.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, December 06, 2005

பாலகுமாரனும் கற்பு சர்ச்சையும்

Your Ad Here

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது பாலகுமாரனுடன் நடந்த ஒரு நேருக்கு நேரில் எதோ ஒரு கேள்வி கேட்கப் போய் அது கற்பு குறித்த சர்ச்சையில் போய் முடிந்தது. அவர் சாவகாசமாக, "என்னம்மா இஞ்சினியரிங் படிச்சுக்கிட்டு இன்னும் கற்புன்னெல்லாம் பேசிக்கிட்டிருக்கே" என்றார் (போட்டுக் கொடுக்கறதுக்காக சொல்லலை, சாமி). அவர் எப்படி அப்படி சொல்லப் போயிற்றென்று அப்போது எனக்குக் கோபமான கோபம் . இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் பாதி கூட அப்போது எனக்குக் கிடையாது. ஆனாலும் கூட அவர் சொல்வதற்கு இன்னொரு கோணம் இருக்கலாம் என்று அப்போது எண்ணத் தோன்றவில்லை. கண்மூடித்தனமான கோபம்!

அதே போல் அதற்கு அடுத்த வருடம் நடந்த நேருக்கு நேரில் "வாழ்க்கையில் தியாகம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. மனிதர்களின் செயல்கள் அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கிறது" என்று அவர் சொல்ல, நான் பதிலுக்கு "காந்திஜி நாட்டுக்காக தியாகமே செய்யவில்லை என்கிறீர்களா?" என்று கேட்க, "இதற்கு பதில் சொன்னா நான் சிக்கல்ல மாட்டிக்குவேன். நீங்க நிறைய படிக்கணும்" என்று முடித்துக் கொண்டார். எனக்கு அவரை மடக்கிவிட்ட இறுமாப்பு.

இப்போது நினைத்துப் பார்த்தால் அவரை நான் மடக்கவில்லை, 'இதுக்கெல்லாம் சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் வரலை' என்று புத்தகங்கள் பக்கம் கைகாட்டி விட்டாரென்றுதான் தோன்றுகிறது. இன்றைக்கு அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அவர் பதில்களில் இருந்த தத்துவார்த்தத்தைப் புரிந்து கொள்ளவாவது முடிகிறது. ஒரு வேளை இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒப்புக் கொள்ளவே முடியுமோ என்னவோ!

'வாழ்க்கை ஒரு கடுமையான ஆசிரியர். தேர்வு முடிந்தபின் தான் பாடம் கிடைக்கும்' என்று எங்கோ படித்த நினைவு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

12 Comments:

At December 06, 2005 9:37 AM, Anonymous Anonymous said...

சுவாரஸ்யமான பதிவு நிலா... நன்றி.

- சாகரன்.

 
At December 06, 2005 10:09 AM, Blogger எல்லாளன் said...

"வாழ்க்கையில் தியாகம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. மனிதர்களின் செயல்கள் அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கிறது"

100% Truth... but you can't say this to "Sentimental Society" in other words "to the People"

 
At December 06, 2005 10:21 AM, Blogger Premalatha said...

ஒரு வேளை இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒப்புக் கொள்ளவே முடியுமோ என்னவோ!



so, haven't accepted/admitted yet?!!

 
At December 06, 2005 10:22 AM, Blogger குமரன் (Kumaran) said...

நான் ஒரு தீவிர பாலகுமாரன் வாசகன். ஆனாலும் என்னால் அவர் சொல்லும் பல விஷயங்களை ஒத்துக்கொள்ள முடிவதில்லை. இப்போது தான் உடையாரின் 4ம் பாகம் முடித்தேன்.

 
At December 06, 2005 10:38 AM, Blogger Dr.Srishiv said...

உண்மைதான் நிலா
என் குருநாதர் திரு.பாலகுமாரன் அவர்கள் கூறிய கூற்றுக்கள் உண்மை என்று உணரவே சற்று காலம் பிடிக்கும், அவர் காலம் கடந்து சஞ்சாரித்துக்கொண்டிருக்கும் யோகி, நன்றிகள் பல, தங்கள் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டமைக்கு...
அன்புடன்
ஸ்ரீஷிவ்..

 
At December 06, 2005 11:10 AM, Blogger நிலா said...

Premalatha,

I said:

'அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும்'

this does not mean I am unable to accept anything. But of course, I am unable to accept everyting.

 
At December 06, 2005 1:39 PM, Blogger Sundar Padmanaban said...

நிலா,

பதிவுக்கு நன்றி. உணர்வு ரீதியாகச் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது யதார்த்தம் அடிபட்டுப் போகிறது.

//'வாழ்க்கை ஒரு கடுமையான ஆசிரியர். தேர்வு முடிந்தபின் தான் பாடம்
கிடைக்கும்' //

உண்மைதான். சிந்தனையைக் கிளறக்கூடிய வாக்கியம் இது.

 
At December 06, 2005 5:25 PM, Anonymous Anonymous said...

"வாழ்க்கையில் தியாகம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. மனிதர்களின் செயல்கள் அனைத்திலும் ஒரு சுயநலம் இருக்கிறது" என்று அவர் சொல்ல

perhaps he was talking about himself

 
At December 06, 2005 5:52 PM, Blogger krishjapan said...

I have recorded that talk. On my way back to drop him, I was asking about his talk. He was explaining nicely about his comment of all being selfish. When I told his views are simillar to AYN RAND (in the novel Fountainhead), he simply told, read more and more books, your views and life will broaden. So, annonymous, broaden your views by more exposure with books/people. U will one day realise the meaning of selfishness.
Nila, it was a nice write up rekindling many memories of that Nerrukku Ner.

 
At December 08, 2005 2:49 AM, Blogger நிலா said...

Thanks for all the feedbacks.

 
At December 08, 2005 5:16 AM, Anonymous Anonymous said...

Krishna
Since you had not denied that he was perhaps talking about himself i would presume that you agreed with me.
You better try to grow up instead of using balakumaran and ayan rand as crutches.

 
At December 09, 2005 3:42 AM, Blogger Unknown said...

ஒரு திரைப்பாடல் வரி...
நேற்று போல் இன்று இலலை...
இன்று போல் நாளை இல்லை....

- Dev
http://sethukal.blogspot.com

 

Post a Comment

<< Home