.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, January 06, 2006

ஒரு முறை அடித்தால் ஒன்பது முறை திருப்பி அடி

Your Ad Here

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக நண்பர் வீட்டில் குழுமியிருந்த போது ஒரு இரண்டு வயதுக் குழந்தைக்கு சோஃபாவில் லேசாக அடிபட்டுவிட்டது. அவன் மூச்சடக்கி பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டான். அவன் தாய் பதறியடித்து அவனை சமாதானப் படுத்தினார். அவன் அழுகை நின்றதும் சோஃபாவுக்குக் கூட்டிப்போய் 'இந்த சோஃபாதானே அடித்தது. நீயும் திரும்ப அடித்துவிடு" என்று தாய் சொல்ல, குழந்தையும் அடித்துவிட்டு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சற்று நேரம் பொறுத்து தன் தந்தையை அழைத்து வந்து சோஃபாவில் அடிபட்டுவிட்டதைச் சொன்னது. உடனே தந்தை விஜயகாந்த் ஸ்டைலில் சோஃபாவை ஓங்கி உதைத்தார். "பேட் சோஃபாவை நல்லா உதைக்கணும்" என்று சொல்லியபடி மேலும் மேலும் உதைத்து 'டிஷ்யூம் டிஷ்யூம்' என்ற சத்தத்துடன் நாலைந்து குத்துக்களும் விட்டார். அந்தக் குழந்தைக்கு அப்படியொரு சந்தோஷம். கைகொட்டி சிரித்துவிட்டுத் தானும் சோஃபாவை உதைக்கவும் குத்தவும் ஆரம்பித்தது.

இது போன்ற காட்சிகள் நம் குடும்பங்களில் சகஜமானதுதான் என்றாலும் எனக்கு பெரிய உறுத்தலாய் இருந்தது. குழந்தை பெரியவர்கள் வாயிலாய் உலகைத் தெரிந்து கொள்ளும் பருவம் இது. இது போன்ற நிகழ்வுகளிலிருந்து என்ன கற்றுக் கொள்ளும் என்று எண்ணிப் பார்த்தேன். 'தெரிந்தோ தெரியாமலோ தனக்குத்தீங்கு செய்பவர்களைத் தண்டிக்கவேண்டும்' என்றும் 'ஒரு முறை அடித்தால் ஒன்பது முறை திருப்பி அடிக்கவேண்டும்' என்றும்தான் அந்தப் பிஞ்சு மனதில் பதிந்திருக்கும் என என் சிற்றறிவுக்குப் பட்டது.

ஒரு சாதாரண சிறிய விபத்து அது. வாழ்க்கையில் விபத்துக்கள் சகஜம் என்று அந்தக் குழந்தைக்கு இப்போதே புரிய வைத்தால் அவன் வளர்ந்ததும் வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க உதவியாக இருக்குமல்லவா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

At January 07, 2006 5:21 AM, Blogger மாதங்கி said...

நிலா,

குழந்தைகள் இப்படி எதாவது பட்டுக்கொள்ளும்போது (எ-டு) சோபா

பப்பு (அ) தீப்பு, சோபாவில் கவனிக்காமல் காலில் இடித்துக்கொண்டுவிட்டாயா, இரு உனக்கு உவ்வாவை (காயம்) தடவி கொடுக்கிறேன். அடுத்து, இடித்த சோபா அருகில் அழைத்துச் சென்று கையால் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டால் அடுத்த முறை இடிக்காது என்று சொல்லிக் கொடுக்கலாம்.

அடுத்த முறை குழந்தை அதே சோபாவில் இடித்துக்கொள்ளாது- எல்லாம் அனுபவ பாடம்தான்

 
At January 07, 2006 6:42 AM, Blogger Unknown said...

Its a valuable post.. actuallaa parents are in a way weakening the mental grit of their children by over protecting them..

the message has to reach them

 
At January 07, 2006 6:52 AM, Blogger நிலா said...

//சமுதாயத்தோடு ஒட்டி வாழ தெரியாத குழம்பிய மனம் கொண்ட பிள்ளைகள்தான் பிற்காலத்தில் அதிக மன உலைச்சல் உள்ளவர்களாகவும், இதர மனநிலை பிரச்சனைகளை அதிகம் எதிர் கொள்பவர்களாகவும் உரு மாறுவார்கள்.//
மிகவும் உண்மை. 10 வயதுக்கு முன் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நம் வாழ்க்கை முறையைத் தீர்மானிப்பதாக எங்கோ படித்தேன். தங்கள் கருத்துக்கு நன்றி

 
At January 07, 2006 8:34 AM, Blogger Muthu said...

இதேபோல் பல முறை சேர், திண்ணை உட்பட பல வாயில்லா பொருட்கள் எனது சிறுவயதில் அடித்துவிட்டு அடி வாங்கியிருக்கின்றன :-).

 
At January 07, 2006 11:55 AM, Blogger பரஞ்சோதி said...

சகோதரி குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், எவ்வாறு கெடுக்ககூடாது என்பதை சொல்ல அருமையான பதிவு.

உங்களுக்கு எனது நன்றிகள்.

என் மகள் சக்திக்கு 1 வயது ஆகிறது, தீபாவளி அன்று விளக்கு வைத்தோம், அவர் அதை தொட பலமுறை முயற்சித்தார், நாங்களும் அதை தொட்டார் சுடும் என்று முகத்தை வலிப்பது போல் வைத்து சொன்னோம், ஒருமுறை அவர் எரியும் தீபத்தின் மேல் கையை கொண்டு செல்ல அதன் வெக்கையில் கையை படக்கென்று எடுத்து விட்டார், அதன் பின்னர் கிட்டவே போகவில்லை. அது மாதிரியே வீட்டில் இருக்கும் ஹீட்டரும், அதை தொட்டதே இல்லை, நாங்க அது சுடும் என்று வருத்தமாக சொல்ல, அதை புரிந்துக் கொண்டார்.

கீழே விழுவார், நாங்க ஒன்றும் சொல்ல மாட்டோம், 10 அல்லது 20 செகண்ட் அப்புறம் போய் தூக்கி தடவி கொடுப்போம், அப்படி செய்தால் அழமாட்டார், விழுந்தவுடன் அய்யோ அம்மா என்று நாம் ஓடினால் குழந்தை பயத்திலேயே அழுது விடும்.

மேலும் அடிப்பட்டவும், அதை அடி, அவனைப் பார், அவனை மாதிரி இரு போன்றவை எல்லாம் குழந்தைகளிடம் கோபம், பொறாமை, மூர்க்க குணங்களை வளர்க்கும்.

இது போன்ற பதிவுகள் நிறைய கொடுங்க.

 
At January 07, 2006 11:07 PM, Blogger நிலா said...

தேவ்,முத்து, வருகைக்கு நன்றி.

மாதங்கி, நீங்கள் சொன்னது போல் பாசிடிவாக சொல்லித்தருவது நல்ல உத்தியே.

பரஞ்சோதி, குழந்தையை நன்றாக வளர்க்கிறீர்கள். பாராட்டுக்கள். நம் சமூகத்தில் 1000க்கு 999 பேர் ஓவர் ப்ரொடெக்டிவ் ஆக இருந்து அதன் தன்னம்பிக்கையை கெடுக்கத்தான் செய்கிறார்கள்.

 
At January 09, 2006 1:39 AM, Blogger நிலா said...

Raj

நீங்கள் சொல்வதும் சரிதான். மேலை நாடுகளில் இப்படிப்பட்ட பதற்றத்தை நான் கண்டதில்லை. நாம் வளர்ந்த முறை அப்படி.

 
At January 10, 2006 8:13 PM, Anonymous Anonymous said...

don't you find conflict between this article and your story suyam. if a child reads your story suyam what would be the extrapolation of the reader from the story.

I am just a nadodi web browser who came across your blog.

 
At January 10, 2006 10:25 PM, Blogger நிலா said...

Sakthi

This article is about giving right message to the children about the world. Suyam is about an adult who longs to be himself.

I do not see any conflict between these two. Could you explain a bit more?

 

Post a Comment

<< Home