.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, January 09, 2006

பிரபஞ்சப் பூர்த்தி

Your Ad Here

ஓஷோ பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு. அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. அதற்குக் காரணம் அவ்வப்போது துளித்துளியாய் நான் படிக்க நேரிடும் அவருடைய படைப்புக்கள்.

எப்போதாவது வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டால் ஓஷோவின் இந்தக் கவிதையைப் படியுங்கள்; மனதை தென்றல் தடவிக் கொடுத்தது போன்ற இதம் கிடைக்கும்: (நல்ல கவிஞர்கள் யாரேனும் இதனைத் தமிழ்ப்படுத்தினால் நலமாயிருக்கும்)


You are not accidental.
Existence needs you.
Without you something
will be missing in existence
and nobody can replace it.

That's what gives you dignity,
that the whole existence will miss you.
The stars and sun and moon, the trees
and birds and earth - everything in the universe
will feel a small place is vacant
which cannot be filled by anybody except you.

This gives you a tremendous joy,
a fulfillment that you are related to existence,
and existence cares for you.
Once you are clean and clear,
you can see tremendous love
falling on you from all dimensions.
~Osho

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At January 09, 2006 4:24 AM, Blogger குமரன் (Kumaran) said...

//அவரை செக்ஸ் சாமியார் என்று நம் ஊடகங்கள் தரம் தாழ்த்தியதில் அவரின் அரிய கருத்துக்களைக் கேட்க முடியாமல் போய்விட்டதோ என்ற ஐயம் எனக்குண்டு. //

உண்மைதான் நிலா. உங்கள் கருத்தை வழிமொழிகிறேன். நீங்கள் பதித்திருக்கும் அவர் கவிதையும் அருமையான கவிதை. மொழிபெயர்ப்பு செய்ய முயலவேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் நான் கவிஞனல்லன் என்பதால் என் வழியே செல்கிறேன். நன்றி.

 
At January 09, 2006 6:19 AM, Blogger Dharumi said...

The most misunderstood man என்று அவரை அழைப்பதுமுண்டு.அவரது நூல்களை வாசித்ததுண்டு. பல முரண்பாடுகள் இருக்கும்; ஆனா அவரது விசாலமான அறிவும், 'பயங்கரமான' sense of humour-ம் வியக்கவைத்துள்ளன. அதோடு,extempore-ஆகத் தரும் பதில்களின் ஆழமும், அகலமும் நம்ப முடியாத அளவு பிரமிப்பை ஏற்படுத்தியதுண்டு.

 
At January 09, 2006 7:05 AM, Blogger Dharumi said...

The most misunderstood manஎன்ற பெயரும் உண்டு. அவரது சில புத்தகங்கள் வாசித்ததில் அவரது விசாலமான அறிவுத் திறனும், மிகுந்த நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பிடித்தது. கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அவரது புத்தகங்களின் வாசிப்பு ஒரு தனு சுகமான அனுபவம்.

 
At January 10, 2006 2:03 AM, Blogger நிலா said...

நன்றி, குமரன், தருமி

 
At January 11, 2006 9:38 AM, Blogger சாமான்யன் said...

"
நீ ஒரு விபத்தின் பிரதிபிப்பம் அல்ல. பிரபஞ்சத்தின் உள்ளாமைக்கு உன் பதிவும் தேவை. நீ அன்றி உள்ளாமையின் முழுமையில் ஏதோ ஒன்று குறைந்திருக்கும். அந்த குறையை வேறு யாரும் போக்க முடியாது.

உள்ளாமை முழுவதுமே நீ இல்லாதிருந்தால் ஏக்கமுறும். சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் உட்பட, மரஞ் செடி கொடி, பரவைகள், உலகம் முதல் பிரபஞ்ம் முழுவதுமே நீ அற்ற நிலையில் ஒரு சிறு வெறுமையை எதிர் கொள்ளும். உன்னை அன்றி அந்த துளி சூண்யத்தை வேறு எவரும் ஈடு செய்ய இயலார்.

பிரபஞ்சம் உன் பாலும் கரிசனம் கொண்டுள்ளது. அதன் இயலில் நீயும் ஒரு உறுப்பினன் என்கிற உண்மையின் தாக்கமே உன்னுள் அபரிதமான குதூகலத்தை ஏற்படுத்தும். உன் மனம் சுத்தமாகவும், தெளிவாகவும் செயலுறும் போது எல்லா திசைகளிலுமிருந்தும், புலன்களிலிருந்தும் உன் மேல் வெள்ளமென அன்பு மழை பொழியும்.

- ஓஷோ -

"

ஏதோ எனக்கு தெரிந்த நாலனா டிரான்சிலேச்ஜன். 'A' கிடைக்காது, தெரியும். ஒரு 'B' !!? அட அட் லீஸ்ட் ஒரு 'C+' ....

 
At January 12, 2006 5:57 AM, Blogger நிலா said...

Samanyan

not bad :-)

 

Post a Comment

<< Home