இந்த வார நட்சத்திரம்
தமிழ்மணத்தின் இந்தவார நட்சத்திரமான 'ஆன்மிகத் தென்றல்' (இன்னொரு பட்டம்) குமரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளும் இதே வேளை நிலாச்சாரலின் மூலம் இணைய உலகில் நட்சத்திரமாக (??!!) அறிமுகமாகியிருக்கும் மிஸ்டர் துளசிக்கு (அதாவது திரு.கோபால் அவர்களுக்கு) பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மட்டுமா? நம்ம தானைத் தலைவி துளசியும் ஒளிப்பதிவாளராகிட்டாங்கல்ல. விபரத்துக்கு கீழே உள்ள இணைப்பைத் தட்டவும்:
http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_244a.asp
கதாநாயகருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நிலாக்குழுவின் சார்பில் நன்றிகள்
நடிகர் நடிகர் தேவை என்று இரண்டு வாரம் முன் கேட்டிருந்தேன் அல்லவா? பல நண்பர்கள் அன்புடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. சில நண்பர்களுக்கு ஸ்டோரி போர்ட் கொடுத்து அதற்கேற்றவாறு படமும் எடுத்து அனுப்பிவிட்டார்கள். படங்களில் அவர்கள் காட்டியிருக்கிற பாவமும் பாடி லேங்குவேஜும் என்னை அசரடித்துவிட்டன. கற்பனையை நாயகர்களை/நாயகிகளைப் படமாக உணர்ச்சிகளுடன் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. (எனக்கே இப்படின்னா, சினிமா எடுக்கறவங்களுக்கு எப்படி இருக்கும்?)
படம் எடுத்து அனுப்பிய நண்பர்களின் ஈடுபாடும் சிரத்தையும் ஒவ்வொரு படத்திலும் கண்கூடாகத் தெரிகிறது. எந்த வித எதிர்பார்ப்புமின்றி தங்கள் நேரத்தை கலைக்காக செலவிடும் இத்தகைய நண்பர்கள்தான் நிலாசாரலுக்கு உந்துகோல். சஸ்பென்ஸ் உடைந்துவிடக்கூடாது என்கிற காரணத்தால் நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அடுத்தவாரம் இன்னொரு நட்சத்திரத்தை அறிமுகம் செய்ய வெண்டுமே:-)
நடிகர், நடிகையரின் தேவை தொடர்ச்சியான ஒன்று. அதனால் ஆர்வமுள்ள நண்பர்கள் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும் :nila at nilacharal dot com
10 Comments:
என்ன நிலா என்னய விட்டுட்டீங்க......இன்னைக்கு நேத்து இல்ல...ஒரு நாலு வருசத்துக்கு முந்தியே நான் நிலாச்சாரல்ல ஒரு கதை எழுதியிருக்கேன்.
http://www.nilacharal.com/stage/kathai/kat40.html
இந்த லிங்குல இருக்குற கதை நான் எழுதுனதுதான்.
அது நீங்கதானா ராகவன், சும்மா பேய்த்தனமா எழுதியிருக்கீங்க. அட பாராட்டுதான் சாமி.
நம்ம சூரியன் ஜோசப்பும் இங்க ஒரு 'கதா'நாயகந்தானே - http://www.nilacharal.com/stage/kathai
/tamil_story_199.html
அட ஆமா. ஜோசப் சாரும் இருக்காரு. அட மக்கா! எல்லாரும் இங்க எழுதீருக்கீகளா! வாழ்த்துகள்.
இன்னொரு பட்டமா????!!!! இருக்கட்டும். இருக்கட்டும். கிடைக்கும் வரை லாபம்.:-) நன்றிகள் நிலா. நீங்களும் இராகவனும் தந்துள்ள சுட்டிகளைப் பார்க்கிறேன்.
அதிசயம்தான்... ராகவன், இலவசகொத்தனார் இரண்டு பேருக்குமே தனி மெயில் எழுதணும்னு இருந்தேன். ரெண்டு பேருமே தற்செயலா நிலவுக்கு வந்திட்டீங்க. இங்கேயே சொல்லிடறேன்:
ராகவன்,
நீங்கதானா அது? ஆரம்பகாலத்தில நான் மட்டும்தான் வேலை பண்ணிக்கிட்டிருந்தேன். அதனால அப்ப எழுதின எல்லாரையுமே எனக்கு ஓரளவு நினைவிருக்கும். உங்க கிட்டேர்ந்து ஏன் அதுக்கப்பறம் ஏதும் படைப்புகள் வரலைன்னு அபப்ப நினைச்சுப்பேன்.
உங்க டாவின்சி கட்டுரை படிச்சுட்டு அது போல நிலாச்சாரலுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லி கேக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். எழுதிக் கொடுத்தீங்கன்னா மகிழ்வேன்.
அப்புறம் நான் கதாநாயகர்னு சொன்னது கதாநாயகரா நடிச்சவரை. நீங்களும் கதாநாயகனா ஆகலாமே? :-)
கொத்தனார்,
வந்ததுக்கு டாங்க்ஸு.
உங்க ரீபஸ் புதிர் நல்லா இருந்தது. நாங்க மாணவர் சோலைன்னு ஒரு பகுதி வச்சிருக்கோம். அதுக்கு தமிழில் கொஞ்சம் ப்ரைன் டீஸர்ஸ் பண்ணித் தந்தீங்கன்னா நல்லா இருக்கும். நேரம் ஒதுக்க முடியுமா? உங்க மின்னஞ்சல் முகவரி காண முடியலை. எனக்குக் கொஞ்சம் எழுதுங்களேன்: nila at nilacharal dot com
// அதிசயம்தான்... ராகவன், இலவசகொத்தனார் இரண்டு பேருக்குமே தனி மெயில் எழுதணும்னு இருந்தேன். ரெண்டு பேருமே தற்செயலா நிலவுக்கு வந்திட்டீங்க. இங்கேயே சொல்லிடறேன்: //
வந்து மாட்டிக்கிட்டோமுன்னு சொல்றீங்களா :-)))
// ராகவன்,
நீங்கதானா அது? ஆரம்பகாலத்தில நான் மட்டும்தான் வேலை பண்ணிக்கிட்டிருந்தேன். அதனால அப்ப எழுதின எல்லாரையுமே எனக்கு ஓரளவு நினைவிருக்கும். உங்க கிட்டேர்ந்து ஏன் அதுக்கப்பறம் ஏதும் படைப்புகள் வரலைன்னு அபப்ப நினைச்சுப்பேன். //
நான் அவனேதான். அதுக்கப்புறம் என்னுடைய எழுத்துகளும் குறைஞ்சு போச்சு. ஒரு சிறிய இடைவெளியும் தேக்கமும். அதான்.
அதுவுமில்லாம அப்ப எழுதுன எழுத்துகளில் முதிர்ச்சியே இல்லாம இருக்கும். இப்ப என்ன வாழுதுன்னு கேக்குறீங்களா....ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு.
டாவின்சி கிரைல் மாதிரி பதிவு வேணுமா....கொஞ்சம் யோசிக்கனுமே......டாவின்சி கோடை தமிழ்ப் படுத்தினா எப்படியிருக்குமுன்னு ஒரு கற்பனை எழுதலாமா?
//டாவின்சி கிரைல் மாதிரி பதிவு வேணுமா....கொஞ்சம் யோசிக்கனுமே......டாவின்சி கோடை தமிழ்ப் படுத்தினா எப்படியிருக்குமுன்னு ஒரு கற்பனை எழுதலாமா?
//ராகவன்,
கற்பனை நல்லா இருக்கு. முயலுங்களேன். நான் டாவின்சி கிரெயில் கட்டுரை என்று சொன்னது அதைப் போல் சுவாரஸ்யமான, அர்த்தமுள்ள கட்டுரை என்ற அர்த்தத்தில்.
எழுத இசைந்ததற்கு நன்றி
உங்கள் பதிவைப் உடனடியாக பார்க்கவில்லை. மன்னிக்கவும்.
தாராளமாகச் செய்யலாமே. மாணவர்களின் வயது என்ன? என்ன மாதிரி புதிர்கள் எதிர்பாரக்கிறீர்கள் என்று ஒரு மடல் அனுப்புங்களேன்.
தனிமடலும் அனுப்பியுள்ளேன்.
// கற்பனை நல்லா இருக்கு. முயலுங்களேன். நான் டாவின்சி கிரெயில் கட்டுரை என்று சொன்னது அதைப் போல் சுவாரஸ்யமான, அர்த்தமுள்ள கட்டுரை என்ற அர்த்தத்தில்.
எழுத இசைந்ததற்கு நன்றி //
ஓ அப்படிச் சொன்னீர்களா? சரி. அதுவும் எழுதுனாப் போகுது. உங்க மின்னஞ்சல் குடுங்களேன்.
என்னோடது gragavan at gmail dot com
//இன்னொரு பட்டமா????!!!! இருக்கட்டும். இருக்கட்டும். கிடைக்கும் வரை லாபம்.:-) //
குமரன்
உங்கள் நட்சத்திர வாரம் முடிவதற்குள் கிடைக்கும் பட்டங்களை வைத்தே இன்னொரு பதிவு போட்டுவிடலாம் :-)
Post a Comment
<< Home