குஷ்பு பற்றி அமீர்கான்
இன்று இரவு என்டிடிவியில் அமீர்கானின் நேருக்கு நேர் கண்டேன். அவரின் பதில்களிலிருந்த நேர்மையும் துணிச்சலும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. வழக்கமாக பிரபலங்களிடம் இருக்கும் அலட்டலையும் அவரிடம் காண முடியவில்லை.
* சரியோ தவறோ தனி மனிதருக்குக் கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்பதை மிகவும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் குஷ்பு, சானியா மிர்ஸா போன்றோரின் அனுபவங்கள் மிகவும் துரதிர்ஷ்ட வசமானவை என்றும் இளைஞர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
* லகான் திரைப்படத்தை ஆங்கிலேயருக்கெதிரான இந்தியரின் போராட்டமாகத் தான் பார்க்கவில்லை என்றும், ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரின் எழுச்சி என்றே தான் கருதுவதாகவும் கூறினார். அதாவது அந்தப்படம் நாட்டுப்பற்றை வலியுறுத்துகிற படம் அல்ல என்றார். (இதைச் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்தானே!)
* பூமி அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமானது என்றும் மனிதனாய் வகுத்துக் கொண்ட எல்லைக் கோடுகளைத் தன்னால் பிரிவினைக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இது மிக நல்ல கருத்தாகவே பட்டது. (இதற்குத் தனியாக ஒரு பதிவு எழுத முயற்சிக்க வேண்டும்)
* இந்திய ஊடகங்கள் குறித்த தன் கவலையை வெளிப்படுத்தினார். சமுதாய அக்கறை இல்லாமல் ஊடகங்கள் செயல்படுவதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு பிரணாய் ராய் அமீரின் கருத்தை அமோதித்ததில் பிரணாயின் அப்ஜெக்டிவிடி தெரிந்தது.
மொத்தத்தில், போலித்தனமில்லாத, பூசி மெழுகாத ஒரு நல்ல நிகழ்ச்சி.
Well, I am impressed with Amir!
2 Comments:
நானும் பார்த்தேன் அந்நிகழ்ச்சியை. நீங்கள் குறிப்பிட்டது போலவே தான் ஒரு பிரபலம் என்ற உணர்வில்லாமல் down-to-earthஆக இருந்தது அவரது பாணி. நீங்கள் குறிப்பிட்ட அதே கருத்துக்கள் எனக்கும் மகிழ்ச்சியைத் தந்தன.
ஒரே ஒரு சறுக்கல் என்று கூற வேண்டுமென்றால், அவர் விளம்பரங்களில் நடிப்பதைப் பற்றி கூறியது. "நான் உபயோகிக்கத் தகுந்தவை என்று நினைப்பவற்றையே endorse செய்கிறேன்" என்று நியாயப்படுத்தினார். Cokeஉம் அவரது endorsements பட்டியலில் குறிப்பிடப்பட்டதை நீங்கள் கவனித்திருக்கலாம். Cokeஐ உட்கொள்ளுவதால் ஏற்படும் பாதகங்கள் குறித்து இவ்வளவு விழிப்புணர்வுள்ள ஒரு நபருக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இது ஒன்றைத் தவிர அந்நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்பதே எனது கருத்தும்.
உங்கள் கருத்துக்கு நன்றி
கோக் குறித்து எனக்கும் தோன்றியதுதான். ஆனால் அமீர்கான் ஒரு ஐடியல் மனிதன் இல்லையே. புகைபிடித்திருக்கக் கூடிய ஒரு சாமானிய மனுஷன் தான். ஒருவேளை அவரைப் பொறுத்தவரை கோக் குடிப்பது பெரிய பிரச்சனையாகத் தோன்றியிருக்காது. அமீர் தனக்கு சரி என்று தோன்றுவதைச் செய்வதாகச் சொன்னாரே தவிர தனக்குத் தோன்றுவதெல்லாம் சரி என்று சொல்லவில்லை.
Post a Comment
<< Home