பூஜ்யன்
அசோக்குக்கு மதிய உணவு இடைவேளை ரொம்பப் பிடிக்கும். அரை மணி நேரமே ஆனாலும் காலாற தனியே நடந்து போய் தனக்குள் சிந்தித்து தனக்குள் பேசிக் கொள்கிற நேரம் அது மட்டும்தான். அது தனக்கான நேரம். ஆபீஸ் கவலைகள், கடன் தொல்லைகள் என்று தன்னை இம்சிக்கிற எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டுத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தான். பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கிற வாழ்க்கையிலிருந்து ஒரு அரை மணி நேரமாவது இப்படி வெளியேறாவிட்டால் மூச்சு முட்டிப் போகாதோ?
தினமும் இப்படி நடந்து போகும் போது தவறாமல் அந்த அழுக்குப் பிச்சைக்காரனைப் பார்க்கிறான். நாற்பது நாற்பத்தைந்து வயதிருக்கும். திடகாத்திரமான உருவம். சடைபிடித்த முடி. பத்தடி தூரத்திற்கு நாற்றமடிக்கும் சுத்தம். இந்தக் கோலத்தில்தான் சிக்னலில் வழக்கமாய் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பான். சிக்னலுக்காகக் காத்திருக்கும் வாகனத்திலிருப்போரைத் தொட்டுத் தொட்டுக் காசு கேட்பதும் அவர்கள் அவனை வசை பாடிப் போவதும் நித்தம் நடக்கும் ஒன்று. ....மேலும்
5 Comments:
நிலா, இது தொடர்கதை முயற்சியா? ரொம்பவும் கொஞ்சமாக எழுதியிருக்கிறீர்கள். அடுத்த பகுதி வரை இதை நினைவு வைத்திருக்க வேண்டுமே.
Ragavan,
மேலும்னு ஒரு சுட்டி இருக்கே. கவனிக்கலையா?
அதக் கொஞ்சம் தள்ளிப்போடறேன்
Good story
//தன் அனுமதி இல்லாமல் ஒருவன் தன்னைக் காயப்படுத்த முடியாது என்னும் அந்தக் கம்பீரம்//
True to those words... Kept me at thoughts for sometime.
நன்றி தேவ்.
இதே வரிகளைக் குறிப்பிட்டு ஒரு பேராசிரியரும் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்.
நான் படித்த ஒரு ஆன்மிகக் கட்டுரையின் சாரம் இந்தக் கருத்து. அதுதான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது.
Post a Comment
<< Home