.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, December 12, 2005

நாட்டுப்பற்று என்பது ஒரு மாயைதானோ?

Your Ad Here

அமீர்கானின் என்.டி.டி.வி நேர்முகம் எனக்குள் இருந்த சில கேள்விகளை உசுப்பிவிட்டுவிட்டது. சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் குடியேறல் விஷயமாய் பேசிக்கொண்டிருந்த போது, 'உலகமே ஒரு கிராமம் போல சுருங்கிவிட்ட பிறகு எந்த நாட்டின் குடிமகனாய் இருக்கிறோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பாஸ்போர்ட், விசா எல்லாம் வெறும் காகிதம், அவ்வளவுதான்.நாட்டுப் பற்று என்பதெல்லாம் விரைவில் போய்விடும் ' என்றார். சிந்தனையைத் தூண்டியது அவர் கருத்து.

பின்பு 'இந்தியர்களை இணைப்பது எது?' என்ற கேள்வி ஒரு மேலை நாட்டுக்காரரால் எழுப்பப்பட, மீண்டும் அந்த சிந்தனை வலுப்பெற்றது. இந்தி தெரியாத தமிழர் ஒருவர் வட இந்தியாவை விட அமெரிக்கா ஒன்றும் தனக்கு அன்னியமாய்த் தெரியவில்லை என்று நேர்மையாகச் சொன்னபோது அது எனக்கு நியாயமாகத்தான் பட்டது.

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் நண்பர் ஒருவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்குதான் கழித்திருப்பதால் தன் தாய்நாட்டையும் இங்கிலாந்தையும் ஒரே போல்தான் பார்க்கமுடிகிறதென்றார். எனக்கு அதில் தவறொன்றும் இருப்பதாகப்படவில்லை.

அப்படியானால் நாட்டுப் பற்றென்பது என்ன? பிறந்த நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பா? இல்லை வசிக்கிற நாட்டின் மேல் வைத்திருக்கும் பாசமா?

ஒரு வெள்ளத்தில் நல்லவனான சீனன் ஒருவனும் கெட்டவனான இந்தியன் ஒருவனும் அடித்துச் செல்லப்படும்போது நமக்கு ஒருவரை மற்றும் காப்பாற்றுகிற வல்லமை இருந்தால் யாரைக் காப்பாற்றுவோம்?

'நாடு என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட பிரிவினை. ஆன்மீகவாதிக்கு எல்லா நாடும் எல்லா மக்களும் சமம்தான்' என்பது போல் நாட்டுப்பற்று என்பது ஒரு மாயைதானோ?

பி.கு: படித்தலும் பகிர்தலும் சிந்தையை விரிவுபடுத்தும் என்பது என் எண்ணம். அதனால்தான் என் குழப்பங்களை இங்கு கேள்விகளாக வைக்கிறேன். என் கருத்துக்களெல்லாம் சரி என்று சொல்ல வரவில்லை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

At December 12, 2005 8:31 AM, Blogger Samudra said...

Beg to disagree!
Patriotism still has its place in our 'global village'.

You see, if you dont feel proud about your country, you dont identity yourself with your nation, would that not make you prone to slavery ?

One Nationalism can easily swallow all other such 'open minded' 'citizens of the world' communities!

Because if you dont identity yourselves with something,how are you going to defend it ?

We live in a "Dog Eat Dog" world, where every country is looking to finish off the other country.

We may not want to swallow the other chap, but HE is ALWAYS looking for the NEXT CHANCE!

We have done it in the past, they have done it in the past.Its nothing Amazing.Its DARWINISM.

Therefore it is not imporant that a individual identifies himself with his country and remains a patriot, for you never know when the next invasion is going to come.

We do see a lot of 'invasions' in our day to day lives, something which Amir Khan waxes eloquent about, but then he goes on to say Patriotism has no place in this world.Hypocrite eh ?

 
At December 12, 2005 8:32 AM, Blogger Samudra said...

//in our day to day lives,//

Pls read that as "in our lives"

 
At December 14, 2005 2:40 AM, Anonymous Raajk said...

Well...

The difference between east and west today is...East has demographic strengh whereas West is wealthy.

Now,

One of the hot topics in America today is Outsourcing and Drain of jobs to countries such as India and China. Beacuse Indians and chinese are taking away american jobs as they are cheaper but intelligent. And suddenly there are question raised in america about Globalisation and whether it is beneficial.

So the point is, as long as it is beneficial for the Western Capital(money) to make more money in developing countries(through MNCs),we will be told about the boons of globalisation. we will be told about global citizenry etc...

But, as countries such as India become more and more powerful using their Human Resource Capital, we all will surely witness
the opposite being propogated...


(sorry, if it was not clear)

 
At December 14, 2005 3:02 AM, Blogger தேவ் | Dev said...

Nila, Ithai.. ithai thaanae edhir paartheengaa...

mmmm naveena naradharaa neengaa

 
At December 15, 2005 12:09 AM, Blogger நிலா said...

தேவ்,
அப்ப நம்மளால ஏதோ நல்லது நடக்கும்கறீங்க? :-))
நன்றி

 
At December 15, 2005 8:59 AM, Blogger சாமான்யன் said...

நிலா,

மாற்றம் என்ற சொல்லை தவிர எல்லாமே மாறும் என்பதுதான் உலக் நியதி. தமிழகப் பட்டிகாட்டில் பிறந்த நீங்கள் இன்று இங்கிலாந்தில் வசிக்கிறீர்கள். அழகாக தமிழில் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறீர்கள்.

ஆனால் போக போக என்னவாகும் ? இந்த நிலை இப்படியே நீடிக்குமா? இங்கிலாந்தில் பிறந்து வளரும் உங்கள் பிள்ளை உங்களைப் போல் தமிழின் பாலும், இந்திய கலாச்சாரத்தின் பாலும் ஈர்ப்பு கொள்வாரா? கொள்ளலாம். ஆனால் அப்படி நடக்காது என்பதுதான் பொதுவான் நடைமுறை உண்மை. இந்தியா பால் உங்கள் குடும்பத்திற்கு உள்ள ஈர்ப்பு குறைவது தின்னம் என்று தெரிந்தும், நீங்கள் ஏன் தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க விலைகிறீர்கள்? காரணம் 'இது தான் எனக்கு முக்கியம்' என்று நீங்கள் உங்களுக்காக விதித்து கொண்ட உண்மைகளின் தாக்கம் அப்படி.

இந்த வகையில் நாம் யாவரும் ஒன்றுதான். பேசுவதற்கு, எழுதுவதற்கு என்று வாய்ப்பு கிடைக்கும்போது எது எதையோ பற்றி பேசுவோம் எழுதுவோம். ஆனால் நமக்கு எது முக்கியம் என்று வரும்போது, அது பெரும்பாலும் கூடுதலான சம்பாத்தியமாகவும், நல்ல வேலை வாய்ப்பாகவும், பிள்ளைகளுக்கு சிறந்த படிப்பாகவும் தான் இருக்கும். அதற்கெல்லாம் பிறகுதான் உண்மையான நாட்டு பற்று, தாய் மொழி ஈர்ப்பு என்பதெல்லாம்.

 
At December 17, 2005 6:47 AM, Anonymous Anonymous said...

உலகமே மாயம் இதில் நாடென்ன பற்றென்ன?

 
At March 10, 2006 11:04 AM, Blogger nathan said...

dear
i really agree ur comments becoz patriotism will not play any important roll in any point of our life. if we work hard we gonna get wages for that, , having patriotizm may give self satisfaction only, apart from that nothing.......

 

Post a Comment

<< Home