.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Friday, December 09, 2005

சூப்பர் ஸ்டாராகத் தேவையான தகுதிகள்

Your Ad Here

நம்மூரில் சூப்பர் ஸ்டாராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். விடை ஒன்றும் கிடைத்தபாடில்லை.

சிவாஜியை விட எம்ஜிஆரும் கமலை விட ரஜினியும் எந்த விதத்தில் சிறந்தவர்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.
கண்டிப்பாக எம்.ஜி.ஆரும் ரஜினியும் ஆக்ஷனில் பிரகாசித்தார்கள் என்றால் சிவாஜியும் கமலும் பெர்ஃபாமன்ஸில் பின்னி எடுக்கிறவர்கள்தானே. சொல்லப்போனால் இவர்கள் அனைவரையும் நடிகர்கள் என்ற அளவில் பார்த்தால் சிவாஜியும் கமலும்தான் முன் நிற்பார்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். ஆனால் ஏன் நம் ஜனத்துக்கு எம்.ஜி.ஆரும் ரஜினியும் உசத்தியாகத் தெரிகிறார்கள்?

'நம்மால் செய்ய முடியாதவற்றை இந்த ஆட்கள் செய்கிறார்கள்' என்ற பிரமிப்பா? நிழலை நிஜம் என்று நம்புகிற பிரச்சனையோ? இல்லை, தமது நடிப்பால் நம் உள்ளத்தைத் தொடுபவர்களை விட அன்றாடப் பிரச்சனைகளை சில நிமிடங்கள் மறக்கடிக்கிறவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

ஆனால், எம்.ஜிஆரைத் தம் 'வாத்தியாராக' பெரும்பான்மையான கிராம மக்கள் ஏற்றுக் கொண்டிருகிறார்கள் என்றால், ஒரு வயதுப் பையனுக்குக் கூட ரஜினியின் ஸ்டைல் பிடிக்கிறதென்றால், நமக்குத் தெரியாத காரணங்கள் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அல்லது இப்படி நியாயப்படுத்துகிற காரணங்கள் எதுவுமில்லாத 'தலை எழுத்தோ' என்கிற கேள்வியையும் உதற முடிவதில்லை.

இதற்கு மனோதத்துவ ரீதியான அல்லது கலாசார ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும் என்றே நம்புகிறேன். வல்லுனர்களின் கருத்தறிந்து ஒரு தீஸிஸ் எழுத ஆவல் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

13 Comments:

At December 09, 2005 6:48 AM, Blogger kirukan said...

//நிழலை நிஜம் என்று நம்புகிற பிரச்சனை//

M.G.R. திரையில் தாய்குலங்களை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவார். நிஜ வாழ்விலும் அவர் அப்படித்தான் என பலர் நினைத்தனர்.

இன்றும் அதே நிலை தான். ரஜினியை துாக்கி வைத்து ஆடுபவர்கள் பலருக்கு அவர் கொடைவள்ளல். ஆனால் அவர் வருமானவரி ஒழுங்காக கட்டினாரா என்று கூட யாருக்கும் தெரியாது.

 
At December 09, 2005 8:37 AM, Blogger தாணு said...

நம்மால் செய்ய வேண்டும்போல் தோன்றுபவை,ஆனால் முடியாதவை இன்னொருவரால் செய்யப்படும்போது, தன் சாயலை அதில் பார்க்கும் குணம்தான் இதன் மூல காரணம்.

 
At December 09, 2005 9:07 AM, Blogger ராம்கி said...

ஆனால் அவர் வருமானவரி ஒழுங்காக கட்டினாரா என்று கூட யாருக்கும் தெரியாது.

I think, i know well. :-)

ரஜினியை துாக்கி வைத்து ஆடுபவர்கள் பலருக்கு அவர் கொடைவள்ளல்.

I think, i don't know well :-)

 
At December 09, 2005 3:08 PM, Blogger துளசி கோபால் said...

//காரணங்கள் எதுவுமில்லாத 'தலை எழுத்தோ' என்கிற கேள்வியையும் உதற....//

அதே அதே. ஆண்டவன் அழுத்தி எழுதிட்டாருங்க. அவராலேயே அழிக்க முடியாதாமே!

 
At December 09, 2005 10:29 PM, Blogger நிலா said...

thank you for all the feedbacks

 
At December 09, 2005 10:51 PM, Blogger தேவ் | Dev said...

இது ஆற்றாமையின் வெளிப்பாடா?? இல்லை சக மனிதனின் வளர்ச்சியின் மீது எரிச்சலா??
இல்லை விளம்பரம் தேடும் முயற்சியா??
ஒரு பத்து வரிகளில் ஒரு மனிதனின் வளர்ச்சியை அளக்க நினைப்பது சரியா??
முதலில் எம்.ஜி.ஆர் , சூப்பர் ஸ்டார்... இவர்களைப் பற்றி ஒரு நடுநிலையாளராய் இருந்து அறிந்துக் கொண்டு பின் உங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

 
At December 10, 2005 12:22 AM, Blogger நிலா said...

DJ,

நான் எம்.ஜி.ஆர், ரஜினியைப் பற்றி தவறாக ஒன்றும் எழுதிவிடவில்லையே... அவர்கள் புகழுக்கான காரணங்களை ஆராய முயல்கிறேன். நீங்கள் நடுநிலையாளராக இருந்து காரணங்களைச் சொல்லலாமே?

 
At December 10, 2005 4:30 AM, Blogger தேவ் | Dev said...

காரணம் ... ஒன்றுக்கும் மேற்பட்டது... நடிகர்கள் தாங்கள் கொடுப்பதை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பவர்கள். சூப்பர் ஸ்டார்கள் மக்கள் தங்களிடம் எதிர்ப்பார்ப்பதைக் கொடுப்பவர்கள். அவர்கள் தங்கள் உயரத்திற்கு மக்கள் வர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். சூப்பர் ஸ்டார்கள் உயர இருந்தாலும் மக்கள் பக்கம் அடிக்கடி இறங்கி வருபவர்கள். அவர்கள் கிளாஸ் ...இவர்கள் மாஸ்....

 
At December 10, 2005 5:31 AM, Blogger நிலவு நண்பன் said...

நம்மால் முடியாதவற்றை அவர்கள் செய்கிறார்களே என்ற ஆர்வத்தில்தான் அவர்கள் மீது பற்றுதல் வர காரணமாகி விடுகிறது..

ஆனாலும் அவர்களுக்குள்ளும் தனிப்பட்ட திறமை உண்டு என்பதை மறுக்க முடியாது.

 
At December 11, 2005 4:57 AM, Blogger "வற்றாயிருப்பு" சுந்தர் said...

//இதற்கு மனோதத்துவ ரீதியான அல்லது கலாசார ரீதியான காரணங்கள் இருக்கக் கூடும் என்றே நம்புகிறேன்.//

அரைப்பக்கத்தில் எழுதிவிட முடியாத விஷயம் இது. சுருக்கமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இதில் கலாசார ரீதியாக ஒரு காரணமும் கிடையாது (அய்யோ. இங்கும் கலாசாரமா?).

முரட்டு ரவுடி ஒருவன் வெறியுடன் கேமராவை நோக்கி ஓடி வருகிறான். அருகில் நெருங்கியதும் சுவற்றிலடித்த பந்து போல அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு பல குட்டிக் கரணங்கள் அடித்து தெறித்துப் போய் விழ, இப்போது நாம் திரை முழுக்கப் பார்ப்பது ஒரு ஷூவின் அடிப்பாகம். ஷூ மெல்ல விலக பின்னால் மங்கலாக ரஜினியின் புன்னகை முகம் தெரிகிறது. இந்தக் காட்சியின் போது 'ரஜினியின் படத்தை முதன்முறையாகப்' பார்க்கும் என் மூன்று வயது மகள் துர்காவின் முகத்தில் லேசாகப் புன்னகையும், பிரமிப்பும் தோன்ற ஆரம்பித்து, சிரிப்புப் பிரிதாகி, பின்னர் பயங்கர குஷியுடன் தாவிக்குதித்துக் கைதட்டி ரசிக்க ஆர்மபித்துவிட்டாள். அவளுக்கு ரஜினியின் பெயர் தெரியாது. தமிழ் தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் மீறி அவளை ரசிக்க வைத்து ஈர்க்க வைப்பது, Super Power உள்ள ஒரு நல்ல மனிதன் தீயவர்களைப் பந்தாடுவதே - ஒருவித பாதுகாப்பு உணர்வு மனதில் தோன்றுவதே. இது குழந்தைகள் இளைஞர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் ஆழ்மனதில் ஆதாரமாக இருக்கும் - தீயவற்றை, தீயவர்களைப் பார்த்ததும் தோன்றும் பயம்! (தைரியசாலிகளும் பயமில்லாதவர்கள் மாதிரி நடிப்பவர்கள்தான்! :))

இது தவிர நிறைய காரணங்கள் இருக்கின்றன.

சிவாஜி, கமல் எம்.ஜி.யார் ரஜினி மாதிரி பெரிய அளவில் பேசப்படாததற்குக் காரணம் - தமிழகத்தில் சினிமா ஒரு கலையாக மட்டும் பார்க்கப்படவில்லை - வாழ்வியல் உதாரணமாக பெரும்பான்மைப் பாமரர்களால் பார்க்கப்படுகிறது.

நடிப்பு என்ற அளவுகோலில் பார்த்தால் என்னைப் பொருத்தவரை வீடு படத்தில் நடித்த சொக்கலிங்க பாகவதர் சிவாஜி கமலை விட ஒரு படி மேலேயே நடித்திருந்தார்!

இது நம்மூரில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் நடப்பதுதான். ரஜினியைப் போலவே ஜாக்கி சானையும் என் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அமெரிக்காவில் ஆர்னால்டு "சுவாசிக்கிறார் நேசிக்கிறார்" கவர்னராகவே இருக்கிறார். இன்னும் நிறைய உதாரணங்கள் காட்டமுடியும்.

சுருக்கமாக, "சாமான்யர்கள் மிக அதிக உயரத்தை அடையும் போது அவ்வுயரத்தை அடைய முடியாத சாமான்யர்கள் - உயர்ந்தவர்களை தங்கள் ரோல் மாடலாகக் கொள்கிறார்கள்" என்று சொல்லி (மழுப்பி?) வைக்கிறேன்.

நீங்கள் சொன்னது போலவே இது ஒரு Thesis எழுதும் அளவிற்குப் பெரிய விஷயம்தான்.

நன்றி.

பி.கு. நீங்க மம்சாவுரமா? அப்ப வத்திராயிருப்புப் பக்கந்தான்! :)

 
At December 11, 2005 6:23 AM, Blogger நிலா said...

சுந்தர்,
நச்சுன்னு எழுதியிருக்கீங்க. பாராட்டுக்களும் நன்றிகளும்.

//(அய்யோ. இங்கும் கலாசாரமா?)// இந்தக் கேள்விக்கு நீங்களே இப்படி பதிலும் சொல்லி இருக்கிரீர்கள்:

//சிவாஜி, கமல் எம்.ஜி.யார் ரஜினி மாதிரி பெரிய அளவில் பேசப்படாததற்குக் காரணம் - தமிழகத்தில் சினிமா ஒரு கலையாக மட்டும் பார்க்கப்படவில்லை - வாழ்வியல் உதாரணமாக பெரும்பான்மைப் பாமரர்களால் பார்க்கப்படுகிறது//

இந்தக் கருத்தை நான் முற்றும் ஆமோதிக்கறேன்

//ஒரு நல்ல மனிதன் தீயவர்களைப் பந்தாடுவதே - ஒருவித பாதுகாப்பு உணர்வு மனதில் தோன்றுவதே.//

//இது நம்மூரில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் நடப்பதுதான்//

இதில்தான் எனக்கு சந்தேகம். ரஜினியின் காட்சியைக் கண்டு உங்கள் மகள் ரசிப்பது போல் ஒரு மேற்கத்தியக் குழந்தையும் ரசிக்குமானால் இதற்குக் கலாசாரக் காரணங்கள் இல்லை என நாம் கொள்ளலாம். அத்தகைய ஒரு சோதனையை நடத்துவதற்கு பிபிசியின் நிதி உதவியுடன் டாக்டர் ராப்ர்ட் வின்ஸ்டனுக்குத் தான் வாய்ப்பு இருக்கிறது :-) (டாக்டர் வின்ஸ்டன் 2000ம் ஆண்டில் பிறந்த பல்வேறு சமுதாயப் பின்னணியில் வளரும் 20 குழந்தைகளை 20 ஆண்டுகளுக்குக் கண்காணிக்கும் ஒரு விவரணப் படத்தை எடுத்து வருகிறார்.)

மேற்கத்திய மனிதர்கள் மிஷன் இம்பாஸிபிளை ரசிக்கும் அளவுக்கு டைட்டானிக்கையும் ரசிக்கிறார்கள் என்பது எனது கணிப்பு (ஒரு வேளை என் கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம். மற்றவர்களின் கருத்தினை அறியவும் ஆவல்). அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகருக்கு ரஜினி அளவோ அல்லது எம்.ஜி.ஆர் அளவோ புகழ் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் கவர்னரானதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சினிமா மட்டுமே காரணமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

அதே சமயம் அடுத்து மெல்கிப்சனை கவர்னராக்கவும் ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. கிப்ஸன் ஆக்ஷன் நடிகர் மட்டும் அல்லவே! என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த 'தீயவர்களைப் பந்தாடுகிற நல்லவர்களை' மற்ற சமுதாயங்கள் நிஜமென்று நம்பி கொண்டாடுவதாக நான் கருதவில்லை. அதனால்தான் கலாசாரக் காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.

பி.கு: அப்படிப்போடுங்க, வத்ராப்பா நீங்க?

 
At December 11, 2005 8:22 AM, Anonymous Anonymous said...

//ரஜினியின் காட்சியைக் கண்டு உங்கள் மகள் ரசிப்பது போல் ஒரு மேற்கத்தியக் குழந்தையும் ரசிக்குமானால் இதற்குக் கலாசாரக் காரணங்கள் இல்லை என நாம் கொள்ளலாம்//

What about the Japanese?

 
At December 11, 2005 8:23 AM, Anonymous Anonymous said...

//சிவாஜியை விட எம்ஜிஆரும் கமலை விட ரஜினியும் எந்த விதத்தில் சிறந்தவர்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவே இல்லை.//

Hiyo Paavam U

 

Post a Comment

<< Home