முகமூடி
வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பற்பல முகமூடிகளை அணிந்திருக்கிறோம். இடத்திற்கேற்றவாறு மனிதர்களுக்கேற்றவாறு சில பல முகமூடிகளைக் கழற்றி வைக்கிறோம். ஆனால் முகமூடி இல்லாமல் நாம் வாழ்வது மிகவும் குறைவு - எங்கோ படித்த இந்தக் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.
உலகம் ஒரு சிறிய கிராமமாகிப் போனதில் மேலும் மேலும் புதிய சூழல்கள், மனிதர்கள் என்று சந்திக்க நேர்கையில் இன்னும் பல முகமூடிகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. இப்படி முகமூடிகளை மாற்றிக் கொண்டே இருப்பதில் நாம் யார் என்றே நாளாவட்டத்தில் நமக்கு மறந்து போகிறது.
உண்மையான ஆன்மீகம் நாம் யார் என்பதை அறிந்து கொள்வதே என்று படித்திருக்கிறேன். ஒரு புத்த மதப் பாடலின் கருத்து இது - ஒரு மனிதன் தான் பட்டாம் பூச்சியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எப்போதும் கற்பனை செய்து கொண்டிருப்பானாம்; இறக்கைகளை அடித்துக் கொண்டு உலகெலாம் சுற்றிவரலாம், மலர்களின் வாசனைக்குள் மதிமயங்கி திளைத்திருக்கலாம் என்றெல்லாம் கனவு கொண்டிருப்பானாம். கடைசியில் அவனுக்குத் தான் மனிதன் என்பதே மறந்து போய் பட்டாம்பூச்சியாகவே தன்னைப் பாவிக்கத் தொடங்கிவிட்டானாம்.. அது போலத்தான் மனிதனும் உலக இச்சைகளில் உழன்று தன் உண்மையான (ஆன்மாவின்) இயல்பை மறந்து போகிறான். (கருத்தைப் போலவே பாடலின் ட்யூனும் அற்புதமாய் இருக்கும். கேட்க விரும்பினால் சொல்லுங்கள்)
எனக்கும் அடிக்கடி 'நான் யார்? எங்கே இருக்கிறேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?' என்பது போன்ற கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. பதிலுக்காக பரதேசி போல அலைவதில் பல புதிய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன். அப்படி கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இந்த சுகம் செயல்முறை:
http://www.nilacharal.com/tamil/specials/sugam.html
எளிதானதும் பயனுள்ளதும். முயற்சித்துப் பாருங்கள்.
நேரம் கிடைக்கும்போது நான் கற்றுக் கொண்ட மற்றவற்றைப் பற்றியும் எழுதுகிறேன்.
6 Comments:
சிறந்த தமிழ்வலைப்பதிவாளராகத் தேர்வாகியிருக்கும் முகமூடியைக் குறித்து இப்படிப் பதிவுபோடுவதைக் கண்டிக்கிறேன்.
;-))
சம்பந்தப்பட்டவர்கிட்டேர்ந்து கண்டனம் ஒண்ணையும் காணுமே:-)))
// முகமூடியைக் குறித்து இப்படிப் பதிவுபோடுவதைக் கண்டிக்கிறேன் //
// சம்பந்தப்பட்டவர்கிட்டேர்ந்து கண்டனம் ஒண்ணையும் காணுமே //
*
“எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து எனக்குள் இப்படி ஒரு அமைதி இருந்ததே இல்லை. தலைக்குள் ஒரு நிசப்தம் நிலவுவதை உணர முடிகிறது. எனது சாந்தத்தின் ரகசியம் என்ன என்பதை அறிய எனது நண்பர்கள் ஆவலாக இருக்கிறார்கள்”.
நன்றி : சுகம்
போன பின்னூட்டத்தில் விட்டுப்போனது :
;)))))
முகமூடி,
அந்த 'சுக'ப் பயிற்சியெல்லாம் செய்து பார்த்தீரா?
முகமூடி பிறக்கும்போதே ஞானியாக்கும். அவருக்கு இதெல்லாம் தேவையில்லை:-)))
Post a Comment
<< Home