வெள்ளை மனிதர்கள்
இந்தியாவில் வசித்தபோது பக்கத்து ஃப்ளாட் பெண்மணி வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தேன். அவர் மூலமாகவே பணம் எடுப்பது போடுவது போன்ற பல வேலைகள் நடக்கும். ஒரு முறை அதற்காக அவரின் ஃப்ளாட்டுக்குச் சென்ற போது பல உறவினர்கள் வந்திருந்ததைப் பார்த்தேன். வங்கி சம்பந்தமாக ஏதோ நான் உதவி கேட்க அவர் அன்று தான் அலுவலகம் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்தார். நானும் சாவகாசமாக, 'உறவினர்கள் வந்திருப்பதால் விடுமுறை எடுத்திருப்பீர்கள்' என்றேன். "இல்லை நேற்று என் மகள் இறந்துவிட்டாள். அதனால்தான்" என்றார். நான் ஆடிப் போய்விட்டேன். அடுத்த வீட்டிலிருந்து கொண்டு தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டதை விட அவர் துக்கம் புரியாமல் போய் உதவி வேறு கேட்டேன் என்பதை நினைத்தால் மிகவும் அவமானமாக இருந்தது.
துக்கிக்கும்போது துணை இருந்தால் பாரம் எவ்வளவோ குறையும் என்றுதான் நம் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் மேலை நாட்டினர் போல நாமும் தனியாய் துக்கம் அனுஷ்டிப்பது போலத்தான் அமைந்துவிடுகிறது. சென்ற வருடம் நெருங்கிய உறவினர் இருவர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தபோது என்ன செய்வதென்று கூட தெரியவில்லை. ஊரில் இருந்தால் ஆளோடு சேர்ந்து அழுதுவிடலாம். தனியே என்னவோ உணர்வுகள் உறைந்துவிடுவது போலிருக்கிறது. அந்தத் தாக்கத்தில் எழுதிய கதை இந்த வெள்ளை மனிதர்கள் :
http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_207.html
0 Comments:
Post a Comment
<< Home