இலவசக் கொத்தனாருக்குத் துணை
தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங். வித்தியாசமா ஏதாவது முயற்சி செய்யலாம்னு ஒரு ஆன் லைன் விளையாட்டு ஏற்பாடு பண்ணிருக்கேன். விளையாட்டுக்கு பெயர் பூப்பறிக்க வருகிறோம். இந்தப் பேரை தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் இந்த மாதிரி கிராமிய விளையாட்டுக்களை நினைவு படுத்தத்தான். பேருக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை. ஒரு நினைவுப் பெயர். அவ்வளவுதான்
மொத்தம் 4 அணி. ஒவ்வொரு அணியிலேயும் 2 பேர். ஒருத்தர் அமெரிக்காவில இருந்து இன்னொருத்தர் இந்தியாலருந்து. விளையாட்டில் மொத்தம் 6 சுற்றுக்கள் - இதில உலக அறிவு, படைப்புத் திறன், புத்திசாலித்தனம், வேகம் - இப்படி எல்லத்துக்கும் கலவையா சவால் இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பதிவு வரும். அணியினர் தங்கள் பதில்களை பின்னுட்டங்களாக இட வேண்டும். என் மெயில் பாக்ஸுக்கு எந்தப் பின்னூட்டம் முதலில் வருகிறதோ அவர்தான் முதலில் பதிலளித்ததாகக் கருதுவேன். பார்வையாளர்களும் பதிலளிக்கலாம். ஆனால் அவை சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும்.இந்திய நேரப்படி, திங்கள் மதியம் 12 மணியிலிருந்து புதன் அதிகாலை 3 மணி வரை எந்த நேரமும் சுற்றுகள் நடக்கலாம். விழிப்புடன் விரைந்து செயல்படுபவர்கள் வெல்வார்கள்.
வெற்றி பெறும் குழுவுக்கு nilashop.com வழங்கும் பரிசு உண்டு.
நியாயமா இந்தப் பதிவை திங்கட்கிழமைதான் போட்டிருக்கணும். என்ன ஆகிப்போச்சின்னா, போட்டியாளர் கைப்புள்ளயை ஆளையே காணோம். நம்ம இலவசக் கொத்தனாரோட டீம் மேட் அவரு. அவருக்கு பதிலா யாராவது ஒருத்தர் இந்தியாவிலருந்தோ இல்லைன்னா ஏதாவது ஆசிய நாடுகளிலிருந்தோ களத்தில இறங்கலைன்னா கொத்தனார் ஒத்தையா க்ரீஸ்ல நிக்க வேண்டி இருக்கும். கொத்தனாருக்கு சாதனை அளவு பின்னூட்டம் தந்து அவரை வாழவைக்கும் நண்பர் படையிலிருந்து யாராவது கைகொடுத்தா நல்லா இருக்கும். இன்றைக்கு இதை முடிவு செஞ்சே ஆகணும். அதனால ஆர்வமிருக்கிறவங்க சட்டுன்னு ஒரு தனி மெயில் தட்டிவிடுங்க: nila at nilacharal dot com
பாவம், இலவசக் கொத்தனாரைக் கைவிட்டுடாதீங்க
5 Comments:
you are tagged check my blog for further details
http://chennaicutchery.blogspot.com/2006/02/blog-post_25.html
என்னை இப்படி தனியா புலம்ப விட்டுட்டு எங்கய்யா போயிட்ட கைப்பு. அந்த நாமக்கல் ஆசாமி குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேக்க ஆரம்பிக்கம்போதே நினைச்சேன். இப்படித்தான் ஏதாவது ஆகும்ன்னு.
கைப்புள்ள காணாம போனதுல எனக்கும் வருத்தம்தான் இலவசக்கொத்தனார். நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்.
சரி அதுக்குப் பிராயச்சித்தமா நானே உங்க கூட இருக்கிறேன் இலவசம்.
நான் ரெடி!
(இதன் நகல்:
http://www.blogger.com/comment.g?blogID=9737419&postID=114086186608196497)
சிபி,
நீங்க கொஞ்சம் லேட். குமரன் கைப்புள்ளைக்கு பதிலா களம் இறங்குறாரு.
பார்வையாளரா வந்து கலக்குங்க நீங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில ஆட்டம் ஆரம்பமாகும்
//என்னை இப்படி தனியா புலம்ப விட்டுட்டு எங்கய்யா போயிட்ட கைப்பு. அந்த நாமக்கல் ஆசாமி குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேக்க ஆரம்பிக்கம்போதே நினைச்சேன். இப்படித்தான் ஏதாவது ஆகும்ன்னு.//
இலவசம், கைப்புள்ளயக் கண்டுபிடிச்சிக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க கவலையே படாதீங்க! அதான் குமரன் இருக்காரே!
கைப்புள்ளயக் கண்டுபிடிக்க ஒரு பதிவே பொட்டுட்டேன்.
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
(இதன் நகல்:
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு )
Post a Comment
<< Home