ஃபிலிம் காட்றோம்... (குறும்படம் பார்க்க வாங்க)
நிறப்பிரிகை என்ற 5 நிமிட குறும்படம் எடுக்க நேர்ந்தது ஒரு சுவையான அனுபவம். ஐரோப்பிய குறும்பட விழாவுக்காக ஒரு இணைய தளம் வடிவமைத்துக் கொடுத்தேன் . அந்த விழாவின் அமைப்பாளர் அஜீவன் அந்த விழாவிற்கு ஒரு படம் எடுத்து அனுப்பலாமே என ஆலோசனை தெரிவித்தார். 'சான்ஸே இல்லை. கொஞ்சம் கூட அனுபவம் இல்லாமல் அது சரிவராது'' என்று உதறிவிட்டேன் . ஆனால் அவர் தொடர்ந்து ஊக்கப் படுத்திக் கொண்டே இருந்தார். சுற்றிப் பார்த்ததில் ஒப்பேற்றும் அளவுக்கு நண்பர்கள் சிலரிடம் படம் எடுக்கத் தேவையான கருவிகளும் திறமையும் இருததது கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது.
ஆனால் கதை வேண்டும் அதற்கு நடிக்க ஆள் வேண்டும். கதையை எழுதிவிட்டு ஆள் தேடி கிடைக்காமல் சிரமப் படுவதை விட நடிக்க ஆளைத் தயார் செய்துவிட்டு ஸ்கிரிப்ட் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்த தோழி ஒருவர் தன் குழந்தைகளையும் மாணவிகளையும் நடிக்க வைக்க ஆர்வம் தெரிவித்தார்.
குழந்தைகளை முக்கிய பாத்திரங்களாகக் கொண்டு கதை எழுதவேண்டும். ஆனால் அது குழந்தைகளுக்கான படமாய் மட்டும் அமைந்துவிடக்கூடாது என்று எண்ணினேன். அப்படி உருவானதுதான் நிறப்பிரிகை. மத நல்லிணக்கத்தில் குழந்தைகளின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்று சொல்ல விழைந்தேன்.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒளிப்பதிவாளர் உரிய நேரத்தில் வரக் காணோம். நடிக்க வரவேண்டிய குட்டிப் பெண் வரவில்லை. வெறுத்துப் போய் கைவிட்டுவிடலாமென்ற நிலையில் ஒளிப்பதிவாளர் வந்து சேர, தன் அம்மாவுடன் வேடிக்கை பார்க்க வந்த பெண்ணை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைத்தோம் (அவள் பின்னி எடுத்துவிட்டாள் என்பது வேறு கதை). தாமதமானதால் வெளிச்சம் போய்விட்டது. வெளியில் எடுக்க வேண்டிய காட்சிகளைப் படமாக்க முடியாமல் போக, திரைக்கதையில் அவசர மாற்றம் தேவைப்பட்டது.
கேமரா ஆங்கிள், லைட் செட்டிங் எல்லாம் குத்து மதிப்பாய் வைத்து படம்பிடித்து முடித்தோம். லைவ் சவுண்ட் வேறு! 5 நிமிடப் படத்திற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பெண்டு நிமிர்த்தியது. இசைஞானமுடைய யாரும் பின்னணி இசைக்கு இல்லை. எடிட் செய்த பின்னும் காட்சிகளின் ஃப்ளோ சீராக இல்லை. எப்படியோ முடித்து அனுப்பி வைத்தோம். விழாவுக்கு வந்திருந்த 83 படங்களில் 27 படங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நிறப்பிரிகையும் ஒன்று. கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தோஷமான ஆச்சரியம்!
படைப்பில் எனக்குத் திருப்தியில்லாததால் வேறெங்கும் இதனை அனுப்பவில்லை. கதையில் எனக்கு நிறைவு இருக்கிறது; நடித்தவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அவர்களை இன்னும்கூட இயல்பாக செய்ய வைத்திருக்கலாம். டெக்னிகலாக நிறைய சொதப்பல்கள். அனைத்துக் குறைகளுக்கும் முழுப்பொறுப்பு என்னுடையதே.
இந்த அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:
* படம் எடுப்பது சுலபமல்ல.
* படம் எடுப்பதற்கு நுணுக்கமான திட்டமிடல் அவசியம்
* படப்பிடிப்பில் ஒலி ஒளி இரண்டுக்கும் மிக முக்கியத்துவம் தரவேண்டும்
* எடிட்டிங்கில் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம் என்பது தவறு. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
* கதை அழுத்தமாக இருந்தால் டெக்னிகல் சொதப்பல்கள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு
இந்தப் பாடமெல்லாம் கற்றுக் கொண்டு அதற்குப் பின் பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தலை நிறைய கனவுகள் உண்டு. கனியும் காலம்தான் இன்னும் வரவில்லை.
படத்துக்குப் போகுமுன் இரண்டு விஷயங்கள்:
1. நிறப்பிரிகை என்பதற்கு விளக்கம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
2. இது 9/11க்குப் பிறகு அன்பே சிவம் படத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்
படம் பார்த்து கருத்தைச் சொல்லிவிட்டுப் போங்கள் :-)
nirapirigai (short movie)
Video sent by nilaraj
65 Comments:
//இது 9/11க்குப் பிறகு அன்பே சிவம் படத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்வது அவசியம்//
இந்தக் குறும்படத்திற்கும், மேற்சொன்ன வரிகளுக்கும் என்ன சம்பந்தம்.
-ஞானசேகர்
9/11- க்குப் பின் எடுத்ததாய் சொன்னதற்குக் காரணம் - பெரியவர்களுக்குள் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் பிள்ளைகளிடம் அதைத் திணிக்கக்கூடாது என்று வலியுறுத்தவே. 9/11க்குப் பின் பிரச்சனைகள் பெரிதானதாக நான் நினைக்கிறேன்.
'ஈசன் என நினைத்து எல்லா உயிர்களையும்...' என்று அந்தக் குழந்தை சொல்லும் பாடல் 'அன்பே சிவம்' என்ற கருத்தை ஒட்டியது. படத்தால் இன்ஸ்பயர் ஆகி எடுத்ததாக நினைக்கக் கூடாது என்பதால் சொன்னேன்
//பெரியவர்களுக்குள் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் பிள்ளைகளிடம் அதைத் திணிக்கக்கூடாது என்று வலியுறுத்தவே//
திரும்பவும் குழப்புகிறீர்கள். இந்தத் திணிப்புக்கும் 9/11க்கும் என்ன தொடர்பு?
//9/11க்குப் பின் பிரச்சனைகள் பெரிதானதாக நான் நினைக்கிறேன்//
என்ன பிரச்சனை பெரிதானது?
-ஞானசேகர்
ஞான சேகர்,
மன்னிக்கவும். இதற்கு மேல் விளக்கம் தர எனக்குத் தெரியவில்லை
படம் நன்றாக இருக்கிறது
நல்ல குறும்படம். தமிழ் அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொடுக்கிறது. ஒவ்வொருவரும் அடுத்தவரை மதித்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.
அஜீவன் அண்ணாவை வேறொரு தளத்தில் பழக்கம். அவரும் திரைப்படத்தில் குறும்படத்தில் நிறைய செய்தவர். அவருடைய வழித்தூண்டலில் நீங்கள் இந்தப் படத்தை எடுத்திருப்பது மிகச்சிறப்பு. எனது வாழ்த்துகள்.
hmm athane ean mathika thavaruvan? :)) short film nalla iruku! matra muyatchigalum vetri peradum.Nan oru 4 yrs vaalntha veeduku pakathila Ella mathathinarum irunthargal.Otrumayagathn irunthavai...(this was in Matale)
great work
first is best
நிலா! உங்களில் பல பரிமாணங்களை பார்த்து வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள். படத்தை காலையிலேயே பார்த்துவிட்டேன். எல்லோருடைய நடிப்பும், சிலோன் தமிழும் அருமை (குறிப்பா அந்த பாப்பா) .நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சிவா
பலரது மனத்து ஆசைகள் ஆசைகளாகவே நின்று போய் விடுகின்றன...சிலருக்குத்தான் ஆசைகளை, கனவுகளை, நிழல்களை நிஜமாக்கும் திறன் அமைகிறது.
கொஜ்சம் பொறாமைதான்..வளர்க.
படம் நன்றாக இருக்கிறது
Hello Nila
The movie was nice. I really enjoyed it.
Murali
அன்பின் நிலா,
அருமையான குறும்படம்.
அபாரமான கருத்தை அழகாகக் கூறி, திறமையாக இயக்கி இருக்கிறீர்கள்.
மகுடத்தில் மற்றுமோர் வைரம்.
மென்மேலும் புகழ் ஓங்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
நிலா அக்கா,
படம் பார்த்த வரை நல்லா இருந்தது. ஆனால் முழுவதும் வரவில்லையே. என்ன செய்ய வேண்டும்?
ஏன் சிலோன் தமிழ்? அதுவும் பிடிபடவில்லையே.
கொத்ஸ்
என்னதிது அக்காவெல்லாம் போட்டுக்கிட்டு. சும்மா பேர் சொல்லிக் கூப்பிடுங்கண்ணா :-)))
மொத்த படமே 5 நிமிஷம்தான். ம்ம்...ஏன் முழுசா வரலைன்னு தெரியலியே
மக்களெல்லாம் பாத்திருக்காங்களே. கொஞ்ச நேரம் கழிச்சி முயற்சி பண்ணிப்பாருங்க
சிலோன் தமிழா -நடிகர்கள் எல்லாம் சிலோன்லர்ந்து வந்தவங்க. அதான்.
அடுத்த படத்துக்கு உங்களை கதாநாயகனா போடறேன். சரியா?
நல்ல முயற்சி. கொஞ்சி பேசும் இலங்கை தமிழ் கேட்க பரவசமாயிருக்கிறது
சும்மா நச்சுன்னு இருக்கு குறும்படம்..பாராட்டுக்கள்!
நிலா,
சிறந்த கருத்தினை சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.
இந்தக் குறும்படம் தயாரிப்பில் இருந்த சில சிரமங்களை நீங்கள் பட்டியலிட்டிருந்தாலும்... படம் முடிந்தபின் அதையெல்லாம் மறந்து ஒரு அருமையான கருத்தை மனதில் தைக்க கூறியுள்ளது புரிந்தது. நல்ல கருத்து, எளிமையான அதேநேரம் அருமையான காட்சியாக்கம். டைட்டில், சப்-டைட்டில், தேவையான இசை, ஒளிப்பதிவு என்று ஒரு நல்லதொரு முழுக் குறும்படமாகவே வந்துள்ளது. நற்சான்றித(ழாவது) கிடைத்ததில் ஆச்சரியமில்லை!
உங்கள் பன்முக ஆர்வமும், திறமையும் ஆச்சரியமூட்டுகிறது. தொடருங்கள்.. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், இன்னும் பல உச்சங்களைத் தொட!
நிலா
எனக்கும் முழுப்படமும் பார்க்க முடியவில்லை. பார்த்த வரையில் அந்தப் பொன்ணு பூஜா நடிப்பு நன்றாக இருந்தது. மறுபடி முயற்சிக்கிறேன்
nila,
ithu enna? oru nila natchaththirama
maaRi irukkaa?
oNNum padikka mudiyalai(-: ellaam font seyyaRa vElai!
vaazththukkaL nila.
anbudan,
Tulsi( innikku india. naaLaikku engO?)
நன்றி நிலாக்கா...
மிகவும் நல்ல படம்.
தொழில்நுட்ப ரீதியாக சில குறைகள் இருந்தாலும் எல்லாத்தையும் விட சொல்லப்பட்ட கருத்து மிகவும் ஆழமானது.
இங்கேயே மிகவும் சொதப்பலான (தொழில்நுட்பரீதில்)படங்கள் வரும் போது உங்கள் படம் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கிறது.
9/11-க்கு பிறகான நிலை வெளிநாடுகளில் அப்படி என்ன்றால்... இங்கே தலைகீழ்... 1992-ல் இந்துக்கள் பாபர் மசூதியை காலி செய்ய... குற்றவாளிகளாக பார்க்கப்பட்டதென்னவோ(இன்றும்)அம்மக்கள் தான்.
அம் மக்கள் என்று நான் குறிப்பிட்டது...
இஸ்லாமிய மக்களைத் தான்
தாணு,
பல பேர் இந்தப் பிரச்சனையைச் சொன்னார்கள். இது ஒரு இலவச சேவையாதலால் பேண்ட் விட்த் பிரச்சனை இருக்குமென நினைக்கிறேன். பலர் ஒரே சமயம் பார்க்க ஏற்படும் இருக்கலாம்.
நேரம் கிடைக்கும் போது மீண்டும் முயன்று பாருங்கள் பொறுமைக்கு நன்றி
நன்றி பிரகாஷ்
ராகவன்
பாராட்டுக்கு நன்றி
குழந்தைகளின் இயல்பான நடிப்பு கதையோட்டத்தை நிறைவு செய்தததே! வாழ்த்துக்கள் நிலா!
நான் வேறு என்ன சொல்லப் போகிறேன் நிலா? குறும்படம் நன்றாய் இருந்தது. அருமையான கருத்து. என்னால் முழுதாகப் பார்க்க முடிந்தது என்று எண்ணுகிறேன். கடைசியில் நிறப்பிரிகையைப் பற்றி விளக்கம் வந்தது.
சினேகிதி,
பாராட்டுக்கு நன்றி
நம்ம எல்லாரும் மனசு வைச்சா ஒற்றுமையா இருக்க முடியும்னு நிரூபிச்சிருக்கீங்க நீங்களும் உங்க பக்கத்து வீட்டுக் காரங்களும். வாழ்த்துக்கள்
//great work
first is best//
Thanks Madhu
அடுத்த படத்தில நடிக்கிறீங்களா?
//எல்லோருடைய நடிப்பும், சிலோன் தமிழும் அருமை (குறிப்பா அந்த பாப்பா) //
நன்றி சிவா.
அவள் பெயர் ஓவியா. அவள் தங்கைதான் ஆயிஷாவாக வரும் அனாமிகா. அவளை பிரதானமாகவும் இன்னும் சில குழந்தைகளைக் கொண்டும் ஒரு ஒரு நிமிட விளம்பரம் எடுத்திருந்தேன் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்காக. மிகவும் பாராட்டப் பட்டது. திறமையான, துடிப்பான, அழகுக் குழந்தைகள்
//பலரது மனத்து ஆசைகள் ஆசைகளாகவே நின்று போய் விடுகின்றன...சிலருக்குத்தான் ஆசைகளை, கனவுகளை, நிழல்களை நிஜமாக்கும் திறன் அமைகிறது. //
தருமி,
உண்மையா சொல்லணும்னா எனக்கு என் கனவை நனவாக்கிற பொறுப்போ திறமையோ சுயமா வர்றதில்லை. என்னை சுத்தி இருக்கறவங்க என்மேல வைக்கிற நம்பிக்கைதான் என்னை உந்தித் தள்றது. அதுக்கு தனிப் பதிவே போட்ருக்கேன்
யக்கா,
கடைசியா முழுப்படத்தையும் பாத்துட்டேன். நல்லா இருந்தது. எனக்கு பிடிச்ச காட்சி எது தெரியுமா? ஆயிஷாவை பார்க்க ஓடி வரும் போது, தட்டி விட்ட பேப்பர்களை எடுத்து வைத்தபிந்தான், அவள் முன்னே செல்கிறாள். நல்ல வளர்ப்பின் அடையாளமல்லவா இது.
நான் செய்திருப்பேனோ என்று சந்தேகம்தான்.
//அடுத்த படத்துக்கு உங்களை கதாநாயகனா போடறேன். சரியா?//
என் வலைப்பூவிலேயே என் படத்தை போடவில்லை. அது காரணமில்லாமலா?
தமிழ்த் திரைப்படம் எடுத்து செந்தில் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் சொல்லி அனுப்புங்கள்.
(வடிவேலுன்னு சொன்னா போட்டிக்கு கைப்பு வேற வருவாரு)
karthikramas,
நன்றி. மீண்டும் வருக :-)
Managed to see your short film today during lunch time. Its come out very well. hats off to you and others who had worked/acted in it.
Padma.
Murali
Glad you enjoyed it
Thanks for dropping by
சக்தி,
வழக்கம்போல உற்சாக டானிக் ஏற்றிவிட்டுப் போனதற்கு நன்றி
//சும்மா நச்சுன்னு இருக்கு குறும்படம்..பாராட்டுக்கள்//
நன்றி, ஜோ
//நல்ல முயற்சி. கொஞ்சி பேசும் இலங்கை தமிழ் கேட்க பரவசமாயிருக்கிறது//
நன்றி நந்தன்
//ithu enna? oru nila natchaththirama
maaRi irukkaa?
oNNum padikka mudiyalai(-: ellaam font seyyaRa vElai!
vaazththukkaL nila.
anbudan,
Tulsi( innikku india. naaLaikku engO?)//
தலைவி,
உங்க வாழ்த்தை தேடி கண்டுபிடிச்சுட்டேன். பாதம் பணிந்து (சம்பிரதாயத்தை மாத்தக்கூடாதில்ல) ஏத்துக்கறேன்
அழுவுறத நிறுத்துங்க... பசங்க பயப்படுமில்ல? :-)))
(குமரன் வேற ஆட்டோ கீட்டோன்னு ஏதோ சொல்லிக்கிட்ருக்கார்)
//நல்ல கருத்து, எளிமையான அதேநேரம் அருமையான காட்சியாக்கம். டைட்டில், சப்-டைட்டில், தேவையான இசை, ஒளிப்பதிவு என்று ஒரு நல்லதொரு முழுக் குறும்படமாகவே வந்துள்ளது.//
அன்பு,
உங்கள் கருத்தைப் படித்த பின் குறும்பட விழாக்களுக்கு அனுப்பலாமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி
very nice nila to see the film.theme expressed is strong. this theme will not be accepted by all. by evolution all men came from single primitive couple. people afterwards were seperated by so many reasons. nature also indicates i.e one sun only shines, one earth for all survivors. names of the sea may vary but naturally they are interlinked only one air we inhale and exhale intermixing even the untouchables as we indicate them all of our blood is red in color then why should we differenciate people in the name of religion (and caste)think deeply this is emphasised in the story. congrads cheers.keep it up
//சும்மா நச்சுன்னு இருக்கு குறும்படம்..பாராட்டுக்கள்!//
நன்றி, ஜோ
நன்றி, buspass
//எனக்கும் முழுப்படமும் பார்க்க முடியவில்லை. பார்த்த வரையில் அந்தப் பொன்ணு பூஜா நடிப்பு நன்றாக இருந்தது. மறுபடி முயற்சிக்கிறேன்//
டாக்டரம்மா,
முழுப்படமும் படம் தெரிஞ்சுதா?
//தொழில்நுட்ப ரீதியாக சில குறைகள் இருந்தாலும் எல்லாத்தையும் விட சொல்லப்பட்ட கருத்து மிகவும் ஆழமானது.//
நன்றி, பால பாரதி
//இங்கேயே மிகவும் சொதப்பலான (தொழில்நுட்பரீதில்)படங்கள் வரும் போது உங்கள் படம் நிச்சயம் சிறப்பாக வந்திருக்கிறது.//
நீங்கள் தரும் ஊக்கம் அடுத்து எங்காவது குறும்பட விழா நடந்தால் இதை அனுப்பலாம என்று யோசிக்க வைக்கிறது. நன்றி
//குழந்தைகளின் இயல்பான நடிப்பு கதையோட்டத்தை நிறைவு செய்தததே! வாழ்த்துக்கள் நிலா!//
நல்ல திறமையான குழந்தைகள்.
நன்றி சிங் செயகுமார்
//குறும்படம் நன்றாய் இருந்தது. அருமையான கருத்து. //
நன்றி குமரன். (இதுக்கே ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஸாரி)
//ஆயிஷாவை பார்க்க ஓடி வரும் போது, தட்டி விட்ட பேப்பர்களை எடுத்து வைத்தபிந்தான், அவள் முன்னே செல்கிறாள். நல்ல வளர்ப்பின் அடையாளமல்லவா இது. //
நன்றி, கொத்ஸ்
எப்பவாவது இப்படி சீரியஸா கமென்ட் அடிச்சா என்ன சொல்றதுன்னு புரியமாட்டேங்குது
//நான் செய்திருப்பேனோ என்று சந்தேகம்தான்.//
அப்பாம்மா பேரைக் கெடுக்காதீங்க, கொத்ஸ் :-))
A nice film given the constraints of time and technology. 'singgaLaththamizh' was excellent!
The film came with breaks but I could re-boot it and seeit at one stretch.
The comment by someone as the best part of the movie,
"ஆயிஷாவை பார்க்க ஓடி வரும் போது, தட்டி விட்ட பேப்பர்களை எடுத்து வைத்தபிந்தான், அவள் முன்னே செல்கிறாள். நல்ல வளர்ப்பின் அடையாளமல்லவா இது."
appeared to be the main aberration to me!
How can such a well-brought-up parents have this kind of animosity?
Doesn't click!
Nice movie!
எஸ்.கே
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
எஸ்.கே
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
//appeared to be the main aberration to me!
How can such a well-brought-up parents have this kind of animosity?//
நல்ல ஆய்வு. உங்கள் கருத்தினை மதிக்கிறேன். ஆனால் கட்டுப்பாடும் பரந்த மனப்பான்மையும் முற்றிலும் வெவ்வேறல்லவா? ஒருவருக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருப்பதால் மட்டும் அவர் பரந்த மனப்பான்மையுடன் இருப்பார் என்று சொல்லிவிட முடியாதே? ராணுவத்தில் எவ்வளவு ஒழுக்கமும் கட்டுப்பாடும்? ஆனால் அங்கேதானே மிருகத்தனமான சித்திரவதைகளும் அதிகம்?
அதனால் எனக்கு இந்தக் காட்சி நெருடலாகத் தோன்றவில்லை:-)
மற்ற விஷயங்களில் அவ்வளவு கட்டுப்பாடாக இருப்பவர்கள், மதமென வரும் பொழுது இப்படி மாறி விடுகிறார்களே என்ற எண்ணத்தில்தான் நான் பார்த்தேன். அதனால் அது aberration ஆக தெரியவில்லை. In fact it stressed upon the dual standards that a lot of us have.
//
அப்பாம்மா பேரைக் கெடுக்காதீங்க, கொத்ஸ் :-))//
அவங்க சொல்லத்தான் சொன்னாங்க. நாம கேட்டாதானே.
:)
THANK YOU FOR YOUR PROMPT AND AGREEABLE REPLY!
I HAVE BEEN YOUR READER FOR QUITE SOMETIME AND THIS NEW DIMENSION IS ASTOUNDING!
CONGRATS!!
//மற்ற விஷயங்களில் அவ்வளவு கட்டுப்பாடாக இருப்பவர்கள், மதமென வரும் பொழுது இப்படி மாறி விடுகிறார்களே என்ற எண்ணத்தில்தான் நான் பார்த்தேன். அதனால் அது aberration ஆக தெரியவில்லை. In fact it stressed upon the dual standards that a lot of us have. //
அந்தப் பெற்றோர்கள் எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்பதைக் குறிக்கவே அந்தக் காட்சி வைக்கப்பட்டது. இதுதான் சரி, இப்படி வாழ்வதுதான் முறை என்ற ரிஜிடிடி(rigidity) அந்தக் குடும்பத்தில் உண்டு என்பதைத்தான் அந்தக் காட்சி வலியுறுத்துகிறது. 'இதுதான் சரி' என்கிற நிலையை எடுக்கிறபோது இன்னொரு கோணத்திலிருந்து பார்க்கிற பக்குவம் போய்விடுகிறது. அதனால்தான் ஆயிஷாவின் சிநேகத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
//THANK YOU FOR YOUR PROMPT AND AGREEABLE REPLY!//
Thank You, SK
//I HAVE BEEN YOUR READER FOR QUITE SOMETIME AND THIS NEW DIMENSION IS ASTOUNDING!//
Glad to see that people are reading my writings:-)
//Glad to see that people are reading my writings:-)//
என்ன நக்கலா? நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன். தற்போதய நிலவரத்தின்படி கடைசியா போட்ட 20 -22 பதிவுகளில் 11 பதிவுகளில் 30 மேல பின்னூட்டம். அதில 3 ஹாஃப் செஞ்சுரி, ஒரு செஞ்சுரி.
இதுல படிக்கறாங்கன்னு தெரிஞ்சவுடனே சந்தோஷமாமே. ஹூம். என்னத்த சொல்ல.
//very nice nila to see the film.theme expressed is strong. this theme will not be accepted by all//
Thanks Anonymous... you are right. If everybody accepts why do we have so much violence in the world today?
//என்ன நக்கலா? நானும் பாத்துகிட்டுதான் இருக்கேன். தற்போதய நிலவரத்தின்படி கடைசியா போட்ட 20 -22 பதிவுகளில் 11 பதிவுகளில் 30 மேல பின்னூட்டம். அதில 3 ஹாஃப் செஞ்சுரி, ஒரு செஞ்சுரி.
//
ஐயா... பின்னூட்டத் திலகரே.... பின்னூட்டம் நிறைய வாங்கினா நம்ம எழுத்துக்களை எல்லாரும் படிக்கறாங்கன்னு அர்த்தமில்லீங்கோ :-))))
(உங்க பதிவைப் பற்றிப் பேசலீங்கோ:-)))
அருமையான கருத்தான படம் நிலா,
தாங்கள் கூறியதுபோல் தலைப்பினை மாற்றிவிட்டேன், நன்றிகள் பல...தங்களின் மற்ற குறும்படங்கள் இருந்தாலும் சொல்லுங்கள் பார்க்கின்றேன், அஜீவன் திரைப்படவிழா எல்லாம் நடத்தினாரா? நன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல பழக்கம் இருந்தது அவருடன், கீதம்.நெட் என்ற இணைய ஃபோரம் மூலமாக...:)
ஸ்ரீஷிவ்...
நண்பர் சிவாவின் பரிந்துரையில் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
உங்களின் உழைப்புக்கும் முதல் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
மக்கள் மனதில் உள்ள குறைகளை நயம்பட ஆனால் தொழில்நுட்ப குறைகளுடன் எடுத்து சொல்கிறது, சொல்ல வந்த கருத்து மனதில் பதிகிறது. வாழ்க வளர்க - நாகூர் இஸ்மாயில்
ஸ்ரீஷிவ், மஞ்சூர் ராசா, இஸ்மாயில்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
Post a Comment
<< Home