***பூப்பறிக்க வருகிறோம் சுற்று 3***
இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html
ஒவ்வொரு அணிக்கும் ஒரு பிரபலத்தைப் பற்றிய 3 குறிப்புகள் தரப்படும். இந்த மூன்று குறிப்புகளை வைத்து பதிலைக் கண்டுபிடிக்கும் அணிக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். பதில் தெரியாவிட்டால் அடுத்த குறிப்பைக் கேட்கலாம். 4வது குறிப்பில் பதில் சொன்னால் 5 மதிப்பெண்கள். 5வது குறிப்பில் பதில் சொன்னால் 2 மதிப்பெண்கள். பதிலே சொல்லாவிட்டால் - 5 (மைனஸ் 5) மதிப்பெண்கள்
விதிகள்:
1. ஒரு அணியிலிருந்து ஒரு பதில் மட்டுமே அனுமதிக்கப்படும். அதனால் அணி உறுப்பினர்கள் இணைந்து செயல்படுதல் அவசியம்.
2. பதிலைப் பின்னுட்டமாக இடும்போது உங்கள் அணியின் பெயரையும் சேர்த்து இடவும்
3. போட்டி அணிக்கு முன்பாக முதன்முதல் பதில் சொல்லும் மற்ற அணியினருக்கோ அல்லது பார்வையாளருக்கோ மின் நூல் பரிசு உண்டு. ஆனால் இவர்கள் முதல் மூன்று குறிப்புகளிலேயே சொல்லிருக்க வேண்டும் (இந்தப் பின்னூட்டங்கள் அணியினரின் வாய்ப்பு முடிந்த பின்னரே வெளியிடப்படும்)
சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் காலை 11.30 மணி
இனி போட்டிக் கேள்விகள்:
தாமரை:
அமெரிக்கப் பாடகி
பாடகரின் மகள்
பாடகரை மணந்தவர்
ரோஜா:
என்னைத் தன் பெயரில் கொண்ட மர்ம இந்தியர்
படை திரட்டிப் பெயர் பெற்றவர்
இவரது பெயரில் தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன
மல்லிகை:
சதமடித்த முக்கால் நூற்றாண்டு மனிதர்
மனசு கையளவு
இப்போது பொய் சொல்லக் கிளம்பியிருக்கிறார்
சாமந்தி:
சகோதரருடன் விரைந்து போட்டியிடும் விளையாட்டுப்பிள்ளை
நடிகையின் கணவர்
1991ல் களமிறங்கிய உலக சாதனையாளர்
போட்டிக்கு ஆதரவு தருபவர்கள்: நிலாஷாப் & நிலாச்சாரல் (விளம்பரம் இல்லாம எப்படிப்பா:-))
32 Comments:
முதல் விதியை இன்னும் விளக்கமா சொல்றேன் - ஒரு அணிக்கு ஒரு பதில்தான். நீங்க பதில் சொல்லி தப்பா இருந்ததுன்னா அதோட வாய்ப்பு முடிஞ்சது. அதனால உங்களுக்கு உறுதியா தெரியலைன்னா அடுத்த குறிப்பைக் கேக்கறது நல்லது
ரோஜா அணியினரின் பதில்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
என்னைத் தன் பெயரில் கொண்ட மர்ம இந்தியர் - நிலாவின் மறு பெயரான சந்திரனைத் தன் பெயரில் கொண்டவர்; அவரின் இறப்பு மர்மம் நிறைந்தது.
படை திரட்டிப் பெயர் பெற்றவர் - இந்தியன் நேசனல் ஆர்மியை திரட்டியவர்.
இவரது பெயரில் தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன - போஸ் என்று ஒரு திரைப்படம் வந்துள்ளது.
ரோஜா அணியினரின் பதில்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
என்னைத் தன் பெயரில் கொண்ட மர்ம இந்தியர் - நிலாவின் மறு பெயரான சந்திரனைத் தன் பெயரில் கொண்டவர்; அவரின் இறப்பு மர்மம் நிறைந்தது.
படை திரட்டிப் பெயர் பெற்றவர் - இந்தியன் நேசனல் ஆர்மியை திரட்டியவர்.
இவரது பெயரில் தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன - போஸ் என்று ஒரு திரைப்படம் வந்துள்ளது.
மல்லிகை அணியினரின் விடை
பாலசந்தர்.K
100 படங்கள் இயக்கியதால் - சதமடித்தவர்
75 வயசானவர்
கையளவு மனசு தொடரை இயக்கியவர்
அடுத்த படம் பொய்.
எனக்கு பதில் தெரியும்.இருந்தாலும் ஒரு அணிக்கு ஒரு வாய்ப்புத் தான்னு சொன்னதால பார்ட்னர் தருமிக்கு மடல் அனுப்பியிருக்கேன்.அவர் இந்திய நேரம் பகலில் பார்த்துவிட்டுத்தான் பதில் போடுவார்.
பொற்கிழி தருமிகே..சொக்கா,,சொக்கா...
3வது கேள்விக்கான பதில்
இயக்குனர் பாலச்சந்தர்.k
குமரன்,
வாவ்! ஆன்மீகக் குமரன் அதிவேகக் குமரன் ஆயிட்டீங்களே!
உங்கள் அணிக்கு 10 மதிப்பெண்கள் சேர்த்தாகிவிட்டது.
//போஸ் என்று ஒரு திரைப்படம் வந்துள்ளது. //
நேதாஜி, சுபாஷ், போஸ் என்று அவரின் பெயரைப் பிய்த்துப் பிய்த்து 3 படங்கள் எடுத்துவிட்டார்கள்
செல்வன்
உஷாராத்தான் இருக்கீங்க... உங்களுக்கு முன்னால ரெண்டு பேர் பதில் சொல்லிட்டாங்க :-) ஆனா பாதகமில்லை. பார்ட்னரே பதில் போடட்டும்
அட, கைப்புவைத் தேடினது பத்தாதுன்னு சிறிலை வேட தேடணுமா?
எங்கே போயிட்டார் தாமரை அணித் தலைவர்?
சாமந்திக்கான பதில்
மைக்கேல் ஷும்மாக்கர்
1991-ல் முதன்முறையாக ஜோர்டன் அணிக்காக களமிறங்கினார். சகோதரர் ரால்புடன் பார்முலா-1 போட்டிகளில் பங்கேற்பவர். அவர் மனைவி கோரின்னா ஒரு நடிகை.
எங்கே நிலா நான் அதிவேகக் குமரன் ஆவது? பூவோடு சேர்ந்து மணக்கும் நார் நான். :-) நானும் இ.கொ.வும் சாட்டி (அதாங்க 'சாட்'டில் பேசி) எடுத்த முடிவான பதில் இது. இ.கொ.வோட ரசிகர் மன்றத் தலைவியும் அதே பதிலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாங்களாம். அதனால யோசிக்காம உடனே போட்டாச்சு. மல்லிகை அணியோட பதிலும் தெரியும். இ.கொ. போட்டிருப்பார். நீங்கள் இன்னும் பதிவுக்கு அனுமதிக்காமல் இருப்பீர்கள். சரியா?
லீசா மரீ ப்ரெஸ்லீ..
எல்விஸ் ப்ரஸ்லீயின் மகள்.
மைக்கல் ஜாக்சனின் முன்னாள் மனைவி.
வேலைப் பழு அதிகமாகிவிட்டது..மன்னிக்கவும்
கே.பாலச்சந்தர்
எப்பா நிலா நட்சத்திர வாரம் முழுக்க பௌர்ணமியா?
பொளந்து கட்டிட்டிருக்கீங்க
சுபாஷ் சந்திர போஸ்
சௌரவ் கங்குலி?
பார்ட்னர் சொல்லிட்டாரு; தருமி டைப் அடிக்கிறான். எங்க குழுவுக்குரிய கேள்விக்கான் பதில்: (அட ஜோசஃப் சாரைக் கேளுங்க )
K.B. அதாங்க கே. பாலச்சந்தர்
ஆனாலும், நிலா நீங்க ரொம்ப மோசம் தாங்க...இப்படியா பார்ட்னர்களைப் பிரிச்சி, ஒருத்தர் தூங்கிற டைம்ல அடுத்தவர் தலையப் பிச்சுக்கிட்டு இருக்கிறது மாதிரி / தனியா மண்டபத்தில பெனாத்திக்கிட்டு இருக்கிறது மாதிரி பண்றது. என்னமோ போங்க..! :-)
டீம் பேர் போட மறந்துட்டேன். தாமரை.
Thamarai Answer
Lisa Marie presley
Daughter of Elvis presley
She was married to Michael Jackson
இந்த சுற்றுல எல்லா டீமும் வெளுத்து வாங்கிட்டீங்க. (ரொம்ப ஈஸியா போயிடுச்சோ?)
எல்லாருக்கும் 10 மதிப்பெண்கள். சுற்று விபரம் சீக்கிரம் போடறேன்.
சுற்றுல தூள் கிளப்பினவர் நம்ம இ.கொதான்.
இ.கொ,
கே.பி, மைக்கி என இருவரை முதலில் போட்டியாளர்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்து இரு மின் நூல்கள் பெறுகிறீர்கள்
கீதா
விநாடி நேரத்தில பரிசை விட்டுட்டீங்க. தொடர்ந்து முயற்சி செய்யுங்க
கௌசிகன்,
லீசாவை சரியாக போட்டியாளருக்கு முன்னதாக முதலில் கண்டுபிடித்து மின்நூல் பரிசு பெறுகிறீர்கள்
கௌசிகன்,
கே.பியைக் கண்டுபிடிச்சது டூ லேட்
//ரசிகர் மன்றத் தலைவியும் அதே பதிலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாங்களாம்//
ஓ.. இது வேறயா? இ.கொ போற ஸ்பீடே சரியில்லை :-)
மதுமிதா,
ரெண்டு விடையும் சரி. ஆனா லேட்
//வாரம் முழுக்க பௌர்ணமியா?//
நல்லா இருக்கே... மாதமெல்லாம் பௌர்ணமி அப்படின்னு படத்துக்கு டைட்டில் வைக்கலாம் போலிருக்கே
//தருமி ரேஞ்சுக்கு கதற விட்டு வேடிக்கை பாக்குறீங்களே நிலா, இது நியாயமா? //
அதுதான் ஐடியாவே:-))
//அவர் மனைவி கோரினா தான் நடிகையான்னு தெரியலை. கூகிளாண்டவரே கை விரிச்சுட்டார். //
அப்படியா? நல்லா தெரிஞ்ச விஷய்ம்னு நெனச்சேனே!
//நிலா அவர்களே, என்னுடைய பின்னூட்டங்கள் கிடைச்சுதா? //
நான் தூங்க வேண்டாமா, சாமி?
ராஜ்,
3 பதிலும் சரி. ஆனா தாமதமாயிருச்சி
//ஆனாலும், நிலா நீங்க ரொம்ப மோசம் தாங்க...இப்படியா பார்ட்னர்களைப் பிரிச்சி, ஒருத்தர் தூங்கிற டைம்ல அடுத்தவர் தலையப் பிச்சுக்கிட்டு இருக்கிறது மாதிரி / தனியா மண்டபத்தில பெனாத்திக்கிட்டு இருக்கிறது மாதிரி பண்றது. என்னமோ போங்க..! :-)
//
ஆகா... என் ஐடியா வொர்க் அவுட் ஆயிடுச்சி :-)))
இந்த சுற்று தான் என் தன்னம்பிக்கையை மீட்ட சுற்று. :-)
Post a Comment
<< Home