இதர பாடல்கள் - பதிவிறக்கம்
நமக்கு இசை என்றால் பெரும்பாலும் தமிழ்த்திரை இசை என்றாகிவிட்டது. திரை இசைக்கு அப்பாற்பட்ட, பிரபலமான கர்நாடக இசைப்பாடல்களுக்கும் அப்பாற்பட்ட சில நல்ல பாடல்கள் குறித்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.
ஒரு பாடல் வெற்றி பெற முக்கியமானது மெட்டு. மெட்டு நன்றாக இருந்தால்தான் நம் கவனத்தையே கவர்கிறது பாடல். அதன் பிறகுதான் பாடல் வரிகளும் பாடகரின் குரலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதனால் நான் மொழி வித்தியாசமில்லாமல் எல்லா வகைப் பாடல்களையும் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். எந்த மதப் பாடல்கள் என்ற பாகுபாடும் எனக்கில்லை. மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் தரும் எந்த இசையானாலும் எந்த வரியானாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கொட்டிக்கொடுக்க இணையம் என்ற சுரங்கம் இருக்கவே இருக்கிறது!
முதலில் அப்படி பிடிபட்ட தமிழ்ப்பாடல்களிலிருந்தே ஆரம்பிப்போம். சிவசங்கர பாபாவின் ராம ராஜ்யாவிற்கு ஒரு முறை சென்றிருந்த போது கேட்ட பாடல்கள் எல்லாமே சட்டென்று பிடித்துப் போக, அவர்களது இணையதளத்திற்கு சென்று தேடினேன். பல அருமையான பாடல்கள் பதிவிறக்கம் செய்யும் வசதியோடு தரப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே காணலாம்:
http://www.samratchana.net/hymns/songs/en-us/default.asp
இந்தப்பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்:
காதல் கொண்டேனடி
சங்கரம் என்னும் மந்திரம்
சங்கரனே தெய்வம்
மனமே ஆலயமே
வேண்டும் வேண்டும்
எனக்கொன்றும் தெரியாது
குரு அல்ல இறை
இறைவன் வர மாட்டாரா
ஒளி வெள்ளம்
ஓ மேரே
சிவசங்கரனே பள்ளியெழு
சங்கரம் சிவ சங்கரம்
பாடல்களைக் கேட்டுவிட்டுக் கருத்துச் சொல்லுங்கள்.
அடுத்தடுத்த பதிவுகளில் சில இந்தி, ஆங்கிலம், சீன மொழிப் பாடல்களைக் காண்போம்
4 Comments:
நிலா! பாட்ட கேட்டு சொல்லலாம் என்றால், எந்த பாடலும் வேலை செய்ய மாட்டேங்குது. ஏதோ ஏற்றோற் வருது :-( பாட்டு உங்களுக்கு வேலை செய்யுதா? சீனா பாட்டு போட போறீங்களா..போடுங்க. போடுங்க. கேட்கலாம்.
சிவா, இப்பக்கூடக் கேட்டேனே. வேலை செய்யுதே. ஏதாவது செட்டிங் ப்ராப்ளமா இருக்கலாம். பதிவிறக்கம் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்.
நிலா! பாட்ட செலக்ட் பண்ணிட்டு மேலே 'Download song' click பண்ணினா தான் வருது. இதை இப்போ தான் கண்டு புடிச்சேன். இப்போ ஜனனி ஜனனி கேட்டுக்கிட்டு இருக்கிறேன். ராஜா பாட்ட வேற யாரோ பாடுற மாதிரி இருக்கு. மேடையில் பாடி பதிந்த மாதிரி இருக்கு. எல்லா பாட்டையும் ஒவ்வொன்னா கேட்கிறேன். பாடலுக்கு நன்றி நிலா.
சிவா,
வழக்கமா லிங்க் மேல க்ளிக் பண்ணினாலே பாடும். என்ன பிரச்சனைன்னு தெரியலை.
சில பாடல்களின் ரெகாரிடிங் தரம் அவ்வளவு நல்லா இருக்காது ஜனனி உட்பட. அதனாலதான் நான் எனக்குப் பிடித்த பாடல்கள்னு ஒரு லிஸ்ட் கொடுத்திருந்தேன். மேல் பாதில உள்ள பாடல்கள் பொதுவா நல்லா இருக்கும்.
முயற்சி செய்யறதுக்கு நன்றி
Post a Comment
<< Home