.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, December 01, 2005

அந்நியப்படுத்துகின்றனவா நம் கலாசார அடையாளங்கள்?

Your Ad Here

சந்திரவதனா எனது முந்தைய பதிவுக்குப் பதிலாக போட்டிருக்கும் பதிவு இங்கே:
http://manaosai.blogspot.com/2005/12/blog-post.html
இதைப் படித்ததும் புடவை அணிவது குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. முதல் முதலாக அலுவல் ரீதியான அயல்நாட்டுப் பயணத்திலாகட்டும் இப்போது இங்கிலாந்தில் பணிபுரியும் அலுவலகத்திலாகட்டும் நான் சுரிதாரும் புடவையும் சகஜமாய் அணிந்து கொண்டுதானிருக்கிறேன். அதைக்குறித்து நம்மவர்கள் பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். 'உங்களுக்கு அன்னியமாய்த் தெரிவதில் வருத்தமில்லையா?' என்று கேட்டிருக்கிறார்கள். எனக்கு இந்தக் கேள்விதான் புதிராக இருந்திருக்கிறது.
பிஸினஸ் நிமித்தமாய் இந்தியா வரும் மேற்கத்தியப் பெண்கள் அந்நியமாய்த் தெரிவதாக புடவைக்கும் சுரிதாருக்கும் மாறிக் கொள்கிறார்களா என்ன? ஏன் நமக்கு மட்டும் அந்தத் தன்னம்பிக்கை இருப்பதில்லை எனத் தெரியவில்லை. அயல்நாட்டில் இறங்கிய இரண்டாம் நாளே முடியை வெட்டிக் கொண்டு பொட்டைத் துறந்துவிட்டு நம் பெண்கள் சூட் அணிவது ஏன் என்பது எனக்குப் புரியாத புதிராகத்தானிருக்கிறது. இதுதான் அவர்கள் விருப்பமென்றால் அதில் கேள்வியேதுமில்லை. ஆனால் அந்நியமாய்த் தெரிவதால்தான் மாறுகிறோம் என்றால் அந்நியமாய்த் தெரியும் முகத்தையும் நிறத்தையும் மாற்றிவிட முடியுமா என்ன?
எனக்கென்னவோ மேற்கத்தியர்கள் உடையை வைத்தெல்லாம் நம்மை மதிப்பிடுவதாகத் தெரியவில்லை. அமெரிக்க நிறுவனத்துக்கு அலுவலகப் பணியாய் சென்றபோது புடவை அணிந்து சென்றதைப் பார்த்து சக இந்தியர்கள் 'இன்டீஸன்டாய் டிரஸ் செய்திருப்பதாக அமெரிக்கர்கள் நினைப்பார்கள்' என்று முகம் சுழித்தார்கள். ஆனால் என்னுடன் பணிபுரிந்த அத்தனை அமெரிக்கர்களும் என் உடை அழகாக இருந்ததாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். அங்குமட்டுமில்லை, இத்தாலியிலும் இங்கிலாந்திலும் இதே கதைதான். நான் ஒரு நாள் ஜீன்ஸ் அணிந்து சென்றால் கூட 'உங்கள் நாட்டு உடைதான் வண்ணமயமாக அழகாக இருக்கிறது. நீ மேற்கத்திய உடைக்கு மாறாதே' என்று உரிமையாய் கேட்டுக் கொண்ட ஆங்கிலேய நண்பர்களும் உண்டு.
மற்றவர்களுக்கு எப்படியோ, எனது அனுபவத்தில் நமது கலாசார அடையாளங்கள் எனக்கு ஒரு போதும் பாதகமாய் இருந்ததில்லை. மாறாக சாதகமாகவே இருந்திருக்கின்றன.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

13 Comments:

At December 01, 2005 7:18 AM, Blogger மதுமிதா said...

நிலா
அவரவர் விருப்பப்படி தாங்கள் விரும்பும் சமயத்தில், தங்களுக்குத் தேவையான உடை அணிவது தனி மனித விருப்பம்.

பிறர் அதை நிர்ணயிப்பது,
அதனை மற்றவர் ஏற்றுக் கொள்ள வற்புறுத்துவது இப்போதெல்லாம் சுலபமாக நடக்கிறது.

அதற்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்

 
At December 01, 2005 1:38 PM, Blogger நிலா said...

நன்றி மது

 
At December 03, 2005 12:12 AM, Blogger சந்திப்பு said...

நம்முடைய கலாச்சார அடையளங்கள் குறித்து சரியாக விளக்கியுள்ளீர்கள். உலகில் அநேகமாக உடை, உணவு பழக்கம் மற்றும் இதர அடையாளங்களை எளிதில் மாற்றிக் கொள்ளும் சமூகமாக தமிழ்ச் சமூகம்தான் இருக்கிறது. தமிழகத்தில் அதுவும் குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தினரிடையே இதை பரவலாக காணமுடியும். எந்த மக்களது கலாச்சாரமாக இருந்தாலும் அது மாறக்கூடியதே! அதே சமயம் அது உயர்ந்த வடிவத்தை நோக்கியதாக அமைய வேண்டும். மேலும் தற்கால சமூகத்தில் நிலவி வரும் சிறந்த கலாச்சார அம்சங்களை முன்னெடுத்துச் செல்வதும் அவசியானது. குறிப்பாக உடை விஷயத்தில் தமிழகத்தி கன்னியகுமரி மாவட்டத்திலும், இதர பகுதிகளிலும் பெண்கள் மேலாடைகளை (ஜாக்கெட்) அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தது. இது தற்போது நிலவி வருகிறது. இது நிலப்பிரபுத்துவ கண்ணோட்டம். இத்தகைய தடைகளை உடைத்தெறிய வேண்டும். எனவே எது சிறந்தது என்று முடிவுக்கு வருவதற்கு முன், தற்கால சமூகத்தின் அடையாளங்களை பிரதிபலிப்பதாக உடைகள் இருக்கிறதா? என்பதையும் கவணிக்க வேண்டியுள்ளது. தங்களது தனித்தன்மை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்!

 
At December 03, 2005 8:40 AM, Blogger நிலா said...

நன்றி சந்திப்பு அவர்களே!

 
At December 03, 2005 12:15 PM, Anonymous Anonymous said...

ekka, sariyaa stunt kaatrrngo

 
At December 07, 2005 8:25 AM, Blogger Premalatha said...

Nila,

I have cut my hair and do not wear pottu, by my choice. I did this even when I was in India.

I wear saree for important official occasions in UK, as it makes me look more special.

but, I do agree with people believing in not wearing saree/suridhar in day to day office life, for few reasons. 1) it is not very practical in this cold and commute. 2) unless one wants to make a point that "I AM Indian", I don't see a reason to wear saree, unless ofcourse, that is what makes that person feel comfortable.

not changing(insisting on wearing saree, just for the sake of making a point) gives a clear signal that this person is non-adaptive. I hope our people understand that.

nandu thingira oorukkuppona, naduththundu namakku. It is not shame, but, it is cleverness.

when westerners come to our place, they do not need to change, as our environment does not appreciate adaptiveness. again it is cleverness to find out what is needed and what is suitable for every environment and adapting to that is very important. Not adapting is one of the serious problems leading to cultural isolations our communities are facing. good example: pakistanis and other muslims... second generations are the real victims of this cultural isolation. Hope our people can think beyond certain things.

 
At December 07, 2005 8:42 AM, Blogger ramachandranusha said...

அன்புள்ள நிலா,
இப்பொழுது நாம் கட்டும் புடைவை விதம்
" மாம்பழகட்டு" என்று சொல்லப்படுகிறது. இது சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம் ஆனது. அதாவது உள்பாவாடை அணிந்து, ஆறு கஜம் அல்லது ஐந்தரை மீட்டரில் அணியும் முறை. அதற்கு முன்பு ஒன்பது கஜத்தில் சாதிக்கு, அதன் உட்பிரிவுகளுக்கு ஒவ்வொரு முறையாக தான் புடைவை கட்டுவார்கள். ஆக இதில் புடைவை கலாசாரம் என்ற கணக்கில்
எப்படி கொள்வது? அன்றைய புடைவை கட்டும் முறைகள் வேலை செய்வதற்கு லகுவானவை. இன்றைய புடைவை கட்டும் முறை வெறும் அலங்காரத்துக்கு என்பது என் எண்ணம்.
நிலா, இந்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு, நீங்களா செய்யும் எந்த காரியமும் உங்கள் சுதந்திரத்தை காட்டிகிறது. அதை நான் மதிக்கிறேன்.

 
At December 07, 2005 9:34 AM, Blogger நிலா said...

Premalatha,

I appreciate your feedback. I have no question if you want to change by choice. I have made that very clear.

I am not advocating for cultural isolation. I am NOT against western dresses. I am NOT asking anybody to stick to our cultural identities in spite of inconveniences.

But what I insist is that we do not have to feel inferior about our cultural identities. Honestly, I do not feel isolated even in a single occasion just because I am wearing pottu or saree. And I do not think that people of other countries expect us to adapt to their customs. They might expect us to integrate with the main stream society. That does not mean that we should lose our identities. In fact I think these people have more cultural tolerance than us.

Let me ask you a question: If we change to western dresses because we should adapt to this country’s culture, would we change when we go to Africa?

In my opinion, many of us change to traditions that we think superior. This is what I question.

I’ll make my point clear again:

If you want to adapt to other cultures, if that’s what you like, if that’s what is convenient, please do. But you do not have to change because you feel inferior about our identities.


Usha,

Thanks for the info on the saree. I am not a master of history. But in practical sense, I feel saree is our cultural identity.

I was talking about cultural identities in general. So it does not matter whether saree is our identity or not (smile)

 
At December 07, 2005 9:47 AM, Blogger நிலா said...

Premalatha

One other question:

///when westerners come to our place, they do not need to change, as our environment does not appreciate adaptiveness.///

Muslims would greatly appreciate one’s adaptiveness when people are in their country. Would you be happy to adapt yourself to their dress codes and culture when in gulf?

 
At December 07, 2005 10:56 AM, Blogger கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

உஷா,
//அதற்கு முன்பு ஒன்பது கஜத்தில் சாதிக்கு, அதன் உட்பிரிவுகளுக்கு ஒவ்வொரு முறையாக தான் புடைவை கட்டுவார்கள். ஆக இதில் புடைவை கலாசாரம் என்ற கணக்கில்
எப்படி கொள்வது? அன்றைய புடைவை கட்டும் முறைகள் வேலை செய்வதற்கு லகுவானவை. இன்றைய புடைவை கட்டும் முறை வெறும் அலங்காரத்துக்கு என்பது என் எண்ணம்.//


தெரிந்துதான் பேசுகிறீர்களா?

அன்றைய புடவைக்கட்டு முறை ஒரு சாதி மக்களால் பாவப்பட்ட மக்களின் மீது திணிக்கப்பட்ட கொடிய பாலியல் வன்முறை.விருதுநகர் பகுதிகளில் நாடார் இனப் பெண்கள் மேலாடை அணிய தடை இருந்தது தெரியாதா? மதம் சாதியால் வந்த கொடுமைகளில் இருந்து இப்போதாவது விடுதலை கிடைத்திருக்கிறதே சந்தோசப் படுங்கள்.

முன்னது சிறந்தது என்று நீங்கள் பொதுவாகக் கூறக்கூடாது. வேண்டுமானால் ஒரு சாதி/சமுதாயத்தினர் கட்டிய முறை அந்த சாதி/சமுதாயத்திற்கு சிறந்ததாக இருந்தது என்று சொல்லுங்கள்.

======
நல்ல பதிவு நிலா

இப்போது கட்டும் முறை அழகுக்காகவே இருந்தாலும் அது ஒரு அடையாளம்.சேலை அழகானது மட்டுமல்லாமல் கவர்ச்சியானதும் கூட. சட்டத்திற்கு உட்பட்டு , பொது இடங்களில் எப்படி இருக்க வேண்டும் என்ற பண்பாடுடன்,யாரும் அவர்களாக எதையும் விரும்பிச் செய்யலாம். அது அவர்களின் சுதந்திரம்.

சேலை எங்கள் பண்பாடு என்று கூறிக் கொண்டு,அதைக் கட்டி சினிமாவில் ஆடும் கேவலமான ஆட்டத்திற்கு (அதுவும் U சர்டிபிகேட் படங்களில்) இதுவரை எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் டவுசர் போட்டு விளையாடும் டென்னிசுக்கு பல எதிர்ப்பு. காலக் கொடுமை.பெண்கள் சேலை தவிர்த்து வேறு உடைகளுக்கு மாறும் போது அதற்கு ஏற்ற அலங்காரங்களைச் செய்து கொள்வதில் எந்த தவறும் இருப்பதாத் தெரியவில்லை. கொலுசும் பாவடை/தாவணியும் நல்லா இருக்கும். அதுவே பேண்ட்டுக்கு ஒத்து வராது.செய்யும் வேலை வாழும் இடம் தட்ப வெப்ப நிலை போன்றவற்றுக்குத் தோதாக ஆணும் பெண்ணும் உடை உடுத்தலாம். இதில் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்நாட்டு ஆண்கள் எல்லாரும் வேட்டியா கட்டிக்கொண்டா வேலைக்குச் செல்கிறார்கள்?

எனது வருத்தம் என்ன என்றால், இவ்வாறு உடையில் மாற்றம் செய்யும் சில பெண்கள், அதற்குச் சொல்லும் காரணம் தான். சேலை கட்டுவது பழமை அதில் இருந்து மாறுவதுதான் புதுமை என்று வியாக்யானம் பேசுவது தவறு.

தனது சமூகத்தை ,தான் முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை இகழ்ந்து பேசக்கூடாது.இன்னும் தமிழ் நாட்டில் சேலை, வேட்டியுடன் கோடிக்கணக்கான பேர் வயலிலும்,கட்டட கட்டுமானப் பணிகளிலும் இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருகிறார்கள். கல்வியும் வசதியும் வர வர தனது சுய அடையாளங்களைக் கேவலமாகப் பார்ப்பது தமிழனின் சாபக்கேடு.

 
At December 07, 2005 11:20 AM, Blogger Premalatha said...

Hi Nila,

It is not about me.

no one feels the isolation just because wearing saree/pottu.

but holding on to this "culture" thing is what eventually isolates. and in most of the cases, it is the second or third generation who are affected by the isolation. even then no one really feels the isolation.

integration comes from adapting.. noone expects us to loose our identity. Believe me it won't go even if any one wants to.

you are just making emotional statements. Didn't say, study the environ, and understand the need and then change.

if people change because they think it is superior, they are wrong. I agree. but, It is not the always the case.

it is not about me. don't take it to personal level. believe me, I am not the kind who gives a damn about what anyone thinks of me, whether it is the British or you. You are doing a big prejudiscial mistake of looking at people "people change because they feel inferior". You are WRONG.


anyway, I am not going to go on about it.

 
At December 07, 2005 11:22 AM, Blogger Premalatha said...

OH GAWD.

 
At December 09, 2005 6:35 AM, Blogger நிலா said...

Premalatha,
you are interpreting according to your convenience.
I see no point in responding.

Thanks anyway.

 

Post a Comment

<< Home