.comment-link {margin-left:.6em;}

நிலவிலிருந்து...

Monday, February 27, 2006

*** பூப்பறிக்க வருகிறோம் சுற்று 4 ***

Your Ad Here

இந்தப் போட்டி பற்றி முழுமையாக அறிய இங்கே செல்லவும்:
http://nilaraj.blogspot.com/2006/02/blog-post_114102136456378467.html

இந்த சுற்றில் நீங்கள் கொஞ்சம் இணையத்தில் அலைய வேண்டி இருக்கும். ஐந்து கேள்விகள் கேட்கப்படும். பதிலைப் பெற்றுவது உங்கள் சாமர்த்தியம்.

விதிகள்:

1. கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதிலை போட்டியாளர்கள் பின்னுட்டமாக இடவேண்டும்.

2. ஒவ்வொரு கேள்விக்கும் முதலில் பதில் சொல்லும் போட்டியாளரின் அணிக்கு 10 மதிப்பெண்கள் சேரும்.

3. போட்டியாளர்களுக்கு முன் பதில் தரும் முதல் பார்வையாளருக்கு நிலாச்சாரல் வழங்கும் மின் நூல் பரிசு. (சுற்று முடிந்த பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்படும்)

4. போட்டியாளார்கள் ஒரு கேள்விக்கு ஒரு முறைதான் பதில் தரலாம்

5. சுற்று முடிவு: இந்திய நேரம் செவ்வாய் மாலை 9.00 மணி

போட்டிக் கேள்விகள்:

1. டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் வசிக்கும் வீட்டின் கதவு இலக்கம் என்ன?

2. நிலாஷாப்பில் சோவின் எத்தனை நாடகங்கள் விறபனைக்குள்ளன?

3. சிவபுராணம் சிவா படித்த ஆரம்பப் பள்ளியின் பெயர் என்ன?

4. மதி கந்தசாமி வசிக்கும் தெருவின் பெயர் என்ன?

5. நான் தமிழ்க்காதலர் என்ற அடைமொழியுடன் ஒரு பதிவில் குறிப்பிட்ட கவிஞர் வசிக்கும் நாடு எது?

போட்டிக்கு ஆதரவு தருபவர்கள்: நிலாஷாப் & நிலாச்சாரல்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

37 Comments:

At February 27, 2006 11:46 PM, Blogger Holdat9000 said...

Q2.
Cho's Dramas - 4. But DVD's -5 (incl one Combo)
Nermai Urangum Neram.
Sambavami Yuge Yuge.
Judgement Reserved.
Sattiram sonnathilai.

 
At February 27, 2006 11:58 PM, Blogger Unknown said...

Answer 5
கனடா - கவிஞர் புகாரி

 
At February 28, 2006 12:07 AM, Blogger Unknown said...

answer 2
4 plays Dvds
and 2 anniversaries cds

 
At February 28, 2006 12:26 AM, Blogger Unknown said...

answer 4

Rue. St.Catherine, Montreal

 
At February 28, 2006 12:56 AM, Blogger நிலா said...

தேவ்

கலக்கிட்டீங்க. கனடா என்பதும் 4 நாடகங்கள் என்பதும் சரி. உங்கள் அணிக்கு இருபது மதிப்பெண்கள்

மதியின் தெருவின் பெயர் தவறு

 
At February 28, 2006 1:12 AM, Blogger நிலா said...

Holdat9000,

Correct answer. You win an ebook.

Write to me at nila at nilacharal dot com to claim the book

Ebooks will be sent only by next week

 
At February 28, 2006 3:01 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

1. ஜோசப் அய்யா வீட்டு இலக்கம் 151. இருக்குமிடம் கோடம்பாக்கம். அவரின் பிரைவஸிக்காக முழு முகவரி தரவில்லை.

 
At February 28, 2006 3:14 AM, Blogger நிலா said...

கொத்ஸ்
(அநியாயத்துக்கு அக்டிவா இருக்கீங்க சாமி. தூங்கறதே இல்லியா?)

சரியான விடை. (முழு முகவரி கேட்கவில்லை)

உங்கள் அணிக்கு 10 மதிப்பெண்கள்.

 
At February 28, 2006 3:24 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நீங்க வேற கண்ட நேரத்தில கேள்வி போடறீங்க. இந்தியத் துணை வேற தர மாட்டேன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் எப்படி தூங்கறது? :(

 
At February 28, 2006 3:25 AM, Blogger தருமி said...

அட போங்கப்பா..இப்பதான் ஜோசஃப் வீட்டு நம்பர் தெரிஞுசது...அதுக்குள்ள... :-(

 
At February 28, 2006 3:32 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

இது கொஞ்சம் சந்தேகம்தான். இருந்தாலும்.

4. மதி அவர்கள் தெருவின் பெயர் - Bourret, Montreal

 
At February 28, 2006 3:36 AM, Blogger நிலா said...

கொத்ஸ்,

மதியோட தெரு பேர் தப்பு. நீங்களும் தேவும் பதிலை எங்கேர்ந்து பிடிச்சீங்கன்னு தெரியலையே!

 
At February 28, 2006 3:38 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நான் சொன்னது பெரிய கதை. தப்புன்னா விட்டுடுங்க. தேவ் பிடிச்சது கூகிளாண்டவர் உபயம். எனக்கும் கிடைச்சுது.

 
At February 28, 2006 4:04 AM, Blogger Unknown said...

கொத்ஸ் கூகிள் அங்கிள் மதி சார் விஷ்யத்துல்ல எனக்கு உதவவில்லைங்கோ...

அய்யா சிறில் எழுந்திருங்க ராஜா... ஆட்டம் முடியப் போகுது....

 
At February 28, 2006 6:17 AM, Blogger நிலா said...

மக்களே
சுற்று முடிய இன்னும் சுமார் ஒரு மணி நேரமே உள்ளது

 
At February 28, 2006 6:26 AM, Blogger குமரன் (Kumaran) said...

Mathy's street address:

rue gregoire

 
At February 28, 2006 6:29 AM, Blogger நிலா said...

குமரன்,
நீங்கள் அதிவேகக் குமரன் தான். மதி எழுந்தவுடன் பிடித்து விட்டீர்கள் போலிருக்கிறது

சரியான விடை
பாராட்டுக்கள்

இன்னும் ஒரே ஒரு கேள்விதான் மிச்சம்
நேறு சுறுசுறுப்பாக இருந்த சாமந்தி அணிக்கு என்னவாயிற்று?

 
At February 28, 2006 6:34 AM, Blogger நிலா said...

அய்யா சிறில் எழுந்திருங்க ராஜா... ஆட்டம் முடியப் போகுது.... //
//
தேவ்,

பார்ட்னரைக் காணும்னா 6வது சுற்றுக்கு ஆள் தேத்தலாமில்லை?

 
At February 28, 2006 6:54 AM, Blogger குமரன் (Kumaran) said...

சிவபுராணம் சிவா படித்த ஆரம்பப் பள்ளியின் பெயர் : T.D.T.A. Dr. மதுரம் நடுநிலைப் பள்ளி

 
At February 28, 2006 7:09 AM, Blogger நிலா said...

பாட்டி நாட்டு தங்கம்ஸ்,

பின்றீங்களேப்பா... மீண்டும் சரியான விடை.

இந்த சுற்றில 3 கேள்விகளுக்கு சரியான விடை அளித்து முன்னணிக்கு வந்துட்டீங்க.

இன்னும் விளம்பரச் சுற்றும் பாப்புலாரிடியும்தான் பாக்கி.
பார்ப்போம்

 
At February 28, 2006 7:46 AM, Blogger குமரன் (Kumaran) said...

என்ன நிலா எங்க பேரை மாத்தறீங்க. நாங்க் பாண்டி நாட்டு தங்கம்ஸ். நீங்க என்னடான்னா எங்களை பாட்டி நாட்டு தங்கம்ஸ் ஆக்கிட்டீங்க? :-(

 
At February 28, 2006 7:46 AM, Blogger நிலா said...

குமரன்,

ஸாரி... அவசரத்தில எழுத்துப் பிழை ஆயிருச்சி.
வேணுன்னா உங்களுக்கு ஒரு ஓட்டு போட்டு சரிக்கட்டிடவா? :-))

 
At February 28, 2006 8:06 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

நாங்க ரெண்டு பேருமே, பேபி பூமர்ஸ் (baby boomers)அதிகம் இருக்கும் அமெரிக்காவில் இருப்பதால் அப்படி எழுதிவிட்டீர்கள். இல்லையா?

(இப்படி எல்லாம் அட்ஜெஸ்ட் பண்ணறோம் வெறும் ஒரு வோட்டுதானா? இங்க வந்து பாருங்க)
http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

 
At February 28, 2006 9:53 AM, Blogger நிலா said...

இந்த சுற்று எப்படி இருந்திச்சின்னு போட்டியாளர்கள்தான் சொல்லணும் ஏன்னா ஆடி, ஓடி, அலைஞ்சி திரிஞ்சி பதில் தேடிருக்காங்கல்ல... அனுபவத்தைப் பகிர்ந்துக்கோங்கப்பா.

இந்த சுற்றில் அணிகள் பெற்ற மதிப்பெண்கள்:

தாமரை அணி: 20 மதிப்பெண்கள்

ரோஜா அணி: 30 மதிப்பெண்கள்

மற்ற ரெண்டு அணிக்கும் என்ன ஆச்சு?


மின்நூல் பரிசு பெற்ற பார்வையாளர்:

Holdat9000

4வது சுற்று முடிவில் அணிகளின் நிலவரம்:


தாமரை (சிறில் - தேவ்) 30
ரோஜா (பா. நா. த) (கொத்தனார் -குமரன்) 50
மல்லிகை (செல்வன் - தருமி) 20
சாமந்தி (கௌசிகன் - ஹரிஹரன்ஸ்) 40


ரோஜா அணி முன்னணில வந்துட்டாங்க்.

 
At February 28, 2006 1:13 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஓக்கே.
முதலில் ஜோசப் சார் கதை.

1) ஜோசப் சார் ஒரு வங்கியில் வேலை செய்கிறார் என்பது தெரியும்.
2) கூகிளாண்டவர் புண்ணியத்தால் எந்த வங்கி என்று கண்டுபிடித்தாகிவிட்டது.
3) அவ்வங்கியின் இணைய தளத்திற்கு சென்று தேடினால் அவரின் வீட்டு தொலைபேசி எண் கிடைத்தது. சார், பெரிய போஸ்ட் அல்லவா.
இரண்டு நம்பர்கள் கிடைத்தன.
4) அவற்றை வைத்து பி.எஸ்.என்.எல் இணைய தளத்தில் தேடினால் முதல் எண்ணுக்கு ஒரு தகவலும் இல்லை. அது அவரின் தனிப்பட்ட தொடர்ப்பு போலும்.
ஆனால் இரண்டாம் எண்ணில் அடித்தது யோகம். கிடைத்தது முகவரியும், அதனுடன் 10 புள்ளிகளும்.

எப்படி. அடுத்த இரண்டு கதைகளும் குமரன் சொல்வார்.

 
At February 28, 2006 1:49 PM, Blogger குமரன் (Kumaran) said...

அடுத்த இரண்டு பதில்கள் அறிந்தது பெரிய கதை இல்லை. மதி கந்தசாமிக்கும் சிவாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பி விடைகளைத் தெரிந்து கொண்டேன். அவர்களும் பெருந்தன்மையுடன் என் மின்னஞ்சலைப் பார்த்தவுடன் விடையைச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் தந்த பரிசு 20 புள்ளிகள். இருவருக்கும் மிக்க நன்றி.

 
At February 28, 2006 2:45 PM, Blogger Santhosh said...

அட அட,
என்ன ஒரு அறிவுப்பூர்வமான போட்டி. அடுத்த போட்டி அஜித்தின் என்ன சாப்பிட்டு இப்படி மெலிந்தார், விஜய் எந்த காலேஜில் சேர்ந்தார் என்பதா,கலக்குங்க.

 
At February 28, 2006 3:14 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

இதைப் பாத்தீங்களா. பிள்ளையார், முருகன் கதை ரீமேக் ஆனது மாதிரி இல்லை. நான் என்னவோ உலகமெல்லாம் போய் தேடி 10 புள்ளி வாங்கினா, இவரு சிம்பிளா ரெண்டு மெயில் அனுப்பி 20 புள்ளி வாங்கறாரு. எனக்கு வர கோவத்துக்கு, இப்போ நான் எந்த பழனி மலையைத் தேடி போறது.

அப்பனே, முருகா, ஷண்முகா, ஞானப்பண்டிதா, கந்தா, கதிர்வேலா,கடம்பா, குமரா, கார்த்திகேயா, இனியாவது எனக்கு நல்ல வழி காட்டுப்பா.

(BTW, இந்த பிள்ளையார், முருகன் ஒப்பிடுதல் எல்லாம் உருவ அமைப்புக்கு இல்லை. குமரன் கோவிக்கப்போறார். அப்புறம் அவருக்கு வேற ஒரு மலையைத் தேடணும்.)

 
At February 28, 2006 11:01 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

அடடா.. இந்த கேம் ஷோ மூலமா என்னோட பேரு பிரபலமாயிருச்சி போலருக்கு..

பெரிய வி.ஐ.பியோட வீட்டு நம்பர் மாதிரி.. சரி எப்படியோ கிடைச்சிருச்சில்லே அதுவரைக்கும் நல்லது..

வெற்றி பெற வாழ்த்துக்கள் தருமி & இ.கொத்தனார்.

 
At February 28, 2006 11:02 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

ஐயையோ டீம் மெம்பர்ஸ் பேர குழப்பிட்டேன் போலருக்கே..

குமரனும் இ. கொத்தனார் டீம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..

 
At March 01, 2006 5:18 PM, Blogger குமரன் (Kumaran) said...

கொத்ஸ். ரோல்ப்ளேயிங் நமக்கு நல்லா வொர்கவுட் ஆயிருக்கு. இந்த சுற்றுல நீங்க முருகன் மாதிரி வலையுலகம் பூரா சுத்துறப்ப நான் பிள்ளையார் மாதிரி இருந்த இடத்துல இருந்தே மின்னஞ்சல்ல விடைகளை வாங்கிட்டேன். பாப்புலாரிட்டி சுற்றுல நீங்க பிள்ளையார் மாதிரி ஒரு பதிவைப் போட்டுட்டு உட்கார்ந்துட்டீங்க. நான் உலகம் பூரா வீடு வீடா போய் வாக்குகளை சேகரிச்சேன். ரெண்டுமே சேர்ந்து நமக்கு ஞானப் பழத்தைத் தந்திருக்கு.

ஆமா...நாரதர் இல்லாம இந்த கதை நல்லா இருக்காதே. நாரதர் யாருன்னு நான் சொல்லணுமா? யாரு பழத்தைக் கொடுக்கிறாங்களோ அவங்க தான் நாரதர். இல்லையா நிலா? :-)

 
At March 03, 2006 6:42 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

அவிங்கதான் பழத்தை கூறு போடாம ஆளுக்கு ஒண்ணு தரதா சொல்லிட்டாய்ங்களே. அவிங்களப்போயி இப்படி வம்புக்கு இழுத்துகிட்டு.

நாட்டுல இன்னும் அம்மா ஆட்சிதான் ஓய். பகைச்சுக்காதேயும். :)

 
At March 03, 2006 7:39 AM, Blogger நிலா said...

//அடடா.. இந்த கேம் ஷோ மூலமா என்னோட பேரு பிரபலமாயிருச்சி போலருக்கு..//

ஜோசப் அவர்களே

நீங்க ஏற்கெனவே பிரபலம்தான். உங்க வெளிச்சத்தை நாங்க கொஞ்சம் பயன்படுத்திக்கிட்டோம்:-)

 
At March 03, 2006 7:41 AM, Blogger நிலா said...

//நாரதர் யாருன்னு நான் சொல்லணுமா? //

குமரன்,

இந்தக் கலகம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

 
At March 03, 2006 7:43 AM, Blogger நிலா said...

//நாட்டுல இன்னும் அம்மா ஆட்சிதான் ஓய். பகைச்சுக்காதேயும். :) //

அது... அந்த பயம் மனசுல இருக்கட்டும் :-)))

 
At March 03, 2006 8:08 AM, Blogger குமரன் (Kumaran) said...

ஐயோ. நான் நிலாவை நாரதர்ன்னு சொல்லுவேனா? அவங்க போட்டி வச்சவங்க. அதனால சிவபெருமான்/உமையம்மை மாதிரி.

(கொத்ஸ். நல்ல வேளை நினைவு படுத்தினீங்க. இல்லாட்டி வசமா அகப்பட்டிருப்பேன்).

 
At March 03, 2006 2:03 PM, Blogger நிலா said...

குமரன்,
//கொத்ஸ். நல்ல வேளை நினைவு படுத்தினீங்க. இல்லாட்டி வசமா அகப்பட்டிருப்பேன்
//

நீங்களும் ப.ம.க மெம்பரா... பக்காவா குணாம்சம் பொருந்தி வருதே :-))

 

Post a Comment

<< Home