*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2 ***
*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 2 ***
இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html
முதல் சுற்றுக்கான பதிவு இங்கே:
http://nilaraj.blogspot.com/2006/02/1_114102190745146458.html
இந்தியாவிலிருக்கிற போட்டியாளர்கள் தூக்கத்தைக் கெடுக்க ரெண்டாவது சுற்று இப்போ.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கற்பனை சூழலை கவனமாகப் படிக்கவும்:
இயக்குநர் ஷங்கர், எதையும் பிரம்மாண்டமா செய்றவராச்சே, அதனால சிவாஜி படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியை நாசா புதுசா கண்டு பிடிச்சிருக்கிற 'ஜூலா' கிரகத்தில எடுக்கணும்னு விரும்பறார். அந்தக் கிரகவாசிகளான ஜூலியன்ஸ் கிட்ட அனுமதி வாங்கணும். அதுக்காக விளம்பரம் தயாரிக்கிற பொறுப்பை என்கிட்ட கொடுத்திருக்கிறார். நான் உங்கள்கிட்ட கொடுத்திட்டேன்.
நீங்க செய்ய வேண்டியது:
ஜூலியன் தலைவர்களக் கவர்ற மாதிரி விளம்பரம் ஒண்ணு செய்யணும் - இது வெறும் சுலோகனா இருக்கலாம். கிராஃபிக்ஸ், வீடியோன்னு என்ன வேணுமின்னாலும் சேத்துக்கலாம். ஏன் ரஜினியையே பேசவச்சாலும் சரிதான். ஆனா நச்சுன்னு இருக்கணும்
விதிகள்:
1. ஒரு அணிக்கு ஒரு என்ட்ரிதான் அனுமதிக்கப்படும். அதனால அணி உறுப்பினர்கள் இணைந்து செயல்படவேண்டும்
2. விளம்பரங்களைப் பின்னூட்டமாகவோ அல்லது ஒரு பதிவாகப் போட்டுவிட்டு சுட்டியாகவோ இங்கு தரலாம்
3. சிறந்த விளம்பரத்துக்கு 25 மதிப்பெண்கள் சேரும்.
4 பார்வையாளர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களில் சிறந்த
விளம்பரத்துக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு.
சுற்று முடிவு: (இந்திய நேரம்) புதன் அதிகாலை 3.00 மணி
22 Comments:
ஜூலியன் கிரகத்துக்கு ரஜினி பேசிய விளம்பரம் அனுப்பப்படுகிறது
"கண்ணுகளா,,ஜூலியன் பொண்ணுகளா..
ஜூன் முடிஞ்சா தான் ஜூலை வரும்.
ஆனா இந்த சிவாஜி நினைச்சா இப்பவே உங்க கிரகத்துக்கு ஜூலை வரும்.
நாங்க எப்ப வருவோம்,எப்டி வருவோம்னு யாருக்கும் தெரியாது
ஆனா அங்க வர நீங்க அனுமதி குடுத்தா எப்படியோ வந்துடுவோம்.
அனுமதி குடுக்கலைன்னு வெச்சுக்குங்க...
கண்னா அதுக்கப்புறம் நான் என்ன செய்வேன்னு சொல்ல மாட்டேன்..செய்வேன்
ஏன்னா இந்த சிவாஜி சொல்றதைதான் செய்வான்,செய்யறதை தான் சொல்வான்..
சில சமயம் சொல்லாததையும் கூட செய்வான்.
லேட்டா அனுமதி குடுத்துட்டு
லேட்டஸ்டா அனுமதி குடுக்கறோம்னு நம்மகிட்டையே விளயாட்டு காட்டற கதை எல்லாம் வேணாம் கண்ணுகளா..
ஏன்னா இந்த சிவாஜி மலை,
அண்ணாமலை,
அண்னமலைக்கு மேல இருக்கற எரிமலை"
அடுத்ததாக டிராஜேந்தர் பேசுகிறார்,விளம்பரப்படத்தில்
"ஜூன் முடிஞ்சா ஜூலி
அனுமதி தராட்டி நீ காலி
முடிஞ்சது உன் ஜோலி
நீ ஒரு போலி
ரஜினி இருப்பது போயஸ்
அதனால் நீ சொல்லு ஓ யெஸ்
சொன்னா டான்ஸ் ஆட அங்கு வரும் மும்ஸ்
சொல்லலைனா எகிறிடும் உன் பல்ஸ்
ரஜினிக்கு பக்கத்துவிட்டுகாரங்க எங்க அம்மா
இருக்க மாட்டாங்க அவங்க சும்மா
அடிச்சா தாங்க மாட்டே நீ யெம்மா
சொல்லுறதை சொல்லிபுட்டேன் ஆமா
அனுமதி தரமறுத்தா நீ மந்தி
அடுத்து நீ நிக்கப்போற இடம் சந்தி
இதை நீ நன்றாக சிந்தி
ரஜினி போல் இனோரு ஸ்டார் என் மகன் சிம்பு
வேணாம் அவன் கிட்ட வம்பு
வாலைபிடிக்காதே,இருக்கவே இருக்கு தும்பு
தும்பை பிடிச்சா முட்டாது கொம்பு"
//விளம்பரங்களைப் பின்னூட்டமாகவோ அல்லது ஒரு பதிவாகப் போட்டுவிட்டு சுட்டியாகவோ இங்கு தரலாம்//
இப்படி ஒரு சான்ஸ் குடுத்தா விடுவோமா? வாங்க எங்க பக்கம்.
http://elavasam.blogspot.com/2006/02/2.html
விளம்பரம் எல்லாம் போட்டாச்சு. நடுவரா இருந்து தேர்வு செய்யப்போறது யாருன்னு சொல்லலாமில்ல. அய்யா பாத்துட்டு வர சொன்னாருன்னு சொல்ல ஆளு அனுப்புவோமில்ல. :)
செல்வனு, கொத்தனாரு,
இன்னாத்துக்குபா இத்தினி அவசரமா முட்சி கொண்டுட்டு வந்தினுக்கிறீங்கோ?
ஒயுங்கா டைம கவனிக்கிலியா?
கொத்து (இலவசக்கொத்தனார்னு இவ்வளவு பெரிசா எல்லாம் கூப்பிட முடியாது)
நாலு கிராமம், 10 பொற்கிழியோட கீழ உள்ள சுட்டில இருக்கற எல்லாருக்கும் ஆளு அனுப்புங்கோ. நிலாக்குழுதான் நடுவர் குழு!!!
http://www.nilacharal.com/about.html
நம்மளை தெரிஞ்சவங்க இப்போல்லாம், இ.கொ. அப்படின்னு கூப்பிடறாங்க. கொஞ்ச நாள் கழித்து என் பெயர் இகோ அப்படின்னு மாறினாலும் ஆச்சரியம் இல்லை. அதுக்காக என்னை பொடாவில் உள்ள எல்லாம் போடக்கூடாது. :)
அவசரம் இல்ல. இந்த படைப்பு இருக்கே, அது காதல் மாதிரி. உடனே சொல்லிடணும் இல்லைன்னா ஆறிடும். நமக்குத்தான் கற்பனை சும்மா ஊத்து மாதிரி கிளம்புதே. அதான். மத்தபடி உங்க கெடு நேரமெல்லாம் பாக்கலை. :)
நிலா, சுற்று இரண்டு முடிஞ்சுப் போச்சா, கொஞசம் டைம் கொடுத்தா கலந்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்
யப்பா சிறில் எங்கேய்யா ஆளைக் காணும் அத்துவான காட்டிலே தனியாப் பூப்பறிக்க விட்டுட்டு எஸ் ஆயிட்டீங்க....
தேவ்,
நேரம் இருக்கே... சுற்று முடிவு நேரம் பாருங்க
அவசர அவசரமா ஒரு பதிவு தயார் செஞ்சிருக்கேன். இக்கடச் சூடுங்க.
The Bossஉம் ஜூலியர்களும்
நிலா,
பார்ட்னர் வசனம் அனுப்பிச்சிட்டார்; நான் படம் அனுப்பலாமா?
இகொ, இந்தப் பெயரை விட நான் வச்ச பேருதான் (கொத்ஸ்)எனக்குப் பிடிக்குது...உங்களுக்கு...?
தருமி,
ஒரு என்ட்ரிதான் அனுமதின்னு சொன்னேனில்லை? எதுக்கு இவ்வளவு அவசரமா பதிவைப் போட்டார்?
ஒரு வழி இருக்கு. போட்ட பதிவை(பின்னூட்டத்தை) கெடுவுக்குள்ள அழிச்சிட்டு, இன்னொரு பதிவு படத்தோட போடுங்க.
கொத்ஸ்தான் நல்லாருக்கு. மாத்திடலாமா?
//அவசரம் இல்ல. இந்த படைப்பு இருக்கே, அது காதல் மாதிரி. உடனே சொல்லிடணும் இல்லைன்னா ஆறிடும். நமக்குத்தான் கற்பனை சும்மா ஊத்து மாதிரி கிளம்புதே.
//
:-))) கொத்ஸ் பண்ற லொள்ளு தாங்க முடியலைப்பா. வீட்ல எப்படிதான் சமாளிக்கறாங்களோ?
கைப்பு,
பின்றீங்கப்பு...
போற போக்கைப் பார்த்தா உங்களுக்குன்னு ஒரு போட்டி வைக்காம விடமாட்டீங்க போலுக்கில்ல:-)
நிலா
சுட்டி இங்கே
http://madhumithaasblog.blogspot.com/
நிலா சுட்டி இது
http://madhumithaasblog.blogspot.com/2006/02/blog-post.html
இல்லைன்னா அடுத்த பதிவு போட்டா url மாறிடும்
மதுமிதா,
வாங்க... வாங்க... உங்க உற்சாகம் அப்படியே என்னை தொத்திக்குது.
தாமரை அணியின் விளம்பரம்....
எங்காளு சிறில் அலுவலகத்தில் சிக்கி சீட்டி அடிக்கிறார்ன்னு நினைக்கிறேன்...
அய்யா சிறில் .... வேற வழி இல்லாமல் இந்தா இந்தச் சுத்துல்லயும் தனியாவே பூவைப் பறிக்கறேனுங்கோ
அஞ்சாவது சுத்துக்கு நீங்க தான் உங்க யாகூ மெயில் பார்த்து பதில் சொல்லி நம்ம மானத்தைக் கப்பல் டிக்கெட் வாங்காமல் பார்த்துக்கணும்....
இந்தாங்க சுட்டி
http://chennaicutchery.blogspot.com/2006/02/2_28.html
If the ad lines are not clear refer this
PIC 1
TAKE A WALK WITH THE BOSS THROUGH THE UNIVERSE
ROCK PLANET JULA WITH THE BAADSHA OF HUMAN CINEMA
FIRST TIME A HUMAN CINEMA IN THE THEATRES OF PLANET JULA DONT MISS IT
PROMOTED BY PLANET JULA TOURISM BOARD AND AVM PRODUCTIONS EARTH
என் பார்ட்னர் தவறிப் போய் கொஞ்சம் படங்களை விட்டுட்டு பாட்டு மட்டும் போட்டுட்டார். அந்த படங்களை இங்கே வந்து பாத்துக்கங்களேன் எல்லோரும்...முக்கியமா நிலாச்சாரல் ஆட்கள் !! :-( & :-)
சரி மக்களே!
விளம்பரகள் எல்லாம் வந்தாச்சு. பரிசீலனைல இருக்கு.
இது மிக முக்கியமான சுற்று. ஏன்னா ஏதாவது ஒரு அணி மட்டுமே 25 மதிப்பெண்கள் பெறும்.
நாளை இந்திய நேரம் இரவு 8 மணி போல முடிவு சொல்றேன்.
டென்ஷனில்லாம இருங்க:-)
இந்த சுற்றும் கொஞ்சம் டல்லான சுற்று தான் எங்களுக்கு. கல்லூரி நாட்களில் இருந்து இந்த மாதிரி விஷயங்களில் நான் கொஞ்சம் வீக். கொத்தனார் தான் யோசித்து யோசித்து அந்த பாட்டு எழுதினார். அது சரியில்லைன்னு சொல்லி மொத்தமா எங்க அணியை க்ளோஸ் செய்துவிட்டீர்கள். எப்படியோ அண்ணன் ஹரிஹரன்ஸும் நண்பர் கௌசிகனும் தானே நன்றாய் செய்து 25 புள்ளிகளைத் தள்ளிச் சென்றனர். தாமரை அணியினரும் நன்றாய் செய்திருந்தனர்.
Post a Comment
<< Home