நடிகர்கள் அரங்கேற்றம்
என் இனிய நந்தவன நண்பர்களே, (டைரக்டருக்கான களை கட்டிருச்சில்ல:-)
நடிக, நடிகையர் வேணுமின்னு கேட்டிருந்தேனில்ல, முதல் கட்டமா இரண்டு பேரை அரங்கேத்தியாச்சு. நிலாச்சாரல்ல என்.கணேசன் எழுதற 'நீ...நான்... தாமிரபரணி' ங்கற சஸ்பென்ஸ் தொடரின் முதல் அத்தியாயத்தில பத்திரிகை ஆசிரியரா சத்தி சக்திதாசனும் ரிப்போர்ட்டரா சுந்தரும் (அகரமுதல சுந்தர் இல்லைங்க) அறிமுகமாயிட்டாங்க. படத்தை இங்கு பார்க்கலாம்:
http://www.nilacharal.com/stage/kathai/nnt//tamil_novel_1.asp
(ஆனந்தோட அழகான கோவில் ஃபோட்டோவை கொஞ்சம் கெடுத்துட்டதுக்கு அவர் மன்னிக்கணும்)
தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்தாப்ப்ல ஃபோட்டோ எடுத்து போடப் போறோம். இந்தக் கதையில வர்ற மற்ற பாத்திரங்களுக்கு இன்னும் ஆள் கிடைக்கலை (அதில ஒரு பாத்திரத்துக்கு துளசி பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுது. அவங்ககிட்டே கேக்கணும்). அதனால தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். கொஞ்சம் அப்படியே வாய் வழியே விஷயத்தைப் பரப்புங்க.
அப்புறம், இந்த ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆகறதால மத்த கதைகளுக்கும் இப்படி ஃபோட்டோ எடுத்து படம் போடலாம்னு இருக்கேன். முருக பூபதிக்கும் அகரமுதல சுந்தருக்கும் கேரக்டர்ஸ் இருக்குங்கோவ் (வத்ராப் சுந்தரை விட அகர முதல சுந்தர்னு சொல்றது பரவாயில்லையா?). உங்க ரெண்டு பேருக்கும் தனியா மடல் போடறேன்.
உதவி செய்த/செய்ற/செய்யப்போற எல்லாருக்கும் நன்றிங்கோவ்.
10 Comments:
என்னுடைய படத்தை எப்போது போடப் போகிறீர்கள்?
இப்பின்னூட்டம் இட்டது உண்மையான டோண்டுதான். அதன் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?
நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சென்ற பதிவில் போட்டிருந்தேன். நீங்கள் அதற்கு ஒப்புதல் ஒன்றும் அளிக்காததால் உங்களுக்கு விருப்பமில்லை என்று விட்டுவிட்டேன். அடுத்த வாய்ப்பு வரும்போது உங்களைத் தொடர்பு கொள்கிறேன்
//ஆனந்தோட அழகான கோவில் ஃபோட்டோவை கொஞ்சம் கெடுத்துட்டதுக்கு அவர் மன்னிக்கணும்//
நிலா. உங்களுக்கு நிஜமாகவே தைரியம் அதிகம்தான்! :))
//வத்ராப் சுந்தரை விட அகர முதல சுந்தர்னு சொல்றது பரவாயில்லையா?//
பருவாயில்லை. இதும் நல்லாத்தான் இருக்கு! :)
//நிலா. உங்களுக்கு நிஜமாகவே தைரியம் அதிகம்தான்! :))//
நம்ம யாரு! நம்ம பேக்ரவுண்ட் என்ன! :-)))
//நிலா. உங்களுக்கு நிஜமாகவே தைரியம் அதிகம்தான்! :))//
//நம்ம யாரு! நம்ம //பேக்ரவுண்ட் என்ன! :-)))
உங்க பேக்கிரவுண்ட் என்னனு சொல்லிட்ட்டீங்கனா அதுக்கு ஏத்த மாதிரி ரியாக்ஷன் விடலாமுன்னு இருக்கேன் :-)
நிலா,
துளசி பொருத்தமா இருப்பாங்களா?
அப்பப் போட்டுக்குங்க.
'ஆத்தா, நான் ஒரு நடிகை ஆயிட்டேன்':-)
//உங்க பேக்கிரவுண்ட் என்னனு சொல்லிட்ட்டீங்கனா அதுக்கு ஏத்த மாதிரி ரியாக்ஷன் விடலாமுன்னு இருக்கேன் :-)//
அது... அது... அந்த பயம் இருக்கட்டும் :-)))))
ஆனந்த், உங்க போட்டோவும் ஒரு கேரக்டரா ஆகிட்டதுனால (தாமிரபரணி) கொஞ்சம் மாறுவேடம் போடவேண்டியதாப்போச்சு.
மன்னிச்சதுக்கு நன்றி.
தென்னகத்துத் தங்கத் திலகம், நடிப்பின் அகராதி, கம்பீரக் குலவிளக்கு துளசி அவர்கள் வாழ்க! (பின்னே, நடிகை ஆயிட்டீங்க. அடுத்து முதலமைச்சர்தானே. இப்போவே கொஞ்சம் அடி போட்டு வச்சிக்கிடலாம்னு இறங்கிட்டேன். எப்படி, அடைமொழியெல்லாம் ஒகேவா? :-))))
நிலா,
நம்ம வீட்டுலே எனக்கு மகள் வச்ச பேரு 'ஜெ'யின் 'ஜ்ருவா பெஹன்'
அதனாலே அடைமொழி ஓக்கே!
முதலமைச்சர் ஆனவுடனே நீங்கதான் என் உ.பி.ச.:-)
//முதலமைச்சர் ஆனவுடனே நீங்கதான் என் உ.பி.ச.:-) //
தலைவிக்கு ஆனாலும் தாராள மனசுங்க :-))
Post a Comment
<< Home