*** நட்சத்திர விளையாட்டு - பூப்பறிக்க வருகிறோம்***
தமிழ்மணம் கொஞ்ச நாளா டல் அடிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங். வித்தியாசமா ஏதாவது முயற்சி செய்யலாம்னு ஒரு ஆன் லைன் விளையாட்டு ஏற்பாடு பண்ணிருக்கேன்.
விளையாட்டுக்கு பெயர் பூப்பறிக்க வருகிறோம். இந்தப் பேரை தேர்ந்தெடுத்ததுக்குக் காரணம் இந்த மாதிரி கிராமிய விளையாட்டுக்களை நினைவு படுத்தத்தான். பேருக்கும் விளையாட்டுக்கும் சம்பந்தமில்லை. ஒரு நினைவுப் பெயர். அவ்வளவுதான்
மொத்தம் 4 அணிகள். ஒவ்வொரு அணியிலேயும் 2 பேர். ஒருத்தர் அமெரிக்காவில இருந்து இன்னொருத்தர் இந்தியாலருந்து (அப்படின்னு ஆரம்பிச்சோம். கைப்புள்ள காணமப் போயிட்டதுனால மதுரை குமரன் களமிறங்க நேரிட அவர் விளையாட்டு ஆரம்பிக்கும்போது அமெரிக்காவில் இருப்பாராம். அவங்க அணிக்கு அது கொஞ்சம் பலவீனம்னாலும் பரவாயில்லைன்னு இறங்கியாச்சு). அணி விபரங்கள் கீழே:
தாமரை அணி:
சிறில் அலெக்ஸ் - தேவ்
ரோஜா அணி (இவங்க வச்சுக்கிட்ட பேரு பாண்டி நாட்டுத் தங்கம்ஸ் - பா.நா.த):
இலவசக் கொத்தனார் - குமரன்
மல்லிகை:
செல்வன் - தருமி
சாமந்தி:
கௌசிகன் - ஹரிஹரன்ஸ்
விளையாட்டில் மொத்தம் 6 சுற்றுக்கள் - இதில உலக அறிவு, படைப்புத் திறன், புத்திசாலித்தனம், வேகம் - இப்படி எல்லத்துக்கும் கலவையா சவால் இருக்கும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பதிவு வரும். அணியினர் தங்கள் பதில்களை பின்னுட்டங்களாக இட வேண்டும். என் மெயில் பாக்ஸுக்கு எந்தப் பின்னூட்டம் முதலில் வருகிறதோ அவர்தான் முதலில் பதிலளித்ததாகக் கருதுவேன்.
பார்வையாளர்களும் பதிலளிக்கலாம். ஆனால் அவை சுற்று முடிந்தவுடன் வெளியிடப்படும். பார்வையாளர்களின் மற்ற பின்னூட்டங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்
இந்திய நேரப்படி, திங்கள் மதியம் 12 மணியிலிருந்து புதன் அதிகாலை 3 மணி வரை எந்த நேரமும் சுற்றுகள் நடக்கலாம். விழிப்புடன் விரைந்து செயல்படுபவர்கள் வெல்வார்கள்.
வெற்றி பெறும் குழுவுக்கு நிலாஷாப்.காம் வழங்கும் பரிசு உண்டு. பரிசுபெறும் பார்வையாளர்களுக்கு நிலாச்சாரல் வழங்கும் மின்நூல் பரிசு.
இந்த முயற்சி புதிதாகையால், சில தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. மன்னிக்கணும், ஒகே? ஆனாலும் தவறுகளைத் தவிர்க்க கண்டிப்பாக முயல்வேன்
பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
11 Comments:
ம்ம்ம்ம்...இது நானும் விளையாண்டிருக்க வேண்டிய விளையாட்டு...கடைசி நேரத்துல முடியாமப் போச்சு. அதனால் என்ன..நம்ம நண்பர்கள் விளையாடுறாங்களே...அதுவே சந்தோஷந்தான்.
நிலாவிற்கும் பங்கு கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
புதிய முயற்சி ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. அணியினரை நோக்கும்போது பி.எஸ். வீரப்பா மாதிரி "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்லத் தோன்றுகிறது.
நிலா தாமதமா வந்ததால விளையாட முடியல.பார்வையாளர்கள் இல்லாத போட்டியா.இந்தமுறை நாங்க பார்வையாளார்கள்
எந்தப்பூவை பறிப்பீர்கள்
எந்தப் பூவை பறிப்பீர்கள்
தாங்கள் பட்டாசு தயாரிக்கும் மம்சாபுரத்திலா பிறந்தீர்கள்?
அது மம்மு + ஷா + புரம் ஆயிற்றே?
ஆறு ஆண்டுகள் அவ்வூரின் தொழில் பட்டறைகளின் கடன் கோப்புக்கள் நாந்தான் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.15 முறையாவது அவ்வூருக்குச் சென்றீருப்பேன்.
தற்பொழுது இலண்டனில்.
அவ்வூருக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்.
வாழ்க! வளர்க!!
Ragavan,
பார்வையாளாரா கலக்குறீங்க ராகவன். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பிருந்தா தொடர்ந்து கொஞ்சம் இடைவெளி விட்டு பண்ணலாம்னு பாக்கறேன்.
மணியன்,
நன்றி. பி.எஸ். வீரப்பா style நல்லாருக்கு. எந்த அணி ஜெயிப்பாங்கன்னு யாராவது பெட் கட்றாங்களா?
ஞானவெட்டியான் அவர்களே,
வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்கிற மம்சாபுரம் சிவகாசிக்கு அருகில் இருக்கிறதென நினைக்கிறேன். எங்கள் ஊர் திருவில்லிபுத்தூருக்கும் ராஜபாளையத்திற்கும் இடையில் இருக்கிறது. முகமது சாகிப் புரம் என்பது மருவி மம்சாபுரம் ஆகிவிட்டது. ஆனால் ஊரில் இஸ்லாமியர் ஒருவர் கூட கிடையாது. பெயர்க்காரணம் தெரியவில்லை; அறிந்து கொள்ள ஆவல்
//எந்தப்பூவை பறிப்பீர்கள்
எந்தப் பூவை பறிப்பீர்கள்//
மது,
இதைப் பாடிக்கிட்டு விளையாடறது நினைவுக்கு வருது. இப்ப கிராமத்தில கூட இதை விளையாடுவாங்களான்னு சந்தேகம்தான்.
அடுத்ததடவை ஊருக்குப் போகும்போது விளையாட வச்சு வீடியோ எடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்
யப்பா, பூவை பறிக்கிறோம்ன்னு, பூவை பேரா வச்சுருக்கற எங்களைப் பறிச்சுடாதீங்க. தெரிஞ்ச விடையை எங்க மூலமாவே சொல்லுங்க. :)
cheer leadersku prize undaa?
Cheer leadersக்கு 1000 பொற்காசுகள்...
.......
.......
யாராவது தர்றாங்களான்னு கேட்டு சொல்றேன் :-)))
கடைசி நிமிடங்களில் என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி நிலா.
Post a Comment
<< Home