*** பூப்பறிக்க வருகிறோம் - முதல் சுற்று முடிவுகள் ***
இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html
முதல் சுற்றுக்கான பதிவு இங்கே:
http://nilaraj.blogspot.com/2006/02/1_114102190745146458.html
முதல் சுற்று நான் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பா போச்சு. வீக் எண்டா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு நெனக்கிறேன்.
பாவம் செல்வனுக்கும் சிறிலுக்கும் வாய்ப்பே இல்லாம சுற்று முடிஞ்சு போச்சு. அதனால என்ன இருக்கவே இருக்கு மீதி சுற்றுக்களெல்லாம்.
இந்த சுற்றில பார்வையாளர்கள் நல்ல ஆர்வத்தோட கலந்துகிட்டாங்க. ஆனா யாருமே விளையாட்டைப் பற்றி முழுமையா தெரிஞ்சிக்காததால ஏன் என் பதில் வெளிவரலைன்னு கேட்டு துளைச்சிட்டாங்க. அதனால இனிமே ஒவ்வொரு சுற்றுக்கு முன்னாலேயும் விளையாட்டு குறித்த சுட்டி கொடுத்திடுவேன் .
ரெண்டு விடைகள் சரியா சொன்ன ஒரே பார்வையாளர் நம்ம காணாமல் போய் திரும்பி வந்த கைப்புள்ள :-) ஆனா பாவம் பரிசு மிஸ் ஆயிடுச்சு
முதல் சுற்றில முதல் முதல் பதில் சொன்ன போட்டியாளர் தருமி
ரெண்டு விடைகள் சரியா சொன்ன ஒரே போட்டியாளர் ஹரிஹரன்ஸ்
மின் நூல் பரிசு பெற்ற பார்வையாளர்கள் விபரங்கள்:
1. ராகவன் (4வது கேள்விக்கு )
2. ஜோ (2 வது கேள்விக்கு )
3. மதுமிதா (3வது கேள்விக்கு )
பரிசு பெற்ற ராகவன், மதுமிதா இருவரது மின்னஞ்சல் முகவரியும் என்னிடமுள்ளது. ஜோ எனக்கொரு தனி மடன் அனுப்புங்கள் ப்ளீஸ் : nila at nilacharal dot com
நிலாச்சாரலின் 250 இதழ் கொண்டாட்டங்களை ஒட்டி அடுத்த திங்கள் 3 மின் நூல்கள் வெளிவருகின்றன. விருப்பமான புத்தகம் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும்.
வெற்றி பெற்ற பார்வையாளர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெறுவீர்கள் என நம்புகிறேன்.
இனி அணி நிலவரம்:
தாமரை (சிறில் - தேவ்) 0
ரோஜா (பா. நா. த) (கொத்தனார் -குமரன்) 10
மல்லிகை (செல்வன் - தருமி) 10
சாமந்தி (கௌசிகன் - ஹரிஹரன்ஸ்) 30
மல்லிகை அணி போட்டியின் முதல் மதிப்பெண்ணைப் பெற்றாலும் சாமந்தி 30 மதிப்பெண்களுடன் பளிச்சென்று முன்னணியில் இருக்கிறது
0 Comments:
Post a Comment
<< Home