'உன்னை நானறிவேன்' கமல்
குணாவில் வரும் 'உன்னை நானறிவேன்' பாடல் எனது ஆன்மாவைத் தொட்ட பாடல்களில் ஒன்று. ஜானகியின் குரலை விட வரலட்சுமியின் குரலில் பாவம் அதிகம் இருந்ததாய்ப் படும். மனநிலை சரியில்லாத மகனைக் குறித்த இயலாமை வெளிப்படும்.
நான் யாருக்கும் சட்டென்று ரசிகையாகி விடுகிற ரகமல்ல. கமலை எனக்கு சில படங்களில் மிகவும் பிடிக்கும்; சில படங்களில் அறவே பிடிக்காது. அப்படிப் பிடித்த படங்களில் ஒன்று குணா. பல காட்சிகளில் மிகவும் இயல்பாய் செய்திருப்பார். அதில் ஒன்று ரேகா பாடும் 'உன்னை நானறிவேன்' பாடலுக்கு முன் இடம் பெற்றிருக்கும்'வரும் வரும் வரும்' காட்சி. அந்தக் காட்சிக்காகவே கமலுக்கு ஆயிரம் விருதுகள் கொடுக்கலாம்.
என்னைக் கவர்ந்த அவரின் மற்றொரு பர்ஃபார்மன்ஸ் பாலச்சந்தரின் 'அவர்கள்' படத்தில். மலையாள ஜானியாகவே வாழ்ந்திருப்பார். கமல் ஒரு காட்டாற்று வெள்ளம் போல என்று நினைக்கிறேன். அவரை நெறிப்படுத்த நல்ல இயக்குனர் தேவை என்பது என் எண்ணம். பாலச்சந்தர் அதைப் பல சமயங்களில் நன்றாகச் செய்திருந்தாலும் புன்னகை மன்னனில் சற்று கோட்டை விட்டுவிட்டார்
பல படங்களில் கமல் ஒவர் ஆக்ட் செய்து முற்றிலும் சொதப்பி எடுத்துவிடுவார். அவருடைய முக்கால்வாசி கமர்ஷியல் படங்கள் அப்படித்தானிருக்கும் (எ.கா: உயர்ந்த உள்ளம், காக்கி சட்டை, ஆளவந்தான், பீ.கே.எஸ்)
காமெடி செய்யும் கதாநாயகர்களில் முதலிடம் கமலுக்குத்தான். சதி லீலாவதி, மை.ம.கா.ராஜன், ஷண்முகி எல்லாம் க்ளாஸ் காமெடி. ஆனால் காதலா காதலா, வசூல் ராஜாவிலெல்லாம் ஏகத்துக்கு சொதப்பி இருப்பார்.
கமல் இன்னும் அவரின் முழு ஆற்றலையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் கணிப்பு.
12 Comments:
உண்மை நிலா. அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் கரைந்து போவேன். குணாவின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துபவை... அந்த படத்தின் பாத்திரங்கள் போலவே
"காமெடி செய்யும் கதாநாயகர்களில் முதலிடம் கமலுக்குத்தான்.
பிடித்த படங்களில் ஒன்று குணா."
இரண்டில் முதலாவது கூற்றை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவதில் ஒரு திருத்தம்: எனக்கு மிக மிக...பிடித்த படம்.
படம் பார்த்ததும்எழுதிவைத்தது காணாமல் போய்விட்டது. மறுபடி முயற்சிக்கணும்.
அபிராமி...அபிராமி...
அடடா. குணாவைப் பற்றிப் படிச்சதும் பரபரன்னு இருக்கு எனக்கு.
உன்னை நானறிவேன் மட்டுமல்ல - அந்தப் படத்தின் மொத்த இசையும் கேட்கும்போது மகுடிக்கு மயங்கும் நாகம் போல ஆகிவிடுவேன்! அதிலும் பின்னணி இசை... சிலிர்க்கிறது எனக்கு.
அந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பாகச் சொல்ல நிறையவே இருக்கிறது.
போனமாதம் ஒரு பதிவு போட்டிருந்தேன். http://agaramuthala.blogspot.com/2005/11/blog-post_113138425311814477.html
படித்தீர்களா என்று தெரியவில்லை. அதில் இப்பாடலைப் பற்றிக்குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பார்க்கவும்.
நன்றி, முத்துக்குமரன், தருமி
சுந்தர், உங்கள் பதிவைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. கமல் காமெடி செய்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை போல் தெரிகிறது. எனக்கு அவர் இன்னும் காமெடி செய்ய் வேண்டும் ஆனால் சதிலீலாவதி போல இயல்பாய்ச் செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டு.
//காமெடி செய்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை //
அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை நிலா. நீங்கள் சொன்ன அதே குப்பைப் படங்களை அவர் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதே சொல்ல வந்தேன்.
சதிலீலாவதியை மட்டும் ஒரு 25 தடவையாவது பார்த்திருப்பேன். நகைச்சுவை நடிப்பில் எந்த நகைச்சுவை நடிகருக்கும் அவர் சளைத்தவரில்லை.
கமலின் நகைச்சுவை பற்றிமட்டுமே நிறைய பேசலாம்.
தமிழ்ச்சினிமாவில் தங்கவேல், நாகேசை விட்டால் எனக்குப்பிடித்த நகைச்சுவை நடிகர் கமல்தான்.
அண்மையில் தந்த மும்பை எக்ஸ்பிரஸ்கூட என்னை மிகவும் கவர்ந்தது தான்.
ஆனால் யாருக்கு அந்தப் படத்தைக் கொடுத்தார் என்பதில்தான் அதன் வெற்றிதோல்வி இருக்கிறது.
கவுண்டமணி செந்திலை உதைப்பதையும், மிகக்கடுமையான கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டுவதையும், விவேக்கின் கருத்துக்கந்தசாமி வகையையும், வடிவேலுவின் கத்தலையும் தான் நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு, அவற்றை "மட்டுமே" நகைச்சுவையாக ரசிக்கத் தெரிந்த ஒரு சமூகத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் போல ஒரு படத்தைக் கொடுக்க நினைத்தது கமலின் தவறுதான்.
இன்று வரும் புதுக் கதாநாயகர்கள் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்கும் வேடங்களைத் தாங்கி நடித்திருக்கிறார். சதிலீலாவதியில் கோவை சரளாவுடன் சோடியாக நடித்த பாத்திரம், மகராசனில் நடித்த பாத்திரம் என்று நிறையச் சொல்லலாம்.
குணா...அந்த மாதிரி "கேரக்டர்" செய்ய கமல் தான் இன்னொரு பிறவி எடுக்கவேண்டும்.
அபிராமி...அபிராமி...
மைக்கேல் மதன காமராஜன்...எப்போ பாத்தாலும் சிரிக்கத் தோனும்.
மும்பை எக்ஸ்பிரஸ் ...மேற்கத்திய மேடை நாடக வகையைச் சார்ந்தது என்று நினைக்கிறேன்.
இம்மாதிரி படங்களை எல்லோராலும் ரசிக்க முடியாது என்பதும் உண்மை.
//அவற்றை "மட்டுமே" நகைச்சுவையாக ரசிக்கத் தெரிந்த ஒரு சமூகத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் போல ஒரு படத்தைக் கொடுக்க நினைத்தது கமலின் தவறுதான்.//
வசந்தன், இப்படி முழுமையாய் சமூகத்தை மட்டும் குறை கூறிவிட முடியாது. சதிலீலாவதி, அவ்வை ஷண்முகியெல்லாம் பிய்த்துக் கொண்டு போனதும் உண்மைதானே!
//சதிலீலாவதியில் கோவை சரளாவுடன் சோடியாக நடித்த பாத்திரம்,//
படம் பார்க்குமுன் நானும் மிகவும் வியந்தேன் - எப்படி இமேஜெல்லாம் பார்க்காமல் கமல் இப்படி ஒப்புக் கொண்டாரென. ஆனால் மிகவும் பாந்தமாய் சரளாவும் கமலும் பாத்திரத்துக்குப் பொருந்தியிருந்தார்கள்
பொட்டீ கடை,
//மைக்கேல் மதன காமராஜன்...எப்போ பாத்தாலும் சிரிக்கத் தோனும்.//
ஆமாம், அதில காமேஸ்வரன் செமை கலக்கல்! எப்படி எந்த ஆக்ஸென்ட் ஆனாலும் கமல் இப்படி பிய்த்து உதறுகிறார் என்று பலமுறை வியந்திருக்கிறேன்
Kamal is a gifted actor no doubt about it... He is elevating himself with each of his films.. subsequently distancing himself from the general cinema going public... classic example is Mumbai express...
If u got to understand a kamal movie.. u have to be more knowledged in various fields of life... we the educated lot can understand his movies...
The masses are missing the actor..
why cant he choose roles like nayagan, devar magan shakthi, appu, sathya, salangai oli for their sake...
Why is the actor confining himself to the class...
These questions can neva be answered by the man himself i guess
நிலா, எனக்கும் ஜானகி பாடியதை விட வரலட்சுமி பாடியது பிடிக்கும். ரொம்ப இயல்பாகவும் வேதனையைத் தருவதாகவும் இருக்கும். நல்ல அருமையான பாடல். இளையராஜா இசையில் வரலட்சுமி பாடிய இரண்டாவது பாடல் என நினைக்கின்றேன்.
கமல் மட்டுமல்ல என்னைப் பொருத்தவரை சிவாஜியும் நல்ல இயக்குனர் தேவைப்பட்ட நடிகர் என்றே சொல்வேன். இருவருமே இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்க வேண்டியவர்கள்.
இந்தப் பாடல்ல இன்னும் ஒரு புதுமை என்னன்னா மெலடியாப் போயிட்டிருக்கும் போது திடீர்னு நடுவில வரும் ஒரு தெலுங்கு குத்துப் பாட்டு.
"நீயோ வானம் விட்டி தப்பி வந்த தாரகை.
நானோ மாந்தர் எல்லாம் வந்து செல்லும் மாளிகை"
//எனக்கும் ஜானகி பாடியதை விட வரலட்சுமி பாடியது பிடிக்கும். ரொம்ப இயல்பாகவும் வேதனையைத் தருவதாகவும் இருக்கும். //
ராகவன்,
உண்மைதான். எனக்கு வரலட்சுமியின் குரலின் மேல் அலாதிப் பிரியம் உண்டு. 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு' என்ற தாலாட்டுப் பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? க்ளாஸ்!
//கமல் மட்டுமல்ல என்னைப் பொருத்தவரை சிவாஜியும் நல்ல இயக்குனர் தேவைப்பட்ட நடிகர் என்றே சொல்வேன். இருவருமே இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்க வேண்டியவர்கள்.//
மிகச் சரியாகச் சொன்னீர்கள். இருவராலும் இமயத்திலும் ஏற முடியும் அதல பாதாளத்தில் விழுந்து நம்மை ஏமாற்றவும் முடியும்.
//Why is the actor confining himself to the class...//
Dev, I think many artistes don't just get carried away by fame and money. They value satisfaction more than everything. Perhaps, that's why they are stamped as 'eccentrics' sometimes.
சுதர்சன் கோபால், கருத்துக்கு நன்றி
Post a Comment
<< Home