.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, December 22, 2005

பஹேலி ஆஸ்காருக்குப் போனதெப்படி?

Your Ad Here

பஹேலி -ஷாருக்கான், ராணி முகர்ஜி நடித்து சில மாதங்களுக்கு முன் வந்த இந்தத் திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தானின் நாட்டுப்புறக் கதையாம் இது! கணவனின் பிரிவில் ஒரு ஆவியுடன் வாழ்க்கை நடத்தும் பெண் ஒருத்தி கணவன் திரும்பி வந்ததும் என்ன செய்வாள் என்று இரண்டு வரியில் சொல்லிவிடக் கூடிய கதை. சரி, திரைக்கதையாவது சுவாரஸ்யமாக இருக்கிறதாவென்றால் அதுவுமில்லை. சவசவவென்ற காட்சி அமைப்புகள். மனைவி திரைக்கதை எழுதி அமோல் பலேகர் இயக்கிய படமாம்! ஷாருக்கானின் சொந்தத் தயாரிப்பு.
ஷாருக்கானுக்கு இரட்டை வேடம். அவர் ஒன்றும் பெரிதாக இதற்கென்று மெனக்கெடவில்லை. ராணி முகர்ஜிக்கும் விசேஷமாய் சொல்லிக்கொள்ளும்படி வேலையில்லை. (அதெப்படி ஆறேழு வருஷமாய் அப்படியே இருக்கிறார் ராணி?)

அமிதாப் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார் (நம்ம ஊர் ஸ்டைலில் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரம் என்று சொல்லிக் கொள்ளலாம்!). ஜூஹி சாவிலாவின் அண்ணி பாத்திரம் எதற்கென்றே தெரியவில்லை. ஒரு வேளை ஷாருக்கின் ப்ரொடக்ஷன் கம்பெனியில் பார்ட்னராகையால் தன் பங்குக்கு படத்திலும் ஒரு பாத்திரம் செய்ய நினைத்திருக்கலாம். ஐயோ பாவம், சுனில் ஷெட்டி வசனம் ஏதுமில்லாமல் ஒரே ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

சொல்லிக் கொள்ளக்கூடிய மாதிரி இருப்பவை இசையும் கேமராவும்தான். ஆனால் அதற்காக, உப்பு சப்பில்லாத இந்தப் படத்தை ஆஸ்காருக்கு அனுப்பினால் நம் மரியாதை(!) என்னாவது? ப்ளாக் இதை விட சிறந்த படமென்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத் தேர்ந்தெடுக்காமல் போனதற்கான காரணத்தைப் படம் பார்க்காமல் ஊகிப்பது சரியல்ல.

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் செலக்ஷனுக்கு வந்திருந்த படங்களில் சச்சினும் ஒன்றாம்! எனக்கு அதைப் படித்துவிட்டு சிரிப்பை அடக்க ரொம்ப நேரமானது.

பி.கு: என் பதிவில் சினிமா நெடி பயங்கரமாய் இருக்கிறதென்று ஏற்கெனவே தேவ் புகார் செய்துவிட்டார். விடுமுறைக் காலமாகையால் நிறைய படம் பாக்கும் வாய்ப்பு; ஸ்கையில் வேறு ஒரு தமிழ் சேனல் இலவசமாய் வந்து தொலைக்கிறது - என்றெல்லாம் சாக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்:-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

14 Comments:

At December 23, 2005 12:16 AM, Blogger தேவ் | Dev said...

நிலா,நான் என்ன சொல்ல? பி.கு போட்டு விட்டீர்கள்... ம்ம்ம் நல்ல படங்களைப் பாருங்கள்....
அதைப் பற்றி எழுதுங்கள்....

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....

 
At December 23, 2005 12:52 AM, Blogger Go.Ganesh said...

நிலா

நான் ப்ளாக் பஹேலி இரண்டையும் பார்த்தேன்...

ப்ளாக் பஹேலியை விட நூறு மடங்கு தேவலை

 
At December 23, 2005 1:03 AM, Blogger நிலா said...

Dev,
Shall try to pick up some good documentaries too.

thanks for the wishes. You to have a great christmas and bright new year

Ganesh,

thanks for the feedback. Can you see any reason why they chose Paheli over Black?

 
At December 23, 2005 1:40 AM, Blogger முத்து(தமிழினி) said...

இந்தி கருமத்தை எல்லாம் நாங்க பாக்கறதே இல்லை..இவனுங்க படத்தை பார்க்கறப்ப தமிழ் குப்பையே மேல் என்று தோன்றும்..

சில பேர் பந்தாவுக்காக இந்தி படம்லாம் பார்க்கறதா கேள்விப்பட்டோம்..அவ்ளோதான் நமக்கு தெரியும்.

 
At December 23, 2005 2:04 AM, Blogger Jigidi said...

"இந்தி கருமத்தை எல்லாம் நாங்க பாக்கறதே இல்லைசில பேர் பந்தாவுக்காக இந்தி படம்லாம் பார்க்கறதா கேள்விப்பட்டோம்.அவ்ளோதான் நமக்கு தெரியும்."

நிலாவோட பதிவுக்கும் உங்களோட இந்தப் பின்னூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.அது சரி நாம என்னைக்குத் தெளிவாப் பேசியிருக்கோம்.


ஆனால் அதற்காக, உப்பு சப்பில்லாத இந்தப் படத்தை ஆஸ்காருக்கு அனுப்பினால் நம் மரியாதை(!) என்னாவது?
ஷாரூக் குடும்பத்துக்கு சோனியாம்மாவோட பொண்ணான பிரியங்கா வடேரா ஒரு ஃபேமிலி ஃப்ரெண்ட்.so 2 and 2 makes 4.அரசியல்ல இதெல்லாம் சாதாரண்ம்பா!!!

 
At December 23, 2005 2:08 AM, Blogger பட்டணத்து ராசா said...

முத்து சொல்ற மாதிரி சில படங்கள(சமகால) தவிர ஹிந்தி படங்கள குப்பை தான், ஆனா ப்ளாக் ஒரு நேர்தியான உருவாக்கம் தான், ஆனா ஹெல்ன் பற்றிய ஆங்கிலப்படம் எற்கனவே வந்ததால அஸ்கார் ஆட்டத்துக்கு சேத்துக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன் :-)

 
At December 23, 2005 2:17 AM, Blogger நிலா said...

முத்து,
//சில பேர் பந்தாவுக்காக இந்தி படம்லாம் பார்க்கறதா கேள்விப்பட்டோம்..அவ்ளோதான் நமக்கு தெரியும்.//

இந்தி படம் பார்த்தா பந்தாவா? அட, எனக்கு இது முன்னாலேயே தெரியாமப் போச்சே!

ஜிகிடி,

//so 2 and 2 makes 4.அரசியல்ல இதெல்லாம் சாதாரண்ம்பா!!!//
அட எங்கே போனாலும் இந்த அரசியல் தொல்லை தாங்க முடியலைப்பா...

பட்டிணத்து ராசா,

//ஹெல்ன் பற்றிய ஆங்கிலப்படம் எற்கனவே வந்ததால அஸ்கார் ஆட்டத்துக்கு சேத்துக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன் :-) //

நல்ல கோணத்திலர்ந்து பார்த்திருக்கீங்க. நன்றி

 
At December 23, 2005 2:41 AM, Blogger Narain said...

இங்கே தேர்வில் கொஞ்சம் கோல்மால்கள் நடந்திருக்கின்றன. உண்மையில் மார்னிங் ராகா என்கிற படம் தான் போக வேண்டியதிருந்தது. ஐபிஎன்னிலும், என்.டி.டிவியிலும் அதை தான் சொன்னார்கள். ஆனால், பஹேலியின் பின்னுள்ள அரசியல் தாண்டி, அது ராஜஸ்தானிய கலாச்சாரத்தினை (?!) எடுத்தியம்பவதுவாக தெரிவதால்,அதை தேர்ந்தெடுத்தோம் என்கிற உப்பு சப்பில்லாத காரணத்தினை எங்கேயோ படித்தேன். பிளாக் பஹேலியோடு எவ்வளவோ பரவாயில்லை, ஆனால் அதுவும் ஆஸ்கார் விஷயமில்லை. இங்கே இடிப்பது 'மங்கள் பாண்டே:தி ரெஸிங்', எப்படி பார்க்காமல் விட்டார்கள் ;)

சச்சினென்னாலாம் பரவாயில்லை ;) சந்திரமுகியும், சிவகாசியும் போகாமல் இருந்ததே ;)

 
At December 23, 2005 2:55 AM, Blogger முத்துகுமரன் said...

உண்மையிலேயே பிளாக் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவதற்கு தகுதியான படம். அவ்வளாவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது.

 
At December 23, 2005 3:19 AM, Blogger நிலா said...

Narain,

//'மங்கள் பாண்டே:தி ரெஸிங்', எப்படி பார்க்காமல் விட்டார்கள் ;)//

அதுவும் செலக்ஷனுக்குப் போயிருக்கிறது

//மார்னிங் ராகா என்கிற படம் தான் போக வேண்டியதிருந்தது. //

போவதாக செய்தி படித்தேன்

http://www.telegraphindia.com/1051222/asp/nation/story_5631109.asp

முத்துகுமரன்,
வருகைக்கு நன்றி

 
At December 23, 2005 6:28 AM, Blogger தாணு said...

`ப்ளாக்’ ரொம்ப நல்லா இருந்தாலும் கூட ஆங்கில சினிமா போன்ற தோற்றமே அதிகம் இருந்ததால் இந்தியப் படத்தை அது
representate பண்ணவில்லை என்றுதான் கூறப்பட்டது.

 
At December 23, 2005 6:55 AM, Blogger Boston Bala said...

என்னுடைய இரண்டனா கருத்துக்கள் :-)

'ப்ளாக்' தழுவல் (ரீ-மேக்) படம் என்பதால் தகுதி பெறவில்லை என்பது அஃபிஷியல் காரணம்.

'மரினிங் ராகா' சாதாரண தமிழ்/ஹிந்தி/ஹாலிவுட் திரைப்படம் போல், நம்ப முடியாத க்ளைமாக்ஸ் (வில்லன் மனம் திருந்தி, நாடு சுபிட்சம் ஆவது போல்; விக்ரமன படங்களில் ஒரு பாட்டில் புகழ் பெறுவது போல்; ரஜினி எழுச்சிப்பாடலில் அந்தஸ்து அடைவது போல்) காமெடியாக, சோகையாக, யதார்த்தம் எட்டிப் பார்க்காமல் எடுத்திருந்தார்கள்.

'லகான்'-ஐ பரிந்துரையில் இடம்பிடிக்க வைக்கத் தெரிந்தவர்களுக்கு, 'பஹேலி' நல்ல சாய்ஸ்தான். வேலையே கதி என்றிருக்கும் கணவன், குடும்பச் சுமைகள், மனைவியின் எதிர்பார்ப்புகள், புகுந்த வீட்டில் பரிவுடன் இருக்கும் சுற்றங்கள், பெரியவர்களைப் பார்த்து குழந்தைத்தனமையை இழத்தல், என்று சுவாரசியமான குறியீடுகள். எனக்கு ஏன் பிடித்தது, என்று விரிவாக (இன்னுமா என்று நீங்கள் அலறினாலும் :-) எழுத முயல்கிறேன்.

 
At December 23, 2005 11:29 AM, Blogger dwainwarner45245398 said...

This comment has been removed by a blog administrator.

 
At December 23, 2005 4:57 PM, Blogger நிலா said...

பாலா, தெளிவாகக் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி
//வேலையே கதி என்றிருக்கும் கணவன், குடும்பச் சுமைகள், மனைவியின் எதிர்பார்ப்புகள், புகுந்த வீட்டில் பரிவுடன் இருக்கும் சுற்றங்கள், பெரியவர்களைப் பார்த்து குழந்தைத்தனமையை இழத்தல், என்று சுவாரசியமான குறியீடுகள்.//

என் பார்வையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறியீடுகள் எவையும் இந்தப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. (ஒரு வேளை எங்களுக்கெல்லாம் உங்களைப் போல கலைஞானம் இல்லையோ என்னவோ:-) ). லகானில் ஒரு அழுத்தம் இருந்தது, ஒரு ஃபோகஸ் இருந்தது. படம் பார்க்கிறவர்களுக்குப் பிரச்சனையோடு ஒன்ற முடிந்தது. பஹேலியில் இது மிஸ்ஸிங் என்பது எனது ஒன்றரை அணா கருத்து :-)

 

Post a Comment

<< Home