.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, December 14, 2005

கவுண்டமணி வாழ்க!

Your Ad Here

ரொம்ப நாளா இதை யார்கிட்டேயாவது சொல்லணும்னு தோணிக்கிட்டே இருந்திச்சி. இருக்கவே இருக்கு வலைப்பதிவு!

தலைவர் கவுண்டமணியை ரொம்ப நாளா காணாம கொஞ்சம் வெசனமா கெடக்கு. சரி, கவுண்டரதேன் காணும், அவரு பழைய தமாசையாவது நெனச்சுப் பாக்கலாம்னு கெள்ம்பீட்டேன்

1. தலைவரு 'எப்ப கடா வெட்டுவாங்க'ன்னு நான் பாடும் பாடல்ல என்னமா கலக்கி இருப்பாரு! பாத்திருக்கீகளா? அந்த சோக்க டிவிலயும் காட்டா மாட்டேங்குறாக, டிவிடிலயும் கெடைக்க மாட்டங்குது. அதே படத்தில விருந்தாளி வாராகன்னு கறி வாங்கிட்டு வரச்சொல்லி பொண்டாட்டி காசு குடுத்து அனுப்புவா. குவார்ட்டர் அடிச்சிட்டு ரெண்டு ரூபாய்க்கு பை நெறைய அடுப்புக்கரி வாங்கிட்டு வந்து நல்லா மொத்து வாங்குவாரு.

2. எங்க தங்க ராசான்னு நெனக்கேன் - செயில்லருந்து வந்து சொத்துக்காக ஒரு கெழவரோட பேரனா நடிப்பாரு. அவர செந்தில் அப்பப்ப மாட்டிவிடுறதும் கவுண்டரு வாய் பேச முடியாம விடுற லுக்கும் சுப்பர்! அந்த ஒரு லுக்கிலயே செந்திலை 'இந்தத் தலையா அந்தத் தலையா'ன்னு வஞ்சி, மிதிச்சி, துவைச்சி காயப் போட்ருவாரு.

2.வாழப்பழக் காமெடியைப் பத்தி நான் சொல்லவே வேண்டாம்.முக்குக்கு முக்கு மைக் செட்ல போட்டு வசனமெல்லாம் எல்லாப் புள்ளக்காடுகளுக்கும் மனப்பாடம் ஆயிருச்சி. அத எப்ப நெனச்சாலும் சிரிப்பு பொங்குதுல்ல.

3. கவுண்டருக்கு சரியான சோடின்னா அது சத்திய ராசுதான். புது மனிதன்னு ஒரு படத்தில ரெண்டுபேரும் அடிக்கிற தமாசு தாங்க முடியாம வவுத்தப் பிடிச்சிக்கிட்டு குனிஞ்சிக்கிட வேண்டியதாப்போச்சு. 'பவ்யமா வாத்தியார் கிட்ட போங்கடா'ன்னு மனோரமா சொல்ல, கவுண்டரு சமையலுக்கு வச்சிருந்த வாழப்பூவ எடுத்து காதில மாட்டிக்கிட்டு கெளம்பிருவாரு.

4.இப்பிடித்தேன் இன்னொரு படம் - மாமன் மகள்னு நெனக்கேன். கோடீஸ்வரனா சதிதிய ராசு வேசம் போட தலைவரு ஜால்ராவா இருப்பாரு. போட்ட வேசம் கலைஞ்சு போயிரும். அது தெரியாம சத்திய ராசு கதை விட்டுக்கிட்டே போக அண்ட்ராயரோட கவுண்டரு தவழ்ந்து வந்து சத்யராசுகிட்ட "போதும்டா..."ன்னு சொல்ல்ற சீனு அம்புட்டு சிரிப்பா இருக்கும்

5. உள்ளத்தை அள்ளித்தா படத்தில செந்தில் மணிவண்ணன கடத்திக்கிட்டுப் போயி போன் செய்வாரு. நாப்பதாயிரத்திலருந்து கொறச்சு கொறச்சு நானூறு ரூபாயில வந்து நிப்பாரு. "வேன் வச்சில்லாம் கடத்திருக்கோம் கொஞ்சம் பாத்துக் குடுங்க'ன்னு செந்தில் அழாத குறையா கேக்க,"ஒரு அம்பது ரூவா போட்டுத் தாரேன். அவன சேவ் பண்ணிக் கூட்டிவா"ம்பாரே, செம லொள்ளுல்ல. படம் முழுக்கா அவரு ரவுசு தாங்காது. அந்தப் படத்துக்கு திருப்தியா காசு குடுக்கலாம்யா.

இப்பிடி சும்மா நெனச்சுப்பாத்து சிரிக்க வேண்டியதுதான் போல. கவுண்டருக்கு வயசாயிருச்சி. இனிமே புதுப்படம் என்னத்த நடிக்கப்போறாரு.
நல்லா சிரிக்கா வைக்க மவராசன். நெறையா நாளு வாழட்டும்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

16 Comments:

At December 14, 2005 7:58 AM, Blogger மாயவரத்தான்... said...

* ஒரு படத்திலே குறுக்க வர்ற போலீஸ் ஜீப்பை புடிச்சு நிறுத்தி இன்ஸ்பெக்டரை வாட்ச்மேனா நெனச்சு பேசி, ஸ்டேஷனிலே தர்ம அடி வாங்கிட்டு உட்கார்ந்திருப்பாரு. வெளில வரும் போது ஒரு போலீஸ்காரரு, "இனிமேவாச்சும் இப்படி செய்யாதீங்கப்பா" அப்படீன்னு சொன்ன உடனே, "கருத்து சொல்றாராம்" அப்படீன்னு கவுண்ட்ஸ் கலக்கலா கமெண்ட் அடிப்பாரே.! சூப்பர்!!

* சின்னக்கவுண்டர் "ஆத்தா...நீ வாயத் தொறக்காத ஆத்தா" ஜோக்?!

* சின்னத்தம்பி "டேய் அப்பா...என்னாடா செஞ்ச...சாயங்காலம் ஆறு மணி ஆனா கண்ணு தெரிய மாட்டேங்குது.." (கோடி ரூபா கொடுத்தாலும் 6 மணிக்கு மேல வேல பாக்க மாட்டேன்!) ஜோக்?!

* சூரியன்,"டேய் நாராயணா... கொசுத் தொல்லை தாங்க முடியலடா" (அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!) ஜோக்?!

இன்னும் நெறய இருக்கு...!

கவுண்டர் கவுண்டர் தான்யா!!!

 
At December 14, 2005 8:33 AM, Blogger நிலா said...

நன்றி, மாயவரத்தான்

இன்னும் நெறையாவே இருக்கு. நேரம்தானில்லை.

ஒரு படத்தில பெண்டாட்டிகிட்ட வீட்டுக்குள்ள தர்ம அடி வாங்குவாரு. தப்பிச்சி வெளியில ஒடி வரும்போது அருவாளோட வந்து 'வெட்டிப்போடுவேன் அவளை'ன்னு உதார் விடுவாரு. உள்ளேர்ந்து அந்தம்மா ஒரு குரல் குடுத்ததும் ஒட்டுவாரே ஓட்டம்.
செமையான பாடி லேங்குவேஜ்!

 
At December 14, 2005 9:10 AM, Anonymous Anonymous said...

சேரன் பாண்டியன் படத்தில் கிணற்றுக்குள் பம்புசெட் ரிப்பேர் பார்த்துக்கொண்டிருக்கும் கவுண்டமணி முகத்தில் சிவப்புப் பெயிண்ட் டப்பாவை உதைத்துத் தள்ளிவிட்டுப் பின் பதறியபடி செந்தில் "அண்ணே, இப்பதாண்ணே வெள்ளைக்காரன் மாதிரி செக்கச்செவேர்னு இருக்கீங்க" எனும்போது முகத்தில் வழியும் சிவப்புப் பெயிண்ட்டுடன் கவுண்டமணி விடும் ஒரு லுக்கு இருக்கிறதே!!

ஆவாரம்பூ படத்தில் ஷர்மிலி வீட்டுக்குப் போய் பயில்வான் ரங்கநாதனிடம் உதைபடும் காட்சி: "எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்னு சொன்னா எப்படி? கட்டிலுக்குக் கீழ ஒருத்தன் இருக்கானே, அவனையும் கேக்கறது" ;-)

என்னதான அடி உதை என்று் சொன்னாலும், படத்தோடு பார்த்தால் கவுண்டமணி-செந்தில் தனி தான்!!

 
At December 14, 2005 9:14 AM, Blogger முகமூடி said...

எனக்கும் கவுண்டர் காமெடி ரொம்ப பிடிக்கும்.. நிறைய காட்சிகளை ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிட்டீர்கள்..

 
At December 15, 2005 12:11 AM, Blogger நிலா said...

Anonymous,
//என்னதான அடி உதை என்று் சொன்னாலும், படத்தோடு பார்த்தால் கவுண்டமணி-செந்தில் தனி தான்!! //

ஆரம்பத்தில் 'உதைப்பதும் திட்டுவதெல்லாம் ஒரு நகைச்சுவையா?' என்கிற விமர்சனம் இருக்கத்தான் செய்தது. பின்பு அந்த அடி உதையையும் கூட க்ரியடிவ் ஆக பண்ணமுடியும் என்று மக்கள் கண்டு கொண்டார்கள் என்று நினைக்கிறேன்

முகமூடி, பின்னூட்டத்துக்கு நன்றி

 
At December 15, 2005 1:30 AM, Blogger தாணு said...

//கவுண்ட்ஸ்-செந்தில் காமெடி ட்ராக்// தனி சிடி யே இருக்கு. எங்க வீட்லே அடிக்கடி அதுதான் ஓடும்.

அதுபத்தி பேசினோம்னா நாள் முழுக்க உங்க பதிவிலேயே ஓடிடும் நிலா!!

 
At December 15, 2005 1:32 AM, Blogger ramachandranusha said...

//அதுபத்தி பேசினோம்னா நாள் முழுக்க உங்க பதிவிலேயே ஓடிடும் நிலா!! //
athee, athee

 
At December 15, 2005 1:48 AM, Blogger அன்பு said...

"ஏண்டா எப்பத்தாண்டா நாங்கா பொண்டாட்டியை அடிக்கிறது...!?"...

நிற்க,
மம்சாபுரம் - இருக்கன்குடி பக்கம் இருப்பதா!? (இருக்கன்குடி தெரியாட்டி விட்டுடுங்க:)

 
At December 15, 2005 6:08 AM, Blogger Maravandu - Ganesh said...

//மம்சாபுரம் - இருக்கன்குடி பக்கம் இருப்பதா!? //

அன்பு

இது வத்ராப் கிட்ட இருக்குற மம்சாபுரம்

இருக்கங்குடி சாத்தூர் கிட்டலே இருக்கு

 
At December 15, 2005 6:24 AM, Blogger நிலா said...

நன்றி,கணேஷ்

நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே...

 
At December 15, 2005 7:55 PM, Blogger யாத்திரீகன் said...

கிளாசிக் வைதேகி காத்திருந்தாள் படத்த விட்டுட்டீங்க..

கூடை வைச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் தர்ரதில்லை.. தீப்பந்தம் வேணுமா..

அண்ணே.. இது எப்படினே எரியும்...

மன்னன் படத்துலயும் ரஜனிகூட நல்ல காமெடி இருக்கும்..

நடிகன் படத்துல சத்யராஜோட சரி அலும்பல்..

இப்படி சொல்லிக்கிட்டே போலாம்..

என்னதான் ஒரு டைத்துல கொஞ்சம் வரம்பு மீறி இருந்தாலும்.. இப்ப இருக்குற "கடி"-வேலுவுக்கு எல்லாம் எவ்வளவோ தேவலை..

-
செந்தில்/Senthil

 
At December 15, 2005 8:26 PM, Blogger அன்பு said...

நன்றி,கணேஷ்.

நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே...

மரவண்டு யாரா!? அவர் நிலாச்சாரல்ல ஏதும் கைவண்ணம் காட்டவில்லையா இதுவரை?

 
At December 15, 2005 8:31 PM, Blogger சுதர்சன்.கோபால் said...

சூரியன்:
ஓமக்குச்சி: "சேலத்தில் முக்கிய பிரமுகர் கைது"
கவுண்டபெல்: "ஏன்,கோயம்தூர்ல முக்குனா கைது பண்ண மாட்டாங்களா???நாராயணா,இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலைடா."
அப்புறம் அந்த காந்தக் கண்ணழகி பிட்."ஸ்டார்ட் த ம்யூசிக்.அங்கே பூசு.ஆ.இங்கே பூசு.ஆ.லெஃப்டில பூசு..."

இந்தியன்:
க்ரேசி மோகன்:"திஸ் இஸ் டூ மச்.நான் இதப் பத்தி இந்துல எழுதுவேன்."
கவுண்டபெல்:"இந்துல எழுதிவியோ.இல்ல சந்தில எழுதிவியோ."

 
At December 15, 2005 10:06 PM, Blogger நிலா said...

செந்தில்,
ஆல் இன் ஆல் அழகு ராஜாவை ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி.

அன்பு,
கணேஷ் ஒரு பதிவில என்னை ஞாபகமிருக்கான்னு கேட்டிருந்தார். கணேஷ்ங்கற பேருல நிறையப்பேரைத் தெரியும். அதுவும் எல்லாருமே இணையம் வழிதான் தெரியும்கறதுனால யாருன்னு சரியா அடையாளம் காண முடியலை. தவிர, அவரோட எழுத்தெல்லாம் பார்த்தா எங்க ஊருப்பக்கம் மாதிரி தெரியுது. ஒரு வேளை ஊர்க்காரரா இருப்பாரோன்னு கேட்டேன்.

சுதர்சன்,
சூரியன் காமெடியும் சரி லொள்ளுதான்

இன்னொரு படத்தில செந்திலும் கவுண்டமணியும் சகோதரர்களா இருப்பாங்க. ஆனா சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. திடீர்னு நடு ராத்திரில ரெண்டு பேருக்கும் ஞானம் வந்து பாசத்தில உருகுவாங்க. கவுண்டரு செந்தில்கிட்ட, "ராஜா, இனிமே நான் உன்ன அடிக்கவே மாட்டேம்மா" அப்படின்னேல்லாம் டயலாக் உடுவாரு. அப்புறம் திடீர்னு செந்தில் கவுண்டரை எழுப்பி, "உங்களுக்கு கை,கால் வெளங்காமப் போகணும்னு சூனியம் வெச்சேனே, அதை எப்படி சரி பண்றது"ங்கற மாதிரி ஏதோ கேட்க, தர்ம அடி ஸ்டார்ட் ஆயிரும். செமையான சீன் அது.

 
At December 15, 2005 11:48 PM, Blogger அன்பு said...

நிலா...
நான் விளையாட்டாத்தான் அவ்வாறு அறிமுகப்படுத்தினேன்.
ஒரு கணேஷ் இவரு(சிவகாசி(?)/பெங்களூரு), இன்னொருவர் கோ.கணேஷ் (கோவில்பட்டி/டெல்லி) எல்லாம் நம்ப ஏரியாதான்...!

 
At December 17, 2005 2:12 AM, Blogger நிலா said...

அன்பு, நீங்களும் நம்ம ஏரியாவா? எந்தூருங்க?

 

Post a Comment

<< Home