வாடி... வாடி... நாட்டுக் கட்டை
நம் வீடுகளுக்கு விருந்தினர்கள் வந்துவிட்டால் நம் வீட்டுக் குழந்தைகளின் வித்தைகளைக் காட்டி குழந்தைகளையும் விருந்தினர்களையும் டார்ச்சர் செய்துவிடும் பழக்கம் பரவலாகக் காணப் படுகிறது.
"கண்ணா, ஐ எங்க இருக்கு?"
"இது பேர் என்ன?"
"ரெட் கலர் பால் எடு"
குழந்தை சரியாகச் செய்யும் வரை அதை விடுவதில்லை. விருந்தாளிகள் இதற்கு முன் இதைக் கண்டு களித்திருந்தாலும் அவர்களையும் விடுவதில்லை. இப்படிக் காட்டப்படுகிற வித்தைகளில் சினிமா பாடலுக்கு தனி மகத்துவம் உண்டு.
சில வருடங்களுக்கு முன் என் தோழியின் மகனிடம் அவள், 'கண்ணா, உனக்குப் பிடிச்ச அந்தப் பாட்டைப் பாடு" என்றதும், அவன், "வாடி... வாடி... நாட்டுக் கட்டை" என்று பாட எனக்கு என்னவோ போலிருந்தது.
இன்னொரு குழந்தையை அவள் தாய் மிகவும் வற்புறுத்தி 'மன்மத ராசா' பாடலைப் பாட வைக்க அவள் முழுப்பாடலையும் சிரத்தையாய்ப் பாடி 'என்னைக் கணக்குப் பண்ணேண்டா' என்று முடித்ததும் அந்த அன்னையின் முகத்தில் அத்தனை பெருமிதம்.
என்னதான் குழந்தைகள் வார்த்தைகளின் பொருள் தெரியாமல் பாடினாலும் இது போன்ற பாடல்களை அவர்கள் வாயிலிருந்து கேட்கும்போது எனக்கு பெரிய உறுத்தலாக இருக்கிறது. யோசித்துப் பார்த்ததில், நம் 'டிவி- சென்டிரிக்' உலகத்த்தில், ஒரு வேளை தமிழில் குழந்தைகளின் பொழுது போக்கு அம்சங்கள் குறைவாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றியது. குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள், பாடல்கள், குறும்படங்கள் தமிழில் அதிகம் வரவேண்டும் என்பதே என் ஆசை.
ஆனால் தம் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதையே விரும்பும் போக்கைத்தானே பெற்றோரிடம் பொதுவாகக் காண்கிறோம். நிலை அப்படி இருக்க, தமிழில் இப்பொழுது போக்கு அம்சங்கள் வந்தாலும் அவற்றை வாங்கி பயன்படுத்துவார்களா என்பது பெரிய கேள்விக் குறியே.
சென்ற முறை சென்னை சென்றிருந்தபோது தமிழில் சிறுவர் பாடல்கள் வாங்க மிகவும் அலைய வேண்டியதாய் இருந்தது. 'மேடம், இந்தக் காலத்தில யார் மேடம் தமிழ் ரைம்ஸ் வாங்கறாங்க' என்று ஏளனமாய்க் கேட்டார்கள் கடை ஊழியர்கள். கஷ்டப் பட்டுக் கொஞ்சம் ஒலி நாடாக்களும் கதைப் புத்தகங்களும் வாங்கி வந்து பார்க்கும் குழந்தைகளுக்கெல்லாம் பரிசாக வழங்கி வருகிறேன்.
'ரா ரா...' என்ற சந்திரமுகி பாடலை இன்னொரு குழந்தை பாடாமலிருக்க (ஒரு குழந்தை பாடி கேட்டாகிவிட்டது) ஏதோ என்னாலான சிறிய முயற்சி.
4 Comments:
மீண்டும் மீண்டும் அருமையான கட்டுரைகள்.
சகோதரி உங்க பணிக்கு என் வாழ்த்துகள்.
என் குழந்தை யார் வந்தாலும் முதலில் வணக்கம் சொல்லி பின் கை குலுக்க சொல்லுவேன், ஒரு முறை நான் செய்து காட்டுவேன், என் வயது மகளும் செய்கிறார், காரணம் அனைவரிடமும் சகஜமாக பேச வேண்டும், பழக வேண்டும் என்பதற்காக, மேலும் தமிழிலில் வணக்கம் சொல்லவும் சொல்லி கொடுத்திருக்கிறேன்.
இனிவரும் காலத்தில் குழந்தைகள் சிறுவயது முதலே தாங்களே சொந்தமாக சிந்திக்க தொடங்க வேண்டும், ஆரம்பத்தில் நாம் உதவ வேண்டும், அதை விட்டு நடனம் ஆடுவது, குரங்கு சேட்டைகள் செய்யச் சொல்வதை தவிர்க்கலாம்.
என் மகள் நல்லா பேசத் தொடங்கியதும் எங்க வீட்டிற்கு வருபவர்களுக்கு கதை சொல்லுவார். நீங்களும் வாங்க.
சன் டிவியில் திருமதி.அனிதா குப்புசாமி ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி நடத்துகிறார். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். அதில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் திறமைகள், திறமை என்று இல்லாவிட்டாலும் அவர்களது பெற்றோர்களின் முயற்சி, ஆகியவற்றைப் பார்க்கும் போது், ஏதோ சில நல்லவைகளும் நடக்கின்றன என்ற நம்பிக்கை வருகிறது. குழந்தைகளின் அது போன்ற வெளிப்பாடுகளை அதிகமாக இரசிக்க முடிகிறது, நீங்கள் குறிப்பிட்ட 'மன்மத ராசா', 'வாடி நாட்டுக் கட்ட' போன்ற உதாரணங்களை விட.
நல்ல பதிவு நிலா. நன்றி.
பரஞ்சோதி,
நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் குழந்தை கதை எழுதவே செய்யும் :-)
Voice of wings, அப்படிப்போடு, வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home