அனுப்பி வைப்போம்
இனி எந்நாளும் அவர்களே ஆளாமல் செய்வோம்
திறனுள்ள ந்ல்லோரைத் தேர்ந்தெடுப்போம்-- நம்
தமிழ்நாட்டின் நலனென்றும் மனதில் கொள்வோம்

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே!

 
At April 17, 2006 11:03 PM, Blogger enRenRum-anbudan.BALA said...

//You get what you deserve!

வாழ்க ஜனநாயகம்!
//

Absolutely correct statement !!!

 
At April 17, 2006 11:17 PM, Anonymous Anonymous said...

வாழ்க பணநாயகம்! வளர்க இந்திய கரன்ஸியின் புகழ்!!

இதெல்லாம் அவுங்களுக்கு சும்மா ஜுஜுபி மாமே!

விவேகானந்தர் அன்றைக்கே சொன்னார். "இளைஞனே! அர

 
At April 17, 2006 11:20 PM, Anonymous Anonymous said...

Why not give a chance to Vijaykanth?

 
At April 17, 2006 11:44 PM, Anonymous Anonymous said...

நண்பர் பாலா,

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னது ராஜாஜி அல்ல. பெருந்தலைவர் காமராஜ். அந்த மட்டைகளோடு சேர்ந்து கொண்டு காமராசருக்கு எதிராக கலக்ம் செய்தவர்தான் ராசாசி

சாத்தான்குளத்தான்

 
At April 18, 2006 2:31 AM, Blogger நிலா said...

//சிம்ரன் எல்லாம் காசு வாங்கிட்டு ஏழைகளின் நிலைமை பற்றி பேச வேண்டியதை தமிழன் கேட்கும் நிலைமைக்கு ஆகிவிட்டது.//

சிவா
அதேதான்... செந்தில், விஜயகுமார் இவர்களாவது தமிழ் நாட்டில் வாழ்பவர்கள். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். சிம்ரனுக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? ஒன்றும் சொல்லுவதற்கில்லை!




// மக்கள் இதை எல்லாம் நம்பி ஓட்டு போடுவார்களா என்று சந்தேகம் தான்.
//

சந்தேகமே படாதீர்கள்... கண்டிப்பாகப் போடுவார்கள்.
அதனால்தான் இந்த அரசியல்வாதிகள் இத்தகைய கூத்துக்களை அரங்கேற்றுகிறார்கள் திரும்பத் திரும்ப

//அரசியல் இப்போது வெளிப்படையாகவே வியாபரம் ஆகிவிட்டது. எங்கே பணம் கிடைக்கிறதோ, அங்கே கிடை. //

மிக மிகச் சரி.

அநாகரீகமான ஒரு தொழிலாகிப் போய்விட்டது.

 
At April 18, 2006 9:42 AM, Blogger நிலா said...

தயா வரவுக்கு நன்றி

 
At April 18, 2006 12:26 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஒண்ணும் இல்லாம ஒரு 25 பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தி. அதைப் போட்டு 25- 30 பின்னூட்டம் வாங்கற திறமை எல்லாம் எங்கேயிருந்து வந்தது?

//தமிழன் முட்டாளாகி விட்டது உண்மை!!// இதெல்லாம் எனக்கு தெரியாது ஆனா நீங்க ரொம்ப புத்திசாலியாயிட்டீங்க. :)

 
At April 18, 2006 3:49 PM, Blogger VSK said...

Tuesday, April 18, 2006
arasiyal!

"அரிசியல்"
அனா ஆவன்னா படித்தாலும் சரி
படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

வாரிசு முறையில் பிணக்குண்டா?
"பெரிசின்" பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
"அரிசியல்" தெரியுமா உனக்கு?
இதோ உனக்கு ஒரு சீட்டு!

மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?

உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!

'அரிசியல்' பேசி அவமானப் படுத்துகிறார்.
'அரிசியல்' மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
'அரிசியல்'ஆல் ஆட்சிக்கு வந்தவர்
'அரிசியல்'ஆல் அழிவதுதானே முறை!

அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
"அரிசி" இன்று கொல்லும்!
இது புது மொழி!!

ரசிகர் கூட்டங்கள் உடனே வருமென்று
சரியாகத் தெரியும்எனக்கு!
'என்னெஸ்'சும் மற்றோரும்
உடனிங்கு வந்திடுங்கள்!

aaththigam.blogspot.com

 

Post a Comment

<< Home