.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Wednesday, January 18, 2006

சில எளிய தியான முறைகள்

Your Ad Here

முத்துக்குமரனின் விபாஸனா தியானமுறை குறித்த கட்டுரை என்னை சற்று மிரளவைத்தது. அவர் சொல்வதில் தவறேதுமில்லை. ஆனால் அந்த தியான முறை கடுமையாகப் படுகிறது. தியானம் என்றாலே 10 நாள் பயிற்சியும் உலகை வெறுத்தலும் மௌனமும் என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் எனது அனுபவ அறிவை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தியானத்தின் நோக்கம் அமைதியும் சமாதானமும் அடைவது; எதையும் வெறுக்கவோ மறுக்கவோ செய்யாமல் அனைத்தையும் அவ்வப்படியே ஏற்றுக்கொளும் உள்ளொளி பெறுவது. தியானத்தின் பலன்கள் பற்பல. மனம் அமைதி அடையும்போது சிந்தனைகள் தெளிவுபடும். வாழ்க்கையை மேம்படுத்த வழிமுறைகள் தானாய்ப் பிறக்கும்.

இந்தப் பலன்களை அடைய பொறுமையும் ஒழுங்கும் கொஞ்சம் தேவை. நானும் quick fix தேடுகிற ஆசாமி ஆதலால் பலமுறை ஆரம்பித்து உடனே விட்டுவிட்டு இப்போது கடந்த இரு வருடங்களாக ஒரளவு ஒழுங்காகப் பயிற்சி செய்கிறேன். நல்ல பலன் இருக்கிறது.

ஒழுங்கு என்றவுடன் பயந்துவிடவேண்டாம். 10 நிமிட தியான முறையிலிருந்து ஒரு மணி நேர தியான முறை வரை பல வித தியான முறைகள் இருக்கின்றன. இணையத்திலேயே பல Guided meditation மையங்கள் உள்ளன.

நான் பயன்படுத்திப் பயன்பெற்ற தியான முறைகள் இங்கே:

Soham:

http://swamij.com/soham-mantra.htm

10-minute mindfulness meditation:

http://www.beliefnet.com/story/3/story_385_1.html

Guided Vipasana, Forgiveness, Guided Metta Meditation (can be downloaded):

http://www.imcw.org/audio/audio.php

இன்னும் முயன்று பார்க்க இருப்பவை இங்கே:

http://www.learningmeditation.com/room.htm

http://download.meditation.org.au/meditationmusic.asp

http://www.wildmind.org/realaudio/


தமிழில் கைடட் மெடிடேஷன் எதுவும் இணையத்தில் இல்லை என நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நான் ஞானம் (!!!) பெற்றபிறகு போடுகிறேன் :-))

தன்னால் இப்படி அமைதியாகவெல்லாம் உட்கார்ந்து தியானம் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் சுகப்பயிற்சியை முயன்று பார்க்கலாம் (தமிழில்):

http://www.nilacharal.com/tamil/specials/sugam.html

இதையெல்லாம் முயற்சி செய்து பலன் இருந்தால், விருப்பப்படி குருதட்சணை அனுப்பலாம். (அடிக்க வராதீங்க சாமியோவ்:-))))))) பலன் எசகு பிசகாக இருந்து நீங்கள் சாமியாராகிவிட்டால் நான் பொறுப்பல்ல.

On a serious note, என் அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேனே தவிர எதுவும் கற்றுக்த்தர முனையவில்லை. எதுவானாலும் முயற்சி செய்யுமுன் நன்றாக அதுகுறித்து அறிந்துகொண்டு முயற்சி செய்யுங்கள். விளைவுகளுக்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதே.

சரி, தியானத்தைப் பற்றி பேசறதால நடிகர் நடிகர்கள் தேவை என்பதை மறந்துட்டேன்னு நினைக்காதீங்க. அடுத்தடுத்த வாரங்கள்ல அறங்கேறப் போறவங்களைப் பாத்து அசந்து போகப் போறீங்க. இன்னும் உதவி தேவை. முக்கியமாக அவசரமாக இரு இளம்பெண் மாடல் தேவை (22 - 26 வயது). யாராவது தெரிந்தால் சொல்லுங்கோ.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

5 Comments:

At January 18, 2006 4:29 AM, Blogger ஞானவெட்டியான் said...

அன்பு நிலா,

ஏதோ எனக்குதெரிந்த வழிகளை http://njaanavelvi.blogspot.com/2006/01/blog-post_18.htmlல் குறிப்பிட்டுள்ளேன்.

படித்துப் பாருங்கள். இயன்றால் முயன்று பாருங்கள்.

 
At January 18, 2006 6:09 AM, Blogger நிலா said...

அனானிமஸ், ஞானவெட்டியான்
நன்றி.

ரெண்டு பேரு பதிவையும் பார்த்துவிட்டேன்.

 
At January 18, 2006 6:32 AM, Blogger சிங். செயகுமார். said...

அன்புடன் நிலா , அனானி பின்னுட்டமல்ல என்னுடையதுதான் எங்கோ தவறு நிகழ்ந்துவிட்டது.


சிங்.செயகுமார்

 
At January 18, 2006 7:36 AM, Blogger ஞானவெட்டியான் said...

அது யார் அனானிமஸ்?

 
At January 18, 2006 9:17 AM, Blogger நிலா said...

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் - நான் குடுத்திருக்கிற இணைப்புகள் எல்லாத்திலேயும் ஆடியோ இருக்கு. அதைப் போட்டு அதில சொல்றபடி செஞ்சாப் போதும். புதுசா கத்துக்கிறவங்களுக்கு இது கொஞ்சம் சுலபமான வழி

 

Post a Comment

<< Home