ஒளிபடைத்த கண்ணினாய்
குழந்தைகளுடன் பணி புரியும் அனுபவம் இனிமையானது மட்டுமல்ல பல சமயங்களில் இஸ்பையரிங் ஆகவும் எனக்கு அமைந்திருக்கிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக படம்பிடித்த விளம்பரம்தான் சிறுவர்களுடனான எனது முதல் அனுபவம். அவர்களை அவர்களாகவே படம் பிடித்தாலே போதும் அருமையாக நிகழ்ச்சி அமைந்துவிடும் என்பது அதில் நான் செய்து பார்த்து கற்றுக் கொண்ட பாடம். ஒரு நிமிட விளம்பரத்துக்காக 5 மணி நேரம் படம்பிடித்தோம். ஆவலாக அந்தக் குழந்தைகள் தந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது. 3 மணி நேரம் எடிட் செய்து அவர்களுக்குப் போட்டுக் காட்டியபோது அவர்கள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைப் பார்க்கவேண்டுமே! எத்தனை முறை தொலைக்காட்சியில் அது வந்தாலும் ஓடிச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் என பெற்றோர் சொன்னார்கள். முதல் ஒளிபரப்புக்குப் பின் நாங்கள் செய்த சிறு மாற்றங்களைக் கூட கண்டுபிடித்து தொலைபேசி என்னிடம் காரணம் கேட்டார்கள்.
பின்பு நிறப்பிரிகை என்ற என் குறும்படத்துக்காக இரு அருமையான குழந்தைகளுடன் பணியாற்றினேன். அற்புதமாய் நடித்துக் கொடுத்தார்கள்.
பூஞ்சிட்டு சிறுவர் இதழ் வெளியிட்ட போது ஆசிரியர் குழுவிலிருந்த இரு சிறுமியரின் வேகமும் துடிப்பும் எனக்கு உந்துதல் தந்திருக்கின்றன. பூஞ்சிட்டு இதழின் முதல் அட்டைப் படத்தை வடிவமைத்த பெண்ணின் திறமை கண்டு பூரித்திருக்கிறேன்.
பின்பு நிலாச்சாரலில் குழந்தைகள் சிறப்பிதழ் வெளியிட்டபோது குட்டிப் படைப்பாளிகள் காட்டிய ஈடுபாடு என்னை வாயடைக்க வைத்துவிட்டது.
6 வயதில் கதை எழுதுகிற குழந்தையைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அதற்கேற்ற ஒரு படமும் அது வரைந்து அனுப்பியபோது மனது வெகுவாய்ப் பெருமிதப்பட்டது. அவை இங்கே:
http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_234a.asp
இந்தக்காலக் குழந்தைகள் எவ்வளவு புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள் என்று இந்த அனுபவங்கள் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியிருக்கின்றன
சென்றவாரம் நிலாச்சாரலில் வெளியான வண்ணங்கள் பலவிதம் என்ற என் சிறுவர் கதையில் வரும் சிறுவன் சச்சினின் புத்திசாலித்தனம் அந்த அனுபவத்தின் வெளிப்பாடே. அந்தக் கதை இங்கே:
http://www.nilacharal.com/poonchittu/children_stories/children_story_240.asp
6 Comments:
குழந்தைகளின் உலகம் தனி சுவையுடையது நிலா.அதை நன்றாக ரசித்துள்ளீர்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள் நிலா
குழந்தைகளுக்கும் வாழ்த்தைத் தெரிவியுங்கள்.
உங்கள் பணி சிறக்கட்டும்.
மிக்க நன்றி, மது
தங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இன்னும் சுவைக் கூட்டியிருக்கலாம்... சிறுவர் உலகம் அற்புதமானது... தங்கள் அனுபவங்களை விரிவாக உரைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்...
மம்சாபுரம் தென்காசி பக்கமா உள்ளது?
தேவ்,
நன்றி
இன்னொருமுறை விரிவாய் எழுத முயல்கிறேன்.
மம்சாபுரம் ராஜபாளையத்துக்கு அருகில் இருக்கிறது.
when i was travelling to courtallam from madurai I saw the sign board somewhere on the route.. I guess its the same...
yes, Dev. It's the same one
Post a Comment
<< Home