.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Tuesday, December 27, 2005

தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான கேள்வி

Your Ad Here

வணக்கம். தமிழ்மணம் மூலம் தாங்கள் தமிழுக்காற்றும் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ் மணத்தில் தமிழ் இணைய இதழ்களைப் பட்டியலிட்டு இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள். இவை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.

240 வாரங்களாய் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலாச்சாரல் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது; 3000க்கும் மேற்பட்ட தமிழ் படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது; தரமான படைப்புகளை மெருகேற்றி வெளியிட்டுவருகிறது; குழந்தைகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் பிரத்யேகப் பகுதிகள் கொண்டு இளையதலைமுறையின் மேல் விசேஷ கவனம் செலுத்தி வருகிறது.

நிலாச்சாரலின் ஆசிரியர் என்கிற முறையில் உங்கள் பட்டியலில் நாங்கள் இடம் பெறாதது சற்று வியப்பையும் வருத்தத்தையும் தந்தாலும் கேட்டுப் பெறுவது அங்கீகாரமல்ல என்ற காரணத்தால் மௌனம் காத்தேன். ஆனால் பாஸ்டன் பாலாவின் இந்தப் பதிவிலும் நிலாச்சாரல் இடம் பெறாமல் போக, பதில் அறிவது நலம் பயக்கும் என்று உணர்கிறேன்.

பாலா குறிப்பிட்டுள்ள அலெக்ஸா ரேங்க் படி நிலாச்சாரலே தமிழ் இணைய இதழ்களில் முதலிடம் வகிக்கிறது. அப்படி இருக்க தங்களைப் போன்ற, பாலாவைப் போன்ற நடுநிலைவாதிகள் நிலாச்சாரலை முற்றுமாய்ப் புறக்கணிக்க ஏதேனும் காரணம் இருக்கவேண்டும் என்றே கருதுகிறேன்.

ஆன்ம திருப்தி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுதான் உலகின் பல மூலைகளிலிருந்து இயங்குகிறது நிலாக்குழு. எங்கள் முயற்சிகளை இன்னும் சீர்படுத்திக் கொள்ள அந்தக் காரணம் உதவலாம் என்ற எண்ணத்தினால்தான் இந்த அஞ்சல். சற்று நேரம் ஒதுக்கிக் காரணத்தைக் கூறுவீர்களானால் எங்களை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

நன்றி.

பி.கு: தமிழ்மண நிர்வாகிகளது மின்னஞ்சல் முகவரி ஏதும் காணப்படாததால் இங்கே பதிகிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

21 Comments:

At December 27, 2005 4:56 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 5:35 PM, Anonymous Anonymous said...

தங்களைப் போன்றே இந்த தெரிவு செய்யும் முறையினை அறிய ஆவலாய் உள்ளேன்.

 
At December 27, 2005 5:43 PM, Blogger முகமூடி said...

இப்பதிவின் மூலம் உங்கள் வலைத்தளம் பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சி.

(என் பதிவில் உங்கள் தளத்தை பற்றிய சுட்டியை இணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்)

 
At December 27, 2005 6:08 PM, Anonymous Anonymous said...

இங்கே ஒரு மின்னஞ்சல் அனுப்ப முயலவும்.
http://kasi.thamizmanam.com/contact.php

 
At December 27, 2005 6:34 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 6:35 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 7:26 PM, Blogger dondu(#11168674346665545885) said...

மேலே காசி அவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட்ட பின்னூட்டம் அவருடையது அல்ல. மேலும் பின்னூட்டத்துக்கான உங்கள் செட்டிங்ஸ் அனானி மற்றும் மற்றவர் பெயரிலும் இடப்படும் விஷமப் பின்னூட்டங்களுக்கு வழி வகுக்கிறது.

கடந்த பல மாதங்களாக எழுதிவரும் உங்களுக்கு போலிப் பின்னூட்டங்களினால் வரும் கஷ்டம் தெரியவில்லையா? குறைந்த பட்சம் மட்டுறுத்தலையாவது செய்யலாமே.

மேலே காசி அவர்களின் பெயரில் பின்னூட்டமிட்ட போலி டோண்டுவிற்கு உங்கள் பிரச்சினையில் ஒரு அக்கறையும் கிடையாது என்பதே நிஜம். காசி அவர்கள் அவருடைய பச்சை விளக்கை அணைத்து விட்ட எரிச்சலில் அவர் ஊளையிடுகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At December 27, 2005 7:33 PM, Blogger dondu(#11168674346665545885) said...

மேலே நான் இட்டப் பின்னூட்டம் என்னுடைய இத்தேவைக்காக வைத்திருக்கும் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படுள்ளது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At December 27, 2005 8:06 PM, Blogger Vassan said...

வணக்கம்.

*நிலாச்சாரல்* ஒருங்குறி/யுனிகோட் எழுத்துருக்கள் கொண்டு் யுனிகோட் encoding அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால், தமிழ்மணத்தில் இ-இதழ்கள் கீழ் சேர்க்கப்பட முடியும் என நினைக்கிறேன். செய்தியோடைகள் செயல்பட யுனிகோட் தேவை. RSS & ATOM FEED நிலாச்சாரலிலிருந்து உருவாக வழி செய்து கொள்ள வேண்டும்.

தற்போது நீங்கள் தகுதரம்/திஸ்கி encoding ல் நிலாச்சாரலை இயக்கி வருகிறீர்கள் என நினைக்கிறேன்.

யுனிகோடில் மாற்றுவது எளிது. ஆயினும் தளத்தின் கனம் அதிகரிக்கலாம். இதை கணிஞர்கள் தெளிவிக்கலாம்.

அன்புடன்
வாசன்

 
At December 27, 2005 8:34 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 8:38 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 9:51 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 10:25 PM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At December 27, 2005 11:51 PM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At December 28, 2005 12:01 AM, Anonymous Anonymous said...

பரி என்ற பெயரில் வெளியானதும் போலி. நீங்கள் மாடரேஷன் கமெண்ட் வைத்தால்தான் இதில் இருந்து மீள முடியும்.

 
At December 28, 2005 12:09 AM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At December 28, 2005 12:11 AM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At December 29, 2005 6:05 AM, Blogger Kasi Arumugam said...

அன்புள்ள நிலா,

உங்கள் திறந்த மடலுக்கும், மட்டுறுத்தல் ஏற்பாடு செய்ய ஆரம்பித்ததற்கும் நன்றி. தமிழ்மணம் நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இங்கு இதற்கு பதில் சொல்வதன் மூலம் பலருக்கும் இந்த பதில் எடுத்துச் செல்லப்படலாம் என்பதால் எழுதுகிறேன்.
1. முதலில், தமிழ்மணம் வலைப்பதிவுகளை மட்டும் மனதில் வைத்துச் செய்யப்பட்ட ஒரு முயற்சி. ஆரம்ப கால வலைப்பதிவர்கள் பலரும் சில யாஹூ குழுமங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இணைய இதழ்களில் புழங்கியவர்களே. எனவே முதலில் தளம் வெளியிடும்போது நீங்கள் இப்போது காணும் தளங்களுக்கு மட்டும் தொடுப்பு கொடுக்கப்பட்டது. (இந்தத் தேர்வுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு. ஆலோசனைக்குழுவோ, இணைநிர்வாகிகளோ இதில் பங்கேற்க தேவையோ வாய்ப்போ வரவில்லை) அது இன்றுவரை தொடர்கிறது. அன்றைய வலைப்பதிவுகளில் நிலாச்சாரல் அதிகம் பேசப்படாதிருந்திருக்கலாம். மேலும் தனிப்பட்ட அளவில் எனக்கு இலக்கியம்/இதழியல் அறிவு பூஜ்ஜியம். அதுவும் ஒரு காரணம்.
2. உங்கள் கேள்வி முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் இதழ்களுக்கான தொடுப்புகள் பற்றி என்றால், அவற்றுக்கான பதில் மேலே சொன்னதிலிருந்து புரிந்துகொள்ளப்படலாம். அது அல்லாது இ-இதழ்கள் என்ற பக்கத்தில் என்றால், வாசன் சொன்னதுபோல யுனிகோடு-செய்தியோடை பதிப்பிக்கும் தளங்கள் அவர்களாக அறிவிக்கும்போது சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

(எப்படி உங்களால் உண்மையான பரி, காசி போன்றாருக்கும் போலிகளுக்கும் இடையே வேறுபாடு காண முடியவில்லையோ, அதுபோலவே நிலாச்சாரல் போன்ற தளங்களின் பணிகளும் என்னைப் போன்ற புதியவர்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம்:-))

ஒரு தகவல்:தமிழ்மணமோ, காசியோ தாம் தமிழுக்கு சேவையாற்ற முனைந்து இந்தத்தளம் நடத்துவதாக எங்கும் சொன்னதில்லை. மற்றவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கலாம். மொழிக்கு சேவையாற்றுவது என்பதெல்லாம, பெரிய வார்த்தைகள், அவற்றைத்தவிர்த்தால் நன்றியுள்ளவனாவேன். இது சன்னாசி சொன்னதுபோல மொழியார்வமும் தொழில்நுட்பமும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வளவே. மக்கள் மொழியில் கருத்துப்பரிமாற்றங்கள் நடக்கவேண்டும் என்பதோடு மொழியார்வம் நின்றுவிடுகிறது. என் தாய்மொழி தெலுங்காகவோ, ஒரியாவாகவோ இருந்தாலும் நான் இப்படியே என் மொழியில் பரிமாற்றம் நடைபெற முனைந்திருப்பேன். அவ்வளவே.

மூன்று நாட்களாக ஊரில் இல்லை. எனவே பதில் சொல்லத் தாமதம். மன்னிக்கவும்.

மேலே பரி, காசி ஆகியோர் பெயரில் இருக்கும் மறுமொழிகளையும், அந்தப் போலிகளுக்காக மெனக்கெட்டு நீங்கள் எழுதியிருக்கும் பதில்களையும் நீக்குவீர்களா? நன்றி.

அன்புடன்,
-காசி

 
At December 29, 2005 7:17 AM, Blogger Kasi Arumugam said...

இன்னொன்று சொல்ல விட்டுப் போனது. புத்தாண்டில் வெளியிடபோகும் புதிய வடிவத்தில் நீங்கள் குறிப்பிடும் பகுதி உள்பட பல மாற்றங்கள் வரும், எனவே உடனடியாக எந்த் மாற்றமும் இப்போது செய்ய இயலாது.

 
At December 29, 2005 8:24 AM, Blogger நிலா said...

This comment has been removed by a blog administrator.

 
At December 29, 2005 8:25 AM, Blogger நிலா said...

//என் பதிவில் உங்கள் தளத்தை பற்றிய சுட்டியை இணைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்//

முகமூடி,
தங்கள் ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி

//குறைந்த பட்சம் மட்டுறுத்தலையாவது செய்யலாமே//
Raghavan,
Done. Thanks for the suggestion

//தற்போது நீங்கள் தகுதரம்/திஸ்கி encoding ல் நிலாச்சாரலை இயக்கி வருகிறீர்கள் என நினைக்கிறேன்.//

வாசன்,

ஒருங்குறிக்கு மாறும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. குழுவில் நான் உட்பட பெரும்பாலோர் முழு நேரப் பணிக்கும் செல்வதால் தாமதமாகிக் கொண்டே வருகிறது.


காசி
தங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி

காசி
தங்கள் நேர்மையான பதிலுக்கு நன்றி

 

Post a Comment

<< Home