.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Thursday, January 12, 2006

ஒழுக்க விதிகள்

Your Ad Here

கற்பு பற்றிய ஆரவாரம் சற்று ஓய்ந்தாலும் இன்னும் நமக்கு இந்த சங்கதியில் தெளிவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆளாளுக்கு இங்கு நாட்டாமைகளாக தங்களை வரித்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்களே தவிர, எது அவர்களின் பார்வையில் ஒழுக்கம் என்று தெளிவாகச் சொல்லக் காணோம்.

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் முன்பே நிலாச்சாரலில் வெளிவந்த ஸ்வர்ண சுந்தரியின் 'ஒழுக்க விதிகள் - சில கேள்விகள்' என்ற கட்டுரையில் கேட்கப்பட்ட சில கேள்விகளை இங்கு வைக்கிறேன்:

ஒழுக்கம் என்பது ஏன் நம் சமூகத்தில் பாலியலுடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கப் படுகிறது? அடுத்தவருக்குத் தரும் மரியாதையில், சமூக அக்கறையில், தனிமனித நேர்மையில் - இவற்றிலெல்லாம் ஒழுக்கம் தேவையில்லையா? அடுத்தவரை ஏமாற்றுபவன் ஏகபத்தினி விரதனாய் இருந்தாலவன் ஒழுக்கசீலன் ஆகிவிடுவானா?

சரி, பாலியல் ஒழுக்கத்தையே எடுத்துக் கொள்வோம். அதிலாவது நாம் தெளிவாக இருக்கிறோமா? ஒழுக்கமென்பது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதா? அப்படியானால் நமது அரசியல்வாதிகளில் பலர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று தமிழகம் ஒப்புக் கொள்ளுமா?

‘கேரக்டர் சரியில்லை’ என்று பெரும்பாலும் பெண்களே சுட்டிக் காட்டப்படுவது ஏன்?

முழுக்கட்டுரையையும் இங்கு காணலாம்:
http://www.nilacharal.com/tamil/specials/tamil_vithi_191.html

நாட்டாமைகள் இந்தக் கட்டுரையில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்னால் என்னைப் போன்ற சிற்றறிவுகளுக்கு எட்டாத நம் ஒழுக்கவிதிகளில் கொஞ்சம் தெளிவு பிறக்கும். (ஏன் அவர்களே இந்த விதிகளுக்கென்று ஒரு புத்தகம் போட்டுவிட்டால் அவ்வப்போது ரெஃபர் பண்ணிக் கொள்ள வசதியாக இருக்கும் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

At January 13, 2006 12:11 AM, Blogger தேவ் | Dev said...

மன்னிக்கணும்... தங்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கொண்டுவிட்டீர்களா? இவ்வளவு தெளிவாக வாசகரைக் குழப்புகிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்... வாழும் மனித சாதி... அதில் யாருக்கும் ஒழுக்கம் பற்றி பேச தகுதி இலலை என்றா?
பிரச்சனைய எழுப்பிவிட்டு நீங்களே அடிச்சிட்டு சாவுங்க என்பது அரசியல்வாதிகளின் பாணி. அட அது உங்களுக்கு தேவையா? தீர்வைச் சொல்லுங்க... இல்லைக் குறைந்தப் பட்சம் உங்க கருத்தையாவது தெளிவா தைரியாமாச் சொல்லுங்க... என்னைப் பொறுத்தவரை இது தான் ஒழுக்கம்ன்னு சொல்லுங்க.. இல்லை ஒழுக்கம் என்பது மாயை அப்படின்னாவது சொல்லுங்க... தயவு செய்து குழப்பாதீங்க.... HONESTLY SPEAKING...பதிவு போடவேண்டுமே என்ற நோக்கம் மட்டுமே கொண்டு தயவு செய்து எழுதாதீர்கள். நன்றி.
அப்புறம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 
At January 13, 2006 12:25 AM, Blogger நிலா said...

என்ன தேவ், பயங்கர கடுப்பாயிட்டீங்க போலருக்கு.

கேள்வி கேட்டால்தானேப்பா தெளிவு பிறக்கும்? எதை அடிப்படையாகக் கொண்டு மக்கள் குதிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைப்பது தவறாகத் தெரியவில்லை. ஒரு கருத்தில் தெளிவாக இருந்தால்தான் பதிவு போட வேண்டும் என்பது உங்களின் புதிய விதி போலும். புதிதாக வேறெதாவது விதிகள் வைத்திருக்கிறீர்களா?

நானும் பார்த்துவிட்டேன், நான் கேள்வி கேட்டு பதிவு போட்டால் உங்களுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது :-)

மற்றபடி, உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

 
At January 13, 2006 12:54 AM, Blogger தேவ் | Dev said...

நிச்சயமாக... கோபம் வருகிறது. பதில் தெரியாதவர்கள் கேள்வி கேட்டால் பரவாயில்லை.
சிறு குழந்தை செய்யும் சில விஷயங்கள் ரசனைக்குரியது.. அதையே பெரியவர்கள் செய்தால் நிச்சயமாய் கண்டனத்துக்குரியது. தமிழும் தமிழ் சமுதாயமும் கேள்விகளை உணவாகக் கொண்டு வாழ்கிறது. கேள்வி கேட்பவன் எல்லாம் தலைவன் என்று தடுமாறி அலைகிறது. கேள்விக்கான் பதிலைத் தருபவன் தான் தலைவன் என்று நமக்கு ஏனோ புரிய மாட்டேன் என்கிறது. உங்களைப் போல ஒரு சிறு கிராமத்தில் இருந்து புறப்பட்டு... நகரம் நகர்ந்து.. நாடு தாண்டி இருக்கும் பேர்கள் இப்படி கேள்விகளால் மக்களைத் திணறடிப்பதை விடுத்து உங்களுக்கு உங்கள் அனுபவங்கள் மூலம் கிடைத்தப் பதில்களை பதிவுகளில் பகிர்ந்தால் இன்னும் மூலையில் முடங்கிக் கிடப்போர்க்கு அது ஒரு உந்து சக்தியாக விளங்கும் என்பது என் கருத்து. நன்றி

 
At January 13, 2006 1:22 AM, Blogger நிலா said...

தேவ்,
பதிலுக்கும் நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. ஆனால் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்.

முதலாவதாக, நான் எந்த விதத்திலும் பெரியவள் என்ற எண்ணம் என்னிடத்தில் இல்லை. பதில் தெரியாத கேள்விகள்தான் என்னிடம் பல உள்ளன. நான் பதில் தேடுபவள். (என் முந்தைய பதிவை முடிந்தால் பாருங்கள்). அதுதான் சத்தியமான உண்மை. எல்லாம் தெரிந்ததாய் பாசாங்கு செய்து பதிவு போடுவதில் எனக்கு விருப்பமில்லை.

தவிர, தலைவர்களிடம் எல்லாவற்றுக்கும் பதில் எதிர்பார்ப்பது தவறு. அதுதான் வொர்ஷிப்புக்கு அடிப்படையாக அமைந்துவிடுகிறது. தலைவனும் மனிதன். தலைவன் சூப்பர் பீயிங் இல்லை. ஒரு நல்ல தலைவனின் கற்றல் நிற்பதில்லை. கேள்விகள் கேட்காமல் கற்பது சாத்தியமில்லை.


//உங்கள் அனுபவங்கள் மூலம் கிடைத்தப் பதில்களை பதிவுகளில் பகிர்ந்தால் இன்னும் மூலையில் முடங்கிக் கிடப்போர்க்கு அது ஒரு உந்து சக்தியாக விளங்கும் என்பது என் கருத்து. நன்றி
//

தெளிவு உள்ளிருக்கிறது, தேவ். வெளியிலில்லை. கேள்விகள் உங்களுக்குள்ளிருக்கும் பதிலை வெளிக்கொணரும். நீங்களே தேடிக் கண்டுபிடிக்கிற பதில்கள் நிலைத்து நிற்கும். இது என் அனுபவத்தில் நான் கற்ற பாடம்.

 
At January 13, 2006 2:25 AM, Blogger தேவ் | Dev said...

ம்ம் எத்தனைக் காலத்திற்கு உங்களை இன்னும் மேம்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்? At whose cost?
கல்வியாலும் அனுபவத்தாலும் நாம் பெற்ற பயன்கள் நமக்கு மட்டுமா? Is it not absurd to keep our knowledge to ourselves and just lead this life to gain knowledge for us alone? Is it finally gonna endup without any use to anyone?

 
At January 13, 2006 2:32 AM, Blogger தேவ் | Dev said...

இன்னும் விவாத்ததை நீட்ட விரும்பவிலலை. இங்கு இந்த பதிவுகளின் வாயிலாக ஒழுக்கம் பற்றி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களால் நீங்கள் திருப்தி அடையும் பட்சத்தில் அந்த கருத்தை ஏற்பீர்கள். அதாவது ஏற்கனவே உங்கள் அறிவு வரையறுத்திருக்கும் கருத்தோடு ஒப்புமை உள்ள கருத்து. அது வரை நீங்கள் அறிவைத் தேடும் படலம் தொடரும். நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லி பின் மற்றவர் கருத்தை அறியலாம் என்பது என் எண்ணம்.

 
At January 13, 2006 2:48 AM, Blogger நிலா said...

//At whose cost?//

I do not think I am robbing anybody of anything to gain knowledge :-)

//Is it not absurd to keep our knowledge to ourselves and just lead this life to gain knowledge for us alone? Is it finally gonna endup without any use to anyone? //


In my opinion, when you do not have answers, it is absurd to pretend that you you know. There is nothing wrong in accepting it and ask around.

Besides, quesions make people think; help them understandthe issues if not give solutions. In fact, sharing your questions is in a way sharing your knowledge. Nobody can give you wisdom. You need to find it yourself. Questions help you find it.

Out of 40+ postings, I may have raised questions in 5 or so postings. I do share what I found asking questions (eg: sugam process in my previous posting)

It's not that I want to keep my knowledge (if at all I have)to myself. But I am concerned that I should not be blinded with my conviction. There is no absolute right or wrong on earth.

That's why - Sometimes I share. Sometimes I raise leading questions to enhance thinking. Some times I genuinly accept that I am ignorant and ask :-)

Anyway, thanks Dev for making me think more :-)

 

Post a Comment

<< Home