கௌவரம் ரஜினிகாந்த்
நேற்று அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது கௌவரம் படத்தின் சில காட்சிகளைக் காண நேர்ந்தது.
முதல் காட்சியில் கண்ணன் சிவாஜியும் உஷா நந்தினியும் உரையாடுவார்கள். அடுத்த காட்சியில் நாகேஷ் கண்ணனைப் பற்றி ரஜினிகாந்த் சிவாஜியிடம் கோள்மூட்டுவார். இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்தவர் ஒரே மனிதர்தான் என்று நம்புவதற்குக் கடினமாய் இருந்தது. பாடி லாங்குவேஜிலேயே அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார் மனிதர். இவ்வளவுக்கும் இரண்டாவது காட்சியில் வாயில் பைப்பை வைத்துக் கொண்டு வெறுமனே நின்று கொண்டிருப்பார். முகத்தில் கூட அவ்வளவு எக்ஸ்ப்ரஷன்ஸ் காட்ட மாட்டார். ஆனால் நிற்கிற தோரணையே ஆயிரம் உணர்ச்சிகளைச் சொல்லும். என்ன மாதிரி மனிதரை இழந்துவிட்டது தமிழ் சினிமா என்கிற ஆதங்கம் எழுந்தது.
சிவாஜியின் நடிப்பில் நாடக பாணி தெரியும் என்ற விமரிசனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் இன்னும் இந்திய சினிமாவே இயல்பான நடிப்பை முழுமையாய் அரவணைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
சிவாஜி வெகு இயல்பாய் செய்த படங்களில் ஒன்று முதல் மரியாதை. அதைப் பற்றித் தனியே நினைத்திருக்கிறேன்.
7 Comments:
சிவாஜி... என்னும் மாபெரும் கலைஞன்... 90களில் வீணடிக்கப்பட்டார் என்பது என் கருத்து.. ஒரு தேவர் மகன்... தான் ஒரே ஆறுதல்... என்ன சொல்லுறீங்க??
தேவ்
மிகச் சரியா சொன்னீங்க. 80களிலேயே அவர் நிறைய குப்பைப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டார். நாம அவரை இன்னும் சரியா பயன் படுத்தியிருக்கலாம். என்ன பண்றது?
உண்மைதான்!
பரீட்சைக்கு நேரமாச்சு படத்திலே அவரது வாஞ்சை மற்றும் தேவர் மகன் படத்திலே அவரது மிடுக்கும் தந்தை வேடத்திலே சிறப்பாக நடித்திருப்பார்.
நல்ல நினைவுகூரல்.
thank you bupass
சிவாஜி மாபெரும் கலைஞன். அவர் ஒரு இயக்குனர் கேட்டதைக் கொடுப்பவர். நல்ல இயக்குனர்கள் அவரை இன்னமும் நல்லபடியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
தேவர் மகன் மட்டுமல்ல. பூப்பறிக்க வருகின்றோம் படத்திலும் அவர்தான் ஷோ ஸ்டீலர்.
நான் எழுத விரும்பியது குறிப்பிட்ட அந்த பாத்திரம் குறித்து. நாம் ஏன் இதை மரியாதைக் குறைவாகக் கொள்ளவேண்டும்?
//ஒரு இயக்குனர் கேட்டதைக் கொடுப்பவர். நல்ல இயக்குனர்கள் அவரை இன்னமும் நல்லபடியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.//
ராகவன்,
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்
Post a Comment
<< Home