.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, December 15, 2005

முதல் கடிதம்

Your Ad Here

அதென்னவோ தெரிய்லை சின்னப் புள்ளையா இருக்கும்போதே நமக்கு லெட்டர் எழுதறதுல அலாதிப் பிரியம்.

மொதல் மொதலா எப்ப லெட்டர் எழுத ஆரம்பிச்சேன்னு கேட்டா ஆடிப் போயிருவீங்க - 7 வயசுல ஆரம்பிச்சேன். ரெண்டாங்கிளாஸ் லீவில என் கேங்க் மக்களுக்கெல்லாம் தனித் தனியா நலைஞ்சு வரில லெட்டர் எழுதி, அதை மடிச்சு ஐஸ் பாக்கெட்டுக்குள்ள போட்டு மெழுகுதிரில காட்டி சீல் பண்ணிக்கிட்டிருக்கும்போது மாட்டிக்கிட்டென்.

பக்கத்துவீட்டுப் பெரியம்மா, "என்ன செய்யிற, எங்க குடு பாப்போம்"னு வாங்கி அவ்வளவையும் படிச்சி எல்லாருக்கும் காமிச்சி சிரிச்சிப் போட்டு கடைசில "நல்லாத்தாண்டா எழுதிருக்கா"ன்னாங்க. எனக்கு வெக்கம்னா வெக்கம்.
அப்புறம் வழக்க்கமா அமெரிக்காவில படிச்சிக்கிட்டிருந்த சித்தப்பாவுக்கு ஆறு மாசத்துக்கொருக்க வீட்டில எல்லாரும் எழுதுவோம். அத அப்பா படிச்சி திருத்தி அப்புறம் அனுப்புவாங்க. எட்டாவது படிக்கும்போது டீச்சரா வேலை பாத்துக்கிட்டிருந்த சித்தி எனக்கு லெட்டர் எழுதியிருந்தாங்க. எனக்கு தலை கால் புரியலை. என் பேருக்கு வந்த முதல் லெட்டர். பதில் எழுதணும்னு ஒரே பரபரப்பு. அப்பாவும் "சரி, எழுது"ன்னுட்டாக்க. நான் பாட்டுக்கு இன்லேன்ட் கவர் வாங்கி லெட்டர் எழுதி போஸ்ட் பண்ணியாச்சு. சித்தி அதுக்கு பதில் போட்ட பெறகுதான் வீட்டுக்கு விஷயம் தெரியுது. 'இன்னும் யாராருக்கு லெட்டர் குடுத்தாளோ'ன்னு அப்பாவுக்கு பயம் எடுத்திருச்சி.உக்கார வச்சு ஒரே அறிவுரை. இனிமே யாருக்கு லெட்டர் எழுதினாலும் அப்பாகிட்ட காட்டிட்டுதான் போஸ்ட் பண்ணணும்னு எனக்கு வெளங்கிற மாதிரி தெளிவா சொன்னாங்க.

காலேஜ் போன பிறகு விதவிதமா தோழிகளுக்கு கடிதம் எழுதுவோம் - ஊர்க்கதை உலகக் கதை எல்லாம் எழுதி அதுக்கு வியாக்யானம் வேற குடுத்து.... காகிதத்தில ஒரு எழுத்துக்குக் கூட மீதி இடம் இல்லாத மாதிரிதான் எழுதறது.

'நம்மால் முடியும் தம்பி' தொடரை விகடன்ல படிச்சிட்டு டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்திக்கு நம்ம எழுதின லெட்டர்ல இம்ப்ரஸ் ஆகி ஃபோன் பண்ணிப் பேசினாரு பாருங்க, அதுதான் நம்ம கடுதாசிக்குக் கிடைச்ச முதல் பெருமை.
அட, எல்லாம் போயிருச்சப்பா! இப்ப அன்புள்ளன்னு கூட ஆரம்பிக்காம ஒரு வரிலதான் எல்லாத்துக்கும் மின்பதில் போடறமாதிரி போயிருச்சி.

ரெண்டு வருஷம் முன்னால சிந்தனை சிற்பிகள் கேட்டிருந்தாங்கன்னு வாவி பாளையத்தில முதியோர் கல்வி மாணவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 30 பதில் வந்தது. மனசே நெகிழ்ந்து போச்சு.
இப்பவும் முதியோர் இல்லத்தில இருக்கிறவங்களுக்கு எழுதணும்னு ஆசைஇருக்கு. தேடிக்கிட்டிருக்கேன். யாருக்காவது கனெக்ஷன் இருந்தா சொல்லுங்க

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At December 15, 2005 10:03 PM, Blogger Unknown said...

அட இப்போக் கூட வீட்டுல்ல பரணை மேல பழைய காகிதங்களா சில கடிதங்கள் இருக்குங்க..
அதுக்குள்ள இருக்கறது வெறும் வார்த்தைகள் இல்லங்க.... அதை எல்லாம் இப்போ படிக்கும் போது நம்ம உள்ளுக்குள்ளே ஒரு மின்சாரம் பாயும் பாருங்க... அப்புறம் நம்மயும் அறியாம நமக்கு ஒரு புன்னகை வரும் பாருஙக.... அதுக்கு ஈடா... கோடி பொருள் கூட ஆகாதுங்க.... சில சந்தோஷங்களை மதிப்பீடு செய்ய இயலாது... அதில் இந்த நேற்றைய கடிதங்களும் அடக்கம்...

 
At December 16, 2005 2:39 AM, Blogger நிலா said...

தேவ், நன்றி

கையில் எழுதுகிற கடிதங்களில் ஒரு உயிர்ப்பு இருக்கும். எழுதிய மனிதர்களின் மனம் புரிந்தது போலிருக்கும். மின்னஞ்சலில் அது மிஸ்ஸிங். இல்லையா?

 

Post a Comment

<< Home