நடிக, நடிகையர் தேவை
தொடர்கதை ஒன்றுக்கு நண்பர்களை மாடலிங் செய்ய வைத்து புகைப்படத்தோடு அதனை வெளியிட விருப்பம். நடிகர், நடிகையர் தேடிக் கொண்டிருக்கிறேன். கதையில் பல பாத்திரங்கள் இருப்பதால் பலரின் உதவி தேவை. விருப்பமுடையவர்கள் தயவ்வு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்களேன். நான் ஸ்டோரி போர்ட் சொன்னால் நீங்களே நேரம் கிடைக்கும் போது படம் எடுத்து அனுப்பிவிடலாம். அதனால் உலகின் எந்தக் கோடியில் நீங்கள் இருந்தாலும் எனக்கு சம்மதமே.
புகைப் படங்களில் பார்த்தவர்களில் மாலன், சுந்தர், ரஜினி ராம்கி, டி.பி.ஆர்.ஜோசஃப், டோண்டு, ரசிகவ் என்று பலர் பாத்திரங்களுக்குப் பொருத்தமாகத் தெரிகிறார்கள் (இன்னும் எனக்குத் தெரியாமல் எவ்வளவோ பேர் இருக்கலாம்). அவர்களுக்கும் ஆர்வம் இருப்பின் இது ஒரு இனிய புதுமையான அனுபவமாக அமைய வாய்ப்பிருக்கிறது.
எனது மின் அஞ்சல் முகவரி: nila at nilacharal dot com
பதிலுக்குக் காத்திருக்கிறேன்.
பி.கு 1: பெண் பாத்திரங்களும் கதையில் உண்டு.
பி.கு 2: இதை விளையாட்டாக எழுதவில்லை.
பி.கு 3: உதவி கிடைக்கும் வரை மீள்பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்:-)))
பி.கு 4: இந்த ஐடியாவுக்கு பேடன்ட் ரைட்ஸ் வாங்கி வத்திருக்கிறேன் :-)))
19 Comments:
அன்பு நிலா,
எனக்கு வாய்ப்பு இருந்தால் கொடுங்கள். நடித்துப் பார்க்கலாமே..!
முருகபூபதி
உங்க கதையில் முகமூடி போட்ட பாத்திரம் ஏதும் வருதா?
;))
முருகபூபதி, உங்களைப்போல ஆர்வமுள்ள ஆட்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் ஃபோட்டோ அனுப்புங்களேன் ப்ளீஸ்.
முகமூடி, உங்களுக்காக ஒரு வில்லன் கேரக்டரை பழைய தமிழ்ப்படம் போல முகமூடியோடு அலையவிட்டால் போச்சு :-))
கொஞ்சம் விளக்கமாக எழுதவும்?????!!! நடிப்பு எந்த நாட்டில், எப்போ? எதாவது பாத்திரம் காலியாக இருந்தால் நானும் பங்கு பற்றிக் கொள்கிறேன்!!!
//புகைப் படங்களில் பார்த்தவர்களில் மாலன், சுந்தர், ரஜினி ராம்கி, டி.பி.ஆர்.ஜோசஃப், டோண்டு, ரசிகவ் என்று பலர் பாத்திரங்களுக்குப் பொருத்தமாகத் தெரிகிறார்கள்//
எந்த சுந்தர்..ஹி..ஹி..:-)
ஹீரோயினுக்கு தாத்தா/அப்பா இல்லாமலா கத இருக்கப் போகுது? அதுக்கு வலையுலத்தில இந்த 'மூஞ்சை'விட்டா உங்களுக்கு ஏது வேறு வழி அப்டிங்கிற நல்ல எண்ணத்திலதான் இந்த லின்க்குகளை அனுப்பறேன்; புரிஞ்சுக்கங்க. மற்றபடி எனக்கு என்ன..
http://dharumi.weblogs.us/2005/11/08/132
http://dharumi.weblogs.us/2005/11/02/122
மூக்கு சுந்தர், (என்னங்க பேர் இது?)
உங்க படத்தைப் பார்த்தேன். நீங்க இல்லாத பாத்திரமா :-)))
நிலா, இந்த சுந்தர் வேற, நீங்க நினைக்கிற சுந்தர் வேற. அவர் வந்தாராய்ப்பு சுந்தர் அல்லது முன்பு மஸ்கட் சுந்தராய் இருந்து இப்பொழுது அமெரிக்கா சுந்தர். இவர் மூக்கு சுந்தர். பதிவில் மூக்கு படம் மட்டும் போட்டு இருப்பார்.
தருமி,
ரெண்டு ஃபோட்டோவும் நல்ல இருக்கு. தொடருக்கு இல்லைன்னாலும் நிலாச்சாரலில் வேறு கதைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?
உஷா,
//இவர் மூக்கு சுந்தர். பதிவில் மூக்கு படம் மட்டும் போட்டு இருப்பார்.
//
தெரியும். அதான் 'நீங்க (மூக்கு) இல்லாத பாத்திரங்களா'ன்னு பதில் போட்டேன் :-)))
அனானி,
விரிவா அப்பறம் எழுதறேன்
உஷா மாமி,
முதலில் என் ப்ரொஃபைலில் படம் போட்டு இருந்தேன். ஆனால் குழந்தைகள் படத்தைப் பார்த்துவிட்டு வீரிட்டு அழுவதாக புகார்கள் கிளம்பின. எனவே என் லோகோவை (மூக்கு) மட்டும் இப்போது வைத்திருக்கிறேன். நீங்கள் பயப்படாமல் இருந்தால் இங்கே பார்க்கவும்.
http://thanivalai.blogspot.com/2004/12/blog-post.html
நிலா,
மூக்கு சுந்தர் என்பது என் பதிவின் Tag line ல் இருந்து சேர்(த்து)ந்து கொண்ட பெயர்.
நிலா, எனக்கு எதாவது 'பாத்திரம்'?
கொடுமைக்கார மாமியார் மாதிரி:-)
நிலா.
ஏதாச்சும் கொசுவர்த்திச் சுருள் சுத்தற பாத்திரம் இருந்தா நல்லா செய்வேன் :))
//அவர் வந்தாராய்ப்பு சுந்தர்//
அய்யோ உஷா. ஊர் பேரை நான் கெடுக்கறது பத்தாதுன்னு நீங்க வேறயா? :) அது "வத்திராயிருப்பு"ன்னு மருவிப்போன "வற்றாயிருப்பு". ஆங்கிலத்துல Watrap - வத்றாப்!
ஒரு காலத்துல ராமநாதபுர மாவட்டத்தின் நெற்களஞ்சியம்னு பேர்வாங்கின ஊர்! ஹூம்.
நிலாச்சாரலில் வேறு கதைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?"//
- எதுக்கும் நீங்க என்னோட மானேஜரப் பாத்து கால்ஷீட் வாங்குங்க...இது எப்படி இருக்கு? ( சர்வர் சுந்தரம் டச் இருக்கா?) ஏதோ ஒரு சான்ஸ் குடுங்க மேடம்..! :-)
நிலா,
//....கொசுவர்த்திச் சுருள் சுத்தற பாத்திரம்....//
நானும் கொசுவர்த்திக் கேஸ்தான்.
கொஞ்சம் பார்த்து 'பாத்திரம்' போடுங்கம்மா.
தருமி,
நன்றிங்க. சரியான கேரக்டர் வரும்போது கான்டாக்ட் பண்றேன்
சுந்தர்,
உங்களுக்கு கமல் ரேஞ்சுக்கு ஒரு கேரக்டர் வச்சிருக்கேன். தனியா எழுதறேன்.
துளசி,
உங்க ஃபோட்டோவைக் கொஞ்சம் அனுப்புங்களேன், ப்ளீஸ். தொடரிலுள்ள ஒரு கேரக்டருக்கு பொருத்தமா இருப்பீங்கன்னு நெனக்கிறேன். (நெசமாதாங்க)
//உங்களுக்கு கமல் ரேஞ்சுக்கு ஒரு கேரக்டர் வச்சிருக்கேன்.
//
இதைப் படிச்சதும் டக்குன்னு ஞாபகத்துக்கு வந்ததைச் சொல்லிடறேன்.
ஒரு படத்துல முடிதிருத்துநராக வரும் கருணாஸ் "குருதிப்புனல் ஸ்டைல் வேணும்"னு வர்ற வாடிக்கையாளரைக் கட்டிப்போட்டு அந்த ஸ்டைலைப் "பண்ணி" அனுப்புவார்.
கமல் ரேஞ்சுன்னதும் எனக்கென்னவோ 16 வயதினிலே (தட்பவெப்பம் மைனஸ்ல போயிட்ருக்கு. இப்பப்பாத்து கோவணம்லாம் கட்ட வச்சிறாதீங்க!) அல்லது குருதிப்புனல் க்ளைமாக்ஸ் மாதிரி எதாச்சும் "பாத்திரம்" கொடுத்துடாதீங்க :))
//கமல் ரேஞ்சுன்னதும் எனக்கென்னவோ 16 வயதினிலே (தட்பவெப்பம் மைனஸ்ல போயிட்ருக்கு. இப்பப்பாத்து கோவணம்லாம் கட்ட வச்சிறாதீங்க!) அல்லது குருதிப்புனல் க்ளைமாக்ஸ் மாதிரி எதாச்சும் "பாத்திரம்" கொடுத்துடாதீங்க :)) //
சுந்தர்,
உங்ககிட்ட பிடிச்சதே இந்த sense of humourthaan.நியாயமா உங்களுக்கு சதிலீலாவதி கேரக்டர் கொடுத்த்திருக்கணும். வாழ்வே மாயம் கேரக்டர்தான் கைவசம் இருக்கு.
//கொஞ்சம் விளக்கமாக எழுதவும்?????!!! நடிப்பு எந்த நாட்டில், எப்போ? எதாவது பாத்திரம் காலியாக இருந்தால் நானும் பங்கு பற்றிக் கொள்கிறேன்!!! //
அனானிமஸ்,
விரிவா சொல்றேன் கேளுங்க. பத்திரிகைகள்ல கதைக்கேத்தாப்பல படம் போட்டிருப்பாங்க. நிலாச்சாரலுக்கு அந்த மாதிரி போடறவங்க யாரும் மாட்டல. அதனால என்ன பண்றோம்னா, நமக்கேத்தமாதிரி ஃபோட்டோ எடுத்து அதை பயன்படுத்தப் போறோம்.
உதாரணமா என்னுடைய நன்றும் தீதும் அப்படிங்கற கதைக்கு ஒரு படம் வேணும்னு வச்சுக்கங்க, நான் நண்பர்கள்ல யார் பொருத்தமா இருப்பாங்கன்னு பாத்து அவங்களுக்கு கதை அல்லது கதைச் சுருக்கத்தையும், படம் எப்படி அமையணும்ங்கிற விளக்கத்தையும் அனுப்புவேன் (ஸ்டோரிபோர்ட்). உதாரணத்துக்கு கீழே ஒரு ஸ்டோரி போர்ட் கொடுக்கிறேன்:
வெள்ளைச் சட்டை அணிந்து ஒரு அம்பாசடர் அல்லது மாருதி வேனின் அருகில் நின்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.(ரொம்ப டிரமாட்டிக் ஆக இருக்கக் கூடாது) முகத்தில் சோகமும் இயலாமையும் இருக்க வேண்டும். கண்டிப்பாக கேமராவைப் பார்க்கக் கூடாது. (கார் இல்லாவிட்டால் ஒரு தூணிலோ சுவரிலோ சாய்ந்து யோசித்துக் கொண்டிருக்கலாம்.) படத்தில் வேறு அடையாளங்கள் ஏதுமில்லாமல் பார்க்துக் கொள்ளவும் (அதாவது ஊர் பெயரோ, அல்லது ஊருக்கான அடையாளங்களோ இல்லாமல்)
************
இந்த ஸ்டோரி போர்டுக்கு ஏத்தமாதிரி நீங்க டிஜிடல் காமராவில படம் எடுத்து அனுப்பணும். (அடப் போங்கம்மா, நீங்களும் உங்க சான்ஸும் அப்படின்னு நீங்க சலிச்சுக்கறது கேக்குது). ஆனா பண்ணிப்பாருங்களேன். நெஜமாவே ஒரு நல்ல அனுபவமா இருக்கும். ரொம்ப நிறைவாகவும் இருக்கும்.
படத்தை நாங்க சில சமயம், ஒட்டுவோம், வெட்டுவோம், வேற எஃபக்டுக்கு மாத்துவோம். ஆனா உங்க கேரக்டர் அங்க நிக்கும்ல:-)
ரெண்டு வருஷம் முன்னால பூஞ்சிட்டு குழந்தைகள் இதழுக்காக நான் லண்டன்லருந்து மொசாம்பிக்கில இருக்கிற என் ஃபிரண்டுக்கு இதை விட டீடெய்ல்டா 10 படங்களுக்கு ஸ்டோரி போர்ட் அனுப்பிச்சேன். அவங்க அதை அப்படியே ஃபாலோ பண்ணி அவங்க ரெண்டு குழந்தைகளை வச்சு ஷூட் பண்ணி அனுப்பிச்சாங்க. அந்த 10 படங்களை வச்சு ஒரு படக்கதை பண்ணினோம். நல்லா வந்திருந்துச்சி.
நிலா எந்த விலாசத்துக்கு ஃபோட்டோ அனுப்பணும்?
Thulasi,
//நிலா எந்த விலாசத்துக்கு ஃபோட்டோ அனுப்பணும்? //
nila at nilacharal dot com
Thank you for the support
Post a Comment
<< Home