முருக பூபதி Hero ஆயிட்டாரு...
நடிகர், நடிகையர் தேவை என்று சில வாரங்களுக்கு முன் நான் போட்ட பதிவின் பயனாக இந்த வாரம் நம்ம முருக பூபதி ஸ்டார் ஆகிட்டாரு. 'நன்றும் தீதும்'ங்கற கதையில் கதாநாயகனா அறிமுகமாகி இருக்காரு. நான் அனுப்பியிருந்த ஸ்டோரி போர்ட் படிச்சு அவர் எடுத்து அனுப்பியிருந்த படங்களப் பார்த்து அசந்து போயிட்டேன்.
முகத்திலயும் கண்ணிலயும் இயலாமை, வருத்தம், கோபம் தெரியணும்னு சொல்லிருந்தேன். படத்தைப் பாருங்க. எவ்வளவு அழகா அந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கார்னு தெரியும்:
http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_245a.asp
முருகபூபதிக்கு என் பாராட்டைத் தெரிவிச்சப்ப அவர் நான் ஏதோ பேச்சுக்கு சொல்றேன்னு நெனச்சார். ஆனா அது உண்மைன்னு நீங்களும் கொஞ்சம் அவர்கிட்ட சொல்லுங்க.
அவ்வளவு ஈடுபாட்டோட நடிச்சு, படம் பிடிச்சுக் கொடுத்த முருகபூபதிக்கு நிலாக்குழுவின் நன்றிகள்
அடுத்த வாரம் வலைப் பதிவுகளின் சூப்பர் ஸ்டார்கள் ரெண்டு பேர் நடிக்கிற படங்கள் நிலாச்சாரலில் வரப் போவுது. யாருங்கறதை முடிஞ்சா யூகிங்க பார்க்கலாம்.
அப்புறம் நண்பர்களே, நடிகர், நடிகையர் தேவை தொடர்ச்சியாக இருந்து கொண்டுதானிருக்கும். அதனால் ஆர்வமுள்ளவர்கள் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்: nila at nilacharal dot com
மத்தபடி, ஏலியன் படம் ஒண்ணு தேவையிருக்கு. ஆனந்த் மாதிரி கேமராவை பாக்கெட்லேயே வச்சிருக்கிறவங்க யாருக்காவது ஏலியனைப் படம் பிடிக்கிற வாய்ப்பு வந்திச்சின்னா பிடிச்சு அனுப்புங்க என்ன? :-)
அல்லது உங்க வீட்டுக் குட்டீஸ் யாரையாவது ஒரு ஏலியன் வரைஞ்சு எனக்கு அனுப்ப சொல்லுங்க. ஒரு குட்டிப் பையன் எழுதின கதையில் ஏலியனைப் பற்றி வர்ற வர்ணனை இங்கே:
She noticed that the aliens had blue skin, two antennas, eyes nearly
popping out of their sockets but their faces looked friendly
குட்டிப் பசங்கதான் வரையணும்னு இல்லை. நீங்க கூட வரையலாம்:-)
யார் வரைஞ்சாலும் சனிக்கிழமைக்குள் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். வரையப் போறதுக்கு அட்வான்ஸ் நன்றிகள்
24 Comments:
நிலா அவர்களே!
இது அருமையான, புதுமையான முயற்சி, பாராட்டுகள்.
முருக பூபதி அண்ணா, அட்டகாசமாக இருக்கீங்க. வாழ்த்துகள்.
அன்புடன்
பரஞ்சோதி
அண்ணா, நன்றாக வந்திருக்கிறது படம். மிகவும் பொருத்தமாய் இருக்கிறது. நாடகங்களிலும் முயற்சி செய்யலாமே.
நிலா,
உண்மையிலேயே படம் அசத்தல். பாராட்டுக்கள் ஹீரோ பாரதிக்கு. விரைவில் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துக்கள் :-).
வணக்கம் நிலா.
இப்படி ஒரு தலைப்பில் உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவு வரும் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் அனுப்பிய மடலில் எந்த தொடுப்போ அல்லது கதையோ அனுப்பவில்லை. இதைப்பார்த்த பின்னர்தான் அந்தக்கதையை படித்தேன்!. கதை நன்றாக இருக்கிறது.
எங்கிருந்தாலும் தேடி வந்து பாராட்டும் அன்பு பரஞ்சோதி, அன்பு இராகவன், அன்பு முத்து ஆகியோருக்கு நன்றி. இருப்பினும் நீங்கள் இப்படி எல்லோரும் அறியும் படியாக பதித்திருப்பது எனக்கு கூச்சமாக இருக்கிறது.
நன்றி, பரஞ்சோதி
நீங்களும் முயற்சிக்கலாமே!
நன்றி ராகவன்
//நாடகங்களிலும் முயற்சி செய்யலாமே.//
நல்ல யோசனை
வாழ்த்துகள் முருகபூபதி.....
நல்ல படம் நிலா....
//நன்றி, பரஞ்சோதி
நீங்களும் முயற்சிக்கலாமே! //
நிலா அவர்களே!
சிறுவர் பூங்காவில் வரும் கதைகளில் எங்க ஊருக்கு பக்கத்தில் இருக்கும் ஊர்கள், நண்பர்கள் பெயரில் கதாபாத்திரத்தை சொல்கிறேன்.
நன்றி, முத்து.
(நீங்க ஏன் இப்போ அதிகம் எழுதறதில்லை?)
//விரைவில் சூப்பர் ஸ்டாராக வாழ்த்துக்கள் :-).//
ஆக்கிருவோம்:-)))))
////She noticed that the aliens had blue skin, two antennas, eyes nearly
popping out of their sockets but their faces looked friendly//
எனக்கென்னவோ இந்தப் பொட்டி தட்டும் தொழிலில் (IT) இருக்கறவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்கன்னு தோணுது!
இப்பக் கொஞ்ச காலமா வலைப்பதிவர்கள் கூட சில விஷயங்களைப் பத்தி பேசறப்ப ஏலியனாயிடறாங்க! ;)
முருகபூபதி படம் ரொம்ப நல்லா இருக்கு! (வறுமையின் நிறம் சிகப்பு கமல் சாயலும் இருக்கு). போட்டோவை ரொம்ப தேய்க்காம கொஞ்சம் க்ளியராவே போடுங்களேன்! அதான் யாருன்னு எல்லாத்துக்கும் தெரியுதே! :)
நன்றி.
//இப்பக் கொஞ்ச காலமா வலைப்பதிவர்கள் கூட சில விஷயங்களைப் பத்தி பேசறப்ப ஏலியனாயிடறாங்க!//
சுந்தர் நீங்க என்னு சொல்ல முயற்சி செய்கிறீர்கள்????!
Anonymous காரர்களும் பங்கு கொள்ள எதாவது பாத்திரம் இருக்கா?!!
நன்றி, முருகபூபதி
//நீங்கள் இப்படி எல்லோரும் அறியும் படியாக பதித்திருப்பது எனக்கு கூச்சமாக இருக்கிறது.//
ஸ்டாரான பிறகு கூச்சமெல்லாம் பார்க்க முடியுமா? போகப் போகப் பழகிடும் :-)))
தமிழ் இணைய நட்புக்களின் புதிய பரிமாணத்திற்கு அடிக்கோலிய நிலா, நடித்த முருக பூபதி இருவருக்கும் வாழ்த்துக்கள்
//நல்ல படம் நிலா....//
நன்றி, முத்துக்குமரன்
///நன்றி, முத்து.
(நீங்க ஏன் இப்போ அதிகம் எழுதறதில்லை?)///
நிலா,
உங்க மாதிரி எழுத்தாளர்களை நிறையப் படிப்பதிலேயே நேரம் அதிகம் செலவாவதால் எழுத முடிவதில்லை ;-).
பரஞ்ஜோதி,
நீங்களும் நடிக்க முயற்சிக்கலாமே என்று சொன்னேன் :-)
////இப்பக் கொஞ்ச காலமா வலைப்பதிவர்கள் கூட சில விஷயங்களைப் பத்தி பேசறப்ப ஏலியனாயிடறாங்க!//
//சுந்தர் நீங்க என்னு சொல்ல முயற்சி செய்கிறீர்கள்????!//
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரின்னு நினைக்கறேன். அந்தப் படத்துல கருணாநிதி (கலைஞர் இல்லைங்க) பேருந்து ஓட்டுனர். பயணிகள்ல ஒருத்தரு பாம்பாட்டி. அவரோட கூடைலருந்து பாம்பு வெளிய வந்து பேருந்துக்குள்ள போக, பயங்கர களேபரம் நடக்க, ஏகக் கூச்சலாக இருக்கும். கருணாநிதி ஏற்கெனவே பயங்கர எரிச்சல்ல இருக்கறப்போ இந்த இரைச்சலைக் கேட்டு இன்னும் பயங்கரக் கடுப்போட சத்தம் போடுவார். அப்போது பாம்பு ஸ்டியரிங் மேல ஏறிவந்து படமெடுத்து உக்காந்துக்கிட்டு இருககும். அதைப் பார்க்கு கருணாநிதி பயந்து அலறாமல் "இது பிரமை" என்று நினைத்துக்கொண்டு சில வினாடிகள் வாய்விட்டுச் சிரிப்பார் பாருங்க. தூள். சரியான நகைச்சுவை அது. அப்றம் அது நிஜம்தான்னு தெரிஞ்சுக்கிட்டுப் பதறியடிச்சு.... நல்ல காட்சி அது.
"அதுக்கென்ன இப்போ?"ன்னு கேக்கறீங்களா?
வலைப்பதிவுலகில் நடக்கற சில சச்சரவுகளையும் அடித்துக் கொள்ளல்களையும் வில்லங்கங்களையும் மர்மங்களையும் விவகாரங்களையும் பார்க்கும்போது, அவையெல்லாம் நிஜங்களாகவே, நிஜமாகவே நடப்பதாகவே இருந்தாலும் - கருணாநிதி மாதிரி - "இதெல்லாம் பிரமை" என்று எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டுப் போகவே ஆசைப்படுகிறேன். நிலவின் இருள் பக்கத்தை நான் பார்ப்பதில்லை. பார்ப்பதில் விருப்பமும் இல்லை. இதற்கு மேல் என் வாயைக் கிண்டாதீர்கள் திரு.அனானி அவர்களே!
பதிவுக்கும் இப்பின்னூட்டத்திற்கும் தொடர்பில்லை என்பதால் தயவு செய்து இதோடு இங்கு நிறுத்திக் கொள்வோமே! நன்றி.
//முருகபூபதி படம் ரொம்ப நல்லா இருக்கு! (வறுமையின் நிறம் சிகப்பு கமல் சாயலும் இருக்கு). போட்டோவை ரொம்ப தேய்க்காம கொஞ்சம் க்ளியராவே போடுங்களேன்! அதான் யாருன்னு எல்லாத்துக்கும் தெரியுதே! :)//
சுந்தர்
அடுத்த வாரம் வாழ்வே மாயம் கமல் வருவாரு:-)
சுந்தர்
அடுத்த வாரம் வாழ்வே மாயம் கமல் வருவாரு:-)
படத்தை இந்த எஃபக்டுக்குக் கொண்டுவர்றதுக்குக் காரணம் ஆளை மறைக்கணும்கறதினால் இல்லை. அப்படியே போட்டால் லைட்டிங்க், பேக்ரவுண்ட் இதெல்லாம் முகத்திலிருக்கிற உணர்ச்சிகளை மட்டுப் படுத்திடும். இந்த அளவு எஃபக்டிவாக இருக்காது.
//Anonymous காரர்களும் பங்கு கொள்ள எதாவது பாத்திரம் இருக்கா?!!//
ஓ இருக்கே... முருகபூபதி படத்துக்குப் பின்னால ஒரு அனானிமஸ் நிக்கறாரே. தெரியலை? :-))))
(சும்மா....)
//இணைய நட்புக்களின் புதிய பரிமாணத்திற்கு அடிக்கோலிய நிலா//
உஷா, நன்றி.
ஆனாலும் எல்லாப் புகழும் நடிகர்களுக்கே சேரவேண்டும். எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் நேரம் செலவு செய்து, எனது எதிர்பார்ப்புகளுக்கேற்ப படமெடுத்துத் தருவது பெரிய விஷயம்.
நன்றி முத்துக்குமரன், சுந்தர், உஷா.
அன்பு நிலா... உங்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டேனோ என்று தோன்றுகிறது. சிறப்பாக படத்தை வடிவமைத்த, சிறப்பாக கதை எழுதிய உங்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாக வேண்டும். அடுத்து வரும் நண்பர்களின் படங்களை பார்க்கவும், கதைகளை படிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.
மென்மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
முத்து
//உங்க மாதிரி எழுத்தாளர்களை நிறையப் படிப்பதிலேயே நேரம் அதிகம் செலவாவதால் எழுத முடிவதில்லை ;-).//
நக்கல்???!!! :-)
//பதிவுக்கும் இப்பின்னூட்டத்திற்கும் தொடர்பில்லை என்பதால் தயவு செய்து இதோடு இங்கு நிறுத்திக் கொள்வோமே! நன்றி.//
சுந்தர்,
இந்த சாக்கிலே சதமடிக்கலாம்னு நெனச்சேன். சொதப்பிட்டீங்களே:-))))))
//சிறப்பாக படத்தை வடிவமைத்த, சிறப்பாக கதை எழுதிய உங்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாக வேண்டும். அடுத்து வரும் நண்பர்களின் படங்களை பார்க்கவும், கதைகளை படிக்கவும் ஆவலாக இருக்கிறேன். //
நன்றி முருக பூபதி. அடுத்த சில கதைகளுக்கு மீண்டும் உங்களிடம் உதவி கோருவேன்.
Post a Comment
<< Home