'ஹையா... நான் ஸ்டார் ஆயிட்டேன்'
'ஹையா... நான் ஸ்டார் ஆயிட்டேன்' என்றோ 'வாழ்வினிலே ஒரு திரு நாள்' என்றோ இந்த நட்சத்திர வாரத்தை எனக்குக் கொண்டாடத் தோன்றவில்லை. (அப்படிக் கொண்டாடிய நட்சத்திரங்களுக்கு எழுத்து விரல் நுனியில் இருக்கிறது என்றுதான் அர்த்தம்).
படைப்பாளிகளை மேடையில் அமர வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஒரு நல்ல ஏற்பாடுதான். இத்தகைய அங்கீகாரம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும்தான். ஆனால் எனக்கு வெளிச்சத்தின் நடுவில் முள்கிரீடத்தோடு அமர்ந்திருப்பதாய்ப் படுகிறது.
எழுத்தாளர்களில் இருவகை உண்டு - எழுதுபவர்கள்; எழுதப்படுபவர்கள். எழுதுபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதைக் குறித்து வேண்டுமானாலும் எழுதமுடியும் - பத்திரிகையாளர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. எழுத்து அவர்களின் கட்டளைக்கு அணிபடியும். பெரும்பாலும் இவர்கள் மூளையை பயன்படுத்தி எழுதுபவர்கள்.
அடுத்த வகையினருக்கு நினைத்த மாத்திரத்தில் எழுத முடியாது. எழுத்து அவர்களை எழுதும்; அவர்கள் மூலமாய் வெளிப்படும். எப்போது, எப்படி என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. எழுத்துதான் அங்கே முதலாளி; எழுத்தாளனல்ல. இவர்களின் எழுத்து பெரும்பாலும் இதயத்திலிருந்து புறப்படும். நிலாச்சாரலின் வழியாய் இந்த இரு வகை எழுத்தாளர்களின் பரிச்சயமும் எனக்குண்டு. அதனால்தான் இவ்வளவு நிச்சயமாக எனக்குக் கூறமுடிகிறது.
நான் இந்த இருவகைகளுக்கும் நடுவில் வருவேன் என நினைக்கிறேன். இதயத்தை ஏதேனும் ஸ்பரிசிக்கும்போது எனக்குள்ளிருந்து படைப்புகள் பீறி எழும்; பரபரவென்று வார்த்தைகள் குதித்தோடும்; எழுத முடியாத நிலையிலிருந்தால் கூட மனச்சுவரில் தானாகவே படைப்புகள் எழுதிக்கொள்ளும். அப்படியான சமயங்களில் எனக்கு ஆன்ம திருப்தி தருகிற சிறந்த படைப்புகள் பிறந்திருக்கின்றன. சில சமயம் எழுத ஆவலாய் இருக்கும். ஆனால் ஒரு கமா, புள்ளிகூட வெளிவராமல் எல்லாமும் எங்கோ சுருண்டு கொண்டதாய் ஒரு திணறலிருக்கும்.
ஆனால் எழுதியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் வருகிறபோது முனகிக்கொண்டாகினும் எழுத்து வெளிவந்துவிடுகிறது :-) பிரச்சனை என்னவென்றால் அப்படி ஒரு நிலை வருகிறபோது எழுத்தும் மனமும் ஒரு மாதிரியான விடுதலையைத் தேடித் தவிக்கும். இந்த சூழலில்தான் இப்போது நானிருக்கிறேன். அதனால்தான் வெளிச்சம் கிடைக்கிற மகிழ்ச்சி இருந்தாலும் முள்கிரீடம் குத்துகிற நெருடலும் இருக்கிறது.
வெகு தெளிவாகச் சொல்லிவிடுகிறேன் - நான் இலக்கியவாதியல்ல; அறிவு ஜீவியுமல்ல. கேள்விகள் அதிகம் கேட்கும் ஒரு சாமான்ய மனுஷி. என் படைப்புகளால் சமூகப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் எனக்கு பேராசை கிடையாது; ஆனால் கண்டிப்பாக எந்தவிதத்திலும் சிதைவையோ சீரழிவையோ உருவாக்கக் கூடாது என்பதில் குறிப்பாய் இருக்கிறேன். நான் செய்யும் படைப்புக்களில் நான் கற்றுக்கொண்ட பாடங்களும் நானறிந்த வாழ்க்கை முறை குறித்த பதிவும் சேர்த்துத் தர முயற்சி செய்வேன் - அறிவுரையாக இல்லாமல் வெறும் பகிர்தலாய்.
'எல்லாம் சரி, இந்த வாரம் என்ன எதிர்பார்க்கலாம்?' என்ற கேள்வி புரிகிறது. நான் 'Jack of all trades. Master of none'. Jack ஆக இருப்பதில் ஒரு வசதி உண்டு. பல்வேறு தரப்பட்ட களங்களைத் தொடலாம். இயன்றவரை அகலமாக எழுதப் பார்க்கிறேன்.
எதையும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற என் அதீத ஆர்வத்தால் சில பரீட்சாத்த முயற்சிகள் செய்யப் போகிறேன். தட்டினாலும் குட்டினாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் .
ரசிகப் பெருமக்களாகிய நீங்கள் (ஆதான் நம்ம ஸ்டார் ஆயாச்சில்ல:-))) தரப்போகும் ஆதரவுக்கு அட்வான்ஸ் நன்றிகள் :-)))
52 Comments:
நட்சத்திர வாழ்த்துக்கள்!
அருமையான வாரமாக இருக்குமென நம்புகிறேன்.கலக்குங்கள்!
நன்றி ஜோ
முகப்பிலேயே இந்தப் பதைவைக் காணோமே? எப்படி வந்தீங்க இங்கே?
ஏன்னு தெரியலை, இந்தப் பதிவு தமிழ் மணத்தின் முகப்பில வரலை :-(
வாழ்த்துகள் நிலா
நேற்று இருந்த வேலைப்பளு அப்ப இது தானா
சரி சரி
உங்க 'குல தெய்வம்' கல்கியில் வந்த சிறுகதை நல்லாயிருக்கு நிலா.
அசத்துங்க உங்க காட்டுல மழை தான்
நட்சத்திர வாரம்
கல்கி சிறுகதை
நிலாச்சாரல் 250
திருவிழா தான் போங்க
அகலமாவும்,ஆழமாயும் எழுதுங்க மம்சாபுர மஹாராணி
அன்பு நிலா
மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்கியில் உங்களின் 'குல தெய்வம்' சிறுகதை வந்திருக்கிறது.
கிராமத்து மணம் கமழ துக்கம்,பழி உணர்ச்சி,வெறி,ஏமாற்றம்,கருணை,
நெகிழ்வுன்னு உணர்ச்சிபூர்வமா கலக்கியிருக்கீங்க.
என்ன சினிமாக்கு போற எண்ணம் இருக்கா?
போனீங்கன்னா மறந்துடாதீங்கம்மா.
சீனியம்மாள் நெஞ்சு பஞ்சு கணக்கா இலேசாகிறப்ப, நம்ம மனுசுல பாரம் கூடுது,லேசாகுது.
அந்தம்மா கால்ல மூணுகுழந்தைங்களோட வந்து விழற காட்சியில ஓடற மன உணர்வுமாற்றம் அழுத்தமா சொல்லியிருக்கிறீங்க.
என்ன வித்தையெல்லாம் செய்றீங்க நிலா.
சீக்கிரமா சிறுகதை தொகுப்பு வர வாழ்த்துகள்.
//நட்சத்திர வாரம்
கல்கி சிறுகதை
நிலாச்சாரல் 250
//
ஆமா, மது
எல்லாம் மொத்தமா வந்திருச்சு
//அகலமாவும்,ஆழமாயும் எழுதுங்க //
அப்படி எழுதத் தெரிஞ்சா எங்கேயோ போயிருப்போம்ல:-)))
//மம்சாபுர மஹாராணி//
அப்டிப் போடுங்க. ஊர்க்காரங்க கேட்டா சண்டைக்கு வந்திரப்போறாங்க. ஜனநாயாக ஊரு :-)))
மனஸ்பரிசத்தினால் நிமிஷத்தில் எழுதிவிடுவதே பெரும் படைப்புகளாகும், இளையாராஜா ஒருமுறை கூறியது போல படைப்பாளிக்கு, படைப்புக்கள், திட்டமிட்டு, வழிமுறையில் கொண்டு வருவதல்ல, இல்லையெனில்,அது தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வணிகபொருளாகிவிடுமென்று. ஆக நீங்கள் கூறிய கூற்று முற்றிலும் உண்மை. நிலாக்களின் சஞ்சாரத்திலே ஆழ்ந்து படைப்புகளை விழித்தெழச் செய்யுங்கள் இந்த பொன்னான நட்சத்திர வாரத்திலே, என் வாழ்த்துக்கள்!
வெளிகண்ட நாதர்,
//மனஸ்பரிசத்தினால் நிமிஷத்தில் எழுதிவிடுவதே பெரும் படைப்புகளாகும், இளையாராஜா ஒருமுறை கூறியது போல படைப்பாளிக்கு, படைப்புக்கள், திட்டமிட்டு, வழிமுறையில் கொண்டு வருவதல்ல, இல்லையெனில்,அது தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வணிகபொருளாகிவிடுமென்று.//
ஓ, இளையராஜா இப்படிச் சொல்லி இருக்கிறாரா?
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
This comment has been removed by a blog administrator.
\\எழுத முடியாத நிலையிலிருந்தால் கூட மனச்சுவரில் தானாகவே படைப்புகள் எழுதிக்கொள்ளும். அப்படியான சமயங்களில் எனக்கு ஆன்ம திருப்தி தருகிற சிறந்த படைப்புகள் பிறந்திருக்கின்றன. சில சமயம் எழுத ஆவலாய் இருக்கும். ஆனால் ஒரு கமா, புள்ளிகூட வெளிவராமல் எல்லாமும் எங்கோ சுருண்டு கொண்டதாய் ஒரு திணறலிருக்கும்.
\\
அந்த உணர்வை அனுபவித்திருக்கிறேன்...நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்.உங்கள் வித்தியாசமான முயற்சி திருவினையாகட்டும்.
மது,
குலதெய்வத்துக்குக் கிடைச்ச பெரிய பாராட்டா இதை நான் நினைக்கிறேன். ஒரு பெரிய எழுத்தாளர் நீங்க, நல்லா ஆழ்ந்து விமரிச்சிருக்கீங்க நன்றி.
//என்ன சினிமாக்கு போற எண்ணம் இருக்கா? //
அடுத்து ஃபிலிம் காட்டப்போறேன். பாருங்க...:-)))
தமிழ் சினிமாவில கால்பதிக்கிறதுக்கு வேற மாதிரி திறமையெல்லாம் வேணும். நமக்கு அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது :-)
சினேகிதி,
//அந்த உணர்வை அனுபவித்திருக்கிறேன்...//
அப்படியா? நீங்களும் நம்ம வகைதான் :-))
வாழ்த்துக்களுக்கு நன்றி
ஆமாம், இளையராஜா பேட்டியை 'பாட்டொன்று கேட்டேன்'ன்னு BBC தமிழ் பதிவில பார்க்கலாம். சுட்டி இதோ! 'பாட்டொன்று கேட்டேன்'
வாழ்த்துக்கள் நிலா..
அசத்துங்கள்..
தமிழிணைய பெண்புலி நிலாவிற்கு உற்சாகமான வரவேற்பு! கலக்குங்கள்.
Wish u all the best...looking forward to thi week:)
நிலாவை நட்சத்திரம் என்கிறார்களா?
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நிலா...நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள். இந்த வாரம் இனிய வாரமாக அமைந்து வலைப்பூவில் உங்களில் புகழ் மேலும் பரவ வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நிலா.
வாழ்த்துகள் நிலா
வலை வானுலகில்
நிலவாக ஒளிர்ந்தாலும்
தமிழ்மண வின்னுலகில்
நட்சத்திரமாக ஒளிர்வது
தனிச்சிறப்பன்றோ?
நிலா, நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
வெளிகண்ட நாதர்,
சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்
நிலவின் வெளிச்சம்
நில உலகும் அறியும்
எழுதுபவரும் இங்கே !
எழுதப்படுவரும் இங்கே!
அமுத சுரபியே
கவிழ்த்த பாத்திரமென்றால்
கவிழ்த்த பாத்திரங்களாம்
நாங்கள்
கடைவீதி வருவதெப்போ?
யானைக்கு தன் பலம் தெரியாது
இணைத்தில் தனிதளம் வைத்து
இனையில்லா தமிழுக்கு
கணையாழியாய்
நிலாச்சாரல்!
நட்சத்திர வாரத்தில்
அட்சர சுத்ததில்
அழகாய் இங்கே தமிழ் விளையாட்டு
தவமாய் தினம் நாங்கள்
வருக நட்சத்திரமே !
தருக செந்தமிழை
வாழ்த்துகள் சகோதரி.
போனவாரம் தனி மடல் வரும்போதே டவுட்டானேன்யா :-)). சரியா தான் இருக்குது :-)). வாழ்த்துக்கள் நிலா..வெளாட்டோட கொஞ்சம் கதை,கட்டுரைன்னு சொல்லுங்க். எக்கச்சக்க கதை எழுதி இருக்கீங்க போல :-). கலக்குங்க
அன்புடன்,
சிவா
நிலா,
இதுனாலதான் நம்ம 4,4 விளையாட்டுக்கெல்லாம் டையம் கேட்டீங்களா? நட்சத்திரத்தையே இழுத்துவிட்ட பெருமையா நமக்க்கு? சபாஷ்.
நல்லா செய்வீங்க தெரியும். வாழ்த்துக்கள்.
நிலவை நட்சத்திரமாக்கும் போது(நன்றி:செல்வன்) கொஞ்சம் சஞ்சலமாகத்தான் இருக்கும். `நிலாச்சாரல்’ ;நிறைய எழுத்து வேள்வி எல்லாம் சேர்ந்து ஒரு `வயசான’ ஆளை உருவகப் படுத்தியிருந்தேன். `இளைய நிலா’வின் வதனம் போட்டோவில் எனக்கொரு குட்டு வைத்தது!! வாழ்த்துக்கள் நிலா!
உங்க `பூப்பறிக்க’ விளையாட்டு பற்றிய விவரங்கள் ஓப்பன் ஆக மாட்டேங்குது. நாளை முயல்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துகள் நிலா. இவ்வாரம் அருமையான வாரமாக அமையும் என்று நம்புகிறேன்.
-சுந்தர்.
ஏற்கனவே நட்சத்திரம் தான் - நிலாச்சாரல் மூலம்.
:))
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ஒரு நிலா நட்சத்திரமாகிறது.
நிலவுக்கே மகிழ்ச்சி எனில் நமக்கும் குறைவேது? மனங்கனிந்த வாழ்த்துக்கள் நிலா.
நன்றி ஜோசப் அவர்களே!
//தமிழிணைய பெண்புலி நிலாவிற்கு //
மூர்த்தி,
என்னதிது பட்டமெல்லாம் பலமா இருக்கு :-)))
என்னமோ போங்க, இதெல்லாம் வஞ்சப் புகழ்ச்சியான்னு தெரியலை:-))
நன்றி, தேவ்
//நிலாவை நட்சத்திரம் என்கிறார்களா?
//
செல்வன்
நம்ம என்னன்னு நமக்கே புரியமாட்டேங்குது இன்னும் :-)
//வலைப்பூவில் உங்களில் புகழ் மேலும் பரவ வாழ்த்துகள்//
ராகவன்,
என்ன இருந்தாலும் உங்கள் அளவு புகழடைய முடியுமா சொல்லுங்க:-)))
கோ.ராகவன்னு சொன்னா நேத்து பதிவு ஆரம்பிச்ச பதிவருக்குக் கூடத்தெரியுமே:-)
ஆனாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி
மோகன் தாஸ், சந்திரவதனா
வாழ்த்துக்களுக்கு நன்றி
//வலை வானுலகில்
நிலவாக ஒளிர்ந்தாலும்
தமிழ்மண வின்னுலகில்
நட்சத்திரமாக ஒளிர்வது
தனிச்சிறப்பன்றோ?//
Pot"tea" kadai,
கலக்கிறீங்க கவிதை எல்லாம்
அன்பான வாழ்த்துக்கு நன்றி
soft tester
thanks for the wishes
//யானைக்கு தன் பலம் தெரியாது
இணைத்தில் தனிதளம் வைத்து
இனையில்லா தமிழுக்கு
கணையாழியாய்
நிலாச்சாரல்//
செயகுமார்,
நிலாச்சாரலை கணையாழிக்கு ஒப்பிட்டுச் சொல்லி பெருமைப் படுத்தியதற்கு நன்றி.
We have a long way to go :-)
நன்றி, பரஞ்சோதி
உங்களுக்குப் பிடித்தமான பதிவு ஒண்ணு வருது
சிவா,
வெளாட்டோட சீரியஸான பதிவும் போடறேன். வெளையாட்டுனால உங்களுக்கு நன்றி சொல்லவே இவ்வளவு நேரமாகிப் போச்சு
முருகபூபதி, உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி
பச்சோந்தி,
நிலாச்சாரல் மூலம் நிலாதான் :-)
தமிழ்மணம் மூலம்தான் நட்சத்திரம்
தாணு,
இது என்படம்னு நெனச்சி ஏமாந்துட்டீங்களா? :-)))
சும்மா சொன்னேன். நாந்தான் அது.
நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் நிலா. எதிர்பார்த்ததைப் போலவே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நட்சத்திர வாரம். வாரம் முடிவதற்குள் உங்கள் இந்த வாரப் பதிவை எல்லாம் படித்துவிடுவேன் என்று நம்புகிறேன். :-)
சுந்தர்
வாழ்த்தினதோட காணாமப் போயிட்டீங்களே! அப்பப்ப நம்ம உளறலையும் படிச்சுப் பாருங்க
நன்றி, குமரன்
நானும் ஒரு வழியாக எல்லாருக்கும் பதில் சொல்லி முடித்துவிட்டேன்
எல்லாம் டோட்டல் பண்ணி tally பண்ணிட்டீங்களா? இல்லை ஹெல்ப் வேணுமா? :)
//எல்லாம் டோட்டல் பண்ணி tally பண்ணிட்டீங்களா? இல்லை ஹெல்ப் வேணுமா? :)//
கொத்ஸ், கொஞ்சம் உதவி பண்ணினீங்கண்ணா அரைசதம் போடலாம் :-))))
//இதுனாலதான் நம்ம 4,4 விளையாட்டுக்கெல்லாம் டையம் கேட்டீங்களா? நட்சத்திரத்தையே இழுத்துவிட்ட பெருமையா நமக்க்கு? சபாஷ். //
கொத்ஸ், இப்பதான் எல்லா பதிவையும் பார்த்து பின்னுட்டம் போட்டுட்டு வர்றேன். உங்களுக்கு பதில் சொல்லாமப் போயிட்டேன் போல்ருக்கு. ஸாரி.
உங்களுக்கு பெருமைக்கு என்னய்யா குறைச்சல்... எங்கேயோ போய்க்கிட்ருக்கீங்க:-))
நான் ஒண்ணும் செய்யாமலேயே 50 அடிச்சுட்டீங்களே! 100 வேணுமா? :)
கொத்ஸ்,
நமக்கெல்லாம் Quantity -ஐ விட QUALITYதானப்பா முக்கியம் (ஊமைக்குத்து:-)))
//கொத்ஸ், கொஞ்சம் உதவி பண்ணினீங்கண்ணா அரைசதம் போடலாம் :-))))// - இது நீங்க
//நான் ஒண்ணும் செய்யாமலேயே 50 அடிச்சுட்டீங்களே! 100 வேணுமா? :)// - இது நான்
//நமக்கெல்லாம் Quantity -ஐ விட QUALITYதானப்பா முக்கியம் (ஊமைக்குத்து:-)))// - மறுபடியும் நீங்க
யாரு ஊமை? யாருக்கு குத்து? கொஞ்சம் விளக்கமா சொல்லறீங்களா?
Post a Comment
<< Home