அன்பு கிடைக்குமா அன்பு?
சில வருடங்களுக்கு முன் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் ஒரு வயதுக்குற்பட்ட குழந்தைகளின் பகுதியைப் பார்வையிட்ட போது, அங்கிருந்த ஆறேழு குழந்தைகள் எங்களைப் பார்த்ததும் தூக்கிக் கொள்ளுமாறு பாவனை செய்தனர். ஒவ்வொருவரையும் சற்று நேரம் தூக்கிவைத்துக் கொண்டிருந்துவிட்டு கீழே இறக்கிவிடும்போது ஒரே அழுகை. அந்த பிஞ்சுகளுக்குத் தேவையான இந்த அடிப்படை அரவணைப்பு கூடக் கிடைக்கக் கூடாத அளவுக்கு அவர்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்ற கேள்வி என்னை இன்னும் அரித்துக் கொண்டிருக்கிறது. பதில் கிடைக்காத எத்தனையோ கேள்விகளில் இதுவும் ஒன்று. அந்தத் தாக்கத்தில் எழுதிய கதை இது:
அன்பு கிடைக்குமா அன்பு?
அன்பகத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல் அப்பாஜி ஆதரவற்ற அந்த குழந்தைகளோடு அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது தலையில், தோளில், மடியில் என்று ஒரு பத்து அதிர்ஷ்டக்காரக் குழந்தைகளுக்கு இடம் கிடைக்க, மீதி இருந்த எழுபது பேரும் அவரை நெருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர். 9 வயது சுகவனத்துக்கு ஒரு மூலையில்தான் இடம் கிடைத்தது. ஊன்றுகோல்கள் பழகாததால் தாமதமாகத்தான் வரமுடிந்தது. அவளுக்கு திரைப்படத்தில் மனம் லயிக்கவில்லை. திரைப்பட இடைவேளையில் வருகிற அந்த விளம்பரத்துக்காத்தான் ஆவலோடு காத்திருந்தாள். செய்திச் சுருக்கத்திற்குப்பின் திரைப்படம் தொடரும் என்ற அறிவிப்பு வந்ததும் உற்சாகமானாள். இதோ விளம்பரம் ஆரம்பமாகிவிட்டது. மேலும்
7 Comments:
அருமையான நெகிழ்ச்சியான கதை.
nantri, Maniyan
இதுபோன்ற மலர்களைத் தவிக்கவிடும் பெற்றோர் உண்மையிலேயே மனிதர்கள்தானா என்று தோணுது இல்லையா நிலா? வறுமை, கஷ்டம் எல்லாம் வெறுமே சாக்குப் போக்கு. ஒவ்வொரு குடும்பமும் இது போன்ற ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ள முடிந்தால் எவ்ளோ நல்லா இருக்கும். நம்மாலேயே முடிவதில்லை.
நல்ல வெளிப்பாடு நிலா!
Saravana, thanu,
மிக்க நன்றி
உங்களது ஊக்கம் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது
//எது எதுக்கோ (+) குத்து விடுகிறார்கள், இந்த பதிவுக்கு ஏன் குத்தை காணோம் !! தமிழ்மணத்தில் பல் விஷயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன. //
நிலா, நான் ஒரு குத்து விட்டுள்ளேன்.
+
one more +
//இந்த மாதிரியான 'சிட்டுவேஷனல்' கட்டுரையை எழுதுவதற்கு ஆழ் மனத்தில் ஒரு inherent sensitivity வேண்டும். //
சாமான்யன்,
எழுத்தைப் பார்த்து சரியாக கணித்திருப்பது வெகு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொன்னபடி அடிப்படையில் நான் மிகவும் சென்சிடிவ்தான். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி
உஷா,
எழுத்தாளரிடம் குத்து வாங்குவதில் பெருமை. நன்றி
பட்டிணத்து ராசா,
உங்கள் குத்துக்கும் நன்றி ராசா
Post a Comment
<< Home