.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, December 20, 2005

விஜய் - ஒரு நல்ல கலைஞன் வீணாகிறார்!

Your Ad Here

விஜய் வந்த புதிதில் எனக்கு அவரைக் கண்டால் ஆகாது. மகா மசாலாவான படங்களில் அவரைக் கோழிக் குருமா போலத்தான் ப்ரசன்ட் பண்ணினார் அவர் தந்தை சந்திரசேகர். பூவே உனக்காகவில் விக்ரமன் அவருக்கு மறுபிறவி அளித்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாத்திரத்துக்கு விஜய் நன்றாகப் பொருந்தியிருந்தார். காமெடி, காதல் என்று கலந்து கட்டி பொறுப்பாக நடிக்கவும் செய்திருந்தார்.

பிறகு வழக்கம்போல சில படங்கள் செய்தாலும் காதலுக்கு மரியாதையில் மீண்டும் ஒரு நல்ல நடிகன் என்று நிரூபித்தார். அதற்குப் பிறகு என்னவாயிற்றென்றுதான் தெரியவில்லை. சொல்லி வைத்தார் போன்று 4 பாட்டு + 8 சண்டை + கொஞ்சம் காமெடி என்கிற ரீதியில் ஒரே ஃபார்முலாப் படங்கள். சகிக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் (ரஜினி ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் - அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்)

நான் ஆக்ஷன் படங்களுக்கு எதிரியில்லை. கில்லியை வெகுவாக ரசித்தேன். கில்லியில் அருமையாக காமெடி செய்திருந்தார். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் அடக்கி வாசித்திருந்தார்.

ஆனால் அதற்கு முன் வந்த பகவதி, திருமலை எல்லாம் காணச் சகிக்காத கொடுமை. ஒரேடியாக அவர் துதிபாடும் படங்கள் ரொம்பவே ஓவர். இப்போது வந்திருக்கும் சிவகாசியையும் சேர்த்துதான். பாதிப் படத்திலேயே எழுந்து வரவேண்டியதாகப் போயிற்று.

சச்சின் காதல் படமென்றாலும் நடிப்பில் அநியாயத்துக்கு செயற்கை. 'அட நான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்களப்பா' என்கிற அலட்சியம் தெரிந்தது.

விஜய்க்கு நன்றாக நடனம் வரும், காமெடி அற்புதமாய்ப் பொருந்துகிறது, நன்றாக சண்டையிடுகிறார், தேவை ஏற்பட்டால் நன்றாக நடிக்கவும் செய்கிறார் - ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும் வெறும் ஃபார்முலா நடிகராக வீணாவதேனோ? (இதில் கொடுமை என்னவென்றால் இது அவர் தந்தை காட்டிய வழியாம்!)

பணம் வருகிறது, புகழ் வருகிறது என்பதுதான் காரணமென்றால், பூவே உனக்காக படம்தானே அவரை அடையாளம் காட்டியது? காதலுக்கு மரியாதைதானே ஒரு இடம் பெற்றுத் தந்தது?

இப்படியே போனால், 80 வயதில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு வெளியில் ஊர் பொறாமைப் படும் அளவுக்கு பணம், புகழ் என்று எல்லாம் குவிந்திருக்கலாம்; ஆனால் அவருக்குள் ஒரு நிறைவு இருக்குமா என்பது கேள்விக்குறி.

விஜய், யோசிப்பது நலம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

At December 20, 2005 11:22 AM, Blogger Ram.K said...

விஜய் யோசித்தால், வேறு ஒரு அஜய் இதே வேலையைச் செய்து பாராட்டு பெறுவார்.

 
At December 20, 2005 7:39 PM, Anonymous Anonymous said...

Vijay route is clear,

after MGR and Rajini now Vijay's term. vast majority of tamilnadu(common people & mass media) accepted him as a mass hero(!!!!!).

see after few years all might digest him like what happening for Rajini now.

'Kaalatthin kattaayam (koolam)'

 
At December 20, 2005 9:24 PM, Blogger Unknown said...

First It was Rajini... then Goundamani... then Shivaji.. next Kamal... Ippo Vijay nallaikku yaaru Ajith, surya, simbhu, dhanush, vikram....

Nila U got a gift to write well but what keeps u so confined and concentrated on the magical arc lights of kollywood...

you are casting urself as a actor crtic writer... cool the formula works fine for you... it brings in a lot of readers but

இப்படியே போனால், 80 வயதில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது (உங்களுக்கு) வெளியில் ஊர் பொறாமைப் படும் அளவுக்கு பணம், புகழ் என்று எல்லாம் குவிந்திருக்கலாம்; ஆனால் (உங்களுக்குள்) ஒரு நிறைவு இருக்குமா என்பது கேள்விக்குறி.

நிலா, யோசிப்பது நலம்.

 
At December 20, 2005 11:39 PM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At December 21, 2005 3:43 AM, Blogger நிலா said...

//Nila U got a gift to write well but what keeps u so confined and concentrated on the magical arc lights of kollywood...//
//நிலா, யோசிப்பது நலம். //

Dev, thanks for the complement and concern. நான் என்னை சினிமாவுக்கென்று குறுக்கிக் கொள்ளவில்லை. 26 பதிவுகளில் 5 பதிவுகள்தான் சினிமா பற்றி எழுதி இருக்கிறேன். தவிரவும் பதிவுகளில் இதுதான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டெல்லாம் போடுவதில்லை. மனதில் தோன்றுவதை எழுதிகிற வசதி வலைப் பதிவுகளில்தானே உண்டு.

நண்பர்களாகப் பேசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி வந்து விழுவது சினிமா. அது போலத்தான் இதுவும். விளம்பரத்துக்காக எழுதுவதென்றால் எல்லோரையும் போற்றிப் போற்றி எழுதி இருப்பேன்.

எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களையும் பதிவதற்கு நன்றி, தேவ்.

 

Post a Comment

<< Home