.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, February 16, 2006

இராக் போர்க்கைதிகளுக்குக் கொடூரம் -வெட்கக்கேடு

Your Ad Here

இராக் கைதிகளின் சித்திரவதைகள் குறித்த படங்களைத் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்க்க நேரிட்டபோது மனம் மிகவும் விசனத்துக்குள்ளானது. போர் என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அதிலும் இத்தைகைய சித்ரவதைகளைச் சேர்த்துக் கொள்வது மிருகச் செயல் அல்லவா? எப்படி ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இப்படி நடத்த முடியும் என்பது எனக்குப் புரியாத புதிராகத்தானிருக்கிறது. ராணுவப் பயிற்சியில் மனித நேயத்தைக் கொன்று போடுகிறார்களோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

கடந்த ஏப்ரலில் இம்மாதிரிக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது கூட தவறு எப்போதாவது நடப்பது சகஜம் என மக்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் அதுவே ஒரு மரபாக இங்கு கடைப்பிடிக்கப்படுகிறதோ என்று எண்ணும் வண்ணம் மேலும் மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.இது வெட்கக்கேடான விஷயம் மட்டுமல்ல; மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

'சதாம் உசேன் சித்திரவதை செய்தார்; கும்பல் கும்பலாக வெட்டிக் குவித்தார்' என்று குற்றம் சாட்டுவதற்கு இப்போது யாருக்கு இங்கு தகுதி இருக்கிறது? சதாமுக்கும் இத்தகைய கொடுஞ்செயல்களைச் செய்த ராணுவத்தினருக்கும் கடுகளவும் வேறுபாடு இல்லை.

இத்தகைய படங்களை வெளியிட்டது மேலும் பிரச்சனைகளை வளர்க்கும் என்று அமெரிக்கத் தரப்பில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. உண்மை எதுவாயிருந்தாலும் அதனை அறிந்துகொள்ளும் உரிமை உலகமக்களுக்கு உண்டு.

ஆதாரத்தின் அடிப்படையில் தவறு செய்தவர்களாக நிரூபிக்கப் படும் ராணுவத்தினர் மேல் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. இந்தப் பிரச்சனையின் ஆணி வேரைக் கண்டு அதை நீக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். இனி எக்காரணம் கொண்டும் இத்தகைய வன்செயல்கள் நடக்கா வண்ணம் தடுத்தல் அனைத்து அரசுகளின் பொறுப்பு; கடமை.

சமாதானமும் மனித நேயமும் நிலவும் உலகைப் படைக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை இங்கு அனைவரும் உணர்தல் மிக அவசியம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

At February 16, 2006 9:21 PM, Blogger Unknown said...

Its all part and parcel of politics. The power hungry individuals will never stop to drink the blood of innocents.
In my view theres no solution to such crimes. it will only continue.. as an act of revenge the affected nation will look to get its face stained with the blood of the affecting nation as and when they get time...
its been happening for centuries in every form of human existence.
Nila...
Vandaargal Vendraargal by Madan padicheengalaa? u will get a detailed note of such tortures which happened in our very own India.
Then we didnt have film technology to record such atrocities now we do thats the difference...

 
At February 17, 2006 6:18 AM, Blogger நிலா said...

தேவ்,
ரொம்ப நாளா ஆளையே காணும்னு நெனச்சுக்கிட்டிருந்தேன் :-)

வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாகரீகமுள்ள மனிதர்கள் என்று நம்மை எப்படி அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்? தொட்டதுக்கெல்லாம் மனித உரிமை மீறல் என்று கொடிபிடிக்கும் இக்காலத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனங்கள் இன்னும் தொடர்வதுதான் வேடிக்கை.

இது இப்படித்தான் என்று விட்டுவிட முடியாது. பிரச்சனைகளை சரியான கோணத்தில் அணுகினால் கண்டிப்பாகத் தீர்வு காண முடியும்.

 
At February 17, 2006 7:01 AM, Blogger Unknown said...

Nila,

I never missed your posts...I have a link in my blog to ur posts... It was just that I could not relate myself to a couple of ur past few posts.. The actor hunting posts...
U are right in a way that we have come a very long way in our existence.
I am happy if a solution to such activities are found. I was just trying to get your focus on to the roots of this problem. its just not Iraq or US... its everywhere.
Its the basic human nature that needs to be attended to and transformed...
I strongly recommend u read madans Vandaargal Vendraargal...
It all starts in childhood when a winning kid makes fun of a losing kid...
i guess there the necessity to teach the kids about respecting the losers should be taught... I am sure it will be a beginning what u say?
Happy week end

 
At February 17, 2006 7:26 AM, Blogger நிலா said...

தேவ்,

நீங்கள் சொன்னபடி இந்தப் பிரச்சனை உலகளாவியது என்பது மறுப்பதற்கில்லை. இங்கே வெளி வந்திருக்கிறது. அவ்வளவே.

என்னைப் பொறுத்தவரை குழந்தைகளிடம் அத்தனை வன்முறை இல்லை. சமீபத்தில் பார்த்த ஒரு விவரணப் படத்தில் ஒரு தம்பதியரின் புகைப்படத்தைக் கொடுத்து குழந்தைகளைக் கிழிக்கச் சொன்னார்கள். 90% குழந்தைகள் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டனர். மீதி குழந்தைகளும் மிகவும் வற்புறுத்தலின் பேரில்தான் கிழித்தனர்.

நீங்களும் நானும் நம் எதிரி எத்தனை கொடுமையானவனாக இருந்தாலும் இப்படி சித்திரவதை செய்வோமா? மாட்டோம்தானே? எனக்கென்னவோ ராணுவப் பயிற்சிகளில்தான் பிரச்சனை இருக்கிறது என்று தோன்றுகிறது. மனதில் உரமேற்றுவதாகக் கருதி மனிதத்தைக் கொன்ன்றுவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஒரு விதத்தில் பார்த்தால் ஒரு வேளை போர்ச் சூழல் அவர்களை இப்படி மாற்றிவிடுகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. சுற்றிலும் மரணம் இருக்கையில் மனதுக்குள் ஒரு மிருகத்தனம் தானாகப் புகுந்து விடுமோ?

எனக்கு உண்மையாகவே இதைக் குறித்து ராணுவ அதிகாரிகளிடமும் மனநல மருத்துவர்களிடமும் பேசி ஆராய்ந்து ஆழமான கட்டுரை எழுதவேண்டுமென்ற விருப்பமிருக்கிறது. லாட்டரியில் ஒரு மில்லியன் விழுந்தால் வேலையை விட்டுவிட்டு நம் விருப்பப்படி செய்யலாம்:-)))

உங்களுடைய பின்னூட்டங்கள் என்னை ஆழ்ந்து சிந்தக்க வைக்கின்றன. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. வார இறுதியை நீங்களும் மகிழ்ச்சியாகக் கழியுங்கள், தேவ்.

பி.கு: மதனின் புத்தகத்தைத் தேடிப்பார்க்கிறேன்

 
At February 20, 2006 8:04 AM, Blogger சிவா said...

சாத்தான் வேதம் ஓதுகிறது..என்ன பண்ணுறது :-(. இவர்களுக்கு கிடைத்த ஒன்று 9/11...இவர்களுக்கு இந்த நூற்றாண்டிலேயே நிகழ்ந்த ஒரே கொடுமை இது தான். இது ஒன்று மட்டும் போதும். இன்னும் 1000 ஆண்டுகளுக்கு அட்டூழியம் செய்து கொண்டு...அப்பாவி மக்களை கொன்று கொண்டிருப்பார்கள். :-(

 
At February 21, 2006 2:00 AM, Blogger நிலா said...

சிவா, என்னையதான் சாத்தான்னு சொல்றீங்களோன்னு நினைச்சேன்:-))

 
At February 21, 2006 6:51 AM, Blogger சிவா said...

நிலா! என்னங்க இது..இப்படி எல்லாம் நெனைக்கிறீங்க :-)))..நான் இவனுங்க டெரரிசம்..டெரரிசம்..காட் ப்ளஸ் ஓன்லி அமெரிக்கா..அப்படின்னு கத்துறானுங்கல்லா..அத சொன்னேன் :-)

 
At February 28, 2006 7:19 PM, Blogger Sam said...

ஸ்டான்போர்ட் சிறைச்சாலை ஆய்வைக் கொஞ்சம் பாருங்கள்.
சாம்
http://en.wikipedia.org/wiki/Stanford_prison_experiment
Hi
Belated Congradulations! Your
star week is very interseting!
regarding the experiment, I think deep down every individual is capable of cruelty. This brought me back memories of ragging during college days. People who suffered during the first year had no problem troubling the juniors. There is something intrinsic in human psyche that focusses on aggression, when there is an opportunity.Sometimes
situations bring the worst in people. Rwanda is another example in our times.
Sam

 
At March 01, 2006 9:10 PM, Blogger சந்திப்பு said...

நிலா ஈராக் சித்திரவதையின் நோக்கமே! அமெரிக்காவிடம் யாராவது வாலாட்டினால் உங்களுக்கும் இதே கதிதான் என்பதை உணர்த்துவதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்கு. உங்கள் பார்வையில் அது சித்திரவதையாக இருக்கலாம். ஏகாதிபத்தியத்தின் பார்வையில் அது நியாயமாக வாதாடப்படும். எனவே ஏகாதிபத்தியத்தை அழிக்காமல், ஒழிக்காமல் சித்திரவதைகளுக்கு முடிவு கட்ட முடியாது. எனவே உங்களது இலக்கு ஏகாதிபத்தியத்தை முற்றிலும் ஒழிப்பதாக அமையட்டும்.

 
At March 02, 2006 1:47 AM, Blogger Amar said...

//ஏகாதிபத்தியத்தின் பார்வையில் அது நியாயமாக வாதாடப்படும்/

சந்திப்பு அவர்களே,

இந்த கொடுமைகளை செய்த வீரர்கள் தண்டிக்கபட்டுள்ளனர்.

 

Post a Comment

<< Home