இன்னும் கொஞ்சம் ஆங்கிலம்...
சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சென்னை வானொலியில் ஒரு பேட்டி தர நேர்ந்தது. சுத்தத் தமிழில் பேச எவ்வளவோ முயற்சித்தும் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன என்று சற்று சங்கடமாக இருந்தது. பேட்டி முடிந்ததும், "நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசியிருந்தால் ரீச் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" என்றார்களே பார்க்கவேண்டும்!
தமிழகத் தமிழர்கள் தமிழைக் கெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எனக்கு நினைவுக்கு வந்தது :-)
எங்கும் எதிலும் ஆங்கிலம் என்பது போலத்தான் சென்னை இருக்கிறது. தமிழில் பேசினால் கேவலமான லுக் விடுகிறார்கள். சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டிகள் கூட நாம் தமிழில் வினவினால் ஆங்கிலத்தில் பதிலிறுக்கிறார்கள். குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல் கேசட்டுக்கு கடை கடையாய் அலையவேண்டி இருந்தது. வெறுத்துப் போய்க் கேட்டால், "யார் மேடம் தமிழ் ரைம்ஸ் எல்லாம் கேக்கறாங்க?" என்கிறார்கள். தமிழ் பேசுகிற குழந்தைகள் அரிதாகிவிட்டார்கள்!
சென்னை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
1 Comments:
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
Post a Comment
<< Home