.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Sunday, February 26, 2006

***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 5 ***

Your Ad Here

விதிகள்:

இந்த சுற்றில் பார்வையாளர்கள் பங்குபெற முடியாது. அணி உறுப்பினர்கள் இருவரும் கண்டிப்பாக கலந்தாலோசித்தால் மட்டுமே பதிலைப் பெற முடியும். ஒரு அணிக்கு ஒரு விடை மட்டுமே அனுமதிக்கப்படும். முதலில் சரியான விடை தரும் அணிக்கு 25 மதிப்பெண்கள். அடுத்தடுத்த அணிகளுக்கு முறையே, 20, 15, 10 மதிப்பெண்கள். விடை தவறாகச் சொன்னால் அணியின் மதிப்பெண்களிலிருந்து 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். விடைக்கான விளக்கம் எழுதுதல் அவசியம். சரியான விளக்கம் இல்லையென்றால் மதிப்பெண் குறைக்கப்படலாம். ஒரு வேளை கேள்வியில் தவறு இருந்தால் அணியினர் சரியாக விடை கூறியதாகக் கருதப்படும்.

சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் இரவு 11.30 மணி

அணிகளுக்கான கேள்விகள்:

தாமரை:

சிறிலுடைய தகப்பனாரின் வயது , தேவின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி எண் -இவை இரண்டையும் கூட்டினால் ஒரு எண் வருமல்லவா, அதன் கூட்டுத்தொகையைக் கண்டுபிடியுங்கள். (எ.கா: 111 என்பதன் கூட்டுத்தொகை:1+1+1=3). ஆங்கில எழுத்து வரிசையில் இந்த எண்ணின் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த எழுத்தின் முன் பில்லைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பிரபல தொழிலதிபருடைய பெயருக்கான குறிப்பு கிடைக்கும். அவர் யாரென எழுதுங்கள்

ரோஜா (பா.நா.த):

கொத்தனாருடைய கதவிலக்கத்திலிருக்கும் ஆங்கில எழுத்துதான் இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து.

குமரனின் கதவிலக்கத்தின் கடைசி எண்ணுக்குரிய ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்) இந்த வார்த்தையின் மூன்றாவது எழுத்தாகும்

கொத்தனார் பிறந்த ஊரில் அருகருகே இருமுறை ரிபீட் ஆகும் எழுத்து இந்த வார்த்தையின் இரண்டாவது எழுத்து.

ஒளியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து இந்த வார்த்தையின் கடைசி எழுத்து.

இந்த 5 எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்

மல்லிகை:
தருமியின் வீட்டு இலக்கத்தின் கூட்டு எண்ணுக்குரிய ஆங்கில எழுத்தை (ஆங்கில எழுத்து வரிசையில்) கண்டு பிடியுங்கள். இது ஒரு நாட்டின் முதல் எழுத்து. இந்த நாட்டின் கடைசி எழுத்தும் செல்வன் பிறந்த ஊரின் முதல் எழுத்தும் ஒன்றே. இந்த நாட்டின் இரண்டாவது எழுத்தும் செல்வன் முதன்முதல் சென்ற அயல்நாட்டின் இரண்டாவது எழுத்தும் ஒன்றே

7 எழுத்துக்கள் கொண்ட இந்த நாட்டின் பெயரைக் கண்டுபிடியுங்கள்

சாமந்தி:

கீழ்க்கண்ட குறிப்புகளில் பிரபலமான ஒருவரின் பெயர் அடங்கி இருக்கிறது:
பெயரின் 4வது எழுத்து: கௌசிகனின் தொலைபேசி இலக்கத்தின் கடைசி மூன்று எண்களின் கூட்டுத் தொகைக்கு நிகரான ஆங்கில எழுத்து (ஆங்கில எழுத்து வரிசையில்)

ஹரிகரன் முதன்முதலின் சென்ற அயல்நாட்டின் மூன்றாவது எழுத்தும், கடைசி எழுத்தும் இந்தப் பெயரின் மூன்றாவது எழுத்தாகவும் ஐந்தாவது எழுத்தாகவும் அமைகின்றன.

ஹரிகரனின் கதவிலக்கத்திலுள்ள ஆங்கில எழுத்து இந்தப் பெயரின் இரண்டாவது எழுத்தாகும்

இவர் இந்திய-பாகிஸ்தானிய இளைஞர்களின் கனவில் வருபவர் என்பது கூடுதல் க்ளூ

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home