.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Saturday, February 04, 2006

'இஸ்லாமை அவமதிப்பவர்களின் தலையைக் கொய்யுங்கள்'

Your Ad Here

கார்டூன் பிரச்சனையில் சாத்வீகமாகப் போராடும் முஸ்லீம்களின் ஊர்வலத்தில் கண்ட சில தட்டி வாசகங்கள்: (courtesy: BBC television)

Behead those who insult Islam
Slay those who insult Islam
Learn from 9/11
7/7 is coming again (I did not see this but the presenter mentioned it)


ஆர்பாட்டக்காரர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் சாத்வீகத்தையும் மனதார வரவேற்கிறேன் :-)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

48 Comments:

At February 04, 2006 1:04 AM, Blogger மகேஸ் said...

நானும் பார்த்தேன். ஒருவர் 'கில் ஹு இன்சல்ட் இஸ்லாம்' என எழுதிய தட்டியை தூக்கி வந்தார். இங்கிலாந்து அரசு அவர்களுக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறது/கொடுத்தது எனத் தெரியவில்லை.

 
At February 04, 2006 1:34 AM, Blogger நல்லடியார் said...

//இங்கிலாந்து அரசு அவர்களுக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறது/கொடுத்தது எனத் தெரியவில்லை. //

மகேஸ்,

இதே கேள்வியை டென்மார்க் அரசுக்கும், நார்வே அரசுக்கும் கொஞ்சம் கேட்டிருந்தால் உங்கள் நடுநிலை?! தெரிந்திருக்கும்.

சாத்வீகமாக போய்க்கொண்டிருப்பவனை கன்னத்தில் அடிப்பீர்கள். அவன் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும் இல்லையா?

வாழ்க உங்கள் FREEDOM OF EXPRESSION!

 
At February 04, 2006 1:43 AM, Blogger மகேஸ் said...

இதில் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இலலை. என் சொந்த கருத்தைக் கூறினேன் அவ்வளவுதான்.

 
At February 04, 2006 2:28 AM, Blogger ஜோ/Joe said...

நல்லடியார்,
சர்ச்சைக்குரிய கார்டூன் சொல்லும் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?அவை முகமது நபியை இழிவு படுத்துவதாக இருந்ததால் இந்த எதிர்ப்பா? அல்லது முகமது நபியை உருவமாக வரைந்ததால் இந்த எதிர்ப்பா?

முகமது நபியிம் உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் ,புத்தங்கள் ஏற்கனவே நிறைய இருப்பதை இந்த சுட்டி படங்களோடு சொல்கிறதே?

http://www.zombietime.com/mohammed_image_archive/

 
At February 04, 2006 3:40 AM, Blogger நல்லடியார் said...

//சர்ச்சைக்குரிய கார்டூன் சொல்லும் கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?அவை முகமது நபியை இழிவு படுத்துவதாக இருந்ததால் இந்த எதிர்ப்பா? அல்லது முகமது நபியை உருவமாக வரைந்ததால் இந்த எதிர்ப்பா?//

அழகப்பனின் பதிவில் பின்னூட்டியுள்ளேன். முஹம்மது நபியை இழிவுபடுத்துவது, அவர் ஓரிறைக் கொள்கையை சொல்ல ஆரம்பித்த நாள்முதலே இருந்து கொண்டிருக்கிறது. இந்த முறை ஆட்சியாளர்களும் இந்த "கருத்துச் சுதந்திர" பாதுகாவலர்களுடன் ஒத்து ஊதியதுதான் பிரச்சினையை பெரிதாக்கி விட்டது.

 
At February 04, 2006 4:19 AM, Blogger நல்லடியார் said...

//இதில் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இலலை. என் சொந்த கருத்தைக் கூறினேன் அவ்வளவுதான்.//

மகேஸ், ஆதங்கத்தில் சற்று கடுமையாக எழுதிவிட்டேன். மற்றபடி உங்களை மனம் புன்படுத்தி இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்,

 
At February 04, 2006 4:25 AM, Blogger ஜோ/Joe said...

நல்லடியார்,
நீங்கள் என்னை ஒரு கிறிஸ்தவன் என்ற கோணத்தில் பார்க்காமல் விவாதிப்பதாக தெரியவில்லை.

கிறிஸ்தவன் என்ற முறையில் நான் உங்களைப்போல் உணர்ச்சுவசப்படுவேன் என்று நினைத்தால் உங்களுக்கு வெற்றி கிட்டாது.

உங்களுடைய இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என்று கேட்டால் என் பதில் இது தான்.

இயேசுவை நான் என் உயிருக்கு மேலாக நேசிக்கலாம் .ஆனால் உலகத்தில் உள்ளவர் எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்க்க மாட்டேன்.

நான் அறிந்த யாராவது இயேசுவை இழிவுபடுத்தினால் ,நான் அவரிடம் விளக்கிச் சொன்னால் ஒரு வேளை பயன் இருக்கலாம் என்று நான் நினைத்தால் விளக்கிச் சொல்லுவேன் .எனக்கு சம்பந்தம் இல்லாத யாரோ,அல்லது நிறுவனமோ அவ்வாறு செய்தால் ,"இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் .இறைவா இவர்களை மன்னியும்" என்று நினைத்து விட்டு போய்விடுவேன்.

இதனால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க லாயக்கு இல்லையென்றோ அல்லது ,கிறிஸ்து மேல் அன்பு இல்லையென்றோ பிறர் நினைத்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன். இது தான் கிறிஸ்து எனக்கு கற்றுத் தந்தது.

 
At February 04, 2006 7:00 AM, Blogger நிலா said...

இதை, இதைத்தான் நான் முஸ்லீம் சகோதரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். I salute this leader:

Muslim leader condemns protesters

A march in which protesters chanted violent anti-Western slogans such as "7/7 is on its way" should have been banned, a leading British Muslim said.
Asghar Bukhari said the demonstration in London on Friday should have been stopped by police because the group had been advocating violence.

The chairman of the Muslim Public Affairs Committee said the protesters "did not represent British Muslims".

"It's irrelevant whether it's Muslims causing hatred or anyone else - freedom of speech has to be responsible" - Asghar Bukhari
courtesy: BBC

இதைத்தான் இந்தப் பதிவில் நானும் சொல்ல முயன்றேன்

 
At February 04, 2006 12:29 PM, Anonymous Anonymous said...

அன்புள்ள நல்லடியார் அவர்களுக்கு,

பிரான்ஸ் மற்றும் டானிஷ் பத்திரிக்கை வெளியிட்ட அந்த படங்கள் கண்டனத்திற்குறியவை என்பது தான் எனது நிலைப்பாடும். இதை கண்டிக்கும் அதே வேளையில் "7/7 is on its way" என கூறுபவர்களையும் கண்டிக்கவே வேண்டும் அல்லவா? "என்ன உசுப்பேத்தனாங்க. அதனால நான் அடிச்சேன். இது என்ன தப்பு?" என்பது தான் உங்கள் தரப்பா?

 
At February 04, 2006 7:56 PM, Blogger நல்லடியார் said...

//இதை கண்டிக்கும் அதே வேளையில் "7/7 is on its way" என கூறுபவர்களையும் கண்டிக்கவே வேண்டும் அல்லவா? "என்ன உசுப்பேத்தனாங்க. அதனால நான் அடிச்சேன். இது என்ன தப்பு?" என்பது தான் உங்கள் தரப்பா? //

அன்பின் சித்தார்த்,

இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்கள், முஸ்லிம்கள் செய்வதை மட்டுமே குறை சொல்லி கண்டிக்கப்பட வேண்டும் என்றார்கள். அதற்குத்தான் முதலில் தூண்டியவனே கண்டிக்கப்படவேண்டும் என்றேன்.

நியதிப்படி குற்றவாளியே முதலில் தண்டிக்கப்படவேண்டும். இதில் குற்றம் செய்தவர் முஸ்லிமாக இருக்கும் பட்சத்திலும் இதே நிலைப்பாடுதான் எனதும்.

Actions should not be justified by reaction!
அன்புடன்,

 
At February 05, 2006 12:38 AM, Anonymous Anonymous said...

Actions should not be justified by reaction!

similarly

Reaction should not be justified by action.

 
At February 05, 2006 3:55 AM, Blogger வானம்பாடி said...

ஜோ, உங்கள் கருத்து மிக அருமையானது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்களிடம் சொல்லியிருக்கிறீர்கள். எந்த அரபு சர்வாதிகார நாடுகளிலாவது பத்திரிகை சுதந்திரம் என்ற வார்த்தையாவது உண்டா? ஒரு பத்திரிகையின் கருத்துக்கு அரசு மன்னிப்பு கோர வேண்டும், தண்டிக்க வேன்டும் என்பது மேற்கத்தியவர்களுக்கு புரியாது, oppressive சமூகங்களிலேயே வளர்ந்தவர்களுக்கு சுதந்திரத்தின் அருமை புரியாது.

 
At February 05, 2006 8:37 AM, Blogger நிலா said...

//இங்கிலாந்து அரசு அவர்களுக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறது/கொடுத்தது எனத் தெரியவில்லை.//

மகேஸ்,

இவ்வளவு சுதந்திரத்தை அனுபவிப்பவர்கள் கருத்து சுதந்திரத்தைக் கண்டிப்பது கூட இங்கே பிரச்சனை இல்லை. கண்டிக்கும் முறைதான் கேள்விக்குரியதாகிறது.

 
At February 05, 2006 10:55 AM, Blogger Muthu said...

நிலா,
தலைப்பைப் பார்த்து நான் கூட ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன். அது நிலாவின் சொந்தக் கருத்தோ என்று :-).

 
At February 05, 2006 1:57 PM, Blogger மகேஸ் said...

இரண்டு நாட்கள், பிரச்சினையை கவனித்து வந்தேன்.இதுவே எனக்குத் தோன்றுகிறது.
இஸ்லாம் அமைதியை விரும்புகிறது என்று வெளியில் சொல்லிக கொள்வார்கள். ஆனால் 7/7 மீண்டும் வரும் என்று அரசை பயமுறுதுவார்கள்.
நீங்கள் இருப்பது வெள்ளையர்களின் நாடு. நீங்கள் வந்தது/வர நினைப்பது பிழைப்பதற்காக. கொஞ்சம் அடங்கித்தான் இருக்க வேண்டும். ஏன் குஜராத்திகளும், பஞ்சாபிகளும், இலங்கைத் தமிழர்களும் அடக்கமாக வாழவில்லயா?
போராட்டம் நடத்துங்கள், அமைதியாக உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். அதை விட்டு, கொல்லுவேன், தலையை எடுப்பேன, என்பது சரியல்ல. இப்போது ஜென்ரல் டயர் இல்லை என சந்தோசப் பட்டுக்கொள்ளுங்கள்.
டென்மார்க் நாட்டின் பொருள்களை புறக்கணிப்பவர்கள், அந்த நாட்டையும் புறக்கணித்து, வெளியேறி அரபு நாடுகளில் குடியேற வேண்டியது தானே. நான் கேட்பதற்கு விளக்கம் கூறுங்கள். நான் இங்கிலாந்து நாட்டின் பிரஜையானால் மனதால் என்னால் இங்கிலாந்து பிரஜையாக வாழ முடியாது. ஏனென்றால் நான் முதல் தலைமுறை. என் சந்ததிகள் இங்கிலாந்து பிரஜை என்ற நினைவுடன் வாழ்வார்கள்.இதற்கு குஜராத்தியர்கள் சிறந்த உதாரணம். ஆனால் பல தலைமுறையாக இந்தியராக இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை விளையாட்டில் கூட ஆதரிக்கும் உங்களில் பலபேரை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள் என்று கூறாமல் என்ன சொல்வது.

 
At February 05, 2006 1:59 PM, Blogger நிலா said...

//சாத்வீகமாக போய்க்கொண்டிருப்பவனை கன்னத்தில் அடிப்பீர்கள். அவன் மறுகன்னத்தைக் காட்ட வேண்டும் இல்லையா?//

//"என்ன உசுப்பேத்தனாங்க. அதனால நான் அடிச்சேன். இது என்ன தப்பு?" என்பது தான் உங்கள் தரப்பா? //

//Actions should not be justified by reaction!//


//similarly

Reaction should not be justified by action. //

சித்தார்த்,நல்லடியாய், அனானிமஸ், வருகைக்கும் மேற்கண்ட விவாதத்திற்கும் நன்றி,

 
At February 05, 2006 2:06 PM, Blogger நிலா said...

//நான் அறிந்த யாராவது இயேசுவை இழிவுபடுத்தினால் ,நான் அவரிடம் விளக்கிச் சொன்னால் ஒரு வேளை பயன் இருக்கலாம் என்று நான் நினைத்தால் விளக்கிச் சொல்லுவேன் .எனக்கு சம்பந்தம் இல்லாத யாரோ,அல்லது நிறுவனமோ அவ்வாறு செய்தால் ,"இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் .இறைவா இவர்களை மன்னியும்" என்று நினைத்து விட்டு போய்விடுவேன்.//
ஜோ
உங்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துவிட்டது உங்கள் பதில். என்னைப் பொறுத்த வரை மதம் என்பது மனிதர்களுக்குப் பாலமாய் இருக்கவேண்டுமே தவிர அவர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதாய் அமைந்துவிடக்கூடாது. அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களுமே போதிப்பதாகத்தான் நான் கருதுகிறேன். மதத்தின் பேரால் நடக்கும் வன்முறைகள் இறைவனை அவமானப்படுத்துவது போலாகும் என்பதே என் கருத்து.

 
At February 05, 2006 2:11 PM, Blogger நிலா said...

நல்லடியார்,
முந்தைய பின்னூட்டத்தில் உங்கள் பெயரில் ஏற்பட்ட எழுத்துப் பிழைக்காய் வருந்துகிறேன்

 
At February 05, 2006 4:34 PM, Anonymous Anonymous said...

Mahesh,
I agree word by word with you.

Nila: I do not have a blogger id; so passing my comment as Anonymous. Allow me if you feel my comment is okay for you.

 
At February 05, 2006 7:50 PM, Blogger நல்லடியார் said...

//முந்தைய பின்னூட்டத்தில் உங்கள் பெயரில் ஏற்பட்ட எழுத்துப் பிழைக்காய் வருந்துகிறேன்//

:)

நன்றி நி(ல்)லா!

 
At February 05, 2006 8:08 PM, Blogger நல்லடியார் said...

//டென்மார்க் நாட்டின் பொருள்களை புறக்கணிப்பவர்கள், அந்த நாட்டையும் புறக்கணித்து, வெளியேறி அரபு நாடுகளில் குடியேற வேண்டியது தானே//

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்காமல் "காவிக்கொடிக்கு" சல்யூட் அடிப்பவர்களும் இந்தியாவை விட்டு வந்த வழியே செல்ல வேண்டியதுதானே?

இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளை ஒப்புக் கொள்ளாதவர்கள், ஏன் ஈனும் தனிநாடு கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

//பல தலைமுறையாக இந்தியராக இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானை விளையாட்டில் கூட ஆதரிக்கும் உங்களில் பலபேரை உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள் என்று கூறாமல் என்ன சொல்வது//

ஐயா, பாகிஸ்தானியரும் பலதலை முறைகளாக இந்தியாவில்தான் இருந்தார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், ஆஸ்திரேலியர்! இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரம் டெண்டுல்கர் விளம்பரப்படுத்துவது அமெரிக்க/இஸ்ரேலிய குளிர்பானங்கள்!!
இவர்களும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள் என்று உரக்கச் சொல்லுங்கள்.

//இதில் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இலலை. என் சொந்த கருத்தைக் கூறினேன் அவ்வளவுதான்.//

விளையாட்டை விளயாட்டாகப் பார்க்காமல், இரு மதத்தவருக்கான/நாடுகளுக்கான போராகப் பார்க்கும் நீங்கள் கருத்துச் சொல்லாமல் இருப்பதுதான் வலைப்பூவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவி!!!

:)))

 
At February 05, 2006 10:21 PM, Anonymous Anonymous said...

பாகிஸ்தானியரும் பலதலை முறைகளாக இந்தியாவில்தான் இருந்தார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், ஆஸ்திரேலியர்! இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரம் டெண்டுல்கர் விளம்பரப்படுத்துவது அமெரிக்க/இஸ்ரேலிய குளிர்பானங்கள்!!
இவர்களும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள் என்று உரக்கச் சொல்லுங்கள்./

இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியாவுக்கு கைதட்டாமல் பாகிஸ்தானுக்கு மட்டும் கைதட்டுவது சரி என்கிறீர்களா?தவறு என்கிறீர்களா?

அமெரிக்க குளிர்பானத்துக்கு விளம்பரம் செய்வது தேச துரோகமா?உங்கள் வாதம் ஒன்றும் புரிபடவில்லையே.இஸ்ரேல் குளிர்பானம் என என்ன இருக்கிறது?நான் கேள்விப்பட்டதே இல்லையே?

பல லட்சம் இந்தியர் வெளிநாட்டில் வேலை செய்யும்போது(நீங்கள் உட்பட) ஆஸ்திரேலிய பயிற்சியாளர் இந்தியாவில் வேலை செய்வது என்ன தவறு?

 
At February 05, 2006 11:04 PM, Blogger Amar said...

//இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்காமல் "காவிக்கொடிக்கு" சல்யூட் அடிப்பவர்களும் இந்தியாவை விட்டு வந்த வழியே செல்ல வேண்டியதுதானே?
//

கண்டிப்பாக அவர்கள் நாட்டைவிட்டு செல்ல வேண்டியது தான்.

//இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியாவுக்கு கைதட்டாமல் பாகிஸ்தானுக்கு மட்டும் கைதட்டுவது சரி என்கிறீர்களா?தவறு என்கிறீர்களா?//

பாகிஸ்தானை தான் நான் விளையாட்டிலும் ஆதரிக்க வேண்டும்.
இல்லை என்றால் என்னை பாகிஸ்தானுக்கு போக சொல்லி பதிவு போடுவார்களோ ? ;-)

//இவர்களும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள் என்று உரக்கச் சொல்லுங்கள்.//

Coca Cola இந்திய அரசுக்கு வரி கட்டுகிறது.

இஸ்ரேலில் இருந்து எந்த குளிர்பானமும் இந்தியாவுக்கு வரவில்லை.ஆயுதம் தான் வருகிறது.

பாகிஸ்தானின் மீது உள்ள பாசத்தில் அதைவும் வாங்க கூடாது.நமது தம்பிகள் தானே அடித்தால் வாங்கி கொள்ளதான் வேண்டும் என்றும் பின்னர் சொல்லலாம்.

ஜெய் பாக்!
(ஹிந்த் என்று சொன்னால் சங்கதவன் என்று சொல்லிவிடுவார்கள்.Hail Musharraf)

 
At February 06, 2006 3:14 AM, Blogger நிலா said...

நன்றி, சுதர்சன்,
ஒரு பத்திரிகையின் கருத்துக்கு அரசு மன்னிப்பு கோர வேண்டும், தண்டிக்க வேன்டும் என்பது மேற்கத்தியவர்களுக்கு புரியாது//
//
ஒரு பத்திரிகை செய்த தவறுக்கு அரசாங்கத்தையும் நாட்டையும் இழுப்பது சற்று அதிகப்படியான செயல் என்பதே எனது கருத்தும்.

இந்தப் பிரச்சனையால் இரண்டு ஆப்கானியர்கள் இறந்தது மிகவும் வருத்தத்திற்குரியது. வன்முறை இருமுனைக் கத்தி போல என்பதையே இது நிரூபிக்கிறது.

 
At February 06, 2006 3:18 AM, Blogger வானம்பாடி said...

//டென்மார்க் நாட்டின் பொருள்களை புறக்கணிப்பவர்கள், அந்த நாட்டையும் புறக்கணித்து, வெளியேறி அரபு நாடுகளில் குடியேற வேண்டியது தானே.//

மிகச் சரியான கேள்வி.

 
At February 06, 2006 3:23 AM, Anonymous Anonymous said...

டென்மார்க்கை விட்டு வேளியேறினால் வயிற்றுக்கு சோறு? லட்சக்கணக்கில் மொரக்கோவிலிருந்தும், அல்ஜீரியாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் எதற்காக மேற்கு நாடுகளுக்கு குடி பெயர்கிறார்கள்? அவர்களின் நாடுகளிலேயே இருந்து அப்படியே அல்லாவின் ஆட்சியில் சுபிக்ஷமாக வாழலாம் அல்லவா? எல்லாம் வல்ல இறைவனால் தன் மார்க்கத்தை அதி தீவிரமாக பின்பற்றுவர்களுக்கு ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை கூட கொடுக்கமுடியவில்லை?

 
At February 06, 2006 4:07 AM, Anonymous Anonymous said...

//Actions should not be justified by reaction!

similarly

Reaction should not be justified by action.//

If no action, where will be reaction?

This post is on reaction only.

We, as readers, expect a neutral NILA and hope you understand.

If neutral, LikeTamilsasi,you should first write on the action instead of writing on reaction.
These cartoons are hurting thousands of our moslem brothern, but the reaction is hurting those only who committed. I agree, one cannot justify the other.

I am not supporting the arrogant reaction by the islamists but exhibiting your intention.

If I am wrong, please clarify. Thanks
Selvam
(I will create a blogger account soon).

 
At February 06, 2006 4:22 AM, Blogger நல்லடியார் said...

//அல்லாவின் ஆட்சியில் சுபிக்ஷமாக வாழலாம் அல்லவா? எல்லாம் வல்ல இறைவனால் தன் மார்க்கத்தை அதி தீவிரமாக பின்பற்றுவர்களுக்கு ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை கூட கொடுக்க முடியவில்லை?//

நிலா,

மேற்கண்ட பின்னூட்டத்தின் மூலம் அனாமதேயம் அல்லது அதை பெருந்தன்மையாக! அனுமதித்த நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

எல்லாக் கடவுள்களைப் பற்றியும் அந்த கடவுளை நம்பும் மக்களின் நிலை பற்றியும் அறிவுப்பூர்வமாக கருத்துப் பரிமாற்றம் செய்ய தயாரா? (நான் கடவுளை நம்பாதவன் என்ற முகமூடியில் வந்தால் மன்னிக்கவும்!)

//டென்மார்க் நாட்டின் பொருள்களை புறக்கணிப்பவர்கள், அந்த நாட்டையும் புறக்கணித்து, வெளியேறி அரபு நாடுகளில் குடியேற வேண்டியது தானே//

ஐரோப்பாவின் அறிவுக் கண்களைத் திறந்த முஸ்லிம்களைப் பற்றிய வரலாற்றை ஒருமுறை படித்துவிட்டு உங்களின் துவேஷங்களுக்கும் காழ்புணர்வுகளுக்கும் என்ன பெயர் வேண்டுமென்றாலும் கொடுங்கள். இதே கேள்வியை முஸ்லிம்களை வெருப்பவர்கள் அரபு நாட்டை விட்டு வெளியேற வேண்டியதுதானே என்றும் கேட்டுப்பார்த்தால் சுதர்ஸன் அவர்களின் கேள்விக்கு பதிலுண்டு.

//இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியாவுக்கு கைதட்டாமல் பாகிஸ்தானுக்கு மட்டும் கைதட்டுவது சரி என்கிறீர்களா?தவறு என்கிறீர்களா?//

கிரிக்கெட்டை தேசபக்திக்கு அளவீடாக நான் கருதவில்லை.ஆஸ்திரேலியாவும்-இங்கிலாந்தும் விளையாடும் போது எந்த நாட்டிற்கு கைதட்டுவீர்கள்? இரண்டு நாடுகள் விளையாடும் போது அவரவர் தனக்கு பிடித்த!? நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப் படுத்திவிட்டு போகட்டுமே. இதற்குமா மதச்சாயம் பூசி சொரிந்து கொள்வது?

நன்றி.

 
At February 06, 2006 4:24 AM, Anonymous Anonymous said...

it seems to be a diversion towards hatred spitting on Muslims

 
At February 06, 2006 4:47 AM, Blogger நிலா said...

//தலைப்பைப் பார்த்து நான் கூட ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன். அது நிலாவின் சொந்தக் கருத்தோ என்று :-).//

முத்து,
:-)))
'கார்ட்டூன்களை வெளியிட்டது தவறென்றே வைத்துக் கொண்டாலும் எதற்கு இவ்வளவு களேபரம்? அமைதியாக எதிர்ப்புத் தெரிவிக்கலாமே?' என்று நான் இட்ட பின்னூட்டத்தில் ஆரம்பித்ததுதான் இவ்வளவும். 'நாங்கள் சாத்வீகமாகவே போராடுகிறோம். நீங்கள்தான் காழ்ப்புணர்வோடு பார்க்கிறீர்கள்' என்று தனியே ஒரு பதிவே போட்டுவிட்டார்கள்.

சாத்வீகப் போராட்டமா இல்லையா என்பதைக் குறிக்கவே இந்தப் பதிவு.

 
At February 06, 2006 5:14 AM, Blogger நிலா said...

//எல்லாம் வல்ல இறைவனால் தன் மார்க்கத்தை அதி தீவிரமாக பின்பற்றுவர்களுக்கு ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை கூட கொடுக்கமுடியவில்லை?//


அனானிமஸ்,
இந்தக் கேள்வியை நமக்கு நாமே எல்லோருமே கேட்டுக் கொள்ளலாம்.யாருடைய இறைவன் மேல் என்பது என்பதல்ல இங்கு விவாதம். மதங்கள் மீதான, கடவுள்கள் மேலான தாக்குதல்களை இத்தோடு தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்

இந்தப் பதிவின் நோக்கம் வன்முறையை எதிர்ப்பதே. தேவை இல்லாமல் எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றாதீர்கள்

நல்லடியார்,

மேற்கண்ட பின்னூட்டத்தை அடித்துக் கொண்டிருப்பதற்குள் உங்கள் பின்னூட்டம் வந்துவிட்டது. அனானியின் கேள்விக்கு பதில் சொல்வதன் மூலம் அவரைப் போல் கருத்துக் கொண்ட யாவருக்கும் கண்டனம் தெரிவிப்பதற்காகவே இதனை அனுமதித்தேன்.


மக்களே,

இந்தப் பதிவின் நோக்கத்தைத் தயவு செய்து திசை திருப்பாதீர்கள். வன்முறையைக் கண்டிப்பதே என் நோக்கம்; வெறுப்பை வளர்ப்பதல்ல.

 
At February 06, 2006 5:39 AM, Blogger நிலா said...

செல்வம்,

உங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் நடுநிலையென்று நினைப்பது மட்டுமே நடுநிலை ஆகிவிடாது. 'நீங்கள் கெட்டவர்கள்' என்று ஒருவர் சொல்வதற்கும் 'நீ என்னைக் கெட்டவன் என்று சொல்வதால் நன்ன் உன்னைக் கொல்லுவேன்' என்று பதில் சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கெட்டவன் என்று சொல்வது ஒருவருடைய பெர்சப்ஷன். கொல்வேன் என்பது அச்சுறுத்தல். நான் அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் எதிர்க்கிறேன். அவர்கள் எந்த மதத்தினர் என்பது எனக்குப் பொருட்டல்ல. யார் செய்திருந்தாலும் நான் அதைத்தான் சொல்வேன். 'அவன் அப்படிச் சொன்னதால் அடித்தேன்; அவனைக் கண்டிக்காமல் என்னைக் கண்டிக்க வருவது தவறு' என்றால் நான் சொல்வது 'என் கண்ணோட்டத்தில் அடிப்பது தவறு. அவன் சொன்னது தவறா என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்பதே.


நான் இஸ்லாமின் போர்வையில் நடக்கும் வன்முறையைத்தான் எதிர்க்கிறேன். இஸ்லாமியர்களை எதிர்ப்பதாகப் பொருள் கொள்வது தவறு.

அனானிமஸ்,
it seems to be a diversion towards hatred spitting on Muslims
//
நீங்கள் சொல்வது சரியே. இங்கே வாதம் திசை திரும்புகிறது. இனி அதிக கவனத்துடன் இருப்பேன்.

 
At February 06, 2006 5:52 AM, Blogger Sen Sithamparanathan said...

வணக்கம்... மிகவும் வெறுக்கத்தக்க விடயம்.

மேலும், லண்டனில் சுப்பர்மானையும் ஏசுவையும் ஒப்பிட்டு மாணவர்களுக்கு மதத்தை ஊட்டுவதாக அவுஸ்ரேலிய பத்திரிகைகளில் படித்தேன். உண்மையா?

 
At February 06, 2006 6:22 AM, Blogger நிலா said...

மகேஸின் பின்னூட்டத்தின் ஒரு பகுதி:

(மகேஸ், பிரச்சனை திசை மாறுவதை நான் விரும்பாததால் உங்கள் பின்னூட்டத்தில் மேலும் சர்ச்சையைக் கிளறும் பகுதியை நீக்கி இருக்கிறேன்.)

1.)//இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்காமல் "காவிக்கொடிக்கு" சல்யூட் அடிப்பவர்களும் இந்தியாவை விட்டு வந்த வழியே செல்ல வேண்டியதுதானே?//
2.)//விளையாட்டை விளயாட்டாகப் பார்க்காமல், இரு மதத்தவருக்கான/நாடுகளுக்கான போராகப் பார்க்கும் நீங்கள் கருத்துச் சொல்லாமல் இருப்பதுதான் வலைப்பூவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவி!!!//

நல்லடியாரே,
1.) காவிக்கொடிக்கு சல்யூட் அடிக்கும் ர்.ச்.ச் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் தேசியக் கொடிக்கும் சல்யூட் அடிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் 5000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. எப்படி இங்கிலாந்து வெள்ளையர்களின் நாடோ, அது போல் இந்தியா அவர்களின் நாடு. அது போல் இந்தியா உங்களின் நாடும் கூட. ஏனெனில் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்கள் பொரும்பாலோர் மதம் மாறினர். எனவே உங்களுக்கும் இந்தியாவில் உரிமை உள்ளது. ஆனால் பெரும்பான்மை மக்களின் மனதறிந்து நடக்க வேண்டும். அதாவது இங்கு வெள்ளையர்களுடன் வாழும் குஜராத்திகள் போல.(என் மேனேஜர் குஜராத்தி, அதனால் அவர்களைப் பற்றி நிறையத் தெரியும்) நீங்கள் பச்சைக் கொடிக்கு மட்டும் சல்யூட் அடிப்பது தான் பிரச்சினை.

2.)விளையாட்டில் சொந்த நாட்டைத்தான் யாரும் ஆதரிப்பார்கள். ஆனால் இந்தியா-பாக். விளையாட்டில் பாகிஸ்தானை நீங்கள் மட்டும் ஆதரித்து விட்டு, விளையாட்டில் மதத்தை கலக்காதீர்கள் என்பது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல'

 
At February 06, 2006 7:31 AM, Blogger நிலா said...

//கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களுக்கு அதைக் காப்பாற்றுவது தான் முக்கியம். மனித நேயம் மாண்டு போனாலும் சரி!//

ஆதவன்,

கருத்துச் சுதந்திரத்தையும் மததையும் விட மனித நேயமே முக்கியம் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். எப்படி கருத்து சுதந்திரத்தைவிட மனித நேயம் முக்கியமோ அதே போல மதத்தையும் விட மனித நேயமே முக்கியம் என்பதே எனது கருத்து. மதத்துக்காக மனிதர்களைக் கொல்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்பதுதான் எனது வாதம்.

 
At February 06, 2006 7:34 AM, Blogger நிலா said...

செந்தூரன், வருகைக்கு நன்றி

//லண்டனில் சுப்பர்மானையும் ஏசுவையும் ஒப்பிட்டு மாணவர்களுக்கு மதத்தை ஊட்டுவதாக அவுஸ்ரேலிய பத்திரிகைகளில் படித்தேன். உண்மையா? //

இது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லையே :-(

 
At February 06, 2006 8:18 AM, Blogger மகேஸ் said...

நன்றி நிலா அவர்களே. :-)

 
At February 06, 2006 8:36 AM, Blogger நிலா said...

ஒத்துழைப்புக்கு நன்றி, மகேஸ் :-)

 
At February 06, 2006 8:45 AM, Blogger முத்துகுமரன் said...

//மக்களே,

இந்தப் பதிவின் நோக்கத்தைத் தயவு செய்து திசை திருப்பாதீர்கள். வன்முறையைக் கண்டிப்பதே என் நோக்கம்; வெறுப்பை வளர்ப்பதல்ல//

பாத்தா அப்படி தெரியவில்லை நிலா.

நடுநிலமை என்பது என்னை பொறுத்தவரை அயோக்கியதனம். ஒன்று உண்மைக்கு ஆதரவாக இரு. இல்லை எதிர்ப்பாக இரு. இரண்டுங்கெட்டனானாய் இருப்பது பிரயோஜனமில்லாதது.

 
At February 06, 2006 9:14 AM, Blogger நிலா said...

//நடுநிலமை என்பது என்னை பொறுத்தவரை அயோக்கியதனம்.//

மன்னிக்கவும். உங்களது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

//ஒன்று உண்மைக்கு ஆதரவாக இரு. இல்லை எதிர்ப்பாக இரு. இரண்டுங்கெட்டனானாய் இருப்பது பிரயோஜனமில்லாதது. //

முத்துக்குமரன்,
உங்கள் பார்வையில் உண்மையாக இருப்பதுதான் பிரபஞ்ச உண்மை என்பதில்லை. கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று ஆகிவிடாது.

 
At February 06, 2006 9:33 AM, Anonymous Anonymous said...

/கிரிக்கெட்டை தேசபக்திக்கு அளவீடாக நான் கருதவில்லை.ஆஸ்திரேலியாவும்-இங்கிலாந்தும் விளையாடும் போது எந்த நாட்டிற்கு கைதட்டுவீர்கள்? இரண்டு நாடுகள் விளையாடும் போது அவரவர் தனக்கு பிடித்த!? நாட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப் படுத்திவிட்டு போகட்டுமே. இதற்குமா மதச்சாயம் பூசி சொரிந்து கொள்வது/

தாய்நாட்டை விளையாட்டில் ஆதரிக்காமல் இந்தியா பாகிஸ்தானுடன் தோற்றால் கைதட்டி பட்டாசு கொளுத்தி மகிழ்வதை இப்படி ஆதரிக்கிறீர்களே?கேட்டால் இங்கிலாந்து ஆஸ்திரேலியா உதாரணம் வேறு.இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எனக்கு தாய்நாடல்ல.இந்தியா தான் தாய்நாடு.இந்தியா ஆடும்போது இந்தியாவை தானே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனும் ஆதரிப்பான்.இந்தியா அல்லாத நாடுகள் ஆடும்போது எதையோ ஆதரிக்கட்டும்.கவலை இல்லை.நிலா சொன்னது போல் முழு பூசணியை சோற்றில் மறைக்கிறீர்கள்.

 
At February 06, 2006 9:36 AM, Anonymous Anonymous said...

நடுநிலமை என்பது என்னை பொறுத்தவரை அயோக்கியதனம். ஒன்று உண்மைக்கு ஆதரவாக இரு. இல்லை எதிர்ப்பாக இரு. இரண்டுங்கெட்டனானாய் இருப்பது பிரயோஜனமில்லாதது./

உண்மையும் பொய்யும் இருதரப்பிலும் கலந்திருக்கும்.உண்மை என்பது எந்த ஒருதரப்பும் குத்தகைக்கு எடுத்த ஒன்றல்ல.அதற்குதான் நடுநிலமை வேண்டுமென்பது.

 
At February 06, 2006 9:49 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

//நடுநிலமை என்பது என்னை பொறுத்தவரை அயோக்கியதனம். ஒன்று உண்மைக்கு ஆதரவாக இரு. இல்லை எதிர்ப்பாக இரு. இரண்டுங்கெட்டனானாய் இருப்பது பிரயோஜனமில்லாதது.//

இரண்டு பக்கமுமே தான் சொல்வதுதான் 'உண்மை' என விளம்பும்போது எந்த 'உண்மை' பக்கம் போவது.

நல்லடியார் 9/11 தீவிரவாதிகளின் செயல் என்றுதான் நம்பிங் கொண்டிருக்கிறோம், அதை ஏன் சில முஸ்லீம்கள் மதப்போராக்க நினைக்கிறார்கள்.

7/7 காத்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? நாங்களெல்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறோம் என்பதுதானே. இப்படி சொல்பவர்களை தீவிரவாதிகெளென்று ஏன் கைது செய்யக்கூடாது?

 
At February 06, 2006 11:27 AM, Anonymous Anonymous said...

freedom of expression - பற்றி போய்க்கொண்டிருந்த பேச்சு, யாரோ ஒருவருடைய அரைவேக்காட்டு பின்னூட்டத்தால், மத சண்டை போல் ஆகிவிட்டதே

 
At February 06, 2006 12:49 PM, Blogger சுட்டுவிரல் said...

கருத்துச் சுதந்திரத்தின் அளவு பற்றி பேச வந்த களத்தில் தேவை ஏதுமின்றி காழ்ப்புணர்வுப் பின்னூட்டங்கள்.
அரசியலில் விளையாடுபவர்கள் விளையாட்டில் அரசியல் செய்துக்கொண்டிருக்க அதே பாணியில் இந்த வலைப்பூ தொண்டர்களும்.

பாகிஸ்தான் வெற்றிக்காக முஸ்லிம்கள் கொண்டாடியதாக சொல்லப்படுவது மிகப்பெருமளவு மிகையே. அப்படியும் யாருமிருப்பின் இந்திய முஸ்லிமாக நான் கடுமையாக கண்டிக்கிறேன். ஆனால் தனிப்பட்டு விளையாட்டு வீரர்களை ரசிப்பதை யாரும் வரம்பு விதித்து செய்ய முடியாது. அப்படி எத்தனையோ இந்திய சரவண்களும் முரளிதரன்களும் சென்னையில் பிறந்த நாசர் ஹுசேன்களும் இந்தியாவையே எதிர்த்து வெளி நாடுகளுக்காக முழுத்திறமையுடன் விளையாடி இருக்கிறார்களே! (நல்ல வேளை நாசர்ஹுசேன் பாகிஸ்தான் சார்பாக ஆடவில்லை. ஒரு தேசதுரோக பட்டம் கோட்டை விட்டுவிட்டார்) 'பரிவாரங்'களின் அரசியலில் its all inthe game.

தங்கள் நாட்டு நடிகர்களை விடவும் ரஜினியை ரசிப்பதாகச் சொல்லப்படுகிற ஜப்பானியர்கள் தான் 'பரிவாரக் கணக்கின் படி' உலகின் மிகப் பெரிய தேச துரோகிகள்.

 
At February 06, 2006 1:33 PM, Anonymous Anonymous said...

பாகிஸ்தான் வெற்றிக்காக முஸ்லிம்கள் கொண்டாடியதாக சொல்லப்படுவது மிகப்பெருமளவு மிகையே. அப்படியும் யாருமிருப்பின் இந்திய முஸ்லிமாக நான் கடுமையாக கண்டிக்கிறேன்.///

இது மிகவும் சரியான பதில்.இதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன்.

// ஆனால் தனிப்பட்டு விளையாட்டு வீரர்களை ரசிப்பதை யாரும் வரம்பு விதித்து செய்ய முடியாது. அப்படி எத்தனையோ இந்திய சரவண்களும் முரளிதரன்களும் சென்னையில் பிறந்த நாசர் ஹுசேன்களும் இந்தியாவையே எதிர்த்து வெளி நாடுகளுக்காக முழுத்திறமையுடன் விளையாடி இருக்கிறார்களே! //

முரளிதரன் சென்னை டெஸ்டில் டெண்டுல்கருக்கு பந்து வீசினால் அனைத்து சென்னை ரசிகரும் டெண்டுல்கருக்கு தான் ஆதரவு தருவார்கள்.தமிழன் என்பதால் முரளிதரனுக்கு ஆதரவு தர மாட்டார்கள்.தனி விளையாட்டு வீரருக்கு ரசிகராக இருப்பதில் தவறில்லை.ஆனால் இந்தியாவுக்கு எதிராக அந்த வீரர் ஆடும்போது இந்தியாவை ஆதரிக்காமல் இருப்பது எந்த இந்தியரும் செய்யாத ஒன்று.

எனக்கு கில்க்றிஸ்டின் ஆட்டம் மிக பிடிக்கும்.ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது நிச்சயம் அவருக்கு என் ஆதரவு கிடையாது.


//தங்கள் நாட்டு நடிகர்களை விடவும் ரஜினியை ரசிப்பதாகச் சொல்லப்படுகிற ஜப்பானியர்கள் தான் 'பரிவாரக் கணக்கின் படி' உலகின் மிகப் பெரிய தேச துரோகிகள். //

ரஜினி என்ன ஜப்பானியருக்கு எதிராகவா படம் எடுக்கிறார்?இல்லை ஜப்பானில் என்ன இந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினரா,போர் தொடுத்தனரா அவரை ஜப்பானியர் எதிர்க்க?

 
At February 06, 2006 1:33 PM, Blogger நிலா said...

சிறில் அலெக்ஸ்,

//இரண்டு பக்கமுமே தான் சொல்வதுதான் 'உண்மை' என விளம்பும்போது எந்த 'உண்மை' பக்கம் போவது.//

நன்றி. இங்கே பிரச்சனை என்னவென்றால் 'There is no absolute right or wrong' என்பதைப் பலரும் புரிந்து கொள்ளாததுதான். யாராவது நம்மைக் குறை கூறினால் நம்மீதுள்ள காழ்ப்புணர்வினால் மட்டுமே கூறுகிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டால் நம்மிடமுள்ள குறைகளை நாம் கண்டு களைய வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும். அவ்வப்போது அனைவருமே சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்.

//7/7 காத்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? நாங்களெல்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறோம் என்பதுதானே. இப்படி சொல்பவர்களை தீவிரவாதிகெளென்று ஏன் கைது செய்யக்கூடாது? //

இப்படி நடந்து கொண்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லீம் சமுதாயம் உட்பட பல்வேறு தரப்புகளிலிருந்தும் குரல் எழுப்பபட்டது. காவல்துறை அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. உண்மையைச் சொல்லப் போனால் இத்தகைய அச்சுறுத்தல்கள் இந்தக் கார்ட்டூன் பிரச்சனையில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தவர்களைக்கூட சிந்திக்க வைத்துவிட்டது.

தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் செய்பவர் போல் வேடமிட்டு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இளைஞர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். 'கார்ட்டூன் வெளியிட்டவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லை. எந்த வித நிபந்தனையுமில்லாமல் மன்னிப்புக் கோருகிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற முஸ்லீம்களோ, இந்த அச்சுறுத்தல் வாசகங்களுக்குக் கண்டனம் தெரிவித்தவர்களை 'நீங்கள் நடுநிலையாக இல்லை. காழ்ப்புணர்வோடு பேசுகிறீர்கள்' என்று தூற்றிக் கொண்டிருக்கவில்லை; இச்செயலை நியாயப்படுத்தியும் பேசவில்லை. சொல்லப் போனால் நான் கேட்ட முதல் கண்டனக்குரல் அக்ஸார் புகாரியிடமிருந்துதான் வந்தது. (மேலே ஒரு பின்னூட்டத்தில் அவர் கூரியவற்றை வெளியிட்டிருக்கிறேன்). அவர் போன்ற நடுநிலைவாதிகளும் மிதவாதிகளும் அதிகம் குரல் கொடுத்தால் இஸ்லாம் என்ற போர்வையில் நடக்கும் வன்முறைகள் குறையும்.

 
At February 06, 2006 2:01 PM, Blogger நிலா said...

நண்பர்களே,

யார் எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, நான் இந்தப்பதிவு போட்டதின் நோக்கம் தவறுகளைச் சுட்டிக் காட்டவே. வெறுப்பை வளர்ப்பதற்கல்ல.

இங்கே கிரிக்கெட் பற்றியும் நாட்டுப் பற்று பற்றியும் நடந்த பல விவாதங்களின் சாரம் என்று நான் இவற்றைத்தான் கருதுகிறேன்:

இந்தியா இந்தியருக்கு சொந்தம். இந்தியர் எந்த மதத்தவராயும் இருக்கலாம்.
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டிற்கு உண்மையாக இருக்கவேண்டும்; துரோகம் செய்யலாகாது.

Ok, We all got the point.

இதற்கு மேல் இந்த விவாதம் வளர்வதில் பயனொன்றுமில்லை.

இனி கடுமையான வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்களையோ தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளறும் பின்னூட்டங்களையோ வெளியிடப்போவதில்லை. அதற்கும் நான் காழ்ப்புணர்வோடு நடந்து கொள்கிறேன் என்று யாரேனும் எண்ணினார்களே ஆனால் 'என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே' என்று சிரித்துக்கொண்டு போகவேண்டியதுதான். யாருக்கும் நான் நடுநிலைவாதி என்று நிரூபிக்கும் கட்டாயம் எனக்கு இல்லை. என் மனசாட்சிக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளும் நிறைவு எனக்குண்டு.

இதுகுறித்து நிலாச்சாரலில் நான் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்:

http://www.nilacharal.com/tamil/current/islam_cartoon_246.asp



பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home