பெற்றோருக்கு சுய பரிசோதனை
(இந்தப் பதிவு பரஞ்சோதிக்கு சமர்ப்பணம் - காரணம் தெரியும்தானே!)
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தனிப்பட்ட குண நலன்களுண்டு. அந்த குணங்களில் மாற்றம் ஏற்படுத்துவெதன்பது சில வாரங்களிலொ அல்லது மாதங்களிலொ நடத்திவிடக் கூடியதல்ல. இந்த மாற்றங்களை அடுத்த தலைமுறையில்தான் ஏற்படுத்த முடியும். இத்தகைய மறுமலர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் பெற்றொர்களும் ஆசிரியர்களுமே. ஆனால் இந்த முக்கியத்துவத்தை அவர்களும் சரி, சமூகமும் சரி உணராமலிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.
மகிழ்ச்சியான மனிதன்தான் மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க முடியும். வாழ்க்கையின் 10 வயதுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை நிர்ணயிக்கின்றன என்கிறார்கள் நிபுணர்கள். இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.
தனக்கென்று ஒரு பெர்சனாலிடியை 2 வயதிலேயெ குழந்தைகள் உருவாக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இந்த வயதில் இவர்களது ரோல் மாடல்களாக இருப்பது பெற்றோர்களே. பெற்றோரது பழக்க வழக்கங்களும் குண நலன்களும் குழந்தையின் குணநலன்களைச் செதுக்குவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறீர்களா என்று சுய பரிசோதனை செய்து கொள்ள கீழ்க்கண்ட கேள்விகள் உதவும்:
1. நான் என் குழந்தைகளை மதிக்கிறேனா?
2. என் குழந்தைகளைப் பற்றி அவர்களிடம் நான் என்ன கூறுகிறேன்?
3. குற்ற உணர்வை அவர்களிடம் தூண்டுவதன் மூலம் நான் விரும்பும் செயலை அவர்களைச் செய்ய வைக்கிறேனா?
4. குழந்தைகளை நான் நடத்தும் விதத்தில் என் குற்ற உணர்வின் உந்துதல் இருக்கிறதா?
5. என் பெற்றோர்கள் எனக்கிழைத்த தவறுகளை நான் என் குழந்தைகளுக்குச் செய்கிறேனா?
6. என்னுடைய தேவைக்காக குழந்தைகளை என் மேல் சார்ந்திருக்கும்படி ஊக்குவிக்கிறேனா?
7. என் குழந்தைகளை அதீத பாதுகாப்புணர்வோடு நடத்துகிறேனா?
8. என் குழந்தைகளுக்குத் தேவையான பங்களிப்பை அவர்களுக்கு நான் அளிக்கிறேனா?
9. என் குழந்தைகளின் நல்ல குணங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறேனா அல்லது தீய குணங்களிலா?
10. என் குழந்தைகளிடம் வன்மம் பாராட்டுகிறேனா?
11. என்னால் என் குழந்தைகளின்டம் 'நான் தவறு செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்' என்று சொல்ல முடிகிறதா?
12 என் உடல் வலுவை குழந்தைகளிடம் காட்டுகிறேனா?
13. என் குழந்தைகளுக்குத் தங்களைப் பார்த்து சிரித்துக் கொள்ளும் பக்குவத்தைக் கற்றுக் கொடுக்கிறேனா? (எ.கா: கீழே விழுந்ததற்கு அடுத்தவர்கள் சிரிப்பார்களே என்று கவலைப்பட்டு அழுவதைவிட தன் கவனக் குறைவைக் குறித்து சிரித்துக் கொள்வது மேலல்லவா?)
14. சரியோ தவறோ அவர்களுக்கென்று உணர்வுகள் இருப்பது தவறல்ல என்பதை என் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேனா?
15. எனக்கு ஒரு காரியத்தில் என் குழந்தைகள் உதவும்போது அவர்களால் அந்தக் காரியம் முடிய தாமதம் ஆனாலும் கூட, வேலை நல்லவிதத்தில் நடக்கா விட்டாலும் கூட அவர்களை மேலும் உதவும்படி ஊக்குவிக்கிறேனா?
16. எனக்கு என் குழந்தைகள் முக்கியம் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்து கொள்கிறேனா?
17. என் குழந்தைகளுக்கு நான் செவிசாய்க்கிறேனா?
18. என் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எவ்வளாவு சாய்ஸ் தரமுடியுமோ அவ்வளவு தருகிறேனா?
19. என் குழந்தைகள் எனக்கு ஏமாற்றமளித்தால் என் அன்பையும் அங்கீகாரத்தையும் அவர்கள் இழந்துவிடுவார்களா?
20. என் குழந்தைகளின் வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தைத் தெளிவாக வரையறுத்திருக்கிறேனா?
21 என் குழந்தைகள் அன் அதிகாரத்தை எதிர்ப்பதில் தவறில்லை என்பதை மனதில் கொண்டிருக்கின்றேனா?
22. என் குழந்தைகள் அழுது அடம்பிடிக்கும் போது அதனை நிறுத்த அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிடுகிறேனா?
23. என் குழந்தைகள் என்னை விமரிசிக்கும்போது அதிலுள்ள நியாயத்தைப் பார்க்கத் தவறுகிறேனா?
24. குழந்தைகள் முன் அடாவடியாக நடந்துகொள்கிறேனா?
25. குழந்தைகளின் முன் புறம் பேசுகிறேனா?
26. என் குழந்தைகளுக்குப் போதிப்பதை நான் கடைப்பிடிக்கிறேனா?
27. என் விருப்பத்தை என் குழந்தைகளின் மேல் திணிக்க முயல்கிறானா?
28. குழந்தைகளிடம் சமூக அக்கறையை விதைக்கிறேனா?
29. ஒழுங்குபடுத்துவதற்கும் தண்டிப்பதற்குள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கிறேனா?
30. என் குழந்தைகள் மேல் நான் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் நியாயமானவையா?
பி.கு: 1-21கேள்விகள் டாக்டர் எட் விம்பர்லி அவர்களின் புத்தகத்திலிருந்து. ஏனைய கேள்விகள் நிலவிலிருந்து.
10 Comments:
very nice nila.
ஆகா! பரஞ்சோதி...........தமிழ்மணத்தின் அப்துல் கலாம்னு சொல்லலாமா! நல்லதொரு அங்கீகாரம்.
அதைத் தொடர்ந்து நீங்கள் கேட்டிருப்பவை ஒவ்வொரு பெற்றோரும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளே! கேள்வி பிறந்தது இன்று! நல்ல பதிலும் பிறந்தது இன்று என்று இருக்கட்டும்.
Thank you, Muthu
அன்பின் நிலா
மிக நல்ல பதிவு. இப்பத்தான் வாசிக்க முடிந்தது. (late latif) குழந்தை வளர்ப்பு குறித்து பல விவாதங்கள்,பயனுள்ள விடயங்கள் பறிமாறப்படுவது மிக ஆரோக்கியமான வளர்ச்சி. தொடருங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.
//அதைத் தொடர்ந்து நீங்கள் கேட்டிருப்பவை ஒவ்வொரு பெற்றோரும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளே! கேள்வி பிறந்தது இன்று! நல்ல பதிலும் பிறந்தது இன்று என்று இருக்கட்டும்.//
பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சிதான், ராகவன். நன்றி
சமர்ப்பணம் பண்ணிய பரஞ்சோதியைக் காணோமே.:-)
நன்றி, சுதாகர். உங்களுடைய படைப்புகள் சில படித்திருக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்
சகோதரி நிலா,
நட்சத்திர வாரத்தில் நான் எதிர்பார்த்த மிகவும் அருமையான பதிவு. எனக்கு இத்தனை அருமையான அங்கிகாரம் கொடுப்பீங்க என்று நினைக்கவே இல்லை, நன்றி சொல்ல வார்த்தைகள் வரமாட்டேங்குது.
பெற்றோர் அனைவரும், நீங்க கேட்ட கேள்விகளை பிரிண்ட் எடுத்து வீட்டில் ஒட்டி வைக்க வேண்டும். அத்தோடு நில்லாமல் தினமும் பார்த்து அதன் படி நடக்க வேண்டும்.
நான் கடந்த இரு வாரங்களாகவே தமிழ்மணம் பக்கம் தலைகாட்டவில்லை, கிரிக்கெட் போட்டிகளில் இரவு பகலாக விளையாடியது தான், பலனும் கிடைத்தது, இரண்டு வெற்றி கோப்பைகள்.
நான் உங்க பதிவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக படித்து கருத்து கூறுகிறேன்.
நானும் குழந்தைகள் வளர்ப்பு சம்பந்தமான கட்டுரைகள் அதிகம் கொடுக்கிறேன்.
பரஞ்சோதி,
வாங்க வாங்க. உங்களுக்குன்னு ஸ்பெஷலா பதிவு போட்டுட்டு உங்களைக் காணுமேன்னு நினைச்சேன்.
பதிவு பிடிச்சிருக்குன்னா சந்தோஷம்தான்
கிரிக்கெட் கோப்பைகளுக்கு பாராட்டுக்கள். இந்தியாவுக்கு வெளையாட வாய்ப்பிருக்கா?
நிலா. ஒரு நல்லதொரு பதிவு. நல்ல கேள்விகள். நானும் இதனை பிரிண்ட் எடுத்து வீட்டில் ஒட்டி வைத்து அடிக்கடிப் படித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினேன்.
சரி. கேள்விகளைக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் தற்கால ஆராய்ச்சியாளர்கள் இதற்கு என்ன விதமான பதில்கள் சொன்னால் நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள்? எங்கே படிக்கலாம் அதனைப் பற்றி? நம்மை நாம் கேள்வி கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் சரியான பதில் என்ன என்று தெரிந்தால் அதற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே. அதனால் கேட்கிறேன்.
//சரி. கேள்விகளைக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் தற்கால ஆராய்ச்சியாளர்கள் இதற்கு என்ன விதமான பதில்கள் சொன்னால் நல்லது என்று சொல்லியிருக்கிறார்கள்? எங்கே படிக்கலாம் அதனைப் பற்றி? நம்மை நாம் கேள்வி கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் சரியான பதில் என்ன என்று தெரிந்தால் அதற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே. அதனால் கேட்கிறேன்//
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்
அநேகமாக அனைத்துக் கேள்விகளுக்குமே பதில்கள் நாம் அறிந்தவைதான். முதல் 21 கேள்விகளுக்கான விளக்கத்தை A Parents Guide TO Raising Great Kids-21 Questions Successful Parents Ask Themselves
By: Ed Wimberly, Ph.D. என்ற நூலில் காணலாம்.
மற்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே:
22. அழுது அடம்பிடிக்கும் போது அவர்களுக்குத் தேவையானதைத் தந்து விடுவது தவறானது. இப்படிச் செய்வதால் அழுது அடம்பிடித்தால் காரியம் ஆகும் என்ற தவறான செய்தியைத் தருகிறோம். அப்படிப் பட்ட சமயங்களில் அவர்களை அலட்சியம் செய்வதே முறை
23.பெரும்பாலான பெற்றொர்களுக்குத் தங்கள் குழந்தைகள் தங்களை விமரிசிப்பதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அது தவறு. அவர்களின் கூற்றில் நியாயம் இருக்கிறதா என ஆராய்வதே சரி
24.குழந்தைகளிடம் மட்டுமல்ல, அவர்களின் முன்பாக எவரிடமும் அடாவடியாக நடந்து கொள்வது மிகவும் தவறு. பிள்ளைகள் பெற்றோர்களைப் பார்த்துதான் தங்கள் குணாதிசயங்களைச் செதுக்கிக் கொள்கிறார்கள்
25. குழந்தைகளின் முன் புறம் பேசுதல் தவறு
26. குழந்தைகளுக்கு வாய்வழி போதித்தால் மட்டும் போதாது. உதாரணமாக நாம் நடந்து கொள்ளுவது அவசியம்
27.பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களைப் பிள்ளைகள் மேல் திணிப்பது மிகவும் தவறு. குழந்தைகளின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்
28. குழந்தைகளிடம் சமூக அக்கறையை வளர்ப்பது பெற்றவர்களின் கடமை
29.ஒழுங்குபடுத்துவதற்கும் தண்டிப்பதற்குமுள்ள வேறுபாட்டை ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும். குழந்தைகளை ஒழுங்குபடுத்த கண்டிப்பான சில நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் அவை குழந்தைகளைத் தண்டிப்பவையாக அமைந்துவிடக்கூடாது.
30.எல்லோருக்கும் தம் குழந்தைகள் எல்லாவிதத்திலும் சிறந்தவர்கள் ஆக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அது யதார்த்தமானதா என்பதை சிந்தித்து செயல்படுவது அழகு
Post a Comment
<< Home