.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, January 05, 2006

சுயம்

Your Ad Here

என்னுடைய சிறுகதைகள் தொடர்ந்து பாக்யாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கதை பிரசுரமாகிறதா இல்லையா என்பது உடனுக்குடன் தெரிந்துவிடுகிற வசதி உண்டு பாக்யாவில். கல்லூரி படிக்கும் போது நான் எழுதிய முதல் கதை விகடனில் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை என்றைக்கும் மறக்க முடியாது. வார வாரம் விகடனில் கதையைத் தேடி ஏமாந்து தமிழ் மன்ற நண்பர்களின் விசாரிப்புகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் வழிந்து பின் 8 மாதங்கள் கழித்து வெளியான பொது அதன் சுவை மட்டுப்பட்டுவிட்டது. பின் ஏனோ விகடனுக்கு அனுப்பவே தோன்றவில்லை.
கல்கிக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலும் தபாலில் அனுப்பினாலும் கிணற்றில் போட்ட கல் போல ஒரு பதிலும் கிடைப்பதில்லை. அதனால்தான் வசதியாக நிலாச்சாரலிலும் அவ்வப்போது திசைகளிலும் மட்டும் எழுதி வந்தேன்.

நேரப் பற்றாக்குறை காரணமாக என்னால் கணிசமாக எழுத முடிவதில்லை. அவசரமாய் எழுதுவதில் சில சமயம் தரம் சறுக்கிவிடுவது எனக்கே புரிகிறது. இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.கற்றுக் கொள்ள இன்னும் நிறைய நேரம் வேண்டும். அதோடு விலகி நின்று பார்த்து குறைகளைச் சுட்டிக்காட்டி விமரிசனம் பண்ணும் நண்பர்களும் வேண்டும்.

சுயம் என்ற கதைக்கு முற்றிலும் எதிர்மாறான விமரிசனங்கள் வந்தன. இது இங்கே:

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_193.html

படித்துவிட்டுக் கருத்துச் சொன்னல் மகிழ்வேன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

At January 05, 2006 4:18 AM, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At January 05, 2006 4:25 AM, Blogger ramachandranusha(உஷா) said...

நிலா, கதையின் முடிவு ஓரளவு எதிர்பார்த்தது என்றால் நன்றாக வந்துள்ளது. இதே போல ஒரு உண்மை கதை என் உறவுக்காரர்
அமெரிக்காவில் பட்டுக் கொண்டு இருக்கிறார். பெரிய இடத்துப் பெண் என்று இடம் கொடுத்து, இன்று தலைமேல் ஏறிவிட்டாள் என்று அவர் அவதிப்படுகிறார்.

இதற்கு முன்பு படித்த, தாய்க்கு போன் செய்ய முடியாத கதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மெலோடிராமாவாக
தோன்றியது.

நான் அதிகம் உணர்ச்சிவசப்படாத ரகம் :-)

 
At January 05, 2006 4:47 AM, Blogger நிலா said...

நன்றி, உஷா

//இதற்கு முன்பு படித்த, தாய்க்கு போன் செய்ய முடியாத கதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மெலோடிராமாவாக
தோன்றியது. //

உண்மையைச் சொன்னதற்கு இன்னொரு நன்றி

 
At January 05, 2006 1:23 PM, Blogger Suka said...

கதையின் தலைப்பினாமல் ஈர்க்கப்பட்டு வந்தேன்..நன்றாக இருந்தது..
கதைக்கு அருகில் பதிவிட்டிருந்த முகமூடி படம் கடன் கொடுத்தீர்களானால் நான் இந்த(http://sukas.blogspot.com/2005/05/blog-post.html) கதைக்கு அருகில் போட்டுக்கொள்வேன். :)

வாழ்த்துக்கள்
சுகா

 
At January 05, 2006 10:23 PM, Blogger கைப்புள்ள said...

நன்றாக இருந்தது. தமிழ் படங்களைப் பார்த்து பழகியதால் நாயகி திருந்தும்படியாக அமைந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் முடிவைப் படிப்பவர்கள் இடத்தில் விட்டது புதுமை. திருந்துவாள் என்று பெரும்பாலரும், மாட்டாள் என்று சிலரும் எடுத்துக் கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

 
At January 05, 2006 10:51 PM, Blogger நிலா said...

சுகா, கைப்புள்ள,

கருத்துக்களுக்கு நன்றி

 
At January 06, 2006 1:07 AM, Blogger Unknown said...

Nila,
Check this post
http://aruna52.blogspot.com/2006/01/blog-post_06.html

 
At January 06, 2006 2:47 AM, Blogger நிலா said...

Dev

thanks for the link. Posted a feedback there.

 

Post a Comment

<< Home